வண்ண நிலவன்
தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் வண்ணநிலவன் கம்பாநதி,ரெயினீஸ் ஐயர் தெரு ,கடல்புரத்திலே ஆகியவை அதிகவரவேற்பவை பெற்ற இவரது படைப்புகள்.
அவள் அப்படித்தான் திரைப்படத்தில் பணியாற்றினீர்கள் இல்லையா?இலக்கியத்தில் பாராட்டி <உங்களுக்கு யார் பரிசு கொடுத்தாலும் வாங்க மறுக்கிறீர்களே?
நண்பர் ருத்ரைய்யாவினால் அவள் அப்படித்தான் திரைப்படத்தில் எழுத நேர்ந்தது. சினிமாவில் நுழைய முயற்சிக்க வில்லை. என் இயல்பு சினிமாவுக்கு ஒத்துவராது என்றே படுகிறது.நான் மிகவும் மதிக்கும் இயக்குனர்பாலுமகேந்திரா. திரையுலகில் அவர் அளித்துள்ள பங்கு மிக முக்கியமானது. தனிப்பட்ட முறையில் என் மீது பரிவும் ,அக்கறையும் கொண்டவர். விளம்பரப்படுத்தும் தன்மைதான் பரிசுகளில் முக்கியமாக இருக்கிறது. மேலும் எனக்கு மேடை என்றாலே சங்கோஜமாகவும் , பயமாகவும் இருக்கிறது. என் படைப்புகளைப் பற்றி எனக்கே திருப்தி இல்லை. இந்நிலையில் அதற்கு பரிசுதருவதை நான் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். ஒன்றிரண்டு பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.பரிசளிக்கும் முறைகள் தேர்வுகள் சரியில்லை . பொங்கல் இனாம் போல யார் கையிலாவது பரிசுகள் திணிக்கப்படுகின்றன. பரிசு கொடுப்பதும் பரிசு பெறுவதும் விளம்பரத்துக்காக நடைபெறுகின்றன. நான் எழுதுவது பரிசு வாங்குவதற்காக அல்ல. வாசகர்களுக்காகவும் எனக்காகவுமே.
No comments:
Post a Comment