Tuesday, April 3, 2012
எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் பிரபஞ்சன்
மூத்தப்பிள்ளை அதுவும் ரொம்ப நாள் கோயிலில் வேண்டிப் பிறந்த குழந்தை என்பதால் வைத்தியலிங்கம்னு பேர் வச்சாங்க. பாண்டிச்சேரியில் எங்க வீட்டின் ஓரமாத்தான் கள் வியாபாரம் நடந்துட்டு இருந்துச்சு. அன்றைக்கு பிரெஞ்சு அரசாங்கம் இருந்ததால பிரெஞ்சுப் படித்தால் பிள்ளை பிழைத்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் பிரெஞ்சு படிக்கவைத்தார்கள். அதுவும் மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தேன்.
அப்பா காங்கிரஸ் காரர். அன்றைக்கு, பிரெஞ்சு அரசாங்கத்தை எதிர்த்து வந்த காலக்கட்டம். பிரெஞ்சு அரசாங்கத்தை எதிர்த்துக்கொண்டு பிரெஞ்சு மொழியில் படிப்பானேன் என்று, என்னை அழைத்துக்கொண்டு, ஒரு தமிழ் பள்ளியில் என்னை சேர்த்துவிட்டார்.
மறுபடியும் முதல் வகுப்பிலிருந்து படிக்க ஆரம்பித்தேன். பள்ளியில் படிக்கும்போது தமிழிலும் வரலாற்றிலும் ஈடுபாடு வந்தது சின்ன வயசிலேயே பக்கத்திலிருந்து ரோமன் ரோலந்து நுõலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்து வாசிக்கற பழக்கம் தொடர்ந்தது. அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கணம் கத்துக்கிட்டேன்.
அப்போதே வீட்டுத்திண்ணையில நுõலகம், கையெழுத்து பத்திரிகை நடத்தினோம். விருத்தாசலத்தில் இருந்த தாத்தா மூலம் துப்பறியும் நாவல்கள், மறைமலையடிகள், மபொசியின் நுõல்கள் அறிமுகமாகின. கையெழுத்து பத்திரிகைகளில் ஒருவித பாதிப்புடன் இருட்டில் சீறிப்பாய்கிற கார்களுடன் சஸ்பென்ஸ் கதைகளையும் பண்ணையார் கற்பழிப்பது பற்றிய கதைகளையும் எழுத ஆரம்பித்த போது கையெழுத்து பத்திரிகையை படித்துப்பார்த்த அப்பா சாரங்கபாணி என்னைக்கூப்பிட்டு கற்பழிப்பு பத்தி எல்லாம் எழுதறியேடா ? கற்பழிப்புன்னா என்னன்னாவது தெரியுமா உனக்குன்னார்?
அதெல்லாம் தெரியலை. பெண்ணை இம்சை பண்றதான் கற்பழிப்புன்னு அப்பாக்கிட்ட சொன்னேன்.
பத்தாவது வகுப்பைக் கடந்து கல்லுõரியில் சேர முயற்சித்தபோது தமிழ்படிக்கப் போவதாக சொன்னபோது வீட்டில் பதறிவிட்டார்கள். ஏண்டா தமிழ்ப்படிக்கிறேங்கிறே? சாமியாராப் போயிடப் போறீயா?ன்னு கண்டபடி திட்டினார்கள்.
சைவ இலக்கியங்கள் படித்துக் கொண்டு நெற்றியில் விபூதிப்பட்டையுடன் திரியும் பையன் மயிலத்தில் இருக்கும் தமிழ்க் கல்லுõரியில் சேரப் போவது சொன்னதும் அவர்களை பயமுறுத்தினாலும் அனுப்பினார்கள்.
நான் பத்தாவது படிக்கிறபோது எழுதின முதல் கதை "என்ன உலகமடா!' எங்க அம்மாவை வெச்சு எழுதியிருந்தேன். தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படிக்கப்போனப்போ தஞ்சைப்பிரகாஷுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்மூலம் உருவான தொடர்பு பல விதங்களில் என்னை மாற்றியது. தாமரைக்கு தொடர்ந்து எழுத தி.க.சி ஊக்குவிச்சாரு. என்னை இந்த எழுத்து உலகுக்கு கொண்டு வந்தது அவர் தான். அப்புறம் நிறைய எழுத ஆரம்பிச்சேன் கொஞ்சம் பேரும் கிடைச்சது. ஆனால், பலர் தமிழை திரும்பிப்பார்க்கிற படி காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment