Tuesday, April 3, 2012
நாராயணி கண்ணகி.
வேலுõர் மாவட்டம் ஜோலார்பேட்டைதாங்க சொந்த ஊர். குறிப்பிட்டு சொல்லும்படியா எழுத்தாளரோ, கவிஞரோ இல்லாத ஊர். சின்ன வயதிலிருந்து எனக்கு படிக்க கிடைத்ததெல்லாம் தினமலர், ராணி, குமுதம்தாங்க... என்னை எழுத்தாளராக்கி வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும் அதேதாங்க.
எந்த இலக்கியச் சிற்றிதழும் வாசிக்கக் கிடைத்ததில்லை. எந்த இலக்கிய எழுத்தாளரின் தொடர்பும் கிட்டியதில்லை. அப்புறம் எப்படி எழுதினேன் என்றுதானே கேட்கிறீர்கள்?
ஆண், பெண் இருபாலரும் பயிலுகின்ற பள்ளியில் பிளஸ் 2 படித்தேன். ஒரு பையன் நிறைய கவிதை எழுதுவான். அவனுடைய கவிதை நோட்டு ஒரு செல்லக் குழந்தையைப் போன்று எல்லாம் பெண்களின் கைகளிலும் தவழ்ந்தது. கவிதைகளை கொஞ்சினார்கள். கவிதைக்காகப் பையன் பிரபலமாகிவிட்டான். நான் வயிற்றில் அடுப்பை பற்ற வைத்துக்கொண்டு தவித்தேன். ஒரு இரவெல்லாம் கண் விழித்து நானும் ஒரு நோட்டுப் புத்தகம் நிறைய கவிதைகள் எழுதினேன். கொண்டு போய் மாணவிகளிடம் கொடுத்தேன். அவர்கள் யாரும் அதை கொஞ்சவில்லை. வேறுவழியின்றி வாரமலருக்கும், ராணிக்கும் அனுப்பி வைத்தேன். வாரமலர்தான் என் முதல் கவிதையை வெளியிட்டது. சிறுகதைகள் எழுதுவதற்கு ஆர்வத்தை துõண்டிவிட்டது தினமலர் கதைமலர். எழுதியதை பிரசுரித்ததும் தினமலர் கதைமலர்தாங்க.
மாணவிகளிடம் பிரபலமான பையனால் பத்திரிகைகளில் எழுதி ஜெயிக்க முடியவில்லை. என்னால் முடிந்தது. இப்படித்தாங்க முதன் முதலில் எழுத ஆரம்பிச்சேன்.
சிறுகதைகள், நாவல்கள் என்று என் பேனா இன்றும் ஓடிக்கொண்டே இருக்கிறது. பல முன்னணி மாத இதழ்கள், கதைக்கான இதழ்களில் என்னுடைய கதைகள் பிரசுரமாகின. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதே ஆண்டு கல்கி நடத்திய குறுநாவல் போட்டியிலும் முதல் பரிசு பெற்றேன்.
தமிழறிஞர் ம.நன்னன் நடத்திய புதினப் போட்டியில் இரண்டாம் பரிசு. இந்த நுõலை முதல்வர் கருணாநிதிதான் வெளியிட்டார்.
இடையில் சின்னத் திரைக்கும், வெள்ளித் திரைக்கும் சென்று திரும்பி வந்துவிட்டேன். குடும்பம் முக்கியமாச்சுங்களே... அதனாலதான்.
சென்ற ஆண்டு தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகம் வெளியிட்ட என் 12 நுõல்களை இயக்குனர் அமீர் வெளியிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment