Tuesday, April 3, 2012
எம்.ஜி.ஆர் கார்...
சினிமாவில், அரசியலில் எத்தனையோ நாயகர்களின் உலா சுழல்கிறது... பழையவர்களையும்
புதியவர்களையும் மீறி, ரசனை வரையறையின் எல்லா எல்லைகளையும் உடைத்தபடி யான் ஆளுமை
வளர்ந்து கொண்டே போகிறது என்ற கேள்விக்கு ஒரே பதில் : எம்.ஜி.ஆர்!
.....
பொங்கல் நாள்... பாக்கெட்டில் செல் சிணுங்கியது. மறுனையில், திருச்சி "பெல்’ நிறுவனத்தில்
பணியாற்றும் நண்பர் கோவிந்தராவ்.
""நாளைக்கு திருச்சிக்கு வாங்களேன். வாத்தியார் பிறந்தநாளை வித்தியாசமாக் கொண்டாடுவோம்...ம்...
கேமரா மறந்துடாதீங்க, ஒரு இன்ப அதிர்ச்சி காத்துட்டிருக்குது!’’ சஸ்பென்ஸ் வைத்து ஆர்வத்தைத்
துõண்டினார். "கட்டாயம் வர்றோம்’ என்றோம்.
மறுநாள் திருச்சி சென்றோம். பஸ் ஸ்டான்ட் தல் பெல் பயிற்சி வளாகம் வரை, பாதை ழுக்க எம்.ஜி.ஆர்
போட்டாக்கள். மாலை, தோரணங்கள். "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...’ பாடல் என துõரத்திலேயே
களைகட்டியிருந்தது விழா. பெல் பகுதியில் நுழைந்ததும் தடபுடலாக வரவேற்று அழைத்துச் சென்றார்
கோவிந்தராவ்.
வாசலில் நின்ற காரும், அருகில் மேஜையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் படம் மாலை
அணிந்திருந்தன.
"படத்திற்கு மாலை ச, காருக்கு?’ கேட்டதும், ""இதுதான் இன்ப அதிர்ச்சி!’’ என்ற கோவிந்தராவ், தனது
நண்பர் சந்திரனிடம் நம்மை அறிகப்படுத்தினார்.
""ஆமாங்க... இது சாதாரண கார் இல்லே. எம்.ஜி.ஆர், அவங்க மனைவி ஜானகியம்மான்னு ரெண்டு
தல்வர்கள் பயன்படுத்தின கார்!’’ என்று சந்திரன் சித்தார். நம்மைப் போலவே அங்கிருந்த பலரும்
ஆச்சயத்தில் கண்வித்தனர்.
எம்.ஜி.ஆர் கான் எண் டிஎம்எச் 2248. அந்த நம்பர் பிளேட்டைப் பார்த்ததும், "ஒரு காலகட்டத்தில்
லட்சோபலட்சம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் தெய்வதசனத் தேராக இருந்தது இந்த கார் அல்லவா!’
சிறகு வித்த நமது எண்ணத்தைக் கலைத்தது சந்திரனின் குரல்...
""நான் சின்ன வயசிலேர்ந்தே எம்ஜிஆரோட தீவிர ரசிகன். கட்சிக்காரங்களா இருந்தாலும் அவரை
ரசிக்காதவங்களே இருக்க மாட்டாங்க. புரட்சித்தலைவர், காலத்தைக் கடந்தவரு. எங்க வீட்டுப்பிள்ளை,
ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்னு அவரோட படங்களை தேடித்தேடி
பார்த்த காலங்கள்லாம் மனசுலே பசுமையா இருக்குது’’ என்றவர், ""வாங்க, கால் ஒரு ரவுண்டு போய்ட்டு
வரலாம்’’ என்று அழைத்தார்.
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார்... பரவசத்தோடு ஏறினோம்.
பெல் குடியிருப்பு பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலையிலிருந்து பியும் சாலையில் சீறிப்பறந்தது கார்.
ஸ்டீயோவை ஆன் செய்தார். "திருடாதே பாப்பா திருடாதே...’ என்று எம்ஜிஆர் படப்பாடல் இதமாகப்
பரவியது.
""சந்திரன் சார், இந்த கார் உங்ககிட்டே எப்படி?’’
"" எம்ஜிஆர் கார் ஒருத்தர்கிட்ட இருக்குன்னு ராஜாங்கற டிரைவர் என்கிட்ட ணுவருசத்துக்கு ன்னால
சொல்லியிருந்தார்.
ஆசைப்பட்டு போய் பார்த்தேன். இதை வச்சிருந்தவருக்கு இதோட வரலாறு, அருமை பெருமைல்லாம்
புயலே. விற்கறதா இருந்தா நானே வாங்கிக்கறேன்னு சொல்லியிருந்தேன்.
பிறகு, ஒரு விசேஷத்துக்கு நான் போயிருந்தப்போ இந்த காரை விற்கப் போறதா தகவல் வந்துச்சு. உடனே
ஓடிப்போய் வாங்கிட்டேன்.
பழமை மாறாம இருக்கணும், புது வசதிகளும் இருக்கணும்னு பார்த்துப் பார்த்து சபண்ணினேன். சில
லட்சங்கள் செலவாச்சு.
மாருதி கார் நிறுவனம் தொடங்கின புதுசுலே பல வி.ஐ.பி.களுக்கு பசா கொடுத்தாங்க. எம்.ஜி.ஆருக்கு இந்த
காரை 1984ல் பசா கொடுத்திருக்காங்க. தலைவரு இருந்தவரை இதைப் பயன்படுத்தினாரு’’ என்றவர்,
""அவரோட போட்டோ எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். சான்ஸ் கிடைச்சும் திடீர்னு கைநழுவிப் போச்சு.
ஜானகியம்மா தல்வரானப்போ வாழ்த்து தெவிக்கப் போனப்போ அவங்களோட நின்னு போட்டோ
எடுத்துகிட்டேன்’’ என்று பழைய ஞாபகங்களில் திளைத்து மவுனமானபின் கார் பேச்சுக்குத் திரும்பினார்...
"" இந்தக் காரோட ஆர்.சி.புக்ல ராமாவரம் தோட்ட கவயும், தி.நகர் கவயும் இருக்கு. அப்பறம்
31.1.1990ல ஆர்.சி.யை ஜானகியம்மா பேருக்கு மாத்தியிருக்காங்க. 2008 டிசம்பர்ல என் பேருக்கு
மாற்றியிருக்கேன்...
கொஞ்ச நாளைக்கு ன்னாடி இந்த கார்ல ஒரு கோயில் கும்பாபிஷேகத்துக்கு போயிருந்தேன். அங்கே
மைக்ல எம்.ஜி.ஆர் கார் வருது, வழி விடுங்கன்னு சொல்லவும் மொத்த கூட்டம் மதிப்பு மயாதையா
வழிவிட்டதும் புல்லச்சிடுச்சு. அங்கே இருந்த ஒவ்வொருத்தரும் கார் பக்கத்தில நின்னு போட்டோ
பிடிச்சுக்கிட்டாங்க...
இப்பவும் பல பேரு எம்.ஜி.ஆர் கார் உங்க கிட்ட எப்படின்னு ஆச்சயமாக் கேட்கறாங்க!’’ என்று
பெருமிதமாகக் கூறும் சந்திரன் பற்றிய ஒரு க்கியத் தகவல் : இவர், பெல் நிறுவன தி..க., ஊழியர்
தொழிற்சங்கத்தில் துணைத் தலைவர், பணிக்குழு உறுப்பினர்!
*
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment