காலை நேரம் ஐந்து முப்பதுக்கெல்லாம் நம் செல்பேசியில் ஒரு எஸ்எம்எஸ் நம்மை துயில் எழுப்பவும் ஏதோ விளம்பரமாக இருக்கும் என்று நினைத்து ஆரஅமர ஒரு காபியை குடித்துக் கொண்டே செல்லைத் திறந்தால் கன்னிகோயில் ராஜாவின் எஸ் எம்எஸ் இதழ் என்ற அறிமுகத்துடன் இன்றைய ஹைகூ என்று கவிஞர் முத்து ஆனந்த் வேலுõர் என்ற குறிப்புடன் "நாத்திகன் வீட்டிலும் தெய்வம் அம்மா 'என்று ஆழமானஅர்த்தங்களை கொண்ட அழகான கவிதை. மறுநாள் "எறும்பின் மீது விழுந்தும் நசுங்கவில்லை ஆலமரத்தின் நிழல்!என்று கவிஞர் லலிதானந்தும் தொடர்ந்து அனுப்புகிறார்கள். திருச்சியிலிருந்து" புதுமைக்கவி'என்று கௌதமனும்,கொள்ளிடம் காமராசு, "தெனாலி ' நகைச்சுவை இதழ் என்று சி.கலைவாணி வேலுõரிலிருந்தும் , லிங்கம் கதை இதழ் என " அடிப்பட்ட டூவீலருடன் கணவனின் பாடி வர, அழவில்லை அவள். அம்மாவின் இதய ஆபரேஷனுக்கான பணமல்லவா அந்த டூவீலர்'என்று. கடலு<õர் ஞானபாரதி எழுதிய கதைகளில் தொடர்கிறது எஸ்எம்எஸ் இதழ்களின் காலைப்பொழுது . வழக்கமாக எங்கே இருக்கே? சாப்ட்யா செல்லம்? உன்னை மிஸ் பண்றேன். குளிச்சியா? ஒரு முத்தம் கொடு என்று ஜல்லியடிக்கிற எஸ்எம்எஸ் பார்ட்டிகளுக்கு நடுவே அழகான மூன்று வரிக் கவிதை, திருக்குறளைப்போல நச்சென்று ஒன்றே முக்கால் அடியில் ஆழமான அர்த்தங்களை தனக்குள் இருந்து படிக்க படிக்க வெவ்வேறு அர்த்தங்களை, சிந்தனைகளைத் தோற்றுவித்த படி இருக்கிறது. இப்படி ஹைகூ கவிதைகளை த் தொடர்ந்து பொன்மொழிகள், தத்துவங்கள், ஒரு வரிக்தைகள் என வெவ்வேறு பெயர்களில் எஸ்எம்எஸ் இதழ்கள் நாள்தோறும் காலை நேரங்களை அர்த்தப் பூர்வமாக்கிக் கொண்டிருக்க. இது வித்தியாசமான முயற்சியாகத் தோன்றவே. ஒரு எஸ்எம்எஸ் ஒருவருக்கு முன்பு அனுப்ப மட்டுமே இலவசமாக இருந்தது. இன்றோ அதற்கும் கட்டணங்கள் என்று வந்து விட்ட நிலையில் அதை எப்படி நடத்துகிறார்கள், எப்படி இந்த எண்ணம் உதித்தது? என்கிற கேள்வியுடன் சென்னை அபிராமபுரத்திலிருக்கிற "கன்னிகோயில் ' ராஜாவை சந்தித்தோம்.
""முதல்ல 2005ம் வருசம் திருவள்ளுவர் தினத்துக்கு நண்பருக்கு திருக்குறளை வாழ்த்தாக அனுப்பினேன். எஸ்எம்எஸ் பொருத்தவரை ஆங்கிலத்தில் தான் எழுத முடியும். அதேசமயம் 158 எழுத்தக்களுக்கு மேல அனுப்ப முடியாது. இப்படி திருக்குறளை அனுப்பவும் . அதை சரியாக அனுப்ப புரிஞ்சு படிக்கமுடியலைன்னு நண்பர் சொன்னார். அப்பறம் நண்பர்களுக்குள்ளே நட்பை புதுப்பிச்சுக்கறதுக்காக சிறுகவிதைகளை அனுப்பி கருத்து கேட்கத்தொடங்கினோம். அப்படி ஆர்ம்பிச்சது, தொடர்ந்து பலரும் தங்களோட கவிதைகளை அனுப்ப ஆரம்பிச்சாங்க. தபால்லயும், புத்தகங்கள்லேயும் கவிதைகள் வர்றப்ப அப்பறம் படிக்கலாம்னு தோணும். எஸ்எம்எஸ் பொருத்தவரை உடனே அதுக்கான ரிசல்ட் கிடைச்சிடும். இப்படி முதல்ல நுõறு பேர்க்கு அனுப்பி அது பலருக்கும் தெரிஞ்சு நண்பர்கள் வட்டம் பெருக ஆரம்பிச்சது. தினசரி ஏதாவது ஒரு புதுக்கவிதைகள் படிக்கற பலருக்கு அதன் மேல தனி ஆர்வம் வளர்ந்தது. அது கிட்டத்தட்ட 600பேர் அளவிற்கு எங்கள் வட்டத்தை விரிவு படுத்திச்சு. எல்லோருக்கும் அனுப்ப காலையில் ஒருமணி நேரம் ஆகும் . இன்னிக்கு எஸ்எம்எஸ் இதழ்கள் மட்டும் 33 இருக்கும். முதலில் செல்போன் சேவை வந்தப்ப எஸ்எம்எஸ் இலவசமாக இருந்தது. அடுத்த வருடம் எஸ்எம்எஸ்க்கு கட்டணம் நிர்ணயிச்சாங்க. அது ரொம்ப சிரமமாக இருந்தது. அப்படிஒரு முறை எஸ்எம்எஸ் இரண்டு நாட்களுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை வந்தது. அப்போ நண்பர் கா.அமீர்ஜானும், எஸ்.விஜயனும் போன்பண்ணி நண்பா ஏன் எஸ்எம்எஸ் வரலைன்னு கேட்டாங்க. சூழ்நிலையை சொல்லவும். நாங்க டாப் அப் பண்றோம்னு சொன்னாங்க. அப்படிபலரையும் ஈர்க்கத்தொடங்கியது. என்ன இன்னைக்கு எஸ்எம்எஸ்க்கு மட்டுமே ஆகக்கூடிய செலவுன்னு பார்த்தா மாதம் 300 ரூபாய் ஆகும். எனக்கு எந்த கெட்டபழக்கமும் இல்லைங்கறதால சமாளிக்க முடியுது. மதுரையிலிருந்து நண்பர் இரா.இரவி. சுற்றுலாத்துறை உதவி அலுவலராக பணிபுரிகிறார். இவர் கவிமலர்.காம் னு ஹைகூவிற்காகவே ஒரு வெப்சைட் நடத்துகிறார்'' என்றவர். அவருக்கு போன் செய்து கொடுக்கவும்.நாம் பேசினோம்"" கவிமலர்.காம் மூலம் இந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளில் ஹைகூ கவிதைகளை படிக்கலாம். அது யாரும் பார்க்கலாம்ங்கறதால இதுவரை 4லட்சத்து 25ஆயிரம் பேர் பார்த்திருக்காங்க. எதிர்காலத்தில் வாசகர்கள் பலரது கவிதைகளும் இடம் பெறும். தினமலரில் வெள்ளிக் கிழமைகளில் முன்பு படக்கவிதை என்று வரும் பகுதிக்கான கவிதைகளும் இதில் இருக்கும். கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல நடத்திக்கிட்டிருக்கேன்'' என்றார் ரவி. நம்மிடம் தொடர்ந்து பேசிய ராஜா எஸ்எம்எஸ் படிக்கும் பலரது செல்லிலும் ஆங்கிலம் தான் இருக்கிறது. தமிழில் ஒரு சிலர் தான் வைத்திருக்கிறார்கள். கவிதைகளை தமிழிங்கிலீஷில் அனுப்பும் போது தமிழ் படிக்கத் தெரியாத சிலரும் படித்துப்பார்த்து மற்றவர்களிடம் கேட்டு புரிந்து கொள்கிறார்கள். தபாலில் பத்திரிகைகளை அனுப்ப சலுகைகள் தரப்படுவது போல இது போல இலக்கியம், கதை, கவிதைகள் என தமிழ்மொழியை வளர்க்கும் என்போன்ற படைப்பாளிகளுக்கும் செல்போன் சேவையில் சலுகைகள் அளித்தால் மேலும் அதை விரிவுபடுத்தமுடியும் '' என்கிறார் கன்னிகோயில் ராஜா இவரது இதழிலிருந்து கவிதைகளைப்பெறவும், அனுப்பவும் விரும்புபவர்கள் 9841236965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் என்று பலரும் இவரது வாசகர்கள். ஹைகூ கவிதையை முதலில் எழுதியது மகாகவி பாரதியார். தன் கட்டுரைகளுக்கு நடுவே ஜப்பானிய கவிதைகளை மொழி பெயர்த்தார். கண்ணதாசனின் நண்பர் ஓவியக்கவிஞர் அமுதபாரதி தான் முதல் ஹைகூ கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். "தென்றலின் சுவடுகள் 'என்று பெண் கவிஞர்கள் 58 பேரின் ஹைகூ கவிதைகள் தொகுப்பாக வெளிவந்து 200809ம்ஆண்டு கோவை அரசு பெண்கள் கல்லுõரியிலும், 200910ம்ஆண்டில் சிவகாசி பெண்கள் கல்லுõரியிலும் பாடமாகி இருக்கிறது. எஸ்எம்எஸ் ஹைகூ கவிதைகளை தொகுத்து நண்பர் கார்முகிலோன்(அசோக்லேலாண்ட்) வெளியிட உதவியிருக்கிறார். தாராபாரதி அறக்கட்டளையும் சிறந்த நுõலுக்கு விருது கொடுத்து ஊக்குவிக்கிறது. புதுவையில் தமிழ்நெஞ்சனும், சென்னையில் க.கோ.ராஜாவும் ஹைகூ நுõலகம் நடத்தி வருகிறார்கள். இது தவிர அலைபேசியில் கவிதைகளை அரங்கேற்றிய சேவைக்காக கோவை வசந்தவாசல் கவிமன்றம் பாராட்டி விருதும் கொடுத்து பாராட்டியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment