தங்கம் மாதிரி தண்ணீரையும் சேமிக்கும் காலம் வரும்
தலைப்பைச் சேருங்கள் |
கோவையின் நொய்யல், சென்னையில் கூவம் என பல நதிகள், ஏரிகள், குளங்கள் கூட இன்றைக்கு மக்களின் குடியிருப்பு பகுதியின் ஆக்கிரமிப்பால் தங்களின் நிறம், தன்மை, குணம் மாறி சுய அடையாளங்களை இழந்து நிற்கின்றன. இன்று சென்னையில் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் அரசாங்கம் செயல்படத்தொடங்கியிருக்கிற அதேவேளையில் கோயம்புத்துõரில் ஒருகாலத்தில் பாழ்பட்டுப்போன நொய்யல் ஆற்றை சீரமைத்ததைத் தொடர்ந்து தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிற நேமம் ஏரியை துõர்வாரும் பணியை செய்யத் தொடங்கியிருக்கிறது கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிறுதுளி என்கிற அமைப்பு அதன் அமைப்பாளர்களில் ஒருவரான வனிதாமோகனை சந்தித்தோம்.
* இன்றைக்கு ஆறுகள், குளங்களோட தன்மை மாறிப்போக என்னகாரணம்? அதை எப்படி சரிசெய்யலாம்?
நாம் நம் ஆரோக்கியத்தில செலுத்தற அக்கரையை நம் உடம்பில ஓடற 90 % தண்ணீர்ங்கற மறந்துட்டு அந்த தண்ணீர்ங்கற ஆதாரத்தை காப்பாத்த தவறிட்டது தான். பல ஆறுகள்ல தொழிற்சாலை கழிவுகள் கலக்குது, பல இடங்கள்ல வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருக்காங்க இப்படி பல காரணங்கள் இருக்கு.
அரசர்கள் ஆண்ட காலத்தில பல மன்னர்கள் கோயில்கள் அருகில் குளங்களை வெட்டி வெச்சாங்க. அதில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர் மக்களுக்கு பயன்படட்டும்னு. இன்றைக்கு பல கோயில்கள்ல குளங்கள் நல்ல நிலைமையில இருக்கு. ஆனா, பல இடங்கள்ல குளங்கள் போதிய பராமரிப்பு இல்லாம துõர்ந்து போயிருக்கு. முன்னேயும் அடிபம்பு வசதி இல்லாம தண்ணீருக்காக பல கிலோமீட்டர்கள் துõரம் மக்கள் நடந்துபோய் தண்ணீர் எடுத்துட்டு வந்தாங்க. இன்னைக்கு போர் போட்டு தண்ணீர் வர்றதால அந்தஅவஸ்தை இல்லை. ஆனா, அப்படி போட்ட போர்ல தண்ணீர் வரணும்னா நிலத்தடி நீர் மட்டம் வேணும் இல்லையா, அது குளங்களையும், ஆறுகளையும் தண்ணீர் வரத்து நல்ல õ இருந்தாத்தானே நீர் தேங்கும். அப்படி பல ஆறுகள், குளங்களை கண்டுக்காம விட்டதால இன்னைக்கு நிலைமை சாயக்கழிவுகள் அதனுடைய அடையாளங்களை இழக்கவெச்சிடுச்சு. இப்பவே பருவம் தப்பி மழை, தண்ணீர் தேவைகள்னு இருக்கறப்போ எதிர்காலத்தில தண்ணீரின் தேவை இன்னும் அதிகமாகும். அப்போ எங்கே போவோம். குளோபல் வார்மிங் னு பயமுறுத்தறாங்க அதிலிருந்து தப்பிக்க குறைந்தபட்சம் நம்மாலான சுய பாதுகாப்புகளையாவது நாம் செய்திருக்கணும் இல்லையா அப்படி யோசிச்சப்ப தொடங்கினது தான் இந்த சிறுதுளி ங்கற அமைப்பு.
எங்க டீம்ல என்னோட சேர்த்து மொத்தம் ஏழுபேர் இருக்கிறோம். டாக்டர்.எஸ்.வி.பாலசுப்பிரமணியன், டாக்டர்.ஆர்.வி.ரமணி, டாக்டர்ரவிசாம், என்.வி.நாதசுப்பிரமணியம்,கணக்லால், சிஆர்,சுவாமிநாதன். ஏதாவது ஒரு குளம், ஏரியை சீரமைக்கணும்னா நாங்க கூடி ஆலோசனை பண்ணி முடிவெடுப்போம். யாரை அணுகலாம். எப்படி இதை முடிக்கறது . இதற்கான அனுமதிகள்னு பல விசயங்கள் இருக்கு.
2003ல் கோயம்புத்துõர்ல அதிகமான வறட்சி இருந்தது. நொய்யல் ஆறு மேற்கு மலைத்தொடர்ச்சிமலையிலிருந்து வரும் தண்ணீரை நம்பி இருக்கிறது. கோயம்புத்துõர்ல 400 ஆண்டுகள் முன்னே அந்தக்காலத்தில குளங்கள் நிறைய வெட்டி எக்கச்சக்கமான தண்ணீரை தேக்கி வெச்சிருந்து இருக்காங்க. அந்த காலத்தில் அரசர்கள் மக்களோட அன்றாடத் தேவைகளுக் காகவும், உணவுத்தேவையான விவசாயத்திற்காகவும்னு பாசன வசதிக்காக பல குளங்களை வெட்டி வெச்சாங்க. ஆனா, இன்னைக்கு அதையெல்லாம் பராமரிக்காம நாம விட்டுட்டோம். அதனுடைய விளைவு வீடுகள் கட்ட மரத்தையும் வெட்டிட்டோம். காடுகள் அழிவால அதனால மழை வளம் குறைஞ்சுப்போச்சு. மழை பருவம் தப்பி வரும்போது தண்ணீர் தேங்க இடம் இல்லாம குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துகிட்டிருக்குற நிலைமை.
பல குளங்கள்ல ஆகாயத் தாமரைகள் படர்ந்து தண்ணீரை உறிஞ்சிடுது. தமிழ்நாட்டில் இப்படி 100 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட பாசனம் உள்ள குளங்கள், ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கு. இப்படி 10 ஆயிரத்து 670 குளங்கள், ஏரிகள் இருக்கு. இதில் 5ஆயிரத்து 520 பாசன கண்மாய்கள், 5 ஆயிரத்து 150 மானாவாரி கண்மாய்கள் இருக்கு. பெரும்பாலான ஏரிகள் குளங்கள் ஆக்கிரமிப்பு, கட்டிடங்கள் கட்டறதுன்னு தண்ணீர் தேங்கும் இடங்கள் காடுகள் அழிச்சமாதிரி குளங்களையும் அழிஞ்சிட்டிருக்கோம்.
நொய்யல் ஆற்றை சீர் செய்யறதுக்காக நாங்க ஒரு திட்டம் வகுத்தோம். கோயம்புத்துõர் தொழில் நகரமானதால பல கம்பெனிகள்கிட்ட நிதியுதவி கேட்டோம். அப்படி எங்களுக்கு நிதியுதவி செய்ய கோயம்புத்துõர்ல எல்எம்டபிள்யூ, எல்ஜி, பிரிகால், சங்கரா ஐ சென்டர்னு பல நிறுவனங்கள் முன் வந்தாங்க அவங்க உதவியோட பெரிய பெரிய இயந்திரங்கள் மூலம் நொய்யல் ஆற்றையும் , பல குளங்களையும் சீரமைச்சோம். இப்போ கடந்தாண்டு பெய்த மழையில தண்ணீர் தேங்கி எங்களோட தாகத்தை தணிக்க உதவியிருக்கு. அதேமாதிரி சென்னை திருவள்ளூர்ல இருக்கிற நேமம்ங்கற ஆயிரம் ஏக்கர் ஏரியை துõர்வாரும் பணியில கோகோலா நிறுவனத்தின் உதவியோட இறங்கியிருக்கிறோம். அரசாங்கமும் பல குளங்களை , ஆறுகளை நுõறுநாள் வேலை த் திட்டம் மூலமாக சீர்செய்யுது. எங்கள் பங்குக்கு நாங்களும் செய்கிறோம்.
இதுதவிர எங்களோட சிறுதுளி அமைப்பின் மூலமாக குளக்கரைகளில் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு உள்ள வீடுகள் அமைத்தல், காடுகள் அழியாமல் காப்பாத்தறதுன்னு பல சமுதாய சேவைகளை செய்திருக்கிறோம். இதுவரை ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நட்டிருக்கிறோம். திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தியிருக்கிறோம். வெள்ளலுõர்ல குப்பைக்கிடங்கு மூலமாக பல நோய்கள் பரவ காரணமாக இருந்தது. அத்தகைய குப்பைக்கிடங்கிலிருந்து தொற்றுநோய்கள் பரவாம தடுக்க, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினோம்.
*மக்கள்கிட்ட விழிப்புணர்வு எந்தளவுக்கு இருக்கு?
இன்னைக்கு தங்களைச் சுற்றிலும் உள்ள இடங்கள்ல கிடைக்கற மழைநீரை தேக்கி தங்கள் வாழ்வாதாரத்துக்கு தக்க வெச்சுக்கறதுக்கான கவனம் குறைவுன்னு தான் சொல்லணும். தண்ணீரை டேங்கர்கள்லே வாங்கற சிந்தனை தான் அதிகமாயிருக்கு.
பள்ளிகள்,கல்லுõரிகள் உள்ள மாணவமாணவிகள், இளைஞர்கள் மூலம் விழிப்புணர்வ ஏற்படுத்திக் கிட்டிருக்கோம். அந்த தேவைகளை பூர்த்திசெய்யவேண்டிய பங்கு நம்மக்கிட்டயும் இருக்கு.
பணம் சம்பாதிக்கறதிலயும், இடத்தைவாங்கிப்போடறதில யும் இருக்கிற ஆசை தண்ணீரை சேமிக்கறதிலயும் வேணும்இல்லையா? இன்னைக்கு தேவைக்கு ஒரு லோடு தண்ணீர் இறக்கினோமான்னு இருந்திட்டா எப்படி.
வரக்கூடிய காலத்தில தங்கத்தை விட தண்ணீரின் மதிப்பு அதிகமாகும். நம் வீட்டில் தண்ணீர் சேமிக்கணும். இன்னைக்கும் பல வீடுகள்ல இரண்டு நாள் தண்ணீர் வராம மூணாவது நாள் தண்ணீர் வரட்டும் ராத்திரிபகல்னு பார்க்காம இருக்குற குடம், வாளி, சொம்பு முதற்கொண்டு தண்ணீரை சேமிச்சு வெச்சுக்கணும்னு நினைக்கறாங்க. அதே அக்கரை மழை பெய்யும் போதும் அது வீணாகப்போகாம சேமிக்கணும்னுங்கற அக்கரை வரணும்.இதுவரை 300 ரெயின்வாட்டர் சென்டர்கள் மூலம் 215 வீடுகளுக்கு ஆழ்துளை கிணறுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சாலைகள்ல தண்ணீர் தேங்காம, டிராபிக் இடைஞ்சல் இல்லாம செய்ய மழைபெய்ஞ்சு தண்ணீர் தேங்கினா ஒருமணி நேரத்தில பூமிக்கு போயிடற மாதிரி செய்திருக்கிறோம். ஒவ்வொரு துளி மழைநீரும் நமக்கு முக்கியம் தானே? .
விஜி.செல்வகுமார்
No comments:
Post a Comment