ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நோய் வந்து உலகை அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.பிளேக், பறவைக்காய்ச்சல், சார்ஸ், சிக்கன் குனியாவைத் தொடர்ந்து இப்போது அந்த வரிசையில் " ஸ்வைன் ப்ளூ ' எனப்படும் பன்றிக்காய்ச்சல்.
மெக்ஸிகோ,அமெரிக்கா , பிரிட்டன் உள்ளிட்ட 12நாகளில் தற்போது இந்தநோய் காணப்படுகிறது.பன்றி இரைச்சி சாப்பிடுவதால் இந்நோய் பரவுவதில்லை. என உலக சுகாதார நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.பன்றியின் சுவாசப் பையில் வலம் வரும் எச் 1 என் 1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற வல்லவை. மெக்ஸிகோ பன்றி பண்øயில் பரவ துவங்கிய நோய் 1300 பேரை த்தாக்கியுள்ளது. இந்தநோயின் கொடுமை தாங்காமல் அந்நாட்டில் 176பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் ஒருவர் பலியாகியுள்ளார். 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்நோய் இதுவரை 17பேரை தாக்கியுள்ளது. அதிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டிருகிறார்கள்.
பன்றிக்காய்ச்சலின் அறிகுறி என்ன?
" இன்புளூயன்சா ' என்ற தொற்று நோய் வகையை சேர்ந்தது தான் " ஸ்வைன் ப்ளூ ' . சுவாசத்தை பாதிக்கக் கூடியது. கடுமையான காய்ச்சல், இருமல் , தும்மல், உடம்புவலி,தலைவலி,வாந்தி,வயிற்றுப்போக்கு என எல்லாம் ஒன்று சேர்ந்து நான்கு நாட்களுக்கு ஆளை பாடாய் படுத்தும் இந்தநோய் பிறரது தும்மல் மற்றும் இருமல் மூலமாக காற்றில் வேகமாக பரவும்.எனவே , இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியிருப்பது அவசியம்.இந்த நோயின் கடுமையை தாக்கு பிடிக்க முடியாத சிலர் இறந்து விடுகின்றனர்.
குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்தநோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்தநோய் முற்றினால் உடல் நீலநிறமாக மாறிவிடுகிறது.அதுமட்டுமில்லாது மூச்சு விட சிரமப்படுவார்கள் .இந்தநோய்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சாதாதரண காய்ச்சலுக்குத் அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர். ஒவ்வொரு முறையும் தொற்று நோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள்.1918 ம்ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ தான் அதிகம் பேரை கொன்றுள்ளது.
இந்தநோய்தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்தநோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள் ,வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.இந்தநோய் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதால் ளற்ற நாடுகள் உஷாராகிவிட்டன. வெளிநாடுகளில் இருந்துவருபவர்கள் விமானநிலையங்களிலேயே தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பலநாடுகளிலம் எகிப்து நாட்டில் மூன்று லட்சம் பன்றிகள் பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய் பயத்தால் கொன்றுவிட அந்த நாட்டு அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது.இறைச்சிமூலம் இந்நோய் பரவவில்லை என்றாலும், பன்றி இறைச்சியை தடை செய்துள்ளது ரஷ்யா.ஆசியா மற்றும் ஐரோப்பிய நாட்டு சுற்றுலா நிறுவனங்கள் மெக்சிகோ நாட்டுக்கு பயணிகளை அனுப்புவதை நிறுத்திவைத்துள்ளது. தென்கொரியாவின் சியோல் விமானநிலையத்தில் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்ள்ளன. காய்ச்சலுடன் வரும் பயணிகளை இந்த கேமராக்கள் காட்டிக் கொடுப்பதால் ,அந்த பயணிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்றனர். அமெரிக்காவின் சில மாநிலங்களில் இந்தகாய்ச்சல் சிலருக்கு காணப்படுவதால் எப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
தேவையற்ற பயம்:
பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து உடனடியாக தேவைப்படுவதால் மருந்துதயாரிக்கும் நிறுவனங்கள் உலக சுகாதார நிறுவனத்தை தொடர்பு கொண்டு ,பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்டன் மாதிரி ரத்தம் போன்றவற்றை கேட்டுள்ளன. பன்றிக்காய்ச்சல் குளிர் அதிகமுள்ள சீதோஷ்ண நிலையில் தான் அதிகம் பரவுகிறது.எனவே வெப்ப நாகளான இந்தியா போன்றவற்றில் எச் 1என் 1வைரஸ் கிருமிகள் நான்குமணி நேரத்துக்கு மேல் இந்த கிருமிகள் உடலில் தங்கியிருக்க வாய்ப்பில்லை. எனவே பயம் நமக்கு தேவையில்லை.
வெவ்வேறு பெயர்களில் பன்றிக்காய்ச்சல்
பன்றிக்காய்ச்சலுக்கு ஒவ்வொரு நாட்டிலம் ஒவ்வொரு பெயர் வழங்கப்பட்டு வருகிறது." ஸ்வைன் ' என்பதற்கு பன்றி என்ற அர்த்தமுள்ளதால் இந்தவார்த்தையை ஐரோப்பிய இறைச்சிதயாரிப்பாளர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள். சி ல ஐரோப்பிய நாடுகள் இந்த நோயை "நாவல் ப்ளூ ' என்று அழைக்கின்றனர். இஸ்ரேல் ,பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகள் " மெக்சிகோ ப்ளூ ' என்றழைக்கின்றனர். ஜெர்மன் இத்தாலியில் "ஸ்வைன் ப்ளூ' இந்தியாவில் எப்படி அழைப்பது என குழப்ப நிலை நீடிக்கிறது.
முகமூடி:
பன்றிக்காய்ச்சல் காற்றின் மூலம் ஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கு பரவுவதால் முகமூடி அணிவது அவசியமாகிறது.இந்தநோய் பரவியுள்ள நாடுகளில் முகமூடிவிற்பனை அதிகரித்துள்ளது.
30 லட்சம் பேருக்கு மருந்து தயார் : வெப்பநாடுகளில் இந்தநோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை. என ஒரு பக்கம் கூறினாலும் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்தநோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர்.என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 30லட்சம் பேருக்கு தேவையான " டேமிப்ளு ' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்தவகையான " ப்ளு' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான் பொதுவாக பயன்படுத்தப் படுகிறது.சிப்லா,ரன்பாக்சி நிறுவனங்கள் இந்தவகை மருந்துகளை சப்ளை செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.
பன்றிக்காய்ச்சல் நோயால் இதுவரை 15,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 99 பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பன்றிக் காய்ச்சலின் தாக்கம்
ஸ்வைன் ப்ளூ வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டை வலி , சோர்வு, உடல்வலி ,குளிர் போன்றவையும் வரும்.சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
கடந்தகாலங்களில் இந்நோவாய்பட்டவருக்கு கடுமøயான அளவில் உடல் நிலை பாதிப்பும்(நிமோனியா மற்றும் சுவாசஉறுப்புகள் செயல் இழப்பு ) உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப்போலவே ஏற்கெனவே இருக்கும் நோய்களை யும்வலிகளையும் இந்நோய் தீவிரபடுத்தும்.
இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக் கூடியது .சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருட்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய்ப்பகுதிகளை தொட்டாலம் இந்நோய் தாக்கக்கூடும்.
அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம்நாளுக்குள் மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும் அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும் , நோயில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுது ம் இந்நோய் ஒருவரிடம் டருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்.
முதல் முக்கிய செயல்:
உங்கள் கைகளை கழுவுங்கள் .நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும் .நன்றாக துõங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும். மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாக கையாளுங்கள் முறையாக கையாளுங்கள் .அதிகஅளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளவும். ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ் தொற்றியுள்ள பொருட்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள்.வேகமாக சுவாசித்தல் அல்லது சுவாசிக்க சிரமப்படுதல் , தோல்களில் நீலநிறம் கலந்த தோற்றம், அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல், பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல் .குழந்தைகளை துõக்கும் பொழுது ம் கட்டி அணைக்கும் பொழுதும் அசௌகரியத்தை யும் எரிச்சலையும் காட்டுவார்கள்.
ஸ்வைன் ப்ளூ வராமல் தடுக்க எந்த தடுப்பூசியும் இல்லை. இன்புளூயன்ஸா போன்ற சுவாசநோய்கள் வராமல் தடுக்க எந்ததடுப்பூசியும் இல்லை. ஆனாலும் நோய் பற்றியும் அதைத்தடுக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வதுநல்லது.
இருமும் பொழுதும் ,தும்மும் பொழுதும் வாய்மற்றும்ங மூக்குப்பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும் .
தும்மல் இருமலுக்குப்பின் சோப்மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும் .ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் சுத்தப்படுத்துதல் நலம்.
கண்கள் , வாய், மூக்கு பகுதிகளை தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.
இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப்பழகுவதைத்தவிர்க்கவும். நோய் தாக்கினால் தய செய்து வேலைக்கு மற்றும் பள்ளிக்குச் செல்வதைதவிர்த்து விட்டு பிறருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.
No comments:
Post a Comment