Tuesday, April 3, 2012
விவேகா
.பாடலாசிரியர் விவேகா
கந்தசாமி, ஈரம், வேட்டைக்காரன், தில்லாலங்கடி என அடுத்தடுத்து அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை கையில் வரிசையாக வைத்துக் கொண்டு சதா கவிதைகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் விவேகாவிற்கு சொந்த ஊர். திருவண்ணா மலை மாவட்டம், சாத்தனுõர் அருகிலிருக்கும் வேடங்குளம் கிராமம். அவர்தான் இந்த வார எழுத்தாளர்.
திருவண்ணாமலையில் உள்ள கல்லுõரியில் பிஎஸ் சி கணிதவியல் படிச்சேன். ஆனால், என்னோட ஆர்வமெல்லாம் கணிதவியல் பாடத்தைவிட இலக்கியத்துலதான் இருந்துச்சு. நிறைய இலக்கிய புத்தகங்களை தேடித் தேடி படிச்சேன். கல்லுõரியில வகுப்பு நேரம் போக பெரும்பாலும் தமிழ் பேராசிரியர்கூடவே இருப்பேன்.
முதலாமாண்டு படிக்கையில், "ஒரு பிரளயத்தின் அவசியம்' என்கிற தலைப்புல, கவிதை எழுதி அது கவிதையான்னு கூடத் தெரியாமலே அதை புதிய பார்வைங்கிற பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். அது விவேக்ரஞ்சனிங்கிற பேர்ல பிரசுரமாச்சு. விவேகானந்தன் என்பேரு. என் அண்ணன் மகள் பேரு ரஞ்சனி. புத்தகத்துல என் முதல் கவிதை வந்தபிறகுதான், அட நமக்கும் நல்லா கவிதை எழுத வருதேங்கற ஆர்வம், சந்தோஷம் ஏற்பட்டுச்சு.
அப்படி எழுதின கவிதைகளை மொத்தமாய் தொகுத்து "உயரங்களின் வேர்'னு கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். தமிழ் கல்வி ஆய்வு நிறுவனம் மூலமாக "சிந்தனை செம்மல் விருது' அந்த கவிதைத் தொகுப்புக்கு கிடைச்சது. அந்த தொகுப்பிலுள்ள "மேலும், கீழும்'ங்கற கவிதை கடைநிலை ஊழியர்கள் மாநாட்டுல பல பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப் பட்டது.
தினமலர்ல பெண்புராணம்னு பதினைந்து வார தொடர் எழுதினேன். இந்தத் தொடர் என்னை நிறைய வாசகர்கள்கிட்ட அறிமுகப்படுத்தியது.
முதல்பட வாய்ப்புன்னு சொன்னா, "நீ வருவாய் என' படம்தான் . புதிய மன்னர்கள் படத்தில வில்லனாக நடிச்ச நண்பர் சம்பத்கூட பேச்சுத் துணையாக, கூட போன போது இயக்குனர் ராஜகுமாரன் அறிமுகம் ஆனார். என்னைப்பத்தி விசாரிச்சுட்டு என் கவிதைகளைப் பற்றிக் கேட்டார். நான் சில பாடல்களை வரிகளாக சொல்லவும், நல்லா ரசிச்சார். கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்பு தற்றேன்னாரு. அப்படி கிடைச்ச வாய்ப்புல எழுதின பாட்டுதான், "பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா, பூங்காற்றே பிடிச்சிருக்கா...' இதுதான் என்னுடைய முதல் பாட்டு.
இதுவரை ஐநுõறுக்கும் மேற்பட்ட பாடல்கள், முந்நுõறு க்கும் மேற்பட்ட படங்கள்ல எழுதியிருக்கேன். "வில்லு' படத்தில் டாடிமம்மி வீட்டில் இல்லைங்கற பாடல் எல்லோர்கிட்டேயும் என்னைக் கொண்டு சேர்த்தது. போன்ல பேசறப்பவே ஹலோ ன்னு தான் சொல்றோம். அப்படி நாம இயல்பா பேசற வார்த்தைகளை கோர்த்து ஒரு மாடர்ன் பொண்ணு டாடி மம்மி ன்னு சொல்லிப் பாடற சூழ்நிலையில் வரக்கூடிய பாட்டு அது.இன்னிக்கு கல்லுõரி, பள்ளி, டிவி நிகழ்ச்சிகள்ல அதிகமாக கேட்க முடியுது. முக்கியமாக ரசிகர்கள் ரசிக்கறாங்க. இப்போ கந்தசாமியில் நான் எழுதின அத்தனை பாடல்களும் மேலும் என்னை பிரபலப்படுத்திச்சு. பட்டிதொட்டியெல்லாம் என்னை கொண்டு சேர்த்திருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment