Tuesday, April 3, 2012
அஜயன் பாலா
.அஜயன் பாலா
முன்னணி வார, மாத இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியும், இருபது ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து, பின்னர் இயக்குனர் தங்கர்பச்சானிடம் உதவியாளராக இருந்து, இப்போ சித்திரம் பேசுதடி, வால்மீகி படங்கள் மூலம் நடிகராகியிருக்கும் அஜயன் பாலாதான் இந்த வார எழுத்தாளர்.
சினிமாக்கனவுகளுடன் இருபது வருஷத்துக்கு முந்தியே சென்னைக்கு வந்துட்டேன். எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. அப்படி படிக்கும் போது, வழக்கமான கதைகளை விட, வரலாறுகளில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் அதிகம் உயிரோட்டமும், வாழ்க்கை பற்றிய தத்துவங்களும், நிறைய விசயங்களும், யதார்த்தமும் இருப்பதாக தோன்றியது. எனவே அதிகமாக வாழ்க்கை வரலாறுகளை தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.
நுõலகங்களுக்கு வருகிற பல புத்தகங்களை புரட்டிப் பார்க்கும் போது கற்பனைக் கதைகள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்ததை பார்த்தேன். வரலாற்றுத் தலைவர்கள் பற்றி யாரும் எளிமையாக சொல்லித் தரவோ, எழுதவோ இல்லை. அதையே நாம் செய்தால் என்னவென்று தோன்றியது. எனவே வரலாற்றுத் தலைவர்கள் பற்றி எழுதத் தொடங்கினேன்.
என்னுடைய முதல் கதை பற்றி சொல்லவேண்டுமானால், 1991ம் ஆண்டு, நவீன நாடகம் ஒன்றை பார்த்த பாதிப்பில் "தாண்டவராயன்' என்ற தலைப்பில் ஒரு இலக்கிய சிறுகதையை எழுதினேன். அதைப்பல பத்திரிகை களுக்கு அனுப்பி÷ னன். பலமாதங்கள் ஆகியும் அது வெளிவரவில்லை.
அந்தக்கதையை படித்த கவிஞர் விக்கிரமாதித்யனும், எனக்காக பல பத்திரிகைகளுக்கு கொடுத்து முயற்சித்தார். அவர் அலைந்து திரிந்தும் அது வெளிவரத் தாமதமானது. கிட்டத்தட்ட அந்தக் கதை இரண்டு ஆண்டுகள் கழித்து 93ம் ஆண்டு வெளிச்சம் என்றப்பத்திரிகையில் வெளிவந்தது.
கதைன்னு பார்த்தா எல்லா கிராமங்களுக்கும் காலைப்பொழுது விடிஞ்சிடுச்சு. ஆனா, ஒரே ஒரு கிராமத்துக்கு மட்டும் விடியவே இல்லை. விடியலும் வரலை. அதனால் அந்தத் தெரு என்ன பாடுபடுதுங்கறதுதான் கதையே. இந்த தாண்டவராயன் கதையை மட்டும் ஒரு வருஷம் எழுதினேன். எழுதறது, அதுக்கப்புறம் படிச்சுட்டு திருத்தறது. மாத்தறது, இப்படியே அந்தக் கதையை மட்டும் ஒரு வருஷம் உட்கார்ந்து எழுதினேன்னு சொல்றதை விட செதுக்கினேன்னுதான் சொல்லணும்.
அப்புறம் முகம்னு ஒரு கதையை எழுதினேன். அந்தக் கதை நாட்டுல உள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட ஒருவனை வெச்சு ஒரு குறியீடு மூலமா, காலையில எழுந்திருக்கிற ஒருத்தன், கண்ணாடியில தன் முகம் பார்க்கறப்ப, அதில அவன் முகம் தெரியலை. அப்போ அவன் மனநிலை என்னங்கறதை வெச்சு கதை எழுதினேன்.
இந்தக் கதையும், என் முதல் கதையும் சமகாலத்தில் எழுதப்பட்டவைதான். இந்தக் கதை குதிரைவீரன் என்ற சிற்றிதழ்ல வெளிவந்துச்சு.
என்னுடைய "தாண்டவராயன்' கதையை நண்பர் ஒருத்தர் படிச்சார். அவரும் பிரபல இளம் எழுத்தாளர்தான். அந்தக் கதையை அப்படியே டேப்புல ரெக்கார்ட் செஞ்சி கேட்டுட்டு, பிற்பாடு அதே கதையை அதே தலைப்புல நாவலாக்கின கொடுமையும் நடந்துச்சு.
ஒரு எழுத்தாளனுக்கும், கதைக்கும் நேர்கிற மிகப்பெரிய அவமானம் இதுதான். அப்போதுதான் இலக்கிய திருட்டுல இதுவும் ஒரு வகைன்னும், இலக்கிய வாதிகள் மத்தியில் இது போன்ற திருட்டுக்களும் நடக்கும்னு புரிஞ்சிக்கிட்டேன். என்ன காப்பியடிச்சு எழுதி என்ன? பிற்பாடு அவர் எழுதின அந்த நாவல் மோசமான விமர்சனத்தை சந்திச்சது தனிக்கதை. எழுத்தில உண்மை இருந்தா காலத்துக்கும் நிக்கும்ங்கறது தானே <உண்மை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment