Tuesday, April 3, 2012
கு.ஞானசம்பந்தன்
.முதல் எழுத்து கு.ஞானசம்பந்தன்
கல்லுõரி படிப்பை நான் மதுரை தியாகராசர் கலைக் கல்லுõரில படிச்சேன். அப்போ எங்க ஊர் சோழவந்தான்ல இருந்து டிரெயின்லதான் வருவோம். எனக்கு நண்பர்கள் வட்டம் அதிகம். அப்போ எனக்கு 22 வயசு இருக்கும். எங்களுக்குள்ளேயே ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தினோம். அதற்கு "கலைஓசை'ன்னு பேரு. எங்க நட்பு வட்டத்துல பத்திரிகைக்காக ஒரு டீமே உண்டு. அதில படம் வரையறவங்க, கையெழுத்து அழகா எழுதறவங்க, இப்படி நாங்க ஒரு குரூப்பா ஜாலியா வேலைப் பார்த்தோம்.
அது ஜெராக்ஸ் இல்லாத கால கட்டம். எல்லா பக்கங்களுமே கார்பன் காப்பி வெச்சுத்தான் எழுதுவோம். அந்த சமயத்தில பத்திரிகையாளர் சாவி கையெழுத்து பத்திரிகைகள், சிற்றிதழ்களை சேகரிச்சுக்கிட்டிருந்தார். அப்போ என்னோட கலைஓசைக்கும் நல்ல பேர் கிடைச்சது. ரேப்பர்க்கு கலர் பேப்பர்கள் வெச்சு டிசைன் செய்வோம்.
பத்திரிகையின் அத்தனை பக்கத்தையும் நானே எழுதுவேன் ."மாமி சொன்ன சாமி கதைகள்'னு ஒரு பகுதி, இப்படி மக்களோட நிஜ அனுபவங்களும் அந்த பக்கங்கள்ல பதிவாகும்.எங்க அப்பா தமிழாசிரியர்ங்கறதால, அவருக்கிட்டயும் கருத்து கேட்போம். சமயத்தில அவரும், அப்பாவோட பிற நண்பர்களும் ஆலோசனையும் சொல்வாங்க.
இந்தப் பத்திரிகை எங்களுக்குள்ள தனிச்சுற்று மாதிரி வந்துகிட்டிருந்தது. அதே காலகட்டத்திலதான் நாடகங்களையும் எழுத ஆரம்பிச்சேன். "பாதை ஓர பட்டதாரிகள்', "ஓடாதே நில்', இப்படி நான் எழுதிய எல்லா நாடகங்களும் சினிமா பாணியிலேயே இருக்கும். அப்போதைய நடப்பு நிலவரங்கள், நாடகங்கள்ல சம்பவங்களா சித்தரிப்போம். பர்மாவுக்கு பெண்களை கடத்தறாங்கன்னு ஒரு செய்தி. உடனே ஒரு நாடகத்தில அப்படி ஒரு சம்பவத்தை வச்சேன். ஒரு குடும்பத்தில ஐந்து பெண்கள். அவங்க அஞ்சு பேருக்கும் எப்ப கடத்தல் காரங்க வீட்டுக்கு வந்திடுவாங்களோன்னு பயம் இருந்துக்கிட்டே இருக்கும். அவங்க நினைச்ச மாதிரியே கடத்தல்காரர்கள் வீட்டுக்கு வந்து, அந்த பொண்ணுங்களோட அம்மாவை கடத்திட்டு போயிடுவாங்க. அம்மாவை எப்படி கடத்தல்காரங்ககிட்ட இருந்து போலீஸ் மீட்குதுங்கற கதையை காமெடியா அமைச்சிருந்தேன். பாஞ்சாலி சபதத்துக்கு வசனம் எழுதினேன். அதுல நானே சகுணியாக நடிச்சேன். "ஓடாதே நில்' நாடகத்தில 70பேர் நடிச்சோம். இரண்டரை மணி நேரம் நாடகம் நடக்கும். அதேமாதிரி ஒரு நாடகத்தில கதாநாயகி நாய் வளர்ப்பா, அவளோட நாய் காணாமல் போயிடும். இது அவளுடைய ரசிகர்மன்றத்துக்கு தெரிஞ்சுடும். ஊருக்குள்ளேயும் செய்தி பரவும். எல்லோரும் நாயை தேடுவாங்க. ரசிகர்மன்றத்து ஆளுங்க ஊருக்குள்ளேயிருந்து இரண்டு நாய்களை பிடிச்சுக்கிட்டு வருவாங்க. கதாநாயகிகிட்ட காட்டி இது உங்க நாயா பார்த்து சொல்லுங்கன்னு சொல்வாங்க. அவ... இல்லைம்பா. இப்படி கிட்டதட்ட பத்து பதினைஞ்சு நாய்களை அதோட சொந்தக்காரங்ககிட்ட கேட்டு வாங்கிட்டு வந்து மேடையேத்தினோம். அதில பல நாய்களுக்கு சொந்தக்காரங்க, எங்களுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுங்கன்னு சொல்ல, அவங்களும் கதையில வந்துட்டு போனாங்க. அப்படி நடிச்சு கடைசில மேடையில என்னாச்சுன்னா நாய்களுக்குள்ளே சண்டை, உருமல், கத்தல் னு ஒரே தாமாசாகிடுச்சு.
கையெழுத்து பத்திரிகை நடத்துன காலங்கள்ல நான் வெளி பத்திரிகையில எழுதினதில்லை. மேடைப் பேச்சுகள் அதைத் தொடர்ந்து நானே புத்தகம் போட்டேன். இன்னைக்கு வருகிற டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகள்ல வர்ற பல காமெடி பிட்டுகள் என்னுடையது. பேச்சுத்துறைக்கு வர்றதுக்கு முன்னே "நடைச் சித்திரம்'னு ஒரு புத்தகம் போட்டேன். அதை வா.ரா. தான் முதல்முதல்ல அறிமுகப்படுத்தினார். அது கதை, கவிதைகள் மாதிரி இருக்காது. புதுநடை இருக்கும். நகைச்சுவை கட்டுரைகள் எழுதினேன் பாமரன் பியூட்டி பார்லரில் படும்பாடு. கிராமத்தில் வருகிற முதல் டவுன்பஸ் பயணம். எலிவேட்டை, இப்படி என்னுடைய படைப்புகளை தொகுத்து புத்தகமாக்கினேன். அதற்கு என் மாணவர் இயக்குனர் சிம்புதேவன் படம் போட்டுத்தந்தார். இன்னைக்கு சினிமாவுக்கு போன பிறகும் எனக்கு செய்து தர்றார்.மதுரையில ஹியூமர் கிளப் நடத்திட்டிருக்கோம். அதேப்போல இப்போ இருபது மாவட்டங்கள்ல நடத்திட்டு வர்றாங்க.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment