சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கிற சங்கீதா ரெஸ்டாரண்டில் கர்நாடிகா ஆர்ட்ஸின் சங்கீத சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு பல கர்நாடக இசைப்பாடகர்கள், கலைஞர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர்களது அனுபவங்கள் இங்கே தொடர்கிறது.
ஓ.எஸ்.அருண்
டெல்லியில சபாக்கள் கிடையாது. வீட்டுல என்னை வேலைக்கு போ!போ!ன்னாங்க எனக்கு சங்கீதம் தான் பிடிச்சிருந்தது.சில பேர் என்னைக் கேட்பாங்க. நீங்க என்ன பண்றீங்கன்னு பாடுறேம்பேன். பாடுறீங்க சரி, என்ன வேலை சார் பார்க்கறீங்கம்பாங்க? நான் பாடறேம்பேன். பாடுவேளாம்பாங்க. ஆமாம்பேன். முழுநேரம் பாடுவேளாம்பாங்க. ஆமாம் சார் முழுநேரம் பாடுவேன்னு சொல்லுவேன். சரி சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்கம்பாங்க?இப்படித்தான் பலரும் இருக்காங்க. அதே மாதிரி கச்சேரியில காம்போதி ராகம் மூச்சைப் பிடிச்சுண்டுஇரண்டரை மணிநேரம் பாடுவேன்.ஆலாபனை எல்லாம் முடிஞ்சப்பறம். கச்சேரி முடிஞ்சு வெளியவர்றப்ப சொல்லுவாங்க.இதை செம்மங்குடி பாடிக் கேட்கணும்னு.அப்போ இவ்வளவு நேரம் பாடினது? அப்படி எம்எல்வி, ஜிஎன்பி கேட்கணும்னா அதுக்காகத்தானே கேசட்ஸ் இருக்கு. அதைக்கேட்டுடளாமே! நான் ஏன் செம்மங்குடி, அரியக்குடி மாதிரிபாடணும்.நான் என்னை மாதிரி பாடறேனே என்று இரண்டு வரி கீர்த்தனையைப்பாடிவிட்டு நல்லா இருக்கா? என்றவர். அடுத்ததாக இன்றைய பாடகர்கள் சினிமாக்காரர்கள் போல உடை உடுத்துகிறார்களே என்றதற்கு? பாடகர்களா? பாடகிகளா யாரை குறை சொல்றேள் என்றவர்.ஜம்னு போறது சந்தோஷம்.இந்தகலர் நல்லா இருக்கா இல்லையா? தீபாவளிக்காக விளக்கு ஏத்தறோம். பார்க்கறப்ப தெய்வீகம் நம்ம வீட்டுக்குள்ளே வருதில்லையா? வாய்விட்டு மேல் ஸ்தாயியில மனம்உருகிப் பாடறப்போ பண்டரிமுகுந்தன் (துக்காராம் சுவாமி பஜன்)அபங்க்கை பாடறப்போ நம்மை மீறி அழுகை வரும். அப்போ பண்டரிபுரம் பாண்டுரங்கனையே நேர்ல தரிசனம் பண்ற அனுபவம கிடைக்கும். பாடற எங்களுக்கே இப்படின்னா, கண்களை மூடி மெய்மறந்து கேட்கறவங்களுக்கு எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும். இசைகேட்கறது தியானம் மாதிரி.அப்படி ராகம், தானம், பல்லவி பாடறப்ப தெய்வ ஆராதனைகள் பாடறப்ப நாம தெய்வத்துக்கு பக்கத்துலயே போயிடறோம் இல்லையா? அந்த தோற்றத்தோட நாங்களும் இருந்தாத்தானே நீங்களும் கேட்கமுடியும்.உங்களுக்கும் பார்க்க குளிர்ச்சியாக இருக்கும். அந்த உணர்வு வரணுங்கறதுக்காகத்தான் நல்லா டிரெஸ் பண்ணிக்கறோம். இந்த டிரெஸ் கண்ணுக்கு குளிர்ச்சியாகத்தானே இருக்கு? நைட்டியில வந்து கச்சேரிபண்ணா நல்லா இருக்குமா?என்றார்.
உன்னி கிருஷ்ணன்
"" சின்ன வயதில வீட்டுல கிரிக்கெட் விளையாடியபோது நான் பேட்டிங் செய்தேன்னா என்னோட பாட்டிதான் பவுலராக பந்தை துõக்கிப்போடுவாங்க.சின்னவயசில நிறைய சினிமாப்பாடல்கள் பாடிக்கிட்டிருந்தேன். கர்நாடக சங்கீதத்தை கத்துக்கிட்டு கச்சேரி பண்ணினப்ப சினிமாப்பாட்டு பாடிக்கிட்டிருக்கறதை நிறுத்திட்டேன். திரும்ப சினிமாக்கள்ல எனக்கு வாய்ப்புகள் அமைஞ்சது இப்போ இரண்டும் தொடருது. இளமையின் ரகசியம் பற்றிக்கேட்டதும் ரகசியமாவே இருக்கட்டுமே என்றார்.தொடர்ந்து இருபது வருஷத்துக்கு முன்னே பாம்பேக்கு புனேயில ஒருகச்சேரி பண்றதுக்காக போனேன். அங்கே என்னை வரச்சொன்ன சபாக்காரங்களை நான் இதுக்குமுன்னே பார்த்தது கிடையாது. என்னை ரயில்வே ஸ்டேஷன்ல என்னை ரிசீவ் பண்ணிக்க வந்தவங்களையும் நான் பார்த்ததில்லை.நான் ஜீன்ஸ், டீசர்ட் போட்டுக் கிட்டிருந்தேன்.இறங்கி நானும் வெயிட் பண்றேன் அவங்களை காணலை. அதாவது என்னைதான் கடந்து போயிருக்காங்க. நான் யாருன்னு அவங்களுக்கு தெரியலை. அவங்க பாடகர்ன்னா ஏதோ சிலுக்கு ஜிப்பாமாட்டிக்கிட்டு வாய் சிவக்க வெத்தலையோட இரு ப்பார்னு நினைச்சுக்கிட்டிருந்திருக்காங்க. நானும் காத்திருந்து பார்த்திட்டு ஒரு ஆட்டோ பிடிச்சு என்னை வரச்சொன்னவர் வீட்டுக்கு என்னை தேடி ஸ்டேஷனுக்கு வந்தவங்க வர்றதுக்குள்ளே நான் வந்துட்டேன். என்னை பார்த்ததும் சபாக்காரர் சாரி,சொல்லிட்டு! நீங்க என் கூட வாங்க ஹோட்டல்ல விட்டுடறேன்னு சொல்லி வண்டியில ஏத்திக்கிட்டு போனார்.ஒரு இடத்தில வண்டி நின்னுடுச்சு.நானும் இடம் வந்திருச்சுன்னு இறங்கிட்டேன். சுத்திப்பார்த்திட்டு திரும்பிபார்த்தா அவர் வண்டில போயிட்டார்.அவர் ஹோட்டல்ல போயி இறங்கி பார்த்திருக்கார் என்னைக் காணலை. உடனே நான் ஒரு ஆட்டோ பிடிச்சுட்டு அவர் வண்டியில வரும்போது சொல்லியிருந்த ஹோட்டலுக்கு போயி சேர்ந்தேன்.

No comments:
Post a Comment