ஜெயகாந்தன்
உங்கள் முதல் கதையை ப்பற்றிய அனுபவம் பற்றி?
சிறிதும் எதிர்பாராமல் நான் கதை உலகிற்குள் வந்தேன். அதற்குக் காரணமாக இருந்தது ஒரே ஒரு சம்பவம் தான். ஒரு நாள் பாதையோரத்தில் ஒரு பிச்சைக்காரனின் இறந்து போன உடலைப் பார்க்க நேர்ந்தது. அது என் மனதை மிகவும் பாதித்தது. எனக்கு நெருக்கமான ஒரு நண்பனிடம் அதைப்பற்றி நான் சொன்னதற்கு அவன் ," நீ எழுது ! அதைப்பற்றி எழுது! என்றான். வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் மனதில் வந்ததை வைத்து நான் அப்போது எழுதினேன்.நண்பனிடம் நான் எழுதியதை க் கொடுத்தேன். சில நாட்களுக்குப்பிறகு பிரசுரிக்கப்பட்ட கதையுடன் திரும்பி வந்தான். அச்சில் நான் எழுதிய கதையை பார்த்ததும் உலகத்தையே கையில் பிடித்துவிட்ட சந்தோஷம் எனக்கு உண்டானது. அப்போது எனக்கு வயது பதினாறு.
No comments:
Post a Comment