Monday, April 23, 2012

ஒரு கேள்வி பதில்


அசோகமித்திரன்

தீவிரமானல படைப்பாளர்கள் பலருக்கு அவர்களின் தந்தையர் மேல் கோபம் இருக்கிறதே?
எனக்கு முந்தைய தலைமுறையினர் பலருக்கு அவர்கள் தகப்பனாரை ஞாபகம் வைத்துக் கொள்ளும் படி இயலாமல் அற்பாயுளில் இறந்திருக்கிறார்கள். நாம் எதற்கு யார்மீது கோபம் கொள்வது? பொறுப்பற்ற பெற்றோர் மீது வேண்டுமானால் கோபப் படலாம். இந்தியாவில் தந்தையை ஒரு கடவுளாகத்தான் பார்க்கும் மரபு இருந்திருக்கிறது. என் சமகாலத்தவர் யாரும் தந்தை மீது துவேஷம் கொண்டிருந்ததாக நான் உணரவில்லை. தீவிரமான எழுத்தாளனாக இருப்பதற்கும் ஒருவரை வெறுப்பதற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. உண்மையில் ஒரு எழுத்தாளனுக்கு அப்படி வெறுப்பு இருந்தால் அது அவனுடைய படைப்பில் வெளிப்படும். அது  அவன் எழுத்தின் நம்பகத் தன்மையை குறைத்து விடும்.

No comments: