Tuesday, April 3, 2012
இப்படித்தான் எழுதினேன்
எழுத்தாளர் பொன்னீலன்
கரிசல், கொள்ளைக்காரர்கள் , தேடல்,புதிய மொட்டுகள், ஊற்றில் மலர்ந்தது, புதிய தரிசனங்கள்(மூன்று பாகங்கள்) , போன்ற நாவல்களும் காமம் செப்பாது, நித்யமானது, அத்தானின் கதைகள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் அழகியல் பற்றிய சுமார் 15 கதைகளும், சமூகவியல் பற்றியவை சுமார் 150, பண்பாடு பற்றியவை சுமார் 10, விமர்சனங்கள் 50 போன்ற கட்டுரைத் தொகுப்புகள் என எண்ணற்ற நுõல்களையும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், எழுத்தாளர் ரகுநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஜீவாநந்தம் ,சமூகஞானி வைகுண்டசாமி ஆகியோரைப் பற்றிய வரலாறும் எழுதியிருக் கிறார் எழுத்தாளர் பொன்னீலன் .
கல்லுõரியில் நாகர்கோவிலில் பயிலும் போது மகாகவி பாரதியார், கவிஞர் பாரதிதாசன் என்றால் எங்களுக்கு மிகப்பெரிய அபிமானம் . அவரை ஒட்டி கவிதையின் மேல் மோகம் கொண்டிருந்தோம். கவிதைகள், பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தோம். கதைகள் எஸிதவில்லை.
எங்கள் ஊரில் மீனாம்பிகா என்கிற நுõலகம் இருந்தது. தமிழ்ச்சோலை என்கிற கையெழுத்து பத்திரிகை நாங்கள் நண்பர்களாக சேர்ந்து நடத்தினோம். அதில் 50 பக்கங்கள் எழுதப்பட்டிருக்கும். மீதம் 50 பக்கங்கள் வெறுமனே இருக்கும் படிக்கும் வாசகர் கள் எழுதுவதற்காக.
கல்லுõரியில் படிக்கையில் சனி,ஞாயிறுகளில் எங்களுக்கு குளத்தில் குளிப்பதென்றால் கொள்ளைப் பிரியம்.அந்த உற்சாகம் இன்று வராது. காரணம் குளத்தின் அருகில் நெய்தல் பூக்கள் , செந்தாரை மலர்கள், அல்லிமலர்கள் பூக்கும் அவை நீரில் மிதக்கும் அந்தவாசத்தில் குளிப்பது மிக அருமையான சுகானுபவம் . குளத்தில் ஆண்கள், பெண்கள் என்று குளிக்கையில் தாமரைப்பூவை பறித்துக் கொடுக்கச் சொன்னார்கள். நான் பெரிய பூவாக பார்த்து பறித்துக் கொண்டு காம்புடன் வர அதைப்பார்த்த விவசாயி ஒருவர் பூ பறிக்காதே! குளமும், பூக்களும் எனக்கு சொந்தம் என்றார். அதனால் சண்டை வந்துவிட்டது. அவர் குளத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார். அதனால் பூக்களை பறிக்கக்கூடாது என்றார். அந்த சம்பவம் எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.சந்தோஷம் பறிபோனதே என்கிற கோபம் வேறு. ராத்திரி உறக்கமில்லை. அந்த சமயத்தில் எனக்கு பத்திரிகைகளோடு தொடர்பில்லை. என்னுடைய தமிழ்ச்சோலையில் பொதுகுளம் ,காற்று,கடல், நீர் போன்ற பொதுச் சொத்துக்களை ஏலம் விடுவதும், விற்பதும் சரியா? என்று கேள்வியெழுப்பும் படியாக அந்த சம்பவத்தை பூப்பறித்தல் என்று கதையாக எழுதினேன். படித்த பலரும் பாராட்டினார்கள். வாழ்க்கை அனுபவங்கள் பலவும் கதைகளாகவே மலர்கின்றன இல்லையா?
என்னுடைய மூத்தமகள் அழகுநீலா, அவள் பிறந்து, தவழ்ந்து, நடந்த சமயம் அது. நான் ஆரல்வாய்மொழியில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தேன் . ஒரு நாள் காலையில் அவசரமாக பள்ளிக்கு புறப்பட்டேன். தெருவில் போகிற டவுன்பஸ் எனக்காக சில நிமிடங்கள் காத்திருக்கும். நான் புறப்பட்டு அவசர மாக டிபன்பாக்ஸை எடுத்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு காத்திருக்கும் பஸ்ஸை நோக்கி ஓடினேன். மனைவி அவசரமாக குரல் கொடுத்து அழைக்கிறாள். எனக்கோ பஸ் எனக்காக காத்திருக்கிற அவசரம். என்ன விசயம் சொல்? என்கிறேன். உள்ளே வாங்க, வந்துபாருங்க, சொல்றேன் என்கிறாள். என் அவசரம் அவளுக்கு புரியவில்லை. பேருந்தை அனுப்பிவிட்டு நான் மனைவியின் பேச்சைக் கேட்டு அவசரமாக வீட்டுக்குள் வந்து மனைவியிடம் என்னம்மா? என்று கடுப்பாக கேட்டேன். உள்ளே வாங்க என்றவள் அதோ பாருங்க! என்றாள். பார்த்தபோது என் மகள் நின்று கொண்டிருந்தாள். குழந்தை நிக்கறா இதில என்னம்மா ? என்றேன். நல்லாப் பாருங்க, இன்னுமா புரியலை என்றாள். என்னன்னு தான் சொல்லேன் என்றேன். அவ கையில பாருங்க, புரியும் என்றாள் . பார்த்தால் கனகாம்பரம் ஒற்றைப்பூவை வைத்திருந்தாள் என் மகள் அழகுநீலா. குழந்தை அருகே சென்ற மனைவி இது என்னடா செல்லம்? என்றாள்; ..ப்பூ என்று உதடு குவித்து சொன்னது குழந்தை. அந்தநிமிடம் தான் எனக்குள் ஏதோ புரிய ஆரம்பித்தது. அன்றைக்கு அரை நாள் பள்ளிக்கு விடுமுறையில் கழிந்தது. மழலைச் சொல்லை கேட்பதிலேயே என் பொழுது கழிந்தது. என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment