Tuesday, April 3, 2012

டிவி தொகுப்பாளினி ஐஸ்வர்யா




"பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்'," சூப்பர் சிங்கர்' என விஜய்டிவியிலும்," நாளைய இயக்குனர்' என்று கலைஞர் டிவியிலும் தொகுப்பாளினியாக வந்து டிவி ரசிகர்களது மனதை கொள்ளை கொண்டவர் ஐஸ்வர்யா. அவரை ஒரு மாலை நேரத்தில் கிரீன் பார்க் ஓட்டலில் வைத்துச் சந்தித்தோம்....
* ஊரெல்லாம் உங்க பேரை சொல்றாங்க எப்படியிருக்கு?
ஐஸ்..ஐஸ்னு தானே?! சொல்றாங்க. இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலை. அப்படியே சொன்னாலும் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. கூல்ரிங்க்ஸ் குடிக்கறவங்களாயிருக்கட்டும், சின்ன குழந்தைகள் அடம் பிடிக்கறதாக இருக்கட்டும், தன்காரியத்தை சாதிக்க ஒரு பொண்ணு தன் அம்மாவுக்கு வைக்கிறதாகட்டும் ஐஸ்னு என் பேரைத்தான் சொல்லியாகணும். பேறே சில்னெஸா மைனஸ் டிகிரில இருக்கு இல்ல. நீங்க வெயில் காலத்தில வந்திருக்கணும். மழைக்காலத்தில வந்திருக்கிங்க. அதான் இப்படி ஓவரா குளிருது.
*சரி , என்ன படிச்சிருக்கிங்க?
எஸ்எஸ் ஜெயின் கல்லுõரி யில் விஷ்காம் இரண்டாம் ஆண்டு படிச்சிட்டிருக்கேன். பத்தாம் வகுப்பு படிக்கிறபோது விஜே யாக தேர்வானேன். விஜய்டிவியில ஜோடிநம்பர் ஒன்னில் சிவ கார்த்திகேயனுடன் ஜோடியாக ஆடினேன். பிளஸ்டூ படிப்பு காரணமாக டிவிகளுக்கு லீவு விட்டிருந்தேன். அதுக்குள்ளே ஏகப்பட்ட போன்கால்கள் ..(நாம் குறுக்கிட்டு நீங்க திரும்பி வந்திடாதீங்கன்னா)முறைத்தவர் ஏன் ஐஸ்சை காணலைன்னு ஏகப்பட்ட லட்டர் வந்திருச்சு. அதான் பரிட்சை முடிஞ்சதும் திரும்பி வந்து நிகழ்ச்சி செய்தேன்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் டூல நான் 96 சதவிகிதம் மார்க் எடுத்திருந்தேன். சென்னையில் நான் தான் பர்ஸ்ட் பேப்பர்ல கூட செய்தியாக வந்தது.
*டிவி தொகுப்பாளினியாக மட்டும் வந்தாப்போதுமா?
ஏன்சார் உங்களுக்கு இந்த ஓர வஞ்சனை. அழகா டிரெஸ் பண்ணிக்கிட்டு சுமார்ட்டாக வந்து கியூட்டா ;நாலு நல்ல விசயங்களை சொல்லி நிகழ்ச்சி செய்யறது உங்களுக்கு பிடிக்கலையா? நான் கிளிசரின் போட்டுட்டு அழணும்னு சொல்றீங்களா? எங்க வீட்டுல அம்மா வெங்காயம் கட் பண்ணக்கூட விட மாட்டாங்க. எனக்கு சீரியல்கள் மேல பெருசா ஆர்வம் இல்லை. அதில நடிக்கறதிலயும் ஆர்வம் இல்லை. என்னுடைய வேலை என் படிப்புக்கு உதவியாக இருக்கணும்னு நினைச்சேன். அதுக்கு ஏத்த மாதிரி " நாளைய இயக்குனர்' வாய்ப்பு கிடைச்சது. என் படிப்புக்கு உபயோகமாக பல விசயங்களை அங்கே கத்துக்க முடியுது. நாளைய இயக்குனருக்காக வாரத்தில இரண்டு நாட்கள் சூட்டிங் இருக்கும். என் காலேஜ் ப்ரண்ட்ஸ்களை எல்லாம் அழைச்சுட்டுப் போவேன்.ஜாலியாக இருக்கும். (சீன் போடுவீங்கன்னு சொல்லுங்க) இந்த கிண்டல் தானே வேணாங்கறது. ஆனா, இப்போ படிப்பு காரணமாக கொஞ்சம் விடுமுறை கொடுத்திருக்கேன்.
*நாளைய இயக்குனர் பற்றி?
ஐந்து நிமிடத்தில் கதை சொல்றது கஷ்டம் . அதிலும் கலந்துக்கற பலர் அசத்துறாங்க. இது போல நிகழ்ச்சிகள் இன்னைக்கு ரொம்ப அவசியம். மகேந்திரன், பாலு மகேந்திரா, மணிரத்னம் மாதிரிப்படங்களை இன்னைக்கும் மக்கள் கிட்ட கொண்டு போய்சேர்க்கற விதமாக படங்களை பத்தி நடுவர்கள் மதன், பிரதாப்போத்தன் சொல்ற பலவிசயங்கள் உபயோகமாக இருக்கு. எந்த மாதிரி படங்களை பார்க்கணும்னுங்கற தெளிவைக் கொடுத்திருக்கு.


*பொழுதுபோக்கு?
படிக்கறப்ப என்சிசில நான் தான் ஸ்கூல் பிரசிடெண்ட்,நம்நாட்டுக்கு அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தப்ப ஆர்பிசில (ரிபப்ளிக் பரேட் கமாண்டர்)இருந்தேன். டெல்லில நடந்தது கலந்துக்கிட்டேன். அப்பறம் தமிழகத்தில நடந்ததிலயும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பரேட் முடிஞ்சதும் எங்களுக்கு டீ பார்ட்டி கொடுத்தார். கிளாசிக்கல் டான்ஸ், போக்டான்ஸ்ல இஷ்டம். பரதம் கொஞ்சம் தெரியும். டான்ஸ் தெரியும் காரணம் ரியாலிட்டி ஷோவுல நடிச்சதால அதில ஈடுபாடு அதிகம். காலேஜ்க்கு ஜட்ஜாக போயிருக்கேன். ஒருபக்கம் காலேஜ்ல படிக்கற மாணவியாக போனாலும், இன்னொரு பக்கம் நடுவராகபோறப்ப என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. ஆனாலும், சந்தோஷமாக இருக்கும். சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க் கால்குதிரைன்னு விழாக்களுக்காக கொஞ்சம் அந்த பாரம்பரிய நடனங்களை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன்.

*ஐஸ்க்கு காதல் அனுபவம்?
இதுவரைக்கும் யார்கிட்டயும் மாட்டினதில்லைப்பா. நம்மளையும் நாலுபேர் பார்க்கணும்னா நாமளும் ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கற பொண்ணுநான். காதல் படத்தில வர்ற ஐஸ்வர்யா மாதிரி ஓடற பொண்ணு நான் கிடையாது. என்னைப் பொருத்தவரை இப்போது அதெல்லாம் தேவையாப்பா. சிலபேர் காலேஜ்ல என் ப்ரண்ட்ஸ்களுக்கு இயக்குனர் பேரரசு தன் படங்கள்ல வசனம் வைக்கிற மாதிரி லெட்டர் எழுதிக்கிட்டு வந்து அசடு வழிவாங்க. பார்க்க காமெடியாக இருக்கும்.

*உங்க குடும்பம் பத்தி சொல்லலையே?
அப்பா பாரீஸ்கார்னர்ல ஐஸ்வர்யா புரவிஷனல் ஸ்டோர் வெச்சிருக்கிறாரு. அம்மா வீட்லயிருந்து எங்களை எல்லாம் பார்த்துக்கறாங்க. அண்ணன் சந்தோஷ் கலைஞர் டிவியோட இசையருவில காம்ப்பியர் செய்றாரு. எனக்கு பிடிச்ச பிடிக்காத படங்கள்னு கிடையாது. மொத்தத்தில எல்லாம் படங்களும் பிடிக்கும். சிலதை ரசிக்கலாம். சிலதை ரசிக்க முடியாது. படங்கள் பாடம். சிலது ரசிக்கறதோட விட்டுடணும். தமிழ் சினிமாவில ( நாளைய இயக்குனர் பண்ணதால பிரச்சினை எதுவும் வந்துடாத படி செய்தி போடுங்க) என்றபடி சங்கர், கமலஹாசன், மணிரத்னம் படங்கள் பிடிக்கும். பேரரசு , விக்ரமன் படங்கள்ல வர்ற வசனங்கள் சரியான காமெடியாக இருக்கும். அதெல்லாம் மொக்கையான பஞ்ச் டயலாக்குகள். பாடல்கள்ல மெலடி பாட்டுக்கள் இளையராஜா, ஏஆர் ரகுமான் பிடிக்கும். எனக்கு ஆரம்பத்தில சைக்கிள் ஓட்டத் தெரியாது. டூவீலரை விழந்து காயம் பட்டு கத்துக்கிட்டேன்.

* உங்க அட்வைஸ்?
நீங்க ரொம்ப அழகுன்னு யாராவது வழிஞ்சா தாங்கஸ் சொல்லிட்டு வந்துடுங்க. ஏன்னா எவ்வளவு துõரம் நம்மளை ரசிச்சுட்டு கமெண்ட் வேற சொல்றாங்க. இல்லையா அவங்க மனசை ஏன் புண்படுத்துவானேன். இது தான் என்போல காலேஜ் பொண்ணுங்களுக்கு நான் சொல்ற அட்வைஸ்.யாராவது வழிஞ்சா? அடிக்கமாட்டேன். பிடிக்குதுன்னு சொல்றவங்களை யாராவது அடிப்பாங்களா? சொல்லுங்க.

No comments: