நீரின்றி அமையாது உலகு என்கிறார் திருவள்ளுவர். ஆனால் , தற்போது நிலவிவரும் காலநிலை நீருக்காக மீண்டும் ஒரு உலக யுத்தத்தை கொண்டு வருமோ என அஞ்ச வைக்கிறது.
தற்போது இந்திய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. அதற்கு காரணம் அன்றாட குடிநீர் தேவைக்கும், உணவு உற்பத்தியான விவசாயத்திற்கு தண்ணீர் தேவை முக்கியமான ஒன்று. அப்படிப்பட்ட தண்ணீர் தேவைக்காக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. அதில் ஒன்று மழநீர் சேகரிப்பு அது தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அந்த திட்டம் நடைமுறையில் இருந்த வரை நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருந்தது. அடுத்தது கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். அது தொடங்கப் போகிற நிலையில் இந்திய நதிகளை இணைக்கும் திட்டம் பற்றி வல்லுநர்கள் பலரும் பேச நதிநீர் இணைப்பு தேவை என ஒரு சாராரும், அது தேவையற்றது என்று மற்றொரு சாராரும் வாதிட்டுக் கொண்டு இருப்பதே இன்றைய பட்டிமன்ற தலைப்பாக மாறிக் கொண்டிருக்கிறது.
இ ந்தியாவில் 14 மகாநதிகள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மாநிலங்களுக்கிடையே ஓடுபவை.44 நடுத்தர ஆறுகள் இருக்கின்றன. அதில் ஒன்பது ஆறுகள் பல மாநிலங்களை நனைப்பவை தான். மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகள் வரும் என்றுதான் நமது அரசியலமைப்புசட்டத்தில் இதற்கென பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர் பங்கீட்டில் பிரச்சினை எழந்தால் அதை நாடாளுமன்றம் தீர்த்து வைக்கவேண்டும் என்கிறது இந்தபிரிவு. இந்த விதி இப்படியிருக்க தற்போது நதிகளை இணைத்தால் நதிகளால் தீராத பிரச்சினைகளை மேலும் எப்படி தீர்ப்பார்கள் என்கிறார்கள்.
சரி, நதிநீர் இணைப்பு என்றால் என்ன?
வடக்கே இமயமலையிலுள்ள கங்கை நதி வற்றாத ஜீவநதியாகும். இமமலையின் பனியிலிருந்து உருகி குளிர்ந்த ஆறாக பாயந்து வருகிறது. அதுவும் தற்போது கால நிலை பருவ மாற்றம், புவி வெப்ப மயமாதல் காரணமாக பனிமலைகள் யாவும் வேகமாக உருகு வதாகவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான கங்கை. (சிவனின் தலைப்பகுதியான கைலாஸில் இருந்து உற்பத்தியாகி வருகிறது). அதேப்போல தமிழகத்தில் வழியே வந்து கடலில் கலக்கும் நதியான காவிரி நதியும் புண்ணிய நதியாக பாய்ந்து கொண்டிருக்கிறது. அது தலைக்காவிரியில் குடகுமலையில் உற்பத்தியாகி தமிழகம் வந்தடைந்து கடலில் கலக்கிறது.( அகத்தியர் குடத்திலிருந்து பொங்கிவருவதாகவும், ஸ்ரீரெங்கநாதனின் பாதத்தை கழுவிச்செல்வதாகவும் சொல்லப்படுகிறது)
அந்த காவிரித்தண்ணீருக்கும் தமிழகத்திற்கும் தான் தற்போது பல பிரச்சினைகள் தொடர்ந்தபடி இருக்கின்றன.நாமும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கையில் பிடித்துக் கொண்டு அல்லாடிக்ö காண்டிருக்கிறோம். அந்தவகையில் சிவனின் தலைக்கும் , ஸ்ரீரங்கநாதனின் பாதத்திற்கும் ஏற்படுத்தும் தொடர்பு இது சாத்தியமா?
அதில் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேராங்கி அணைகள் மூலம் தடுத்து தனக்கு போக மிச்சமுள்ள நீரையே தருகிறது கர்நாடக அரசு. ஒவ்வொரு வருடமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி கொடுக்க வேண்டிய 205 டிம்எம்சி தண்ணீரையும் அது தர மறுக்கிறது என்பதே. இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருக்க தேசிய நதிகளை இணைத்தால் அனைத்து நிலங்களும் பாசனவசதிபெறும் இந்தியாவளம் பெரும் என்கிறார்கள். ஆனால், நதிநீர் இணைப்பே தேவையற்றது என்கிறார்கள் பல மாநிலங்களின் எல்லைப்பிரச்சினைகளை அறிந்து வைத்துள்ளவர்கள்.
தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்கிற கருத்துக்கு செயல் வடிவம் கொடுக்க 1980ம்ஆண்டிலேயே மத்திய அரசு ஒரு தொலை நோக்கு திட்டத்தை வகுத்திருக்கிறது. இமாலய நதிகளின் மேம்பாட்டு திட்டம், தீப கற்ப நதிகளின் மேம்பாட்டு திட்டம் தான் அது. இந்த இரண்டு தொலை நோக்கு திட்டங்கள் குறித்து நீரியல் நிபுணர்கள், நில ஆராய்ச்சி நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
மறைந்த பாரத பிரதமர் இந்திகாந்தி தேசிய நதிநீர் முகமை அமைப்பை ஏற்படுத்தினார். இந்த முகமை க்கு முதல் கட்டமாக தீபகற்ப நதிகளின் ஆய்வு செய்யும் பணி அளிக்கப்பட்டது. மாநிலங்களுக்குள் பாயும் நதிகளின் இணைப்பு திட்டத்திற்கு விரைவுபடுத்தப்பட்ட பாசனப்பயன்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்க மத்தியஅரசு தீர்மானம் நிறைவேற்றியது.
இந்திய அளவில் உள்ள நதிகளை மாநிலங்கள் வழியாக இணைக்க நீண்ட காலம் தேவைப்படும் என்பதால் இப்போது மாநில அளவில் உள்ள நதிகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்கள்.
அதன் முதல் கட்டமாக காவிரியாற்றின் உபரிநீரை வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல காவிரிஅக்னியாறு கோரையாறுபம்பாறுவைகைகுண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரியாற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் 189 கோடி ரூபாய் செலவில் கதவணை அமைக்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதுபோலவே தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை கன்னடியன் கால்வாயிலிருந்து வெள்ளக்கால்வாய் மூலம் திசையன் விளை, சாத்தான் குளம் பகுதிக்கு கருமேனியாறு நம்பியாறு ஆகிய பகுதிகளை இணைக்க 369 கோடி ரூபாயில் ஒரு திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.
இப்படி மாநில அளவில் நதிகளை இணைத்து அதன் மூலம் தேசிய நதிகளான கங்கை, காவிரியை இணைக்க அரசுகள் ஆர்வம் காட்டிவருகிற நிலையில் இந்த திட்டம் அவசியமற்றது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தனது எண்ணத்தை தெரிவிக்க, அது தேசிய அளவில் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.
8909 ம்தேதி முதல், மூன்று நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி தேசிய நதிகளை இணைப்பது என்பது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் யோசனையாகும். என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றும், இது இந்த நாட்டின் சுற்றுப்புற சூழலை மிகவும் ஆபத்தான பாதைக்கு கொண்டு செல்லும் திட்டமாகும் என்றும். இந்த திட்டத்தை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்க மாட்டேன். இயற்கை மிகவும் பலம் வாய்ந்தது. அதற்கு முரணான பெரிய காரியங்களை செயல்படுத்துவது நல்ல தல்ல. நீர் பாசனத்துக்கு உள்ளூர் நதிகளை இணைப்பது தவறான தல்ல. அதில் பிரச்சினை இல்லை. ஆனால், தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது இதிலிருந்து அடிப்படையாகவே வேறுபட்ட விஷயம். அதுதான் ஆபத்தானது என்று கூறினார்.
ராகுலின் பேச்சை ஆமோதிக்கும் விதமாகவே இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய கருத்தும் தற்போது பலத்த எதரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இயற்கையாகவே ஏற்பட்டு பயணப்படும் நதிகளின் போக்கை மாற்றக் கூடாது. எனவே நதிநீர் இணைப்பு தேவையற்றது. தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் நதிகளின் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி பல வகையான உயிரினங்கள் வாழ்ந்து, வளர்ந்து கொண்டிருக் கின்றன. ரஷ்யா நாட்டில் இதேப்போல இரண்டு நதிகளை இணைத்தனர். தற்போது அந்த இரண்டு நதிகளுமே வற்றிப் போய் விட்டது. வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் <உள்ள நதிகளின் போக்கு இயற்கையாகவே ஏற்படுத்தப் பட்டவை. அதன் போக்கை மாற்றினால் வெள்ளக் காலங்களில் அதன் பாதிப்பு கரையோர மக்களை அதிகமாகவே பாதிக்கும். தற்போது வெப்பமயமாதலால் துருவப்பகுதி பனிக்கட்டிகள் வேகமாக உருகிவருகிறது. அதை மாற்றும் முயற்சிகள் அவசியம். அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். அதில் கவனம் செலுத்துவதைவிட அந்தநதியை தமிழகத்திற்கு கொண்டு வரலாம் என்பது உடனே நடக்கக்கூடியதல்ல. பல ஆண்டுகள் பிடிக்கும் திட்டம். அதற்கு கோடிக்கணக்கான பணம் தேவை. அந்த திட்டம் மூலம் மேலும் ஊழலும், சுரண்டலும் அதிகமாகும். தற்போது காவிரி நதிநீர் ஓப்பந்தத்திலேயே நம் விவசாயிகள் படும் வேதனை நாம் அறிந்ததே. கர்நாடக அரசிடம் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்க வில்லை. மாநிலங்கள் தம் எல்லைகளில் அணைகள் கட்டி வேண்டிய தண்ணீரை தேக்கி கொள்வார்கள். அதனால் மாநில அளவில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு அது வழிவகுக்கும், தற்போது ஒகேனக்கல் கூட்டக்குடிநீர் திட்டம் எப்படி செயலிழந்து கிடக்கிறதோ, அதே நிலைதான் நதிநீர் இணைப்புக்கும் ஏற்படும்.இன்று பல ஆறுகள் காணாமல் போய் விட்டன. பல நதிகள் சாக்கடைகளாக மாறிவிட்டன. அதே நிலைதான் தேசிய நதிகளுக்கும் ஏற்படும் அபாயம் உண்டு. மேலும் தமிழகத்தில் தற்போது உள்ள பல கண்மாய்கள், குளங்கள் யாவும் கலெக்டர் அலுவலகங்களாகவும், பேருந்து நிலையங்களாகவும் மாறி விட்டன என்கிறார்.
பெரும் பாலான மாநிலங்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற முடியும் என்றாலும், அது நதிநீரை மாசுபடுத்தும், பல்லுயிர்பெருக்கம் தடுக்கப்படும், தண்ணீரிலும், வெளியிலும் உள்ள உயிர்கள் அழியும். சுற்றுப்புற சூழல் கடுமையாக பாதிக்கப்படும். மண் அரிப்பு ஏற்படும். ஏற்கெனவே பல குளங்கள் ஆக்கிரமிப்புகளால் அடுக்குமாடி கட்டடங்களாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை இன்னும் மோசமாகும். நதிகள் பல மாநிலங்களை தாண்டி வரும்போது மாநில எல்லைகள் தங்கள் உரிமைகளை கொண்டாடும். அது மேலும் தண்ணீருக்காக கையேந்தும் நிலையை கொண்டு வரும்.
தற்போது காவிரிக்கும், கிருஷணாவிற்கும், முல்லைபெரியாற்று க்கும் அண்டைல மாநிலங்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் நாள் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்
மத்திய நதிநீர் இணைப்பு கமிட்டி உறுப்பினர் ஏசி காமராஜ் பேசும்போது,
ஆந்திரா, கர்நாடகா, பீகார், கேரளா மாநிலங்கள் இந்த திட்டத்தை ஏற்றுள்ளன. மாநிலத்தின் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டம் என்று ராகுல் கருதியிருக்கக்கூடும். உண்மையில் , வெள்ளநீரின் ஒரு பகுதியை , மாநில நதிநீர் வழியாக (நீர்வழிச்சாலை ) நெட்வொர்க் அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் . இதை செயல் படுத்தாவிட்டால் பேரழிவை ஏற்படுத்தும் . உணவு உற்பத்தி பாதிக்கும் . சுற்றுசூழலை பாதிக்கும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இது குறித்த விபரத்தை ராகுலுக்கு அனுப்பியுள்ளேன் என்கிறார் அவர்.
மனிதன் இயற்கையோடு இயைந்து வாழும் வரைதான் அவனுக்கு இயற்கையின் இயல்பான நன்மை கிடைக்கும். இயற்கையை மாற்ற அல்லது கட்டுப்படுத்த நினைத்தால் அதனால் அழிவுதான் நேரும் என்பது பல வல்லுநர்கள் பல ஆய்வுகளுக்குப்பின் கண்ட உண்மையாகும்.
இதற்கு இன்று வரண்டு போன தமிழக நதிகளே சாட்சி. ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டியதால் இன்று பல ஆறுகள் செத்துவிட்டன. என்பதை நாம் கண்கூடாக காணலாம். ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளால் பல ஆறுகள் நீர்வரத்து இன்றி இன்று சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளாகவும் , மணல் திருட்டால் அதன் தன்மையை இழந்து சாக்கடை களாகவும் , புல் பூண்டு, புதற்களாகவும் காட்சியளிக்கின்றன. நம் அடுத்த தலைமுறை களில் இந்த ஆறுகள் இருக்குமா? என்பது சந்தேகமே. ஒவ்வொரு பெரிய ஊர்களிலும் தண்ணீரை தேக்கி வைத்து கண்மாய்கள் இருக்கும் போது தடுப்பணைகள் எதற்கு? இப்போது உள்ள நீர்வரத்து , அதற்குரிய தேவைகளாலும் தண்ணீர் கடலுக்குள் சென்று வீணாக வாய்ப்பேயில்லை. இன்று நீர்வரத்து இல்லாததால் பல கண்மாயகள் மேடுகளாகவும் கருவேலங்காடுகளாவும் இருக்கின்றன. அதனால் அதிகப்படியான வெள்ளம் வரும்போது அது <உடைந்து ஊருக்குள் வந்து அழிவை ஏற்படுத்தும்.
நதிகளை இணைப்பதால் இப்போது உருப்படியாக ஓடிக்கொண்டிருக்கும் நதிகளும் செத்துவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவ்வாறு இணைக்கும் போது அது பல நமாநிலங்கள் வழியே தான் வந்தாக வேண்டும். அப்படி வரும் போது ஒவ்வொரு மாநிலமும் அதற்கு உரிமை கோரும் , தேவையற்ற சண்டைகள் வந்து இந்திய ஒரு மைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ஜப்பான் அரசிடம் 1300கோடி வாங்கி அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவால் தடைபட்டு நிற்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் சிவசாமி சேர்வை அவர்கள் கூறும்போது:
காவிரி வெள்ளப்பெருக்கின் போது புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க வறண்டு போனது அதனால் எங்களுக்கு எந்தப்பலனும் இல்லை. அப்படி நதிகளை இணைக்கும் போது அந்த நீரினால் பல மாவட்டங்கள், தேசிய அளவில் பல மாநிலங்கள் , அதனால் பலன்பெறும் விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்கிறார். அப்படியாவது மற்றமாநிலங்கள் நமக்கு தர வேண்டிய தண்ணீரை தரும் என்கிறார்.
அவரது கருத்தை போலவே விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்த கருத்தாவது:
இந்தியாவை பொருத்த வரையில் நாட்டின் வட பாகத்தில் உள்ள நதிகள் குறிப்பாக இமயமலையில் இருந்து <உற்பத்தியாகும் நதிகள் ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதிகளாக இருக்கின்றன. அதே வேளையில் நாட்டின் தென்பகுதி நதிகள் அவ்வப்போது வறண்டு பயிர்உற்பத்தி பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறை உட்படபல சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வட மாநில நதிகளை , தென்னிந்திய நதிகளுடன் இணைக்க வேண்டும். என்ற கோரிக்கை இன்று நேற்றல்ல நீண்ட நாட்களாக நிலவி வருகிறது.
ஆனால், நதிகள் இணைப்பு எந்த அளவிற்கு சாத்தியம். அதனால் ஏற்படப் போகும் பலன்கள், பாதிப்பு கள் என்ன என்பதை ஆராயும் போது திட்டமிட்டபடி இத்திட்டத்தை செயல் படுத்த முடியுமா என்ற சந்தேகம் தான் மேலோங்குகிறது. இந்திய நதிகளை இணைப்பது குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு அதில் நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது என்பது மிகப்பெரிய திட்டம் வெள்ளம், வறட்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், வரும் 2043ம்ஆண்டுக்குள் இத் திட்டத்தை செய்யலாம் என்று கூறியிருந்தது.
ஆனால், இது குறித்த பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட் ஒரு அதிரடி தீர்ப்பை மத்திய அரசுக்கு வழங்கியது. வரும் 2012க்குள் நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்பது தான் அது. ஆனால், நதிகள் இணைப்புக்கு அதிகமான அளவில் நிதி தேவைப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2,640 கிமீட்டர் துõரம் கொண்ட இந்த திட்டத்தை செயல்படுத்த 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். என்று மதிப்பிடப் பட்டது. இந்த மதிப்பீடு இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் சாத்தியமல்ல என்று கூறி நிராகரிக்கப் பட்டது. இந்நிலையில் , கடந்த 1977ம்ஆண்டு தீட்டப்பட்ட திட்டம் மீண்டும் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. இத்திட்டத்தின் படி , கங்கை இணைப்பிற்கு 24 ஆயிரத்து 95 கோடி ரூபாய்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இவ்வளவு அதிகமான நிதியை செலவிட முடியாத அரசு தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது.
இந்நிலையில் சுவிஸ் வங்கியில் இந்தியாவில் இருந்து முதலீடு செய்யப்பட்டுள்ள 72 லட்சம் பணத்தை மீட்டு வந்தால் திட்டங்களை விரைவில் நிறைவேற்ற முடியும் என்கிறது விவசாய விழிப்புணர்வு சங்கம்.
நதிநீர் இணைப்பு குறித்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லட்சுமிநாதன் கூறும் போது,
கடந்தவாரத்தில் ஒரிசா, அசாம், மேற்குவங்கம், ஜார்கண்ட் õகிய மாநிலங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சுமார் 360கிராமங்களில் 25லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் 30பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் பாதைகள், தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரிசாவில் ஜலேகா,பாலாசூர் உள்ளிட்ட ஆறுகளில் நீரமட்டம் அபாய அளவை எட்டியது. இயற்கையின் வரப்பிரசாததமான மழை அதிகம் பெய்தும் கெடுக்கிறது.பெய்யாமலும் கெடுக்கிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட வறட்சியான மாநிலங்களின் விவசாயிகள் பயிரிடவும் பயிற்களை காக்கவும் இன்றும் வானத்தை<யும், நதிகளையும் வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நதிகளான கங்கை, யமுனா, பிரம்மபுதரா, நர்மதை, கோதாவரி, காவிரி உள்ளிட்ட பல்வேறு நதிகள் மற்றும் பருவமழை மூலம் இந்திய துணைக் கண்டத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 1869 பில்லியன் கியூபிக் மீட்டர் நீர் கிடைக்கிறது. ஆனால், இதில் நாம் 40 சதவிகித நீரை மட்டும் பயனன்படுத்துகிறோம். மீதமுள்ள 60சதவிகித நீர் வெள்ளச்சேதத்தை ஏற்படுத்தி கடலில் கலக்கிறது.
இமயமலைத் தொடரில் இருந்து வருடம் முழுவதும் தண்ணீரைக் கொண்டு வரும் வற்றாத நதிககளை பருவமழையை மட்டுமே நம்பியுள்ள காவிரி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகளுடன் இணைக்க வேண்டும். öன்று அனைத்துதரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.
பயன்கள்:
வறட்சியில் இருந்து பெரும்பாலான மாநிலங்கள் காப்பாற்றப்படும். வடகிழக்கு மாநிலங்களின் வெள்ளச்சேதத்தை தடுக்க முடியும். குடிநீர் பற்றாக்குறை தீரும். போக்குவரத்து வளம் பெரும். நீண்ட துõர சரக்குகள் குறைந்த செலவில் போய் சேரும். கடல்பயணங்களுக்கு உறுதுணையாக அமையும். மீன்பிடித்தொழில்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படும். நாட்டின் உள்ளகட்டமைப்பு வளர்ச்சியடையும். நதியோரத்து கிராமங்கள் வர்ச்சிபெறும்.30ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். விவசாய நிலங்கள் வனப்பகுதிகள் அதிகரிக்கலாம்.
நதிநீர் இணைப்பின் வரலாறு:
தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் ஆங்கியேலர் காலத்தில் முன்வைக்கப்பட்டது. 1839ம்ஆண்டு ஆர்தர்காட்டன் என்பவர் முதன்முதலில் விரிவான திட்டத்தை தயார் செய்தார்.பின் 1972ல் டாக்டர் கே.எல். ராவ் என்பவர் 2640 கி.மீட்டர் நீளத்திற்கான கங்கைகாவிரி இணைப்பு குறிஞூதது பரிந்துரை செய்தார். 10லட்சம் ஹெக்டேர் நிலம் நீர்பாசனவசதி பெறும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.12,500கேகாõடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
சில ஆண்டுகளில் கேப்டன் தஸ்துõர், ஹிமாலயக் கால்வாய் மற்றும் பூமாலைக்கால்வாய் என்ற இரண்டு திட்டங்கள் மூலம் தென்னக, வட இந்திய நதிகளை இணைக்க மதிப்பீடு செய்தார். 13,500கிமீ கால்வாய் மூலம் இந்திய நதிகளை இணைக்கும் போது பெறப்படும் பலன்கள் குறித்து சி. டபிள்யூ.சியுடன் (சென்டர் வாட்டர் கமிஷன்) இணைந்து பல்வேறு பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் சர்வே பணியில் ஈடுபட்டனர். இத்திட்டத்தை செயல்படுத்த ஆயிரக்கணக்கான கோடிகள் செலவானாலு<ம் , மின்உற்பத்தி , போக்குவரத்து , வெள்ளச்சேதம் ஆகியவற்றை கணக்கிடும் போது சில வருடங்களிலேயே செலவுத்தொகை பெறமுடியும் என சர்வேயில் கூறப்பட்டுள்ளது. ஆனாலம், நடைமுறைச்சிக்கல் , செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
கிபி 905920ம்õண்டில் பாண்டிய மன்னன் ராசசிம்மன் காலத்தில் தான் முதல் நதிநீர் இணைப்பு நடந்துள்ளது. வைகை நதியையும் சருகணியாற்றையும் ராசசிங்கமங்கலம் ஏரிமூலம் இணைத்துள்ளான். 1895ம்ஆண்டு கட்டப்பட்ட பெரியாறு திட்டமே உலகில் முதலாவது பெரிய நதிநீர் இணைப்பு திட்டமாக கருதப்படுகிறது. இதேப்போல் பாலாறும் கொற்றையாறும், காவிரியும் வெள்ளாறும் , கோதையாறும் பழையாறும் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்திரமாநிலம் காக்கிநாடாவில் இருந்து தமிழகத்தின் மரக்காணம் வரை வெட்டப்பட்ட பக்கிம்காம் கால்வாய் 1878 ம்ஆண்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இது தேசிய நீர்வழிப்பாதை 4 என்று அழைக்கப்பட்டது. தற்போது ஆந்திராவின் வெள்ள வடிகாலாக இக்கால்வாய் உள்ளது.
நீரின் எதிர்காலத்தேவை :
இந்திய மக்கள் தொகை 2050ல் 150 முதல் 180 கோடியாக இருக்கும். என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், 2000லட்சம் டன் தானிய உற்பத்தியை 4500லட்சம் டன்னாகவும், 1400லட்சம் ஹெக்டேர் விளை நிலத்தை 1600லட்சம் ஹெக்டேராகவும் மாற்ற வேண்டியுள்ளதால் நீரின் தேவை மிக அவசியமானது.
இந்தியாவிற்கு 2050 ஆம் ஆண்டில் குடிநீர், பொதுமக்கள் உபயோகத்தேவைக்கு மட்டும் ஆண்டுக்கு 102 பிசிஎம் (பில்லியன் கியூபிக் மீட்டர்) தண்ணீர் தேவைப்படும். விவசாயத்திற்கு 1072 பிசிஎம் தண்ணீரும், தொழிற்சாலைகளுக்கு 63 பிசிஎம்மும், மற்ற தேவைகளுக்கு 210 பிசிஎம் என 1447 பிசிஎம் தண்ணீர் தேவைப்படுவதாக சி.டபிள்யூ.சர்வே தெரிவித்துள்ளது. எனவே நதிநீர் இணைப்புதிட்டத்தை தற்போது ஒத்திவைத்தாலும் எதிர்கால நோக்கில் தவிர்க்க முடியாது.
அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் தங்கள் நாட்டில் வெள்ளத்தை ஏற்படுத்திய நதிகளை மற்றொரு நதிகளுடன் இணைத்து நீர் வழிப்போக்குவரத்தையும் , பாசன வசதியையும் ஏற்படுத்திக் கொண்டு தன்னிறைவு அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment