அப்பா தமிழ்வாணனின் ஆதர்ஸ கூலிங்கிளாஸ் இவரது அடையாளம். அண்ணாநகரிலிருக்கும் தமிழ்வாணன் வளாகத்தின் மேல் மாடியில் இவரது அலுவலகம் இருக்கிறது.சுற்றிலும் கண்ணாடிச்சுவர்களால் ஆனது. அங்கிருந்து அண்ணாநகரை சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.வாக்கிங் போகும் பழக்கம் உள்ளவர். நீச்சலும் தெரிந்தவர். பில்லியர்ட்ஸ் விளையாடும் விருப்பம் உள்ளவர். இப்போதும் எங்கேனும் விழாக்களுக்கு செல்லும்போது பாக்கெட்டில் பேடும், பேனாவும் நிச்சயம் இருக்கும். காரணம் அங்கே நடக்கும் சம்பவங்கள் ,முக்கிய விசயங்களை குறிப்பெடுத்துக் கொண்டு அதிலிருந்து பல நல்ல கட்டுரைகளை வாசகர்களுக்கு தருபவர்.
No comments:
Post a Comment