" மனசாட்சி இல்லாத காங்கிரஸ்;
ஒப்பனை முகம் கொண்ட திமுக 'விளாசுகிறார், .
தமிழருவி மணியன்
சென்ற அக்டோபர் 2ம்தேதி கண்ணும் கண்ணும் காதும் காதும் வைத்தது போல எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகியிருக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அந்தக்கட்சியின் பெயர் காந்தீய அரசியல் இயக்கம். அதன் நிறுவனர் தமிழருவி மணியன்.
இந்தபுதிய கட்சியின் கொள்கை, எதிர்காலம் பற்றி அக்கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியனிடம் பேசியபோது, அவரின் ஆதங்கங்களின் தொகுப்பு.
* திடீரென்று அரசியல்கட்சி துவக்கக் காரணம் என்ன?
காங்கிரசில் காமராசருக்கும் , காந்தீயத்திற்கும் எள்ளளவும் தொடர்பற்ற மனிதர்களின் இருப்பிடமாக இருப்பதைப் பார்த்து, என் இதயம் ரணப்பட்டது. இன்றைய காங்கிரசாருக்கு சமூகம், இனம்,மொழி சார்ந்த பிரச்சினைகளில் ஈடுபாடில்லை.
எப்படியாவது பதவி பெற்று வசதிகளை அனுபவிப்பவர்களை நேரில் பார்த்து வருந்தினேன். ஒரு உண்மையான காந்தீயவாதியால் நேர்மையான தொண்டனால் காங்கிரசில் நீடிக்க முடியாது. என்பது புரிந்தது.
ஈழப்பிரச்சினை பெரிதாக உருவெடுத்து பல்லாயிரம் தமிழர்கள் அன்றாடம் கொல்லப்பட்டப்போது காங்கிரஸ் தலைவர்களின் அணுகு முறையில் மாற்றாந்தாய்ப்போக்கு இருந்ததை கண்டு நொந்துபோனேன். ஈழப்பிரச்சினைக்காத்தான் நான் நேசித்து நெஞ்சார தழுவிக்கொண்ட காங்கிரஸ் பொறுப்புகளை துரந்து வெளியேறினேன். அந்த ஈழப்பிரச்சினையில் முதல்வர் நடத்திய நாடகங்களில் நானும் ஒரு பாத்திரமாய் நடிக்க விரும்பாமல் தமிழக அரசு திட்டக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினேன். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளிவைக்க காந்தீய,காமராசர் கொள்கை
களை நிலைநாட்ட கட்சி துவங்கினேன்.
*உங்கள் கட்சி தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியுமா, என்ன?
சுயநலம், தனிநபர் லாபம் , கொள்ளையடிக்கவும் என்கட்சி தேர்தலில் போட்டியிடாது.அதற்காக இந்த இயக்கத்தை உருவாக்கவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்மையானவர்களாக , ஒழுக்கம் சார்ந்தவர்களாக, பொது மக்கள் பணத்திலிருந்து செப்புக்காசுகளைக்கூட தங்கள் சுயநலத்திற்காக பயன் படுத்திக் கொள்ளாத வராக வரக்கூடியவர்களை உருவாக்குவது இக்கட்சியின் அடிப்படைக்கொள்கை.
காந்தீயக் கனவு கிராம சுயராஜ்யம் . தமிழ்நாட்டில் 12,600 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த ஊõட்சி தேர்தல்களில் அரசியல் கட்சி சாயம் கிடையாது. காந்தீய அரசியல் இயக்கத்தில் உள்ள இளைஞர்கள் உண்மையான ஈடுபாட்டுடன் சமூக நல்வாழ்வுக்கு தங்களை அர்பணிக்க விரும்பினால் அவர்கள் ஊராட்சி தேர்தலில் நிற்க இயக்கம் அனுமதிக்கும். நேர்மையான ஊராட்சித்தலைவர்கள் தமிழகம் முழுக்க அமைந்தால் ஊழல் பாதி குறையும். படிப்படியாக ஒரு நல்ல இயக்கம் மக்கள் வழங்கும் ஆதரவின் அடிப்படையில் எங்கள் அடுத்தடுத்த முயற்சிகள் தொடங்கும்.
*நீங்கள் நல்லஇலக்கிய வாதி ஏன் இந்த அரசியல் பிரவேசம்?
இலக்கிய வாதிகள் என்ன எழுத்தினாலும், பேசினாலும் சமுதாயத்தில் எந்த ஒரு பெரிய மாற்றங்களையும் , பாதிப்புகளையும் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை கொண்டு வரமுடியாது. ரூஷோ, வால்டேர் எழுத்துக்கள் பிரெஞ்சுப்புரட்சியை உருவாக்கியது. மார்க்சிம் கார்க்கி ருஷ்ய படைப்பாளி சோவியத் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்ததை அறிவேன். தமிழகம் ஈராயிரம் ஆண்டுகளாக படித்துவரும் திருக்குறள் இன்றுவரை பேசுவதற்கு உரிய இலக்கியமாகவே இருக்கிறது. எந்த தமிழரும் நடைமுறைப் படுத்துவதை அறிய வில்லை. பழம்பெரும் இரு இதிகாசங்கள் நம் மக்களால் காலம்காலமாக படிக்கப்பட்ட போதும் , நம் மக்களிடம் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை போக வில்லை.
தமிழன் இலக்கியத்தை அறிவுறுத்தும் கருவியாக அங்கீகரிக்கவில்லை. இன்புறுத்தும் உருவகமாய் பார்ப்பதுதான் அவன் பலவீனம். தாழ்த்தப்பட்டோர்கோவில் பிரவேசம் . அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது வரை அரசியல் அதிகாரம் கொண்ட சட்டங்களால் மட்டுமே தான் சாதிக்கமுடிந்தது. பால்ய விவாகம், தேவதாசி வாழ்க்கை முறை வரையும் சட்டத்தினால் தான் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்தது. அப்படி சமூக மாற்றத்தை அரசியலால் மட்டுமே உருவாக்க முடியும் என்பதால் இலக்கியவாதியாகவும் அரசியல்வாதியாகவும் இருக்கிறேன்.
அரசியல் களத்தில் நான் தோற்றுப் போனவன் என்பது பலரது அபிப்ராயம். எம்எல்ஏ, எம்பி, மந்திரியாக இருப்பது. அரசியல் வெற்றி என்றால் கோடியில் சென்னையில் ஆடம்பர வாழ்வு, அரசியல் சாதனை என்றால் அந்தப்பட்டியலில் காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் பெரியாரை சேர்க்கமுடியாது. ஏனெனில் இவர்கள் உண்மை வெற்றியாளர்கள். இவர்கள் பாதையை தேர்ந்து கொண்ட நான் அரசியலில் தோற்றதாக கலிவிரக்கம் கொள்ளவில்லை.
*இளையதலைமுறைக்கு உங்கள் வழிகாட்டல் என்ன?
நான் மாணவனாக இருந்தபோது மாணவர்கள் பலரும் ஏதாவது ஒரு இயக்கம்
தழுவிய சிந்தனையோடு இருந்தார்கள். திராவிட இயக்கங்கள், கம்ப்யூனிஸ்ட், காங்கிரஸ் இயக்கங்களில் சமூகப்பார்வையோடு இணைந்து கொண்டனர். அன்று நம்பிக்கையான தலைவர்களாக பெரியார், ராஜாஜி, காமராசர், அண்ணாத்துரை என்று சகல தரப்பிலும் மிக உயர்ந்த தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசியலை வைத்து பிழைக்க வில்லை. அதனால் மாணவர்கள் நம்பி பின்னால் சென்றனர். இன்றுள்ள அரசியலில் தலைவர்கள் பலரும் சுயநலம், செயல்பாடு அவர்கள் அறிந்ததால் அரசியல் கட்சிகள் மீது முற்றும் நம்பிக்கை இழந்தனர். இன்றைய இளைஞன் ஒரு சமூக நோக்குடன் அரசியல் இயக்கங்களில் இருக்கு இன்றுள்ள அரசியல் வாதிகள் உடையவை மாணவரை அல்ல. வழிகாட்டுதல் இல்லை. இன்றுள்ள அரசியல் வாதிகள் ந்த அரசியல் சார்புகளையும் இல்லாமல் நல்லதை செய்யமுடியும். நாள்தோறும் பேசிவருகிற விஜயகாந்த்க்கு 10% வாக்காளர்கள் இருக்க காரணம் நிஜ மனிதர்களிடம் விரக்தியுற்ற இளைஞர்கள இதுபோல நிழல் மனிதர்களை நம்பத்தொடங்கிவிட்டதால் தான்.
*காசுக்கு ஓட்டு, இனி காந்தீய கொள்கை வெல்லுமா?
கலைஞர் நெஞ்சுக்கு நீதியில், ஒரு பழையவேன் மற்றும் ஒரு டேப்ரெக்கார்டர் வைத்துக்கொண்டு குளித்தலைத் தொகுதியில் தேர்தல் பணியாற்றி வெற்றிபெற்றதாக எழுதியுள்ளார். ஆனால், அவரது திருமகனோ திருமங்கலம் இடைத்தேர்தலில் ஒரு புரட்சித் திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டார். இனி, கோடிக்கணக்கில் பணம் வாரி இறைப்பவரை தேர்தலில் போட்டியிடமுடியும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார். இந்தநிலை மாற நான் காந்தீய , காமராசர் கொள்கைகளை வரும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கிறேன்.நிச்சயம் எதிர்கால அரசியலில் ஒரு மாற்றம் வரத்தான் செய்யும். ஒரு காமராசனும், கக்கனும் வரத்தான் போகிறார்கள்.
* உங்கள் பள்ளிகாலம்?
பெரம்பூர் ராவ்பகதுõர் கலவலக்கண்ணன் செட்டி உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.அங்குள்ள ஏரிக்கரை மைதானத்தில் வாரந்தோறும் அரசியல் கூட்டங்கள் அரங்கேறும் பெரியார்,அண்ணாத்துரை, ராஜாஜி, சம்பத், கண்ணதாசன், காமராசர் போன்ற பெரியோர்கள் உரையாற்றுவார்கள். அப்போது எனக்கு அரசியலில் உந்துதல் இல்லை. வேட்பாளனாக நல்லதமிழ் சுவைஞனாக இருந்தேன். என்னுடைய ஆர்வம் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் பேசுகிற தமிழை கேட்க வைத்தது. அவர்களில் சம்பத் அவர்களின் பேச்சு எனக்கு ஆர்தஸம். மறந்தும் வன்மையான வார்த்தையை கூட பேசமாட்டார். அண்ணாவின் திராவிடநாடு கொள்கையை விமர்சிக்கிறார் சம்பத் அப்போது அண்ணா பொய் சொல்லலை. உண்மைக்கு புறம்பாக இருக்கிறார். மேடை நாகரீகம் உயர்ந்த தளத்திலிருந்தது. பரவலாக இயக்கங்களின் சித்தாந்தம் கொள்கை மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மேடையில் பேசப்பட்டது. மேடை அரசியல் ஆய்வுக்களமாக இருந்தது. மேடைகள் அரசியல் பார்வைகளை விரிவுபடுத்தியது.
* பள்ளிப் பருவம்?
6ம் வகுப்பில் கண்ணதாசன் பாடல்கள் என்னை ஈர்த்தது. இப்போதும் கண்ணதாசனின் 60% பாடல்களை என்னால் சொல்லமுடியும். வாழ்வின் பல பரிமாணத்தை பாடலில் கொண்டு வந்து கொட்டினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் வர்க்கப்பிரக்ஞையை எழுதினார். அதில் இருக்கும் மனிதவாழ்வின் சகல சாராம்சத்தையும் பாடல்கள் மூலம் எளிய தமிழில் தொட்டவர் கண்ணதாசன்.
அறிந்ததிலிருநுஞூது அறியாதவை நோக்கி எளிமையிலிருநுஞூது இலக்கிய இன்பத்தை கொண்டு வந்தது. அது பிள்ளைப்பருவ அறிவுக்கு பெரிதாகப்பட்டது. பாரதியார், பாரதிதாசன், இலக்கிய பயணம் தொடங்கி கம்பனில் கலந்து சங்க இலக்கியங்களி ன் தமிழில் சங்கமித்ததது. பள்ளி, கல்லுõரிகாலங்களில் அரசியல் விழிப்புணர்வு இலக்கிய ஆர்வத்தில் என் உள்ளத்தை செதுக்கிக்கொண்டேன். ஒரு தேசிய சமூகநலன் சார்ந்த அறம்பிறழாத வாழ்வை நான் எனக்குள் .ணர்ந்து நா.பார்த்தசாரததியின் இரண்டு நாவல்கள் குறிஞ்சிமலர், பொன்விலங்கு . மகாரபாரதம், இராமாயணம் படித்து நெறிப்படுத்தவில்லை மாறாக குறிஞ்சிமலர், பொன்விலங்கு மணிபல்லவம், ஆத்மாவின் ராகங்கள் நா.பார்த்தசாரதியின் படைப்புதான் தன் வாழ்க்கை நோக்கத்தை சமூக தார்மீக கோபத்தை தீமையுடன் சமரசம் ஆகாது என்ற அணுகுமுறை பெற்றேன். மிகச்சாதாரண குடும்பம் அப்பா ரயில்வே பணியில் இருந்தார். அம்மா மழைக்கும் பள்ளிக்கு செல்லாதவர். பாட்டனார் சொத்துக்களை வைத்து ஆறு பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கியவரில் களைத்து விட்டவர். நெறி வாழ்வுக்கு சொந்தக்காரர் நீதிநுõல்கள் படித்தவர்.ஆத்திச்சுடி, கொன்றை வேந்தன் சொல்லித்தந்தவர். என்னிடம் நான்கு நல்ல பண்புகள் இருக்கிற தென்றால் அவை என் தாய், தந்தையர் வழங்கிய சீதனம். உன்னிடம் இருப்பதை அடுத்தவனுக்கு கொடு. அடுத்தவனுடையதை உன்னுடையதாக்கிக் கொள்ள முயலாதே. அப்பா, அம்மா தந்த அறிவுரை , அன்பு, இரண்டு தம்பிகள், மூன்று தங்கைகள் என நடுத்தர சூழலில் வாழ்க்கை.
* அரசியல் பிரவேசம் என்பது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட திணிப்பா?
சுயசிந்தனை உள்ளவனிடம் மாநில கல்லுõரியில் 1966ம்ஆண்டு கால்பதித்தேன். படிக்கும் பருவத்தில் அரசியல் பக்கம் திரும்பக்கூடாது. என்ற தீர்மானம். காந்தீயத்தை முழுமையாக நான் ஆழ்ந்து படித்த காலம். அந்த நெரிறப்பஐ என்கண்முன்னால் கண்ட ஒரு தலைவர் காமராசர். கண்ணதாசன் தான் எழுதிய கவிதையில் ஆண்டி கையில் ஓடிருக்கும். அதுவும் உனக்கில்லையே என்றெழுதிய வரிகள் . என் நேயத்தை வளர்த்தது.
ஆனாலும் அரசியலில் மீக்கை நீட்ட விரும்பவில்லை. 1967ல் பொதுத்தேர்தல் முன்னிலும் மேலாக வாழ்ந்த காமராசர் தொற்றதை என்னால் சகிக்க முஐயவில்லை. அதேநேரம் மாணவர் சமுதாயத்தில் பலரும் பெரும் திமுக அனுதாபிகளாக இருந்தனர். தேசிய கண்ணோட்டத்துடன் இனம், மொழி சார்ந்து திந்திப்பவனாக இருந்த நான். காமராசர் தோல்வியில் சேதுபந்தனத்திற்கு அணில் மணல் சுமந்தது போல காமராசர் அரசியலில் துணைநிற்க காங்கிரசில் இணைந்தேன். ஒரு மாணவனாக இருந்தபடி. 1971ல் நடந்த கூட்டத்தில் ஆரோக்கியமான என் விமர்சனங்களை வியாசர்பாடி கூட்டத்தில் கேட்ட காமராசர் தமிழருவி என்ற அடைமொழியைக் கொடுத்தார். நோபலைவிட உயர்ந்த பரிசு அது. 1975 அக்டோபர் 2ந்தேதி காமராசர் இறந்தார். நெருக்கடி நிலைவந்து ஜனநாயக குரல்வளை நெறித்த இந்திராகாந்திஅரசியலை எதிர்த்து தமிழகத்தில் களம் கண்டதில் நானும்ஒருவன். காமராசர் மறைந்தபிறகு அரசியல் பயணம் ஸ்தாபன காங்கிரஸ், காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம் என்றும் உருமாறி ய போது என் சொந்த தொகுதியில் நின்றேன். சொந்த ஆதாயத்திற்காக கட்சிமாறவில்லை. றுபரியார் சொன்னது போல, ஜீவா வாழ்ந்தது போல நான் எப்போதும் என்னை ஒரு கொள்கைக்காரனாக பாவிப்பவனே தவிர கட்சிக்காரனாக நடக்கவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் உருவாக்கிய பின் காமராசர் ஆட்சி அமைக்க உங்களைப்போன்றவர்கள் என்னோடு இருக்க வேண்டும் என்று நண்பர்கள் மூலம் திரும்பத்திரும்ப அழைத்ததால் அவரோடு நான் சேர்ந்து பணியாற்றி பிறகு தமிழ்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பை 1996ல் ஏற்று இயன்றவரை சிறப்பாக பணியாற்றினேன். 1998ல் வாசன் தலைமை ஏற்க தாமக காங்கிரசில் சேர அங்கே எனக்கு பொதுச்செயலாளர் அகில இந்திய கமிட்டியில் உறுப்பினராக தொடர்ந்து பணி செய்து வந்தேன்.
* 2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மூப்பனார் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்க வைத்தார். ஸ்டாலினை எதிர்த்து நின்றேன். அப்போது நான் அரசியல் பணம் வைத்து சூதாட்டம் நடத்தும் களம் நிற்க என்னிடம் பணம் இல்லை . சூதாடிப்பணம் பெருக்கும் ஆசையும் இல்லை. என்று மறுத்தேன். ஆனால், நேர்மை சார்ந்த அறிவுதெளிவுமிக்க சமூக நலன் சார்ந்து செயல்படுகிற மனிதர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற ம் செல்ல வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.
திருமங்கல ம்தேர்தலுக்கு ப்பிறகு திருப்புமுனைக்குப்பிறகு இனிவரும் காலம் ஒரு ஏழை, மேலான லட்சியம் உள்ள ஒருவன் தன்னை முன் நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பே பறிபோய்விட்டது. 1957 குஹித்தலை யில் கலைஞர் முதல் வேட்பாளராக நினறபோது ஒரு பழையவேன் , ஒரு டேப்ரெக்கார்டர் எடுத்துக் கொண்டு தேர்தல் பணியாற்றி வெற்றி பெற்க்ஷீதாக நெஞ்சுக்கு நீதியில் சொல்கிறார். அவர் திருமகன் கோடிகதளை செலவஷ்த்தால் தான் தேர்தலில் நிற்க தகுதி உண்டு என்றநிலையை உருவாக்கினார்.
செல்வகுமார்
No comments:
Post a Comment