Tuesday, April 3, 2012

மதுரா


இப்படித்தான் எழுதினேன்:

மதுரா!

சொந்த ஊரு திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள சின்ன கிராமம் பரப்பாடிதாங்க என் ஊரு. எங்க குடும்பத்துல எல்லாரும் விவசாயம்தான்.
என் தாத்தா... அம்மாவைப் பெற்ற தாத்தா கதை சொல்கிற அழகே தனி. திண்ணையில் அமர்ந்து, அவர் கதை சொல்ல, ஓடை மணலில் அமர்ந்து கோயில் தெருவே கதை கேட்க விழித்திருக்கும். நானும் சின்ன குழந்தையாய் என் அம்மாவின் மடியில் அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன்.
ராஜாராணி, இளவரசி, குதிரை, மோகினி, மாய மோதிரம் என்று கதை நான்கு திசைக்கும் சுழன்றடித்து மயக்கும். வாய் திறந்து ரசிக்க வைக்கும். அடுத்து என்ன, என்று ஏங்க வைக்கிற இடத்தில் கதை சட்டென்று நிற்கும். தாத்தா பொய்யாய் ஒரு கொட்டாவியை வெளிப்படுத்துவார். மீதிக் கதையை நாளைக்கு வைத்துக்கொள்வோம் என்று துண்டு உதறி எழுந்து கொள்வார். அன்றே எனக்குக் கைத எழுதச் சொல்லித் தந்துவிட்டார். ஒன்பது வயதில் என் வகுப்பு ஆசிரியர் ஞானையா துõண்டுதலில் சரித்திர நாடகம் எழுதி அரங்கேற்றியது இன்றும் நினைவில் மிதக்கிறது.
பக்கத்து வீட்டு ராணியக்காவுக்கு ராணி முத்து வாங்க நாலு தெரு கடந்து பிரேமா அக்கா வீட்டுக்குப் போவேன். சாண்டில்யன் அங்குதான் எனக்கு அறிமுகமானார். ராணியில் ராஜாராணி கதை படிக்க நாலு கிலோமீட்டர் நடந்து போயிருக்கிறேன். பால்ய சிநேகிதனுடன். என் சிறு வயதில் என் அண்ணனுடன் நாங்குனேரிக்கு பனிரெண்டு கிலோமீட்டர் சைக்கிளில் செல்வேன். சைக்கிளை அண்ணன்தான் மிதிப்பான். புத்தகம் வாங்கிவிட்டு வரும் வழியில் சைக்கிள் கேரியரில் அமர்ந்து சாண்டில்யனை படித்துக்கொண்டே வருவேன். கொஞ்சம் கொஞ்சமாய் சரித்திரக் கதைகள் படிக்கிற ஆர்வம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டது.
அந்த ஆர்வமே என்னை பி.ஏ. சரித்திர மாணவனாக்கியது.
எங்கள் புரோபசர் நடேசன் சார் சரித்திரப் பாடம் நடத்திய அழகு, என்னுள் இருந்த சரித்திரக் கதை எழுதும் ஆர்வத்தை மேலும் மேலும் துõண்டிற்று.
1987ம் ஆண்டு குமுதம் வார இதழ், போட்டி ஒன்றை அறிவித்தது. அமரர் சாண்டில்யன் நினைவு சரித்திர சிறுகதைப் போட்டி அது.
முதன்முதலாய் சரித்திரம் எழுத ஆரம்பித்தேன்.
பெண் அடிமை, சிசுக்கொலை, உடன்கட்டை முதலிய சமுதாயக் கேடுகளை சரித்திரச் சிறுகதையில் கொண்டுவர தீர்மானித்தேன்.
ஆங்கிலேயர்களின் மமதை, இந்திய அடிவருடிகளின் அடிமை புத்தி, ஆகியவற்றை அன்றைய சரித்திரப் பின்னணியுடன் சிறுகதையாக்கினேன். அதுவே "ஒரு விடிகாலை ஜனனம்' போட்டி நடுவர்களாக எழுத்தாளர் விக்கிரமனும், கவிஞர் மு. மேத்தாவும் இருந்தார்கள்.
என்னுடைய கதை முதல் பரிசாக தேர்வு பெற்றது. அதற்குப் பிறகு தொடர்ந்து சரித்திர சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இப்படித்தான் என் எழுத்துப் பணி ஆரம்பமானது. இப்படி ஆரம்பித்த என் எழுத்துப் பணியில் இதுவரை இருநுõறு சிறுதைகள், இருநுõறு கவிதைகள் பதினேழு நாவல்கள் எழுதியுள்ளேன். தினமலர் ஆரம்பித்து தமிழ்நாட்டில் வரும் அனைத்து வார இதழ்கள், மாத இதழ்களில் பெரும்பாலும் என்னுடைய படைப்புகள் வந்திருக்கின்றன.

No comments: