Tuesday, April 3, 2012

எம்.ஜி.ஆர்.... 3 ஆயிரம் போட்டோ!




சென்னை பிராட்வே பூக்கடைப் பகுதியின் காசி செட்டித் தெருவை கடந்து செல்கிற ஒவ்வொருவரையும்
ஒரு காட்சி சட்டென நிறுத்தி கவர்ந்திழுக்கும்... ஒரு கடையில் எம்.ஜி.ஆ›ன் விதவிதமான புகைப்படங்கள்,
நிரந்தரக் கண்காட்சி போல் ஜொலித்துக் கொண்டிருக்கிறது அங்கு!
படங்களை காட்சிக்கு வைப்பவர், "வசந்தா பிளாஸ்டிக்ஸ்’ உ›மையாளர் அனந்தகுமார் போமிக்.
""என்கிட்ட எம்ஜிஆரோட போட்டோக்கள் ‰வாயிரத்துக்கு மேல இருக்குது!’’ என்று எடுத்த எடுப்பிலேயே
ஆச்ச›யப்பட வைத்தார்.
இவர்..?
இவரது தந்தையின் சொந்த ஊர், மே.வங்கத்தின் கோல்கத்தா. இந்தியா பாக்., பி›வினையில் சிக்கித்தவித்த
லட்சக்கணக்கானோ›ல் ஒருவரான அவர் வேலை தேடி தமிழகத்திற்கு வந்தார். இங்கு தமிழ்ப்பெண்ணுடன்
காதல். திருமணம். இவர்களின் மகன்தான் அனந்தகுமார் போமிக். பிறந்தது, வளர்ந்தது எல்லாம்
சென்னையில்தான்.
சிறுவயதிலேயே எம்.ஜி.ஆ›ன் தீவிர ரசிகரான இவர், வீட்டில் காசு திருடி படிப்புக்கு மட்டம்போட்டு
எம்ஜிஆர் படம் பார்த்தவர் : ""இதனால் 9ம் வகுப்பு •டிக்க 3 வருசமாச்சு, 10ம் வகுப்பு •டிக்க 2 வருசமாச்சு,
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில பி.கா•ம் ஒரே வருசத்துலே நின்னுபோச்சு!’’.
தற்காலிக போஸ்ட்மேனாக இவர் வேலை பார்த்த இடம் : எம்.ஜி.ஆர் நகர்!
எம்.ஜி.ஆரை நே›ல் பார்த்த அனுபவம்?
""இந்திரா ஆட்சிகாலத்துலே தமிழகத்துக்கு அ›சி ஒதுக்கீடு பத்தலே. கேட்டும் கிடைக்காததால திடீர்னு
ஒருநாள் எம்.ஜி.ஆர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினாரு. அப்போ, கூட்டத்தை ஒழுங்குபடுத்தறதுக்காக
எங்க ஸ்கூல்லேர்ந்து என்.சி.சி., பசங்களைக் கூட்டிட்டு போனாங்க. என்.சி.சி.யில் இருந்ததாலே நானும்
போனேன். அப்பதான் எம்ஜிஆரை ரொம்ப்ப கிட்டக்கப் பார்த்தேன். ப்ளோரசன்ட் கலர்ல தெய்வமா
தெ›ஞ்சாரு... அதனாலதான் அவரை பொன்மனச் செம்மல்னு சொல்றாங்கன்னு நினைக்கறேன்!’’ என்றார்
அனந்தகுமார்.
எம்.ஜி.ஆர் படங்கள் மட்டுமல்லாது இந்தியத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் என விதவிதமான அ›ய
படங்களை வைத்திருக்கிறார் இவர். இவற்றை சேக›த்தது எப்படி?
""ஸ்கூல் காலத்திலேயே போட்டோ சேர்க்கற வழக்கம் வந்துடுச்சு.
சரக்கு ‰ட்டைகளை ›க்ஷாவுலே கொண்டுபோடான்னு காசு கொடுப்பார் அப்பா. அதைத் தலையிலே
எடுத்துப்போய், காசை மிச்சம் பிடிச்சு போட்டோ வாங்கிடுவேன்...
நான் பெயிலாகிப் படிச்சிட்டிருந்தப்போ நல்லா படிச்சு ஜெயிச்ச என்னோட கிளாஸ்மேட்ஸ்ல பலபேரு
டில்லியிலேயும் வெளிமாநிலங்களிலும் நல்ல வேலைகள்ல இருந்தாங்க. அவங்களை சந்திக்கப் போவேன்...
பஞ்சாப் பக்கத்தில இருக்கற வாகா எல்லை, அமிர்தசரஸ் பொற்கோயில், ராஜஸ்தான், சீனா பக்கத்துலே
இருக்கற காசா எல்லை, நாகலாந்துன்னு பல இடங்களுக்குப் போயிருக்கேன். அங்கங்கே கிடைக்கற
வித்தியாசமான போட்டோக்களைல்லாம் வாங்கி வர்றதுலே ஏதோ ஒரு ஆசை...
சுதந்திரப் போராட்டத் தியாகிகள், உலகத் தலைவர்கள், இந்திய சுற்றுலாத் தலங்கள்னு 7 ஆயிரம் படங்கள்
வச்சிருக்கேன். இதைல்லாம் பாதுகாக்கறது கஷ்டமா இருக்கறதால தம்பி பையன் ‰லமா சி.டி.க்கு
மாற்றிட்டிருக்கேன்’’ என்றவர், ""இதைல்லாம் கண்காட்சியா வைக்க ஆசை, ஆனா பணவசதி இல்லே’’ என்று
ஏக்கமாகத் தெ›வித்தார். உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் இவரை 9840468785 என்ற செல் எண்ணில்
தொடர்புகொள்ளலாம்.

No comments: