Tuesday, April 3, 2012

சோம.வள்ளியப்பன்



எழுத்தாளர் சோம.வள்ளியப்பன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தேவக்கோட்டையைச் சேர்ந்தவர். பிஏ பொருளாதாரம் மற்றும் எம்பிஏ வில் மனிதவளம் படித்தவர். பி எச் இ எல் உட்பட பல பெரிய நிறுவனங்களில் பணி புரிந்திருக்கிறார். தற்போது நுங்கம்பாக்கம் ஹை ரோடிலிருக்கும் ஒரு தனியார் மார்கெட்டிங் நிறுவனத்தில் மனித வளத்துறையின் துணைத் தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் எழுதிய அள்ள அள்ளப் பணம் (நான்கு பாகங்கள்) என்ற பங்குச் சந்தைப் பற்றிய புத்தகம் விற்பனையில் ஒருலட்சம் பிரதிகளுக்குள் மேல் தாண்டி சாதனை படைத்திருக்கிறது. காலம் உங்கள் காலடியில் , தொட்ட தெல்லாம் பொன்னாகும், உலகம் உன் வசம், உஷார் உள்ளே பார், நம்பர் ஒன் சேல்ஸ்மேன் உட்பட 26 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். வாசகர்கள் பலராலும் பொருளாதாரம் , தன்னம்பிக்கை சார்ந்த கட்டுரைகள் மட்டுமே எழுதக்கூடியவர் என்றறியப்பட்ட இவரது இன்னொரு முகம் இலக்கியம் 38 சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

இளம் வயதில் கிரிக்கெட் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பைத்தியம்னு சொல்லலாம். அப்போ கிரிக்கெட் பிளேயர் ஸ்ரீகாந்த் சரியா ஆடலைன்னு சொல்லி ஆட்டங்களிலிருந்து விலக்கப்பட்ட சமயம் திடீர்னு திரும்ப ஒரு மேட்ச் ஆடறார். நான் அதை வீட்ல ஆர்வமா பார்த்துக்கிட்டிருக்கேன். சாதாரணமாகவே நாம எதன் மேலயாவது ஆர்வம் காட்டறப்ப வீட்டில நமக்கு கொடுக்கப்படற சாதாரண வழக்கமான வேலைகள் கூட எரிச்சலை ஏற்படுத்தும், பெரிய தொந்தரவாக தெரியும், அப்படி நான் கிரிக்கெட்பார்க்கணும்னு நினைச்சப்ப வீட்ல கொடுத்த வழக்கமான வேலைகள் எனக்கு எரிச்சலைக்கொடுத்தது. நிம்மதியாக ஒரு மேட்ச பார்க்க முடியலையேன்னு. கிரிக்கெட் பிளேயர் ஸ்ரீகாந்த் திரும்பவும் ஆடினப்போ வீட்ல நான் சந்திச்ச அனுபவங் களை வெச்சு டார்ச்சூங்கற தலைப்பு வெச்சு கதையா,கட்டுரையான்னு கூட எனக்கு வித்தியாசம் தெரியலை எழுதி டார்ச்சூன்னா ஒரு பையன் தன் அப்பாவை செல்லமாக கூப்பிடப் பயன் படுத்துகிற வார்த்தை அது. அதை தலைப்பாக வெச்சு கதை எழுதியிருந்தேன். அதை பிரபல எழுத்தாள நண்பர் ரிஷபன்கிட்ட காட்டினப்போ கல்கிக்கு அனுப்பச் சொன்னார். அந்த கதை ஸ்ரீ காந்த் மீண்டும் ஆடுகிறார்ங்கிற தலைப்புல வெளிவந்திருந்தது. அதன்பிறகு தொடர்நது பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் நிறைய எழுதினேன். பாபர் மசூதி இடிச்ச சம்பவத்தை மையப் படுத்தி பாதிப்புகள் ங்கற தலைப்புல என் பார்வை கோணத்தில அந்தசம்பவத்தை எழுதினேன். மாமியின் அட்வைஸ்னு ஒரு கதை எழுத்தாளர் சுஜாதா ரொம்ப பாராட்டின கதை. அப்பறம் அவரவர்க்கு பிடித்தது ன்னு ஒரு கதை வீட்ல ஒரு குருவி கூடுகட்டும் அதை மனைவி வீட்டை சுத்தம் பண்றேன்னு பிரிச்சிடுவா. அந்தக்குருவிகள் தங்க இடம் இல்லாம இருக்கேன்னு பழைய கூடுக்கு பதிலாக வீட்ல கணவன் அதேமாதிரி ஒரு கூடு கட்டி குருவிக்கு தருவான் ஆனாக் குருவி தங்காது. இந்த கதையை எழுதி என்னோட அண்ணன் செந்தில்கிட்ட கொடுத்தேன் . அவர் இலக்கியத்தில அதிக ஆர்வம் உள்ளவர். அவர் படிச்சு பார்த்துட்டு கதையில ஒரு நல்ல முடிவு இருக்குன்னு பாராட்டினார்.தொடர்ந்து எழுதினப்ப பா.ராகவன் கல்கியில இருந்தபோதும், குமுதம் ஜங்சன்ல இருந்தபோதும் நிறைய கதைகள் எழுத ஊக்கப்படுத்தியிருக்கிறார். அப்படி எழுதின கதை நெஞ்சமெல்லாம் நீ. என்னுடைய மொத்த சிறுகதைகளும் நீ பாதி நான் பாதிங்கற தலைப்புல மணிமேகலைப் பிரசுரத்தில புத்தகமாக வெளிவந்தது. இன்றைக்கு உள்ள தலைமுறை எதையும் பூடகமாக எழுதி புரிஞ்சுக்கற நிலைமையில இல்லை. அவர்களுக்கு பொறுமையு ம் இல்லை. எதையும் நேரடியாக சொல்லணும்னு எதிர்பார்க்கறாங்க. இப்போ க் கூட நான் பஸ்ல வர்றப்ப ஒரு சம்பவம் அதை கதையாக எழுதலாம்னு தோணுச்சு.ஒரு நகரப்பேருந்தில ஏறின ஒருத்தர் ஒரு ஸ்டாப் பேரை சொல்லி நிற்குமான்னு கண்டக்டர்கிட்ட கேட்க,கண்டக்டர் நிற்காது, இற ங்குங்கிறார். பஸ்ல ஏகப்பட்ட கூட்டம் . கண்டக்டர் நிற்காதுன்னு சொல்லியும் அவர் ஏறிடறார். ஏறினவர் நல்ல ஆஜானு பாகுவான ஆள், கண்டக்டர் ஒல்லியானவர்,அப்பாவி, பார்க்கறதுக்கு பரிதாபமான தோற்றம். அவருக்கிட்ட எவ்வளவோ சொல்லியும் கடைசில பஸ்ல ஏறின நபரை இறக்கமுடியலை. காரணம் ஸ்டேஜ் கிடையாது. அவர் நினைச்ச இடத்தில இறக்கி விட வேண்டியிருக்கு கண்டக்டருக்கு. இறக்கி விட்டபிறகு, கண்டக்டர் விடற உதார் பார்க்கணுமே, காரணம் தான் அவனை எதிர்த்து மோத முடியாதுங்கற இவருடைய இயலாமை அவருடைய நடவடிக்கையில தெரிஞ்சது.

No comments: