Tuesday, April 3, 2012
புஷ்பலதாவிடம்
*புஷ்பலதாவிடம் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காமல் தான் சீரியலுக்கு வந்தீர்களாமே?
தெலுங்கில் "கருத்தவியம்' சீரியலை பார்த்த டைரக்டர் ப்ரியன் என்னை "மகராசி' சீரியலுக்கு அழைச்சு வந்தார். படத்தில் நடிக்கணும்ன்னு ஆசை தான். தெலுங்கு சீரியலில் நடிச்சிட் டிருந்தப்ப இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. வந்ததெல்லாம் கவர்ச்சி வாய்ப்புகள். "டிவி'யில் நல்ல வாய்ப்பு வந் திட்டிருக்கு. ஒர்க் பண்ணவும் சிரமமில்லை. யூனிட்'ல எல்லாரும் நல்லா பழகுறாங்க. ரிலாக்ஸ்சா ஒர்க் பண்ண முடியறது. இப்படித் தான் எதிர்காலம் இருக்கும் ன்னு சொல்ல நாம ஆண்டவன் இல்லையே. நாம நல்லபடியா நடந்துக்கிட்டா நடப்பதும் நல்லதா நடக்கும்ங்கிற நம்பிக்கையில இருந்திட்டிருக்கேன்.
சீரியல்ல மாடர்ன் டிரஸ் போடுவது அவுங்க அவுங்க இஷ்டம். பப்ளிக்ல அறிமுகமான நாம எப்படி நடந்துக்கணும்ன்னு கொஞ்சம் யோசிச்சா டிரஸ் விஷயத்தில கவனமா இருக்கணுன்னு தோணிடும். பொழுது போக்கு அம்சங்கள்ல நாட்டம் உள்ளவங்க மாடர்ன் டிரஸ் போட்டுக்க ஆசைப்படுவாங்க. மாடர்ன் டிரஸ் போட்டுக்கிடறது தவறுன்னு சொல்ல மாட்டேன். முகம் சுளிக்கிற மாதிரி டிரஸ் போட்டுக்கிறதை தவிர்க்கலாமேன்னு சொல்லலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment