Tuesday, April 3, 2012
கவிஞர். நா.முத்துக்குமார்
ஆயிரம் யானை கொன்றால் என்கிற வரிகள் மூலம் தமிழ் சினிமாவில் ஜல்லியடிக்காத வரிகள் வலம் வரும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இப்படித்தான் எழுதினேன் பகுதிக்காக சந்தித்துப்பேசியபோது.
என்னுடைய பால்யவயது கனத்த சுவர்களால் ஆன தனிமையைக் கொண்டது. எனக்கு ஐந்துவயதானபோது அம்மா இறந்து போனார். ஆழமான கிணற்றுள் தவறி விழுந்த வெள்ளித்தட்டைப்போல மங்கலாகக்கூட அம்மாவின் முகம் என்நினைவுகளில் பதியாதது என் துரதிர்ஷ்டமே. பெண்குழந்தையாக பிறக்கும் என்று ஆசைப்பட்ட அம்மாவிற்கு நான் முதல் ஆண்குழந்தை. எனக்கு பூவைத்து பின்னலிட்டு அழகு பார்த்திருக்கிறார். எனக்கு ஐந்துவயதான போது பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தேன். வீட்டில் பாம்பு புகுந்ததாக கூறி பக்கத்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். அம்மா இல்லாத தனிமøயான உலகத்தில் அப்பாவின் துணை மட்டுமே. வீட்டை சுற்றிலும் நெசவுப்பாவுகள், வயல்வெளிகள் என இயற்கைக் காட்சிகளும், மற்றொரு பக்கம் வீட்டினுள் புத்தகங்களும் நிரம்பியிருக்கும். அப்பா தமிழாசிரியர். அவரது சேமிப்பில் நாற்பதாயிரம் புத்தகங்கள் இருந்தன. அவற்றை திரும்பிப் பார்க்காதது குறித்து அப்பா கவலைப்பட்டிருந்தார். சித்திரக்கதை, காமிக்ஸ் பூந்தளிர் சிறுவர் மாதஇதழ் முதன்முதலாக என்கைக்கு வந்தது. ஏழு வயதி ருக்கும் புத்தகங்களை தொட்டுப் பிரித்துப் பார்த்தேன். எங்கள் வீட்டிற்கு பலபுத்தகங்கள் தபாலில் வந்துகொண்டிருந்தன. அப்போது சோவியத்நாடு பத்திரிகைவந்தது. அதை புரட்டும் போது வயது பத்து. மாற்றுபடைப்புகளின் மூலம் வேறு ஒரு உலகத்தைக் கண்டு கொண்டேன். இதனால் வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு தாவினேன். இதனிடைமே அப்பாவுடன் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டபோது அவர்களின் கருத்தும் எனக்குள் பதிந்தது. பாரதியார், தாகூர், பஷீர், இப்படி பலரது கதைகளையும், புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக பத்தாம்வகுப்பு படிக்கிற போது துõசிகள் என்கிற முதல் கவிதைத்தொகுப்பை வெளியிடும் அளவிற்கு இலக்கிய தேர்ச்சி பெற்றிருந்தேன். பல கவிதைகளும் கிழித்து போடுகிற அளவிற்கு அழகுணர்ச்சியோடு மட்டுமே இருக்க, துõசிகளில் நான் தொகுத்த கவிதைகள் அனைத்தும் இலக்கிய தன்மையோடு இருந்தன. அப்படி துõசிகள் தொகுப்பிலிருந்த ஒரு கவிதை என்னை சார்ந்த பள்ளி க் கூடத்திலிருக்கும் ஆசிரியர்கள் மனதைக் கிழித்து விட்டது. அடுத்தவாரமே பள்ளியிலிருந்து நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். காரணம் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் 90க்கும் அதிகமான மாணவர்கள் படித்தார்கள். இதனால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் கட்டாயம் டியூசன் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஐயூசனிலாவது ஒழுங்காக சொல்லித்தருவார்களா ? என்றால் இல்லை. அப்போது வகுப்பிற்கு போவது என்பது ஆசிரியர் விட்டில் எடுபிஐயாக இருந்துவிட்டு வருதல் என்பதாகவே இருந்தது. இதைவைத்து எழுதியிருந்த கவிதை துõசிகள் தொகுப்பிலிருந்தது.அதனால் ஆசிரியர்கள் கொதித்து போனார்கள். பிறகு எக்பர்ட் சச்சிதானந்தம் என்ற ஆசிரியர் , உண்மையைத் தானே எழுதினான். அவனது துணிச்சலைப் பாராட்டுங்கள் என்று வாதிட்டார். ஒருவார அலைக்கழிப்புக்கு ப் பின் பள்ளியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். இன்று சினிமாவில் வெற்றி பெற்ற பிறகு அந்தக்காலத்திலேயே வாத்தியாரை திட்டி கவிதை எழுதின பயல்ல? என்று கொஞ்சம் எஞ்சிய கோபத்தோடு குறிப்பிடுவார்கள். திரைப்படக்கல்லுõரியில் சேரவிரும்பிய எனக்கு கிண்டியில் பொறியியல் கல்லுõரியில் பிடெக்படிக்க வாய்ப்பு கிடைத்தது. விருப்பமில்லதொல் பச்சையப்பன் கல்லுõரியில் சேர்ந்தேன். கல்லுõரியில் படித்துக் கொண்டே சிற்றிதழ்களுக்கும் எழுதினேன். 19995ம்ஆண்டு கணையாழி முப்பத்துஓராமாண்டு மலரில் துõர் என்ற என்னுடைய கவிதையும் இடம்பெற்று இருந்தது. கணையாழி விழா ராணி சீதை அரங்கில் நடந்தது. விழாவிற்கு பலர் வந்திருந்தனர். எழுத்தாளர் சுஜாதா பேசும்போது இந்தசிறப்புமலரில் எனக்குப்பிடித்த கவிதை ஒன்று வெளிவந்திருக்கிறது.தறபோத தமிழ்கவிதை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.அநத கவிதை துõர் என்று வாசிக்க ஆரம்பித்தார். பிறகு, கணையாழி ஆள் பார்த்து , முகம் பார்த்தெல்லாம் கவிதைகளை போடுவதில்லை. இதோ இந்தக்கவிதையை எழுதி யமுத்துக்குமார் எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்ற போது ஏழாவது வரிசையலிருந்த நான் எழுநஅது நின்று கையை துõக்கினேன். அடுத்த நொடியே என்னைப்பார்த்தவர். நீங்கள் தான் அந்தக் கவிஞரா? என்றவர் கையை தட்டுங்கள் இந்தக்கவிஞனுக்கு என்றார். ஐயாயிரம் பேர நிரம்பிய அந்தஅரங்கம் கைத்தட்டல்களால் சில நிமிடங்கள் நிறைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment