Tuesday, April 3, 2012
இந்திய ரூபாயை உலகுக்கு காட்டும் அடையாளம்
சர்வதேச அரங்கில் நாம் தன்னிறைவு பெற்று முன்னேறு கிறோம் என்பதற்குச்சான்றாக இதோ நம் நாட்டு பணமான ரூபாய்நோட்டுக்கும் புதிய குறியீட்டை கண்டுபிடித்திருக்கிறோம்.இந்திய பணத்திற்கு ரூபாய் போன்று அமெரிக்காவுக்கு டாலர், ஜப்பானுக்கு யென் மற்றும் யூரோ, இங்கிலாந்துக்கு பவுண்டு ஸ்டெர்லிங் ஆகியவற்றை இருக்க, எல், எஸ், ஒய் போன்று இந்தியா ரூபாய் மதிப்புக்கும் சர்வதேச அளவில் அனைவரும் புரிந்துகொள்ளும் படியாக ஒரு குறியீடாக ஆர்(அடையாளச்சின்னம்) வடிவத்தை உருவாக்கியிருக்கிறார் உதயகுமார். சர்வதேச அளவில் நம் பணமதிப்பிற்கான குறியீட்டை உருவாக்கி நமக்கு பெருமை தேடித்தந்திருப்பவர் நம் தமிழகத்தைச்சேர்ந்தவர். அதுவும் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச்சேர்ந்தவர். தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியுள்ள ஐஐடியில் வடிவமைப்புத்துறை பேராசிரியராக பணியில் சேர்ந்த கையோடு மத்திய அரசு நடத்திய ரூபாயக்கான குறியீட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக சென்னையில் தண்டையார்பேட்டையிலிருக்கும் அவரது வீட்டில் வைத்து சந்தித்தோம்.
* வெற்றி எதிர்ப்பார்த்ததா? இந்த சந்தோஷம் எப்படியிருக்கு?
வார்த்தைகளில் சொல்ல முடியாத பரவசமாகியிருக்கு. இந்தவெற்றியை நான் எதிர்ப்பாக்கலை. கடந்த வருடம் மார்ச் மாதம் போட்டிபத்தின அறிவிப்பு வெளியானதும் இதில நாமளும் பங்கெடுத்துக்கணும்னு முடி செய்ததும் இதற்கான வேலைகளை ஆரம்பிச்சேன். ரூபாய் மதிப்புக்கான அடையாளக்குறியை ப்பார்க்கும் போதெல்லாம் நம் தமிழ்நாட்டுக்காரர் செய்த டிசைன்ங்கறது ஞாபகம் வர்றது பெருமையானது தானே! இதை எப்படி வார்த்தையில சொல்றது.
* இந்தஅடையாளத்தை உருவாக்கிய விதம் பத்தி சொல்லுங்க?
கிட்டத்தட்ட நுõறு , நுõற்றைம்பது மாதிரிகள் வரைஞ்சு பார்த்தேன். நானே அதில பல படங்களை தவிர்த்திட்டேன். பலங்கால நாணயங்கள், எழுத்துக்கள் மற்ற உலகநாடுகளோட ரூபாய் மதிப்பின் சிம்பள்கள்னு நிறைய விசயங்களை பார்த்து பார்த்து டிசைன் செய்தேன். அதில இந்தியில ஆர் ங்கிற எழுத்து ஒத்துவந்தது. இரண்டாவது விசயம் தேவநாகரி எழுத்தும் அதுக்கு ரொம்ப உபயோகமாக இருந்தது.தமிழ் எழுத்துக்களை பொருத்தவரையோ, மற்ற மொழி எழுத்துக்களை பொருத்தவரையோ அடிக்கோட்டுக்கு மேலே தான் நாம எழுதுவோம். ஆனா, இந்தி எழுத்தை பொருத்தவரை முதல் கோடுவரும் அதன் கீழே தான் எழுத்து வடிவத்தை கொண்டு வருவோம். அதில இடையில இன்னொரு கோட்டை சமம்ங்கிற மாதிரி நம்முடைய நாட்டின் பணமதிப்பும் மற்ற நாடுகளுக்கு ஈடாக வந்திடுச்சுங்கற மாதிரி ஈக்குவல் சிம்பளை அதில சேர்த்தேன். அது தேசியக்கொடிங்கற வடிவத்துக்கான அர்த்தத்தைக் கொடுத்தது. இதுதவிர நான் ஓலைச்சுவடி எழுத்துக்கள், அச்சு எழுத்துக்கள் தற்போதைய எழுத்து வடிவம் வரை பிஎச்டி ஆய்வு செய்திருந்தேன் . அதுவும் எனக்கு உபயோகமாக இருந்தது. நம்முடைய தேசிய மொழின்னு பார்த்தா இந்திதான் அதனால இந்தி எழுத்தை இந்த வடிவத்துக்கு பயன்படுத்திக்க முடிஞ்சது. ஆண்ணா யுனிவர்சிடில ஆர்க்கிடெக்சரும், மும்பை ஐடிசி, ஐஐடில டிசைனிங் படிச்சதால இந்த எழுத்தை பொது இடங்களில் எப்படியெல்லாம் பயன்படுத்துவோம்னு பேங்க் , ரயில் டிக்கெட், மாத்திரை அட்டை இதில சிம்பலை பயன்படுத்தற விதத்தையும் மாதிரியோட இணைச்சிருந்தேன்.
* மற்ற நான்கு போட்டியாளர்கள் வரைஞ்சிருந்தது?
அவங்க என்ன டிசைன் பண்ணியிருந்தாங்கன்னு நான் சொல்லக்கூடாது. ஆனா, அதில மூணு பேர் மும்பையைச் சேர்ந்தவங்க. ஒருத்தர் கேரளா, நான் தமிழ்நாடு. முதல்ல இந்தடிசைன் தேர்வானதும் முடிவு அறிவிச்சப்ப என்னை மும்பைக்காரர் வரைஞ்சிருந்த டிசைன் தேர்வாகியிருக்குன்னு சொல்லி பாராட்டினாங்க. அப்பறம் தான் எல்லோரும் என்னை பேட்டி எடுத்தப்ப தமிழ்நாட்டுக்காரர்னு தெரிஞ்சுக்கிட்டாங்க. மும்பை மக்கள் பார்க்கறவங்க எல்லாம் வாழ்த்து சொல்லி பாராட்டினாங்க.
*உங்களுடைய லட்சியம்?
ஆசிரியராக வேலைப்பார்த்து மாணவர்களுக்கு டிசைனிங் பத்தி சொல்லிக் கொடுக்கணும். என்கிட்ட படிச்ச மாணவர்கள்னு பேர் சொல்லணும். அதற்கு மாணரவ்களை தயார்படுத்தணும்.
*உங்களைப்பற்றி?
எங்களுக்கு சொந்தஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுõர் பக்கத்தில இருக்கிற மரூர். அப்பா தர்மலிங்கம் ரிஷிவந்தியூர் தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். எனக்கு இரண்டு சகோதரர்கள் ராஜ்குமார், விஜயகுமார் தங்கை விஜயகுமாரி. தங்கைக்கு திருமணமாகிடுச்சு.
நான் படிச்சது வளசரவாக்கத்தில லா சேட்லியர் ஜீனியர் கல்லுõரியில பிளஸ்2 வரைக்ம் படிச்சேன். பேச்சு, வாலிபால் விளையாட்டுல படிக்கறப்ப நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். பிளஸ்2வுக்கு அப்பறம் அண்ணாபல்கலைக்கழகத்தில பிடெக்ல ஆர்க்கிடெக்சர் படிச்சேன். மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். அப்பறம் மும்பை ஐடிசி, ஐஐடியில டிசைனிங் படிச்சேன்.
செல்வகுமார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment