Monday, April 23, 2012

நீர்இன்றி அமையாது உலகு




நீரின்றி அமையாது உலகு என்கிறார் திருவள்ளுவர். ஆனால் , தற்போது நிலவிவரும் காலநிலை நீருக்காக  மீண்டும் ஒரு உலக யுத்தத்தை கொண்டு வருமோ  என அஞ்ச வைக்கிறது.

தற்போது இந்திய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. அதற்கு காரணம் அன்றாட குடிநீர் தேவைக்கும், உணவு உற்பத்தியான விவசாயத்திற்கு தண்ணீர் தேவை முக்கியமான ஒன்று. அப்படிப்பட்ட தண்ணீர் தேவைக்காக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. அதில் ஒன்று மழநீர் சேகரிப்பு அது  தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அந்த திட்டம் நடைமுறையில் இருந்த வரை நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருந்தது. அடுத்தது கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். அது தொடங்கப் போகிற நிலையில் இந்திய நதிகளை இணைக்கும் திட்டம் பற்றி வல்லுநர்கள் பலரும் பேச நதிநீர் இணைப்பு தேவை என ஒரு சாராரும், அது தேவையற்றது என்று மற்றொரு சாராரும் வாதிட்டுக் கொண்டு இருப்பதே இன்றைய பட்டிமன்ற தலைப்பாக மாறிக் கொண்டிருக்கிறது.

இ ந்தியாவில் 14 மகாநதிகள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட  மாநிலங்களுக்கிடையே ஓடுபவை.44 நடுத்தர ஆறுகள் இருக்கின்றன. அதில் ஒன்பது ஆறுகள் பல மாநிலங்களை நனைப்பவை தான். மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகள் வரும் என்றுதான் நமது அரசியலமைப்புசட்டத்தில் இதற்கென பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர் பங்கீட்டில் பிரச்சினை எழந்தால் அதை நாடாளுமன்றம் தீர்த்து வைக்கவேண்டும் என்கிறது இந்தபிரிவு. இந்த விதி இப்படியிருக்க தற்போது நதிகளை  இணைத்தால்  நதிகளால் தீராத பிரச்சினைகளை மேலும் எப்படி தீர்ப்பார்கள் என்கிறார்கள்.

சரி, நதிநீர் இணைப்பு என்றால் என்ன?
வடக்கே இமயமலையிலுள்ள கங்கை நதி வற்றாத ஜீவநதியாகும். இமமலையின் பனியிலிருந்து உருகி குளிர்ந்த ஆறாக பாயந்து வருகிறது. அதுவும் தற்போது கால நிலை பருவ மாற்றம், புவி வெப்ப மயமாதல் காரணமாக பனிமலைகள் யாவும் வேகமாக உருகு வதாகவும் வல்லுநர்கள்  கூறுகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான கங்கை. (சிவனின் தலைப்பகுதியான கைலாஸில் இருந்து உற்பத்தியாகி வருகிறது). அதேப்போல தமிழகத்தில் வழியே வந்து கடலில் கலக்கும் நதியான காவிரி நதியும் புண்ணிய நதியாக பாய்ந்து கொண்டிருக்கிறது. அது தலைக்காவிரியில் குடகுமலையில் உற்பத்தியாகி தமிழகம் வந்தடைந்து கடலில் கலக்கிறது.( அகத்தியர் குடத்திலிருந்து பொங்கிவருவதாகவும், ஸ்ரீரெங்கநாதனின் பாதத்தை கழுவிச்செல்வதாகவும் சொல்லப்படுகிறது)
அந்த காவிரித்தண்ணீருக்கும் தமிழகத்திற்கும் தான் தற்போது பல பிரச்சினைகள் தொடர்ந்தபடி இருக்கின்றன.நாமும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கையில் பிடித்துக் கொண்டு அல்லாடிக்ö காண்டிருக்கிறோம். அந்தவகையில்  சிவனின் தலைக்கும் , ஸ்ரீரங்கநாதனின் பாதத்திற்கும் ஏற்படுத்தும் தொடர்பு இது சாத்தியமா?

அதில் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேராங்கி  அணைகள் மூலம் தடுத்து தனக்கு போக மிச்சமுள்ள நீரையே தருகிறது கர்நாடக அரசு.  ஒவ்வொரு  வருடமும் உச்சநீதிமன்றத்  தீர்ப்பின் படி கொடுக்க வேண்டிய 205  டிம்எம்சி தண்ணீரையும் அது தர மறுக்கிறது என்பதே. இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருக்க தேசிய நதிகளை இணைத்தால் அனைத்து நிலங்களும் பாசனவசதிபெறும் இந்தியாவளம் பெரும் என்கிறார்கள். ஆனால், நதிநீர் இணைப்பே தேவையற்றது என்கிறார்கள் பல மாநிலங்களின் எல்லைப்பிரச்சினைகளை அறிந்து வைத்துள்ளவர்கள்.

 தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்கிற கருத்துக்கு செயல் வடிவம் கொடுக்க 1980ம்ஆண்டிலேயே மத்திய அரசு ஒரு தொலை நோக்கு திட்டத்தை வகுத்திருக்கிறது. இமாலய நதிகளின் மேம்பாட்டு திட்டம், தீப கற்ப நதிகளின் மேம்பாட்டு திட்டம் தான் அது. இந்த இரண்டு தொலை நோக்கு திட்டங்கள் குறித்து நீரியல் நிபுணர்கள், நில ஆராய்ச்சி நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
மறைந்த பாரத பிரதமர் இந்திகாந்தி தேசிய நதிநீர் முகமை அமைப்பை ஏற்படுத்தினார். இந்த முகமை க்கு முதல் கட்டமாக தீபகற்ப நதிகளின்  ஆய்வு செய்யும் பணி அளிக்கப்பட்டது. மாநிலங்களுக்குள் பாயும் நதிகளின் இணைப்பு திட்டத்திற்கு விரைவுபடுத்தப்பட்ட பாசனப்பயன்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்க மத்தியஅரசு தீர்மானம் நிறைவேற்றியது.

இந்திய அளவில் உள்ள நதிகளை மாநிலங்கள் வழியாக இணைக்க நீண்ட காலம் தேவைப்படும் என்பதால் இப்போது மாநில அளவில் உள்ள நதிகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்கள்.
அதன் முதல் கட்டமாக காவிரியாற்றின் உபரிநீரை வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல காவிரிஅக்னியாறு கோரையாறுபம்பாறுவைகைகுண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரியாற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் 189 கோடி ரூபாய் செலவில்  கதவணை அமைக்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதுபோலவே தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை கன்னடியன் கால்வாயிலிருந்து வெள்ளக்கால்வாய் மூலம் திசையன் விளை, சாத்தான் குளம் பகுதிக்கு  கருமேனியாறு நம்பியாறு ஆகிய பகுதிகளை இணைக்க  369 கோடி ரூபாயில் ஒரு திட்டம்  அறிவிக்கப் பட்டுள்ளது.

இப்படி மாநில அளவில் நதிகளை இணைத்து அதன் மூலம் தேசிய நதிகளான கங்கை, காவிரியை இணைக்க அரசுகள் ஆர்வம் காட்டிவருகிற நிலையில் இந்த திட்டம் அவசியமற்றது  என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி  தனது எண்ணத்தை  தெரிவிக்க, அது தேசிய அளவில் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.
8909 ம்தேதி முதல், மூன்று நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி  தேசிய நதிகளை இணைப்பது என்பது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் யோசனையாகும். என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றும், இது இந்த நாட்டின் சுற்றுப்புற சூழலை மிகவும் ஆபத்தான பாதைக்கு கொண்டு செல்லும் திட்டமாகும் என்றும். இந்த திட்டத்தை  தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்க மாட்டேன். இயற்கை மிகவும் பலம் வாய்ந்தது. அதற்கு முரணான பெரிய காரியங்களை செயல்படுத்துவது நல்ல தல்ல. நீர் பாசனத்துக்கு  உள்ளூர் நதிகளை இணைப்பது  தவறான தல்ல. அதில் பிரச்சினை இல்லை. ஆனால், தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது இதிலிருந்து அடிப்படையாகவே வேறுபட்ட விஷயம்.  அதுதான் ஆபத்தானது என்று கூறினார்.  

ராகுலின் பேச்சை ஆமோதிக்கும் விதமாகவே இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய கருத்தும் தற்போது பலத்த எதரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இயற்கையாகவே ஏற்பட்டு பயணப்படும்  நதிகளின் போக்கை மாற்றக் கூடாது. எனவே நதிநீர் இணைப்பு தேவையற்றது. தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் நதிகளின் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி பல வகையான உயிரினங்கள் வாழ்ந்து, வளர்ந்து கொண்டிருக் கின்றன. ரஷ்யா நாட்டில்  இதேப்போல இரண்டு நதிகளை இணைத்தனர். தற்போது அந்த இரண்டு நதிகளுமே வற்றிப் போய் விட்டது. வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் <உள்ள நதிகளின் போக்கு இயற்கையாகவே ஏற்படுத்தப் பட்டவை. அதன் போக்கை மாற்றினால் வெள்ளக் காலங்களில் அதன் பாதிப்பு கரையோர மக்களை அதிகமாகவே பாதிக்கும். தற்போது வெப்பமயமாதலால் துருவப்பகுதி பனிக்கட்டிகள் வேகமாக உருகிவருகிறது. அதை மாற்றும் முயற்சிகள் அவசியம். அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். அதில் கவனம் செலுத்துவதைவிட  அந்தநதியை தமிழகத்திற்கு கொண்டு வரலாம் என்பது உடனே நடக்கக்கூடியதல்ல. பல ஆண்டுகள் பிடிக்கும் திட்டம். அதற்கு கோடிக்கணக்கான   பணம் தேவை. அந்த திட்டம் மூலம் மேலும் ஊழலும், சுரண்டலும் அதிகமாகும். தற்போது  காவிரி நதிநீர் ஓப்பந்தத்திலேயே நம் விவசாயிகள் படும் வேதனை நாம் அறிந்ததே. கர்நாடக அரசிடம்  உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்க வில்லை. மாநிலங்கள் தம் எல்லைகளில் அணைகள் கட்டி  வேண்டிய தண்ணீரை தேக்கி  கொள்வார்கள். அதனால் மாநில அளவில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு அது வழிவகுக்கும், தற்போது ஒகேனக்கல் கூட்டக்குடிநீர் திட்டம் எப்படி செயலிழந்து கிடக்கிறதோ, அதே நிலைதான் நதிநீர் இணைப்புக்கும் ஏற்படும்.இன்று பல ஆறுகள் காணாமல் போய் விட்டன. பல நதிகள் சாக்கடைகளாக மாறிவிட்டன. அதே நிலைதான் தேசிய நதிகளுக்கும் ஏற்படும் அபாயம் உண்டு. மேலும் தமிழகத்தில் தற்போது உள்ள பல கண்மாய்கள், குளங்கள் யாவும் கலெக்டர் அலுவலகங்களாகவும், பேருந்து நிலையங்களாகவும் மாறி விட்டன என்கிறார்.
பெரும் பாலான மாநிலங்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற முடியும் என்றாலும்,  அது நதிநீரை மாசுபடுத்தும், பல்லுயிர்பெருக்கம் தடுக்கப்படும், தண்ணீரிலும், வெளியிலும் உள்ள உயிர்கள் அழியும். சுற்றுப்புற சூழல் கடுமையாக  பாதிக்கப்படும். மண் அரிப்பு ஏற்படும். ஏற்கெனவே பல குளங்கள் ஆக்கிரமிப்புகளால் அடுக்குமாடி கட்டடங்களாக  மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை இன்னும்  மோசமாகும். நதிகள் பல மாநிலங்களை தாண்டி வரும்போது மாநில எல்லைகள் தங்கள் உரிமைகளை கொண்டாடும். அது மேலும் தண்ணீருக்காக கையேந்தும் நிலையை கொண்டு வரும்.
தற்போது  காவிரிக்கும், கிருஷணாவிற்கும், முல்லைபெரியாற்று க்கும் அண்டைல மாநிலங்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் நாள் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்

மத்திய நதிநீர் இணைப்பு கமிட்டி உறுப்பினர் ஏசி காமராஜ் பேசும்போது,
ஆந்திரா, கர்நாடகா, பீகார், கேரளா மாநிலங்கள் இந்த திட்டத்தை ஏற்றுள்ளன. மாநிலத்தின் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டம் என்று ராகுல் கருதியிருக்கக்கூடும். உண்மையில் , வெள்ளநீரின் ஒரு பகுதியை , மாநில  நதிநீர் வழியாக (நீர்வழிச்சாலை ) நெட்வொர்க் அமைப்பதே  இத்திட்டத்தின் நோக்கம் . இதை செயல் படுத்தாவிட்டால் பேரழிவை ஏற்படுத்தும் . உணவு உற்பத்தி பாதிக்கும் . சுற்றுசூழலை பாதிக்கும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இது குறித்த விபரத்தை ராகுலுக்கு அனுப்பியுள்ளேன் என்கிறார் அவர்.


மனிதன் இயற்கையோடு இயைந்து வாழும் வரைதான் அவனுக்கு இயற்கையின் இயல்பான நன்மை கிடைக்கும். இயற்கையை மாற்ற அல்லது கட்டுப்படுத்த நினைத்தால்  அதனால் அழிவுதான் நேரும் என்பது பல வல்லுநர்கள் பல ஆய்வுகளுக்குப்பின் கண்ட உண்மையாகும்.
இதற்கு இன்று வரண்டு போன தமிழக நதிகளே சாட்சி. ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டியதால் இன்று பல ஆறுகள் செத்துவிட்டன. என்பதை நாம் கண்கூடாக காணலாம். ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளால் பல ஆறுகள் நீர்வரத்து இன்றி இன்று சமூக விரோதிகளின்  ஆக்கிரமிப்பு பகுதிகளாகவும் , மணல் திருட்டால் அதன் தன்மையை இழந்து சாக்கடை களாகவும் , புல் பூண்டு, புதற்களாகவும் காட்சியளிக்கின்றன. நம் அடுத்த தலைமுறை களில் இந்த ஆறுகள் இருக்குமா? என்பது  சந்தேகமே. ஒவ்வொரு பெரிய ஊர்களிலும் தண்ணீரை தேக்கி வைத்து கண்மாய்கள் இருக்கும் போது தடுப்பணைகள் எதற்கு? இப்போது உள்ள நீர்வரத்து , அதற்குரிய தேவைகளாலும் தண்ணீர் கடலுக்குள் சென்று வீணாக வாய்ப்பேயில்லை. இன்று நீர்வரத்து  இல்லாததால் பல கண்மாயகள் மேடுகளாகவும் கருவேலங்காடுகளாவும் இருக்கின்றன. அதனால் அதிகப்படியான வெள்ளம் வரும்போது அது <உடைந்து ஊருக்குள் வந்து அழிவை ஏற்படுத்தும்.
நதிகளை இணைப்பதால் இப்போது உருப்படியாக ஓடிக்கொண்டிருக்கும் நதிகளும் செத்துவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவ்வாறு இணைக்கும் போது அது பல நமாநிலங்கள் வழியே தான் வந்தாக வேண்டும். அப்படி வரும் போது ஒவ்வொரு மாநிலமும் அதற்கு உரிமை கோரும் , தேவையற்ற சண்டைகள் வந்து இந்திய ஒரு மைப்பாட்டுக்கு  ஊறு விளைவிக்கும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.  

ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ஜப்பான் அரசிடம் 1300கோடி வாங்கி அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவால் தடைபட்டு நிற்கிறது.



புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மேம்பாட்டு  சங்கத்தின் தலைவர் சிவசாமி சேர்வை அவர்கள் கூறும்போது:
காவிரி வெள்ளப்பெருக்கின் போது புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க வறண்டு போனது அதனால் எங்களுக்கு எந்தப்பலனும் இல்லை. அப்படி நதிகளை இணைக்கும் போது அந்த நீரினால் பல மாவட்டங்கள், தேசிய அளவில் பல மாநிலங்கள் , அதனால் பலன்பெறும் விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்கிறார். அப்படியாவது மற்றமாநிலங்கள் நமக்கு தர வேண்டிய தண்ணீரை தரும் என்கிறார்.

 அவரது கருத்தை போலவே விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்த கருத்தாவது: 
இந்தியாவை பொருத்த வரையில்  நாட்டின் வட பாகத்தில் உள்ள நதிகள் குறிப்பாக இமயமலையில் இருந்து <உற்பத்தியாகும் நதிகள் ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதிகளாக இருக்கின்றன. அதே வேளையில்  நாட்டின் தென்பகுதி நதிகள் அவ்வப்போது வறண்டு பயிர்உற்பத்தி பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறை உட்படபல சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வட மாநில நதிகளை , தென்னிந்திய நதிகளுடன் இணைக்க வேண்டும். என்ற கோரிக்கை இன்று நேற்றல்ல  நீண்ட நாட்களாக நிலவி வருகிறது.
ஆனால், நதிகள் இணைப்பு எந்த அளவிற்கு சாத்தியம். அதனால்  ஏற்படப் போகும் பலன்கள், பாதிப்பு கள் என்ன என்பதை ஆராயும் போது திட்டமிட்டபடி இத்திட்டத்தை செயல் படுத்த முடியுமா  என்ற சந்தேகம் தான் மேலோங்குகிறது.  இந்திய நதிகளை இணைப்பது குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு அதில் நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது என்பது மிகப்பெரிய திட்டம் வெள்ளம், வறட்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், வரும் 2043ம்ஆண்டுக்குள் இத் திட்டத்தை செய்யலாம் என்று கூறியிருந்தது.
ஆனால், இது குறித்த பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட் ஒரு அதிரடி தீர்ப்பை  மத்திய அரசுக்கு வழங்கியது. வரும் 2012க்குள் நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்பது தான் அது. ஆனால், நதிகள் இணைப்புக்கு அதிகமான அளவில் நிதி தேவைப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2,640 கிமீட்டர் துõரம் கொண்ட இந்த திட்டத்தை செயல்படுத்த 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.  என்று மதிப்பிடப் பட்டது. இந்த மதிப்பீடு இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு  பொருளாதார ரீதியில் சாத்தியமல்ல என்று கூறி நிராகரிக்கப் பட்டது. இந்நிலையில் , கடந்த 1977ம்ஆண்டு தீட்டப்பட்ட  திட்டம் மீண்டும் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. இத்திட்டத்தின் படி , கங்கை இணைப்பிற்கு 24 ஆயிரத்து 95 கோடி ரூபாய்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இவ்வளவு அதிகமான நிதியை செலவிட முடியாத  அரசு தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை  நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது.
இந்நிலையில் சுவிஸ் வங்கியில் இந்தியாவில் இருந்து முதலீடு செய்யப்பட்டுள்ள 72 லட்சம் பணத்தை மீட்டு வந்தால் திட்டங்களை விரைவில் நிறைவேற்ற முடியும் என்கிறது விவசாய விழிப்புணர்வு சங்கம்.

நதிநீர் இணைப்பு குறித்து நாமக்கல் மாவட்டத்தைச்  சேர்ந்த சமூக ஆர்வலர் லட்சுமிநாதன் கூறும் போது,
கடந்தவாரத்தில் ஒரிசா, அசாம், மேற்குவங்கம், ஜார்கண்ட் õகிய மாநிலங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சுமார் 360கிராமங்களில் 25லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் 30பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் பாதைகள், தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரிசாவில் ஜலேகா,பாலாசூர் உள்ளிட்ட ஆறுகளில் நீரமட்டம் அபாய அளவை எட்டியது. இயற்கையின் வரப்பிரசாததமான மழை அதிகம் பெய்தும் கெடுக்கிறது.பெய்யாமலும் கெடுக்கிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட வறட்சியான மாநிலங்களின் விவசாயிகள் பயிரிடவும் பயிற்களை காக்கவும் இன்றும் வானத்தை<யும்,  நதிகளையும் வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நதிகளான கங்கை, யமுனா, பிரம்மபுதரா, நர்மதை, கோதாவரி, காவிரி உள்ளிட்ட பல்வேறு நதிகள் மற்றும் பருவமழை மூலம் இந்திய துணைக் கண்டத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 1869 பில்லியன் கியூபிக் மீட்டர் நீர் கிடைக்கிறது. ஆனால், இதில் நாம் 40 சதவிகித நீரை மட்டும் பயனன்படுத்துகிறோம். மீதமுள்ள 60சதவிகித நீர் வெள்ளச்சேதத்தை ஏற்படுத்தி கடலில் கலக்கிறது.

இமயமலைத் தொடரில் இருந்து வருடம் முழுவதும் தண்ணீரைக் கொண்டு வரும் வற்றாத நதிககளை பருவமழையை மட்டுமே நம்பியுள்ள காவிரி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகளுடன் இணைக்க வேண்டும். öன்று அனைத்துதரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.
பயன்கள்:
வறட்சியில் இருந்து பெரும்பாலான மாநிலங்கள் காப்பாற்றப்படும். வடகிழக்கு மாநிலங்களின் வெள்ளச்சேதத்தை தடுக்க முடியும். குடிநீர் பற்றாக்குறை தீரும். போக்குவரத்து வளம் பெரும். நீண்ட துõர சரக்குகள் குறைந்த செலவில் போய் சேரும்.  கடல்பயணங்களுக்கு உறுதுணையாக அமையும்.  மீன்பிடித்தொழில்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படும். நாட்டின் உள்ளகட்டமைப்பு வளர்ச்சியடையும். நதியோரத்து கிராமங்கள் வர்ச்சிபெறும்.30ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். விவசாய நிலங்கள் வனப்பகுதிகள் அதிகரிக்கலாம்.

நதிநீர் இணைப்பின் வரலாறு:

தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் ஆங்கியேலர் காலத்தில் முன்வைக்கப்பட்டது. 1839ம்ஆண்டு ஆர்தர்காட்டன் என்பவர் முதன்முதலில் விரிவான திட்டத்தை தயார் செய்தார்.பின் 1972ல் டாக்டர் கே.எல். ராவ் என்பவர் 2640 கி.மீட்டர் நீளத்திற்கான கங்கைகாவிரி இணைப்பு குறிஞூதது பரிந்துரை செய்தார். 10லட்சம் ஹெக்டேர் நிலம் நீர்பாசனவசதி பெறும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.12,500கேகாõடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
சில ஆண்டுகளில் கேப்டன் தஸ்துõர், ஹிமாலயக் கால்வாய் மற்றும்  பூமாலைக்கால்வாய் என்ற இரண்டு திட்டங்கள் மூலம்  தென்னக, வட இந்திய நதிகளை இணைக்க  மதிப்பீடு செய்தார். 13,500கிமீ கால்வாய் மூலம் இந்திய நதிகளை இணைக்கும்  போது பெறப்படும் பலன்கள் குறித்து சி. டபிள்யூ.சியுடன் (சென்டர் வாட்டர் கமிஷன்) இணைந்து பல்வேறு பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் சர்வே பணியில் ஈடுபட்டனர். இத்திட்டத்தை செயல்படுத்த  ஆயிரக்கணக்கான கோடிகள் செலவானாலு<ம் , மின்உற்பத்தி , போக்குவரத்து , வெள்ளச்சேதம் ஆகியவற்றை கணக்கிடும் போது சில வருடங்களிலேயே செலவுத்தொகை பெறமுடியும் என சர்வேயில் கூறப்பட்டுள்ளது. ஆனாலம், நடைமுறைச்சிக்கல் , செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.


கிபி 905920ம்õண்டில் பாண்டிய மன்னன் ராசசிம்மன் காலத்தில் தான் முதல் நதிநீர் இணைப்பு நடந்துள்ளது. வைகை நதியையும் சருகணியாற்றையும்  ராசசிங்கமங்கலம் ஏரிமூலம் இணைத்துள்ளான். 1895ம்ஆண்டு கட்டப்பட்ட பெரியாறு திட்டமே உலகில் முதலாவது பெரிய நதிநீர் இணைப்பு திட்டமாக  கருதப்படுகிறது. இதேப்போல் பாலாறும் கொற்றையாறும்,  காவிரியும் வெள்ளாறும் , கோதையாறும் பழையாறும் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்திரமாநிலம் காக்கிநாடாவில் இருந்து தமிழகத்தின் மரக்காணம் வரை வெட்டப்பட்ட பக்கிம்காம் கால்வாய் 1878 ம்ஆண்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இது தேசிய நீர்வழிப்பாதை  4 என்று அழைக்கப்பட்டது. தற்போது ஆந்திராவின் வெள்ள வடிகாலாக இக்கால்வாய் உள்ளது.

நீரின் எதிர்காலத்தேவை :
இந்திய மக்கள் தொகை 2050ல் 150 முதல் 180 கோடியாக இருக்கும். என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், 2000லட்சம் டன் தானிய உற்பத்தியை 4500லட்சம் டன்னாகவும், 1400லட்சம் ஹெக்டேர் விளை நிலத்தை 1600லட்சம் ஹெக்டேராகவும் மாற்ற வேண்டியுள்ளதால் நீரின் தேவை மிக அவசியமானது.

இந்தியாவிற்கு 2050 ஆம் ஆண்டில் குடிநீர், பொதுமக்கள் உபயோகத்தேவைக்கு மட்டும் ஆண்டுக்கு 102 பிசிஎம் (பில்லியன் கியூபிக் மீட்டர்) தண்ணீர் தேவைப்படும். விவசாயத்திற்கு 1072 பிசிஎம் தண்ணீரும், தொழிற்சாலைகளுக்கு 63 பிசிஎம்மும், மற்ற தேவைகளுக்கு 210 பிசிஎம் என 1447 பிசிஎம் தண்ணீர்  தேவைப்படுவதாக சி.டபிள்யூ.சர்வே  தெரிவித்துள்ளது. எனவே நதிநீர் இணைப்புதிட்டத்தை தற்போது ஒத்திவைத்தாலும் எதிர்கால நோக்கில் தவிர்க்க முடியாது.
அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் தங்கள் நாட்டில் வெள்ளத்தை ஏற்படுத்திய நதிகளை மற்றொரு நதிகளுடன் இணைத்து நீர் வழிப்போக்குவரத்தையும் , பாசன வசதியையும் ஏற்படுத்திக் கொண்டு  தன்னிறைவு அடைந்துள்ளனர்.

ஸ்ரீரங்கத்து விஐபிகள்



ஸ்ரீரங்கத்தைப் பொறுத்தவரை ராஜகோபுரத்தைப்போல  வாழ்வில் உயர்ந்த மனிதர்களுக்கும், பிரபலங்களுக்கும்  பஞ்சமில்லை எனலாம். இலக்கியத்திலும், சினிமாவிலும் சாதித்தவர்கள் வாலி,சுஜாதா போன்றவர்கள். எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய மலரும் நினைவுகளாக  ஸ்ரீரங்கம் பற்றி எழுதும் போதெல்லாம் மறக்காமல் குறிப்பிடும் பெயர்  கே.வி.சீனுவாசன். காரணம் சுஜாதாவின்  பால்ய நண்பர். கே.வி .எஸ்  ஸ்ரீரங்கத்தில் சமூக நல சேவைகள் செய்து வருகிறார். அதில் குறிப்பிட வேண்டியது ஊரைவிட்டு வந்து அனாதையாக இறந்து போகிறவர்களை கண்டெடுத்து அவர்கள் வீட்டிற்கு தெரியப்படுத்தி நல்லடக்கம் செய்யும் சேவையில் ஈடுபட்டுவருகிறார்.  சுஜாதாவைப்பற்றி அவர் சொல்லும் போது " ஒரு நல்ல நட்பு எங்களுடையது. அந்தநட்பு இப்போது நினைத்தாலு<ம் அடிக்கரும்பின் இனிப்பு நாவின் அடியில் தங்கியதைப்  போல உணர முடிகிறது. கிரிக்கெட்டில் நான் மிகவும் ஈடுபாடு. பலமாட்ச்சுகள் விளையாடி ஜெயித்துள்ளோம். நாங்கள் இருந்த கீழச்சித்திரை வீதியில் இருந்து மேல அடையவளஞ்சான் , கீழ அடையவளஞ்சான் '  என வீதி மாட்ச்சுகள் விளையாடு வோம்.  அந்தந்த தெருப்பையன்கள்  அவர்கள் தெருவிற்காக  விளையாடுவார்கள். நாங்கள் ஜெயித்தாலும், அடிவிழும் (எதிர் அணியினர் சோகத்தில் அடிப்பார்கள் ),தோற்றாலும் அடிவிழும் (ஜெயித்த மகிழ்ச்சியில் அவர்கள் அடிப்பார்கள்) ஆனால், அடிவிழுவது என்னவோ நிச்சயம்.  எங்கள் தெருவில் இருந்த ஒரு பெட்டிக்கடை பின்புறம் உட்கார்ந்து நாங்கள் கர்னாடக சங்கீதக்கச்சேரியை செய்வோம். ஜாதாவின் பாட்டி மிகவும் கண்டிப்புக்காரர் . சுஜாதா எந்த ஒரு சிறிய விஷயத் தையும் கூர்ந்து கவனிப்பார்.  நகைச்சுவையாக அதனை எங்களிடம் விவரிப்பான். அவரோடு பேசுவதே டானிக் சாப்பிட்டமாதிரி இருக்கும்.  அவர் இறப்பதற்கு முன் ஸ்ரீரங்கம் வந்திருந்தார். " என்ன கே.வி இன்னொரு மாட்ச் விளையா டலாமா? இந்த தடவை 65வயதுக்கு மேற்ப்டடவர்கள்  தான் நம் டீமில்  விளையாடலாம் என்று  குறும்பாகச்  சிரித்தார். நான் பார்த்து ரசித்த ஸ்ரீரங்கம் அதன் வீதிகள்,கோவில் எல்லாமே மாறிவிட்டதே என்றார் சுஜாதா. அவர் வீட்டில் ஒரு முறை பாம்பு புகுந்துவிட்டது.அதை நான் அடித்துக் கொன்ற வீரச்செயலை சுஜாதா தன்னுடைய ஸ்ரீரங்கத்து நினைவுகளில் பதிவு செய்திருக்கிறார். ஆத்மார்த்த நண்பராக இருந்த அவர் இன்றில்லை. ' என்கிறார் மனமுருக.

ஒரு கேள்வி பதில்




ஜெயகாந்தன்

உங்கள் முதல் கதையை ப்பற்றிய அனுபவம் பற்றி?
சிறிதும் எதிர்பாராமல் நான் கதை உலகிற்குள் வந்தேன். அதற்குக் காரணமாக இருந்தது ஒரே ஒரு சம்பவம் தான். ஒரு நாள் பாதையோரத்தில் ஒரு பிச்சைக்காரனின் இறந்து போன உடலைப் பார்க்க  நேர்ந்தது. அது என் மனதை மிகவும் பாதித்தது. எனக்கு நெருக்கமான ஒரு நண்பனிடம் அதைப்பற்றி நான் சொன்னதற்கு அவன் ," நீ எழுது ! அதைப்பற்றி எழுது! என்றான். வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் மனதில் வந்ததை வைத்து நான் அப்போது எழுதினேன்.நண்பனிடம் நான் எழுதியதை க் கொடுத்தேன். சில நாட்களுக்குப்பிறகு பிரசுரிக்கப்பட்ட கதையுடன் திரும்பி வந்தான். அச்சில் நான் எழுதிய கதையை  பார்த்ததும் உலகத்தையே கையில் பிடித்துவிட்ட சந்தோஷம் எனக்கு உண்டானது. அப்போது எனக்கு வயது பதினாறு.         

ஒரு கேள்வி பதில்


அசோகமித்திரன்

தீவிரமானல படைப்பாளர்கள் பலருக்கு அவர்களின் தந்தையர் மேல் கோபம் இருக்கிறதே?
எனக்கு முந்தைய தலைமுறையினர் பலருக்கு அவர்கள் தகப்பனாரை ஞாபகம் வைத்துக் கொள்ளும் படி இயலாமல் அற்பாயுளில் இறந்திருக்கிறார்கள். நாம் எதற்கு யார்மீது கோபம் கொள்வது? பொறுப்பற்ற பெற்றோர் மீது வேண்டுமானால் கோபப் படலாம். இந்தியாவில் தந்தையை ஒரு கடவுளாகத்தான் பார்க்கும் மரபு இருந்திருக்கிறது. என் சமகாலத்தவர் யாரும் தந்தை மீது துவேஷம் கொண்டிருந்ததாக நான் உணரவில்லை. தீவிரமான எழுத்தாளனாக இருப்பதற்கும் ஒருவரை வெறுப்பதற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. உண்மையில் ஒரு எழுத்தாளனுக்கு அப்படி வெறுப்பு இருந்தால் அது அவனுடைய படைப்பில் வெளிப்படும். அது  அவன் எழுத்தின் நம்பகத் தன்மையை குறைத்து விடும்.

ஒரு கேள்வி பதில்


வண்ண நிலவன்

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் வண்ணநிலவன் கம்பாநதி,ரெயினீஸ் ஐயர் தெரு ,கடல்புரத்திலே ஆகியவை அதிகவரவேற்பவை பெற்ற இவரது படைப்புகள்.
 அவள் அப்படித்தான் திரைப்படத்தில் பணியாற்றினீர்கள் இல்லையா?இலக்கியத்தில் பாராட்டி <உங்களுக்கு யார் பரிசு கொடுத்தாலும் வாங்க மறுக்கிறீர்களே?
நண்பர் ருத்ரைய்யாவினால்  அவள் அப்படித்தான் திரைப்படத்தில் எழுத நேர்ந்தது. சினிமாவில் நுழைய  முயற்சிக்க வில்லை. என் இயல்பு சினிமாவுக்கு ஒத்துவராது என்றே படுகிறது.நான் மிகவும் மதிக்கும் இயக்குனர்பாலுமகேந்திரா. திரையுலகில் அவர் அளித்துள்ள பங்கு மிக முக்கியமானது. தனிப்பட்ட முறையில் என் மீது பரிவும் ,அக்கறையும் கொண்டவர். விளம்பரப்படுத்தும் தன்மைதான் பரிசுகளில் முக்கியமாக இருக்கிறது. மேலும் எனக்கு மேடை என்றாலே சங்கோஜமாகவும் , பயமாகவும் இருக்கிறது. என் படைப்புகளைப் பற்றி எனக்கே திருப்தி இல்லை. இந்நிலையில் அதற்கு பரிசுதருவதை நான் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். ஒன்றிரண்டு  பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.பரிசளிக்கும் முறைகள் தேர்வுகள் சரியில்லை . பொங்கல் இனாம் போல யார் கையிலாவது பரிசுகள் திணிக்கப்படுகின்றன. பரிசு கொடுப்பதும் பரிசு பெறுவதும் விளம்பரத்துக்காக  நடைபெறுகின்றன. நான் எழுதுவது பரிசு வாங்குவதற்காக அல்ல. வாசகர்களுக்காகவும் எனக்காகவுமே.

எழுத்தாளர் சுபா(சுரேஷ்பாலா)




இவர்களுக்கு உதவியாளர்களே இல்லை. வாசகர்களுக்கு  வாழ்த்து அட்டைகள் அனுப்புவார். சுரேஷ்பாலா இருவருமே கதைகளை விவாதித்துக் கொண்டு  எழுதுவார்கள். தற்போது  இவர்களது குழுவில் கே.வி.ஆனந்ததும் தவறாமல் இடம் பெறுகிறார். காரணம் தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றிக்கு ப்பிறகும் மூன்றாவதாக இவர்கள் கூட்டணி விவாதம் தொடங்கியிருக்கிறார்கள்.  இவர்களுக்கும் விநாயகர் தான் இஷ்ட தெய்வம்.காரணம் எதைத் தொடங்கும் போதும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவதால். அதிகமாக பெசன்ட்நகரிலிருக்கும் நண்பரின் கெஸ்ட் ஹவுசில் தங்கி கதை விவாதத்தில் ஈடுபடுவார்கள்.  தற்போது அதிகமாக ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதி வருகிறார்கள். குடும்பத்துடன் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வருவது பிடித்தமான விசயம். பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மூவரும் தங்கியிருக்கும் வீட்டின் பெயர் ஆத்மா ஹவுஸ்.

எழுத்தாளர் தேவிபாலா



திருவேற்கா தேவி கருமாரியம்மன் தீவிர பக்தர்.அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் உள்ளவர்.  எப்போதும் கதைகள் படிப்பது, எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளதால், லாஜிக் பற்றி கவலை இல்லாத கமர்சியல் சீரியல்களுக்கும், பல வருடங்களுக்குத் தொடரும் வெற்றி சீரியல்களுக்கும்  இவரது கதைகளே அஸ்திவாரம். ஏ4 தாளில் ஒரே பக்கத்தில் ஒரு எபிசோட் முழுவதையும் எழுதிக் கொடுத்து விடுவார். கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதைபடம்பார்த்து பதினெட்டு நாவல்களை எழுதியவர். அவள் ஒரு தொடர்கதை படத்தின் கதைக்  கூட வங்கமொழியில் வெளியான " மேகதாக தாரா' படத்தின் சாயல்  என்பது தீவிர சினிமா ரசிகர்களின் கருத்து. அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்து எழுதக்கூடியவர். இரவு எட்டுமணிக்கு உறங்கக்கூடியவர். அசைவ உணவுப்பிரியர்.

எழுத்தாளர் லேனாதமிழ்வாணன்



அப்பா தமிழ்வாணனின் ஆதர்ஸ கூலிங்கிளாஸ் இவரது அடையாளம். அண்ணாநகரிலிருக்கும் தமிழ்வாணன் வளாகத்தின்  மேல் மாடியில் இவரது அலுவலகம் இருக்கிறது.சுற்றிலும் கண்ணாடிச்சுவர்களால் ஆனது. அங்கிருந்து அண்ணாநகரை சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.வாக்கிங் போகும் பழக்கம் உள்ளவர். நீச்சலும் தெரிந்தவர். பில்லியர்ட்ஸ்  விளையாடும் விருப்பம் உள்ளவர். இப்போதும் எங்கேனும் விழாக்களுக்கு செல்லும்போது பாக்கெட்டில் பேடும், பேனாவும் நிச்சயம் இருக்கும். காரணம் அங்கே நடக்கும் சம்பவங்கள் ,முக்கிய விசயங்களை குறிப்பெடுத்துக் கொண்டு அதிலிருந்து பல நல்ல கட்டுரைகளை வாசகர்களுக்கு தருபவர்.

விஐபி

















எழுத்தாளர்பட்டுக்கோட்டை பிரபாகர்

இவருக்கு பிடித்த கடவுள் விநாயகர்.தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும்  சென்னை அடையாறில் இருக்கிற மத்தியகைலாஸ் விநாயகர் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதேப்போல தன் ஊரான பட்டுக்கோட்டைக்கு சென்று வரும் போதெல்லாம் (அம்மா இருந்த வரை) திரும்ப சென்னைக்கு புறப்படும்போது அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு சென்னை திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்.தற்போது அப்பா மட்டும் இருப்பதால் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு திரும்புகிறார். சமீபத்தில்  தனது மாமனார் முத்து நாராயணன் தந்தை பெரியாருடன் கொண்ட பக்தியையும்,அவருடனான அனுபவங்களையும் நுõலாக தொகுத்து தனது சொந்த பதிப்பகத்தில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். எதிலும்  நேரத்தை சரியாக கடைபிடிப்பவர். காலையில் ஐஐடியின் உள்புறச் சாலையில்  நடைப்பயணம் செய்கிறார். தற்போது தன் வீட்டிலேயே திரட்மிஞூ வாங்கி வைத்து நடைபயிற்சி செய்கிறார்.  தன்னுடைய ஒவ்வொரு சீரியல்கள், சினிமாக் கதை டிஸ்கசனுக்கு பாண்டிச்சேரியில்  பத்துநாட்கள் தங்கி டிஸ்கஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அங்கிருந்து  திரும்பும் போது டிவிடிக்கள் வாங்கிவருவது வழக்கம். தன் வீட்டில்  பெரிய எல்சிடி  டிவியில் போட்டு ஹோம் தியேட்டர் எபெக்டில் படம் பார்ப்பார்.   ஒவ்வொரு வருடமும் புத்தாண்டிற்கு வாசகர்களுக்கு வாழ்த்து அட்டைகள்  அனுப்புவார்.  ஒவ்வொரு வருடமும் குற்றாலம் சீசனுக்கு நண்பர்களுடனும், உதவியாளர்களுடனும் சென்று வரும் வழக்கம் உள்ளவர்.



 

தமிழருவி மணியன்



" மனசாட்சி இல்லாத காங்கிரஸ்;
 ஒப்பனை முகம் கொண்ட  திமுக 'விளாசுகிறார், . 
தமிழருவி மணியன்




சென்ற அக்டோபர் 2ம்தேதி கண்ணும் கண்ணும் காதும் காதும் வைத்தது போல எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகியிருக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அந்தக்கட்சியின் பெயர் காந்தீய அரசியல் இயக்கம். அதன் நிறுவனர் தமிழருவி மணியன்.
இந்தபுதிய கட்சியின் கொள்கை, எதிர்காலம் பற்றி அக்கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியனிடம் பேசியபோது, அவரின் ஆதங்கங்களின் தொகுப்பு.
* திடீரென்று  அரசியல்கட்சி துவக்கக் காரணம் என்ன?
காங்கிரசில்  காமராசருக்கும் , காந்தீயத்திற்கும் எள்ளளவும் தொடர்பற்ற  மனிதர்களின் இருப்பிடமாக இருப்பதைப் பார்த்து, என்  இதயம் ரணப்பட்டது. இன்றைய காங்கிரசாருக்கு  சமூகம், இனம்,மொழி  சார்ந்த பிரச்சினைகளில்  ஈடுபாடில்லை.
எப்படியாவது பதவி பெற்று  வசதிகளை அனுபவிப்பவர்களை  நேரில் பார்த்து வருந்தினேன். ஒரு உண்மையான காந்தீயவாதியால் நேர்மையான  தொண்டனால் காங்கிரசில் நீடிக்க  முடியாது. என்பது புரிந்தது.
 ஈழப்பிரச்சினை பெரிதாக  உருவெடுத்து பல்லாயிரம் தமிழர்கள் அன்றாடம் கொல்லப்பட்டப்போது காங்கிரஸ் தலைவர்களின் அணுகு முறையில் மாற்றாந்தாய்ப்போக்கு இருந்ததை கண்டு  நொந்துபோனேன். ஈழப்பிரச்சினைக்காத்தான் நான் நேசித்து நெஞ்சார தழுவிக்கொண்ட காங்கிரஸ் பொறுப்புகளை துரந்து வெளியேறினேன். அந்த ஈழப்பிரச்சினையில் முதல்வர் நடத்திய நாடகங்களில் நானும் ஒரு பாத்திரமாய் நடிக்க விரும்பாமல்  தமிழக அரசு திட்டக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினேன். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளிவைக்க காந்தீய,காமராசர்  கொள்கை
களை நிலைநாட்ட கட்சி துவங்கினேன்.

*உங்கள் கட்சி தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியுமா, என்ன?

சுயநலம், தனிநபர் லாபம் , கொள்ளையடிக்கவும் என்கட்சி  தேர்தலில் போட்டியிடாது.அதற்காக  இந்த இயக்கத்தை உருவாக்கவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்மையானவர்களாக , ஒழுக்கம் சார்ந்தவர்களாக,   பொது மக்கள் பணத்திலிருந்து செப்புக்காசுகளைக்கூட தங்கள் சுயநலத்திற்காக பயன் படுத்திக் கொள்ளாத வராக வரக்கூடியவர்களை உருவாக்குவது இக்கட்சியின்  அடிப்படைக்கொள்கை. 
 காந்தீயக் கனவு கிராம சுயராஜ்யம் . தமிழ்நாட்டில் 12,600 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த ஊõட்சி தேர்தல்களில் அரசியல் கட்சி சாயம்  கிடையாது. காந்தீய அரசியல் இயக்கத்தில் உள்ள  இளைஞர்கள் உண்மையான ஈடுபாட்டுடன் சமூக நல்வாழ்வுக்கு தங்களை அர்பணிக்க விரும்பினால் அவர்கள் ஊராட்சி தேர்தலில் நிற்க இயக்கம் அனுமதிக்கும். நேர்மையான ஊராட்சித்தலைவர்கள் தமிழகம் முழுக்க அமைந்தால்  ஊழல் பாதி குறையும். படிப்படியாக ஒரு நல்ல  இயக்கம் மக்கள் வழங்கும் ஆதரவின் அடிப்படையில் எங்கள் அடுத்தடுத்த முயற்சிகள் தொடங்கும்.

*நீங்கள் நல்லஇலக்கிய வாதி ஏன் இந்த அரசியல் பிரவேசம்?

இலக்கிய வாதிகள்  என்ன எழுத்தினாலும், பேசினாலும் சமுதாயத்தில் எந்த ஒரு பெரிய மாற்றங்களையும் , பாதிப்புகளையும்  தமிழ்நாட்டைப்பொறுத்தவரை கொண்டு வரமுடியாது. ரூஷோ, வால்டேர் எழுத்துக்கள் பிரெஞ்சுப்புரட்சியை உருவாக்கியது.   மார்க்சிம் கார்க்கி ருஷ்ய படைப்பாளி சோவியத் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்ததை அறிவேன். தமிழகம் ஈராயிரம் ஆண்டுகளாக படித்துவரும் திருக்குறள்  இன்றுவரை பேசுவதற்கு உரிய இலக்கியமாகவே இருக்கிறது.  எந்த தமிழரும் நடைமுறைப் படுத்துவதை  அறிய வில்லை. பழம்பெரும்   இரு இதிகாசங்கள் நம் மக்களால் காலம்காலமாக படிக்கப்பட்ட போதும் , நம் மக்களிடம்  மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை   போக வில்லை.
 தமிழன் இலக்கியத்தை அறிவுறுத்தும் கருவியாக அங்கீகரிக்கவில்லை. இன்புறுத்தும் உருவகமாய் பார்ப்பதுதான்  அவன் பலவீனம். தாழ்த்தப்பட்டோர்கோவில் பிரவேசம் . அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது வரை அரசியல் அதிகாரம் கொண்ட  சட்டங்களால் மட்டுமே  தான் சாதிக்கமுடிந்தது. பால்ய விவாகம், தேவதாசி  வாழ்க்கை முறை வரையும்  சட்டத்தினால் தான் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்தது. அப்படி  சமூக மாற்றத்தை  அரசியலால்  மட்டுமே உருவாக்க முடியும் என்பதால் இலக்கியவாதியாகவும் அரசியல்வாதியாகவும் இருக்கிறேன்.
அரசியல் களத்தில் நான் தோற்றுப் போனவன் என்பது  பலரது அபிப்ராயம். எம்எல்ஏ, எம்பி, மந்திரியாக இருப்பது. அரசியல் வெற்றி என்றால் கோடியில் சென்னையில் ஆடம்பர வாழ்வு, அரசியல் சாதனை என்றால் அந்தப்பட்டியலில் காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் பெரியாரை சேர்க்கமுடியாது. ஏனெனில் இவர்கள் உண்மை வெற்றியாளர்கள். இவர்கள் பாதையை தேர்ந்து கொண்ட நான் அரசியலில் தோற்றதாக கலிவிரக்கம் கொள்ளவில்லை.

*இளையதலைமுறைக்கு  உங்கள் வழிகாட்டல் என்ன?
  நான் மாணவனாக இருந்தபோது மாணவர்கள் பலரும் ஏதாவது ஒரு இயக்கம்
தழுவிய  சிந்தனையோடு இருந்தார்கள். திராவிட இயக்கங்கள், கம்ப்யூனிஸ்ட், காங்கிரஸ் இயக்கங்களில் சமூகப்பார்வையோடு இணைந்து கொண்டனர். அன்று  நம்பிக்கையான தலைவர்களாக பெரியார், ராஜாஜி, காமராசர், அண்ணாத்துரை என்று சகல தரப்பிலும் மிக உயர்ந்த தலைவர்கள் இருந்தார்கள்.  அவர்கள் அரசியலை வைத்து பிழைக்க வில்லை.  அதனால் மாணவர்கள் நம்பி பின்னால் சென்றனர். இன்றுள்ள அரசியலில் தலைவர்கள் பலரும் சுயநலம், செயல்பாடு அவர்கள் அறிந்ததால் அரசியல் கட்சிகள் மீது முற்றும் நம்பிக்கை இழந்தனர். இன்றைய  இளைஞன் ஒரு சமூக நோக்குடன் அரசியல் இயக்கங்களில் இருக்கு இன்றுள்ள அரசியல் வாதிகள்  உடையவை மாணவரை அல்ல. வழிகாட்டுதல்  இல்லை. இன்றுள்ள அரசியல் வாதிகள் ந்த அரசியல் சார்புகளையும் இல்லாமல் நல்லதை செய்யமுடியும். நாள்தோறும் பேசிவருகிற விஜயகாந்த்க்கு 10% வாக்காளர்கள் இருக்க காரணம் நிஜ மனிதர்களிடம் விரக்தியுற்ற இளைஞர்கள இதுபோல நிழல் மனிதர்களை நம்பத்தொடங்கிவிட்டதால் தான். 

*காசுக்கு ஓட்டு, இனி காந்தீய கொள்கை வெல்லுமா?
கலைஞர் நெஞ்சுக்கு நீதியில், ஒரு பழையவேன் மற்றும் ஒரு டேப்ரெக்கார்டர் வைத்துக்கொண்டு குளித்தலைத் தொகுதியில் தேர்தல் பணியாற்றி வெற்றிபெற்றதாக எழுதியுள்ளார். ஆனால், அவரது திருமகனோ திருமங்கலம் இடைத்தேர்தலில் ஒரு புரட்சித் திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டார். இனி, கோடிக்கணக்கில் பணம் வாரி இறைப்பவரை தேர்தலில் போட்டியிடமுடியும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார். இந்தநிலை மாற நான் காந்தீய , காமராசர் கொள்கைகளை  வரும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கிறேன்.நிச்சயம் எதிர்கால அரசியலில் ஒரு மாற்றம் வரத்தான் செய்யும். ஒரு காமராசனும், கக்கனும் வரத்தான் போகிறார்கள்.
* உங்கள் பள்ளிகாலம்?
பெரம்பூர் ராவ்பகதுõர் கலவலக்கண்ணன் செட்டி உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.அங்குள்ள ஏரிக்கரை மைதானத்தில் வாரந்தோறும் அரசியல் கூட்டங்கள் அரங்கேறும் பெரியார்,அண்ணாத்துரை, ராஜாஜி, சம்பத், கண்ணதாசன், காமராசர் போன்ற பெரியோர்கள்  உரையாற்றுவார்கள். அப்போது எனக்கு அரசியலில் உந்துதல் இல்லை. வேட்பாளனாக நல்லதமிழ் சுவைஞனாக இருந்தேன். என்னுடைய ஆர்வம் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் பேசுகிற தமிழை கேட்க வைத்தது. அவர்களில் சம்பத் அவர்களின் பேச்சு எனக்கு ஆர்தஸம். மறந்தும் வன்மையான வார்த்தையை கூட பேசமாட்டார். அண்ணாவின் திராவிடநாடு கொள்கையை விமர்சிக்கிறார் சம்பத் அப்போது அண்ணா பொய் சொல்லலை. உண்மைக்கு புறம்பாக இருக்கிறார்.  மேடை நாகரீகம் உயர்ந்த தளத்திலிருந்தது. பரவலாக இயக்கங்களின் சித்தாந்தம்  கொள்கை மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மேடையில்  பேசப்பட்டது. மேடை அரசியல் ஆய்வுக்களமாக இருந்தது. மேடைகள் அரசியல் பார்வைகளை விரிவுபடுத்தியது.
* பள்ளிப் பருவம்?
6ம் வகுப்பில் கண்ணதாசன் பாடல்கள் என்னை ஈர்த்தது. இப்போதும் கண்ணதாசனின் 60% பாடல்களை என்னால் சொல்லமுடியும்.  வாழ்வின் பல பரிமாணத்தை பாடலில்  கொண்டு வந்து கொட்டினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் வர்க்கப்பிரக்ஞையை எழுதினார்.  அதில் இருக்கும் மனிதவாழ்வின் சகல சாராம்சத்தையும் பாடல்கள் மூலம் எளிய தமிழில் தொட்டவர் கண்ணதாசன்.
அறிந்ததிலிருநுஞூது அறியாதவை நோக்கி எளிமையிலிருநுஞூது இலக்கிய இன்பத்தை கொண்டு வந்தது. அது பிள்ளைப்பருவ அறிவுக்கு பெரிதாகப்பட்டது. பாரதியார், பாரதிதாசன், இலக்கிய பயணம் தொடங்கி கம்பனில் கலந்து சங்க இலக்கியங்களி ன் தமிழில் சங்கமித்ததது. பள்ளி, கல்லுõரிகாலங்களில் அரசியல் விழிப்புணர்வு இலக்கிய ஆர்வத்தில் என் உள்ளத்தை செதுக்கிக்கொண்டேன். ஒரு தேசிய சமூகநலன் சார்ந்த அறம்பிறழாத வாழ்வை நான் எனக்குள் .ணர்ந்து நா.பார்த்தசாரததியின் இரண்டு நாவல்கள் குறிஞ்சிமலர், பொன்விலங்கு . மகாரபாரதம், இராமாயணம் படித்து நெறிப்படுத்தவில்லை மாறாக குறிஞ்சிமலர், பொன்விலங்கு மணிபல்லவம், ஆத்மாவின் ராகங்கள்  நா.பார்த்தசாரதியின் படைப்புதான் தன் வாழ்க்கை நோக்கத்தை சமூக தார்மீக கோபத்தை தீமையுடன் சமரசம் ஆகாது என்ற அணுகுமுறை பெற்றேன். மிகச்சாதாரண குடும்பம்  அப்பா ரயில்வே பணியில் இருந்தார். அம்மா மழைக்கும் பள்ளிக்கு செல்லாதவர். பாட்டனார் சொத்துக்களை வைத்து ஆறு பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கியவரில் களைத்து விட்டவர். நெறி வாழ்வுக்கு சொந்தக்காரர் நீதிநுõல்கள் படித்தவர்.ஆத்திச்சுடி, கொன்றை வேந்தன் சொல்லித்தந்தவர். என்னிடம் நான்கு நல்ல பண்புகள் இருக்கிற தென்றால் அவை என் தாய், தந்தையர் வழங்கிய சீதனம். உன்னிடம் இருப்பதை அடுத்தவனுக்கு கொடு. அடுத்தவனுடையதை உன்னுடையதாக்கிக் கொள்ள முயலாதே. அப்பா, அம்மா தந்த அறிவுரை , அன்பு, இரண்டு  தம்பிகள், மூன்று தங்கைகள்  என நடுத்தர சூழலில் வாழ்க்கை.

* அரசியல் பிரவேசம் என்பது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட திணிப்பா?
சுயசிந்தனை உள்ளவனிடம் மாநில கல்லுõரியில் 1966ம்ஆண்டு கால்பதித்தேன். படிக்கும் பருவத்தில் அரசியல் பக்கம்  திரும்பக்கூடாது. என்ற தீர்மானம். காந்தீயத்தை முழுமையாக நான் ஆழ்ந்து படித்த காலம். அந்த நெரிறப்பஐ  என்கண்முன்னால் கண்ட ஒரு தலைவர் காமராசர். கண்ணதாசன் தான் எழுதிய கவிதையில் ஆண்டி கையில் ஓடிருக்கும். அதுவும் உனக்கில்லையே என்றெழுதிய  வரிகள் . என் நேயத்தை வளர்த்தது.
ஆனாலும் அரசியலில் மீக்கை நீட்ட விரும்பவில்லை. 1967ல் பொதுத்தேர்தல் முன்னிலும் மேலாக வாழ்ந்த காமராசர்  தொற்றதை என்னால் சகிக்க முஐயவில்லை. அதேநேரம் மாணவர் சமுதாயத்தில் பலரும் பெரும் திமுக அனுதாபிகளாக இருந்தனர்.  தேசிய கண்ணோட்டத்துடன் இனம், மொழி சார்ந்து திந்திப்பவனாக இருந்த நான். காமராசர் தோல்வியில் சேதுபந்தனத்திற்கு அணில் மணல் சுமந்தது போல காமராசர் அரசியலில் துணைநிற்க காங்கிரசில் இணைந்தேன். ஒரு மாணவனாக இருந்தபடி. 1971ல் நடந்த கூட்டத்தில் ஆரோக்கியமான என் விமர்சனங்களை வியாசர்பாடி கூட்டத்தில் கேட்ட காமராசர் தமிழருவி என்ற அடைமொழியைக் கொடுத்தார்.  நோபலைவிட உயர்ந்த பரிசு அது. 1975 அக்டோபர் 2ந்தேதி காமராசர் இறந்தார். நெருக்கடி நிலைவந்து ஜனநாயக குரல்வளை நெறித்த இந்திராகாந்திஅரசியலை எதிர்த்து தமிழகத்தில் களம் கண்டதில் நானும்ஒருவன். காமராசர் மறைந்தபிறகு அரசியல் பயணம் ஸ்தாபன காங்கிரஸ், காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம் என்றும் உருமாறி ய போது என் சொந்த தொகுதியில் நின்றேன். சொந்த ஆதாயத்திற்காக கட்சிமாறவில்லை. றுபரியார் சொன்னது போல, ஜீவா வாழ்ந்தது  போல நான் எப்போதும் என்னை ஒரு கொள்கைக்காரனாக பாவிப்பவனே தவிர கட்சிக்காரனாக நடக்கவில்லை. தமிழ் மாநில  காங்கிரஸ்  மூப்பனார் உருவாக்கிய பின் காமராசர் ஆட்சி அமைக்க  உங்களைப்போன்றவர்கள் என்னோடு இருக்க வேண்டும் என்று நண்பர்கள் மூலம் திரும்பத்திரும்ப அழைத்ததால் அவரோடு நான் சேர்ந்து  பணியாற்றி பிறகு தமிழ்மாநில காங்கிரஸ்  பொதுச்செயலாளர் பொறுப்பை 1996ல் ஏற்று இயன்றவரை சிறப்பாக பணியாற்றினேன். 1998ல் வாசன் தலைமை ஏற்க தாமக  காங்கிரசில் சேர அங்கே எனக்கு பொதுச்செயலாளர் அகில இந்திய கமிட்டியில் உறுப்பினராக தொடர்ந்து பணி செய்து வந்தேன்.


*  2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மூப்பனார் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்க வைத்தார். ஸ்டாலினை எதிர்த்து நின்றேன். அப்போது நான் அரசியல் பணம் வைத்து சூதாட்டம் நடத்தும் களம் நிற்க என்னிடம் பணம் இல்லை . சூதாடிப்பணம் பெருக்கும் ஆசையும் இல்லை.  என்று மறுத்தேன். ஆனால், நேர்மை சார்ந்த அறிவுதெளிவுமிக்க  சமூக நலன் சார்ந்து  செயல்படுகிற மனிதர்கள்  சட்டமன்ற, நாடாளுமன்ற ம் செல்ல வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.
 திருமங்கல ம்தேர்தலுக்கு ப்பிறகு திருப்புமுனைக்குப்பிறகு இனிவரும் காலம் ஒரு ஏழை, மேலான லட்சியம் உள்ள ஒருவன் தன்னை முன் நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பே பறிபோய்விட்டது.  1957 குஹித்தலை யில் கலைஞர் முதல் வேட்பாளராக நினறபோது  ஒரு பழையவேன் , ஒரு டேப்ரெக்கார்டர்  எடுத்துக் கொண்டு தேர்தல் பணியாற்றி வெற்றி பெற்க்ஷீதாக நெஞ்சுக்கு நீதியில் சொல்கிறார். அவர் திருமகன் கோடிகதளை செலவஷ்த்தால் தான் தேர்தலில் நிற்க தகுதி உண்டு என்றநிலையை உருவாக்கினார்.   

 செல்வகுமார் 



சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கிற சங்கீதா ரெஸ்டாரண்டில்  கர்நாடிகா ஆர்ட்ஸின் சங்கீத சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு பல கர்நாடக இசைப்பாடகர்கள், கலைஞர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர்களது அனுபவங்கள் இங்கே தொடர்கிறது.

ஓ.எஸ்.அருண்

டெல்லியில சபாக்கள் கிடையாது. வீட்டுல என்னை வேலைக்கு போ!போ!ன்னாங்க எனக்கு சங்கீதம் தான் பிடிச்சிருந்தது.சில பேர் என்னைக் கேட்பாங்க. நீங்க என்ன பண்றீங்கன்னு பாடுறேம்பேன். பாடுறீங்க சரி, என்ன வேலை சார் பார்க்கறீங்கம்பாங்க? நான் பாடறேம்பேன். பாடுவேளாம்பாங்க. ஆமாம்பேன். முழுநேரம் பாடுவேளாம்பாங்க. ஆமாம் சார் முழுநேரம் பாடுவேன்னு சொல்லுவேன். சரி சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்கம்பாங்க?இப்படித்தான் பலரும் இருக்காங்க. அதே மாதிரி கச்சேரியில காம்போதி ராகம் மூச்சைப் பிடிச்சுண்டுஇரண்டரை மணிநேரம்  பாடுவேன்.ஆலாபனை எல்லாம் முடிஞ்சப்பறம். கச்சேரி முடிஞ்சு வெளியவர்றப்ப சொல்லுவாங்க.இதை செம்மங்குடி பாடிக் கேட்கணும்னு.அப்போ இவ்வளவு நேரம் பாடினது? அப்படி எம்எல்வி, ஜிஎன்பி கேட்கணும்னா அதுக்காகத்தானே கேசட்ஸ் இருக்கு. அதைக்கேட்டுடளாமே! நான் ஏன் செம்மங்குடி, அரியக்குடி மாதிரிபாடணும்.நான் என்னை மாதிரி பாடறேனே என்று இரண்டு வரி கீர்த்தனையைப்பாடிவிட்டு நல்லா இருக்கா? என்றவர். அடுத்ததாக இன்றைய பாடகர்கள் சினிமாக்காரர்கள் போல உடை உடுத்துகிறார்களே என்றதற்கு? பாடகர்களா? பாடகிகளா யாரை குறை சொல்றேள் என்றவர்.ஜம்னு போறது சந்தோஷம்.இந்தகலர் நல்லா இருக்கா இல்லையா? தீபாவளிக்காக விளக்கு ஏத்தறோம். பார்க்கறப்ப தெய்வீகம் நம்ம வீட்டுக்குள்ளே  வருதில்லையா? வாய்விட்டு மேல் ஸ்தாயியில மனம்உருகிப்  பாடறப்போ  பண்டரிமுகுந்தன் (துக்காராம் சுவாமி பஜன்)அபங்க்கை பாடறப்போ நம்மை மீறி அழுகை வரும். அப்போ பண்டரிபுரம் பாண்டுரங்கனையே நேர்ல தரிசனம் பண்ற அனுபவம கிடைக்கும். பாடற எங்களுக்கே இப்படின்னா, கண்களை மூடி மெய்மறந்து கேட்கறவங்களுக்கு எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும். இசைகேட்கறது தியானம் மாதிரி.அப்படி ராகம், தானம், பல்லவி பாடறப்ப தெய்வ ஆராதனைகள் பாடறப்ப நாம தெய்வத்துக்கு பக்கத்துலயே  போயிடறோம் இல்லையா? அந்த தோற்றத்தோட நாங்களும் இருந்தாத்தானே நீங்களும் கேட்கமுடியும்.உங்களுக்கும் பார்க்க குளிர்ச்சியாக இருக்கும். அந்த உணர்வு வரணுங்கறதுக்காகத்தான்  நல்லா டிரெஸ் பண்ணிக்கறோம். இந்த டிரெஸ் கண்ணுக்கு குளிர்ச்சியாகத்தானே இருக்கு?  நைட்டியில  வந்து கச்சேரிபண்ணா நல்லா இருக்குமா?என்றார். 

உன்னி கிருஷ்ணன்

"" சின்ன  வயதில  வீட்டுல கிரிக்கெட் விளையாடியபோது நான் பேட்டிங் செய்தேன்னா என்னோட பாட்டிதான் பவுலராக பந்தை துõக்கிப்போடுவாங்க.சின்னவயசில நிறைய சினிமாப்பாடல்கள் பாடிக்கிட்டிருந்தேன். கர்நாடக சங்கீதத்தை கத்துக்கிட்டு கச்சேரி பண்ணினப்ப சினிமாப்பாட்டு பாடிக்கிட்டிருக்கறதை நிறுத்திட்டேன். திரும்ப சினிமாக்கள்ல எனக்கு வாய்ப்புகள் அமைஞ்சது இப்போ இரண்டும் தொடருது. இளமையின் ரகசியம் பற்றிக்கேட்டதும் ரகசியமாவே இருக்கட்டுமே என்றார்.தொடர்ந்து இருபது வருஷத்துக்கு முன்னே பாம்பேக்கு புனேயில ஒருகச்சேரி பண்றதுக்காக போனேன். அங்கே என்னை வரச்சொன்ன சபாக்காரங்களை நான் இதுக்குமுன்னே பார்த்தது கிடையாது. என்னை ரயில்வே ஸ்டேஷன்ல என்னை ரிசீவ் பண்ணிக்க வந்தவங்களையும் நான் பார்த்ததில்லை.நான் ஜீன்ஸ், டீசர்ட் போட்டுக் கிட்டிருந்தேன்.இறங்கி நானும் வெயிட் பண்றேன் அவங்களை காணலை. அதாவது என்னைதான் கடந்து போயிருக்காங்க. நான் யாருன்னு அவங்களுக்கு தெரியலை. அவங்க பாடகர்ன்னா ஏதோ சிலுக்கு ஜிப்பாமாட்டிக்கிட்டு வாய் சிவக்க  வெத்தலையோட இரு ப்பார்னு நினைச்சுக்கிட்டிருந்திருக்காங்க. நானும் காத்திருந்து பார்த்திட்டு ஒரு ஆட்டோ பிடிச்சு என்னை வரச்சொன்னவர் வீட்டுக்கு என்னை தேடி ஸ்டேஷனுக்கு வந்தவங்க வர்றதுக்குள்ளே நான் வந்துட்டேன். என்னை பார்த்ததும் சபாக்காரர் சாரி,சொல்லிட்டு! நீங்க என் கூட வாங்க ஹோட்டல்ல விட்டுடறேன்னு சொல்லி வண்டியில ஏத்திக்கிட்டு போனார்.ஒரு இடத்தில வண்டி நின்னுடுச்சு.நானும் இடம் வந்திருச்சுன்னு இறங்கிட்டேன். சுத்திப்பார்த்திட்டு திரும்பிபார்த்தா அவர் வண்டில  போயிட்டார்.அவர் ஹோட்டல்ல போயி இறங்கி பார்த்திருக்கார் என்னைக் காணலை. உடனே நான் ஒரு ஆட்டோ பிடிச்சுட்டு அவர் வண்டியில வரும்போது சொல்லியிருந்த ஹோட்டலுக்கு போயி சேர்ந்தேன். 

இவர் கையில் கிடைக்கும் எல்லாம் சிற்பம் தான்!






சமையலும் ஒரு கலை என்பார்கள். அதில் நிஜமாகவே கலைநுட்பம் தெரிந்த ஒருவர் இருந்தால் நிச்சயம் சமையலு<ம், கலையும்  மணக்கும்  இல்லையா? அப்படி இவர் கையில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் சிறந்த கலையாகி விடுகிறது. கோடம்பாக்கத்தில் தற்போது காகித பொம்மைகள் செய்யும் தொழிலில்  ஈடுபட்டு வருகிறார்கள் வீரராகவன், நமச்சிவாயம் என்ற சகோதரர்கள் இருவரும் அவர்களைச் சந்தித்தோம்.
""அப்பா கோவிந்தராஜுலு களிமண்ணில்  பொம்மைகள் செய்தவர். ஆரம்பகாலத்தில் டெலிபோன் துறையில் பணிபுரிந்தவர். அவருக்கு நாங்கள் மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அதில் இரண்டு ஆண்கள் ஏழு பெண் குழுந்தைகள். அதில் ஒரு சிலரைத் தவிர மற்ற பிள்ளைகள் அனைவரும் இதே தொழிலைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் கொஞ்சம் மாற்றமாக இப்போது காகித பொம்மைகள் தயாரிக்கிறோம். ஆனால், ஆரம்ப காலத்தில் நானும் தம்பியும் எம்.காம்  படித்து விட்டு கேட்டரிங் பட்டயப்படிப்பை படித்தபிறகு, நாங்கள் இருவரும் கப்பலில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பலவருடங்கள் பணிபுரிந்தோம். தம்பிக்கு கடலும், குளிரும் ஒத்துவரவில்லை. அவன் சென்னை திரும்பி ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலைப்பார்க்க, நான் பிரயாணிகள் கப்பலில் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கும் பயணம் செஞ்சேன். அப்படி பயணம் செய்ததில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என மற்ற நாட்டு மொழிகளை கொஞ்சம் தெரிஞ்சு வெச்சுக்கிட்டேன்.  அங்கே கப்பலில் கேட்டரிங் கில் பணிபுரிந்த போது சமயத்தில் எங்களுக்கு காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், ஐஸ்கட்டிகளில் சிற்பம் செதுக்கச் சொல்வார்கள். அதில் எனக்கு சிறுவயதிலிருந்தே கலை சம்பந்தமான விசயங்களில் இருந்த ஆர்வம் ஊறிப்போனதால் எனக்கு சமையலும், கலையும் கைவந்த கலையாகிவிட்டது. குளோரைடு வாட்டரான கண்ணாடி போன்ற ஐஸ்கட்டியை கொடுத்து இருபது நிமிடத்தில் சிற்பம் செதுக்கச் சொல்வார்கள். சமயங்களில் கண்காட்சிகள் நடக்கும். ஓட்டல்களில் விழாக்கள் இருக்கும். அங்கு வரும் பார்வையாளர்கள் ரசிக்க வேண்டி இந்தப்போட்டிகளை நடத்துவார்கள். அதில் நான் கோல்டு மெடல் வாங்கியிருக்கிறேன்.  சமைக்கும் போதும், பிறகு பரிமாறும் போது அது அழகுபட இருந்தா இன்னும் அழகா இருக்கும் இல்லையா? அப்படிப்பட்ட விசயங்களை அங்கே நிறைய செய்ய முடிஞ்சது. அப்படி எங்களுடைய சிற்பங்களை ஐஸ்பார், வெண்ணெய்(பட்டர்), பிரட், வான்கோழி இறைச்சி, முட்டை, தெர்மகோல், மெழுகு,ஜெலட்டின் குச்சிகள், காய்கறிகள், பழங்கள்ல செய்திருக்கிறோம். ஐஸ்பாரைப்பொருத்தவரை அது ஹார்டாக இருந்தாக்க சிசில் வெச்சு பொறுமையாக செதுக்கும் போது நமக்குத் தேவையான உருவத்திற்கு செதுக்க முடியும். சிலசமயம் நொறுங்கவும் செய்யும். நாம் எதிர்ப்பார்க்கிற உருவம். அளவு மாறவும் வாய்ப்பிருக்கு. சிலசமயம் அளவு குறையும் போது அதுக்கேத்தமாதிரி வேறு உ<ருவங்களை செதுக்கிடுவோம். தண்ணீரிலயே   நிறங்களை கலந்து  ஐஸ்பார் தயாரிச்சு  வரும். அது பொன்னிறமாக வரும். இங்கே இந்தியாவில் கிடைக்கற ஐஸ் சுத்தமாக இருக்காது. வெளிநாடுகளில் கிடைக்கறது மறுபக்கம் கண்ணாடி மாதிரி தெரியும். கப்பல்லயோ, ஓட்டல்லயோ பார்வையாளர்கள் முன்னே செய்யும் போது அதிகபட்சம் இருபது நிமிஷம் நேரம் மக்கள் பொறுமையாக  ரசிப்பாங்க. அதற்குள்ளே ஒரு சிற்பத்தை செய்து காட்டிடணும். பிறகு ஐந்து மணிநேரம் முதல் மூணு நாள் கூட காட்சிக்கு வெச்சிருப்பாங்க. ஐஸ்பார்ல செதுக்கணும். பட்டரைப்பொறுத்தவரை மெட்டல்ல பிரேம் பண்ணிட்டு அப்ளை செய்யணும். காய்கறிகள் பொருத்தவரை காய்கறிகள், பழங்கள்லேயே அதுக்கான உருவங்கள் ஒழிஞ்சிருக்கும். உதாரணமாக கத்தரி உடலுக்கும், தலைக்கு ஆரஞ்சும், கைக்குகேரட்டும், கண்ணுக்கு திராட்சையும் பொருந்தும்.  தர்பூசணிப்பழத்தில மனித முகம், உருவங்களை செதுக்கமுடியும். பிரட்டை பொருத்தவரை அதுக்குன்னு தனி வகை பிரட் ஹார்டாக இருக்கணும். அதை திரும்ப பயன்படுத்த முடியாது. அப்பறம் நான் வெஜ் அயிட்டங்கள்ல வான் கோழி, பெரிய இறால், முட்டை மூலமாகவும் அலங்காரம் செய்வோம். அதை குறிப்பிட்ட நேரம் வெச்சிருந்து பரிமாறிடுவோம். ஆறிடிச்சுன்னா நல்லா இருக்காது. வெளிநாட்டில மீன்முட்டைன்னு ஒண்ணு தனியாக கிடைக்கும் அது அதிக டாலர் விலை உள்ளது. இப்படி சாப்பிடுகிற , பார்க்கிற , கிடைக்கிற  பொருட்கள் எல்லாத்திலும் புதைஞ்சு கிடக்கிற கலைப்பொக்கிஷங்களை மக்கள் பார்வைக்கு வைக்கிறோம். இதை நாங்க சொல்லித்தர ஆர்வமாக இருக்கிறோம்.   அதையே இங்கே கேட்டரிங் படிப்புகள்ல ஒரு கோர்சாகவும் சேர்க்கலாம். என்னைப்பொருத்தவரை எங்கள் வீட்டில் கலையுடன் நாங்கள் வளர்ந்ததால் எனக்கு அது சுலபமாக கை வந்த கலையாக ஆனது. படிக்கும் பலருக்கும்  கற்றுக்கொள்ளும் போது , இது அவர்களது திறமையை மேலும் மெருகூட்டப் பயன்படும். வீட்டிலிருக்கும் பெண்களும் கூட இதை கற்றுக் கொள்ளலாம். அவர்கள் தங்கள் வீட்டில் நடக்கும் சாதாரண விழாக்களில் கூட வாசலில் கோலம் போட்டு அழகுபடுத்துவது போலவும், திருமணத்திற்கு வீட்டில் வாழைமரம் , தோரணங்கள் கட்டி அழகு படுத்துவது போலவும் உணவுகளையும், பழங்களை  அழகு படுத்தி அசத்த முடியும். என்கிறார்கள் சகோதரர்கள் இருவரும். 

எஸ்எம்எஸ்ல் ஹைகூ இதழ்கள்



காலை நேரம் ஐந்து முப்பதுக்கெல்லாம் நம் செல்பேசியில் ஒரு எஸ்எம்எஸ் நம்மை துயில் எழுப்பவும் ஏதோ விளம்பரமாக இருக்கும் என்று நினைத்து ஆரஅமர ஒரு காபியை குடித்துக் கொண்டே செல்லைத் திறந்தால் கன்னிகோயில் ராஜாவின் எஸ் எம்எஸ் இதழ் என்ற அறிமுகத்துடன் இன்றைய ஹைகூ என்று கவிஞர் முத்து ஆனந்த் வேலுõர் என்ற குறிப்புடன் "நாத்திகன் வீட்டிலும் தெய்வம் அம்மா 'என்று ஆழமானஅர்த்தங்களை கொண்ட  அழகான கவிதை. மறுநாள் "எறும்பின்  மீது விழுந்தும் நசுங்கவில்லை ஆலமரத்தின் நிழல்!என்று கவிஞர்  லலிதானந்தும் தொடர்ந்து  அனுப்புகிறார்கள். திருச்சியிலிருந்து" புதுமைக்கவி'என்று கௌதமனும்,கொள்ளிடம் காமராசு, "தெனாலி ' நகைச்சுவை  இதழ் என்று  சி.கலைவாணி வேலுõரிலிருந்தும் , லிங்கம் கதை  இதழ் என " அடிப்பட்ட டூவீலருடன் கணவனின் பாடி வர, அழவில்லை அவள். அம்மாவின் இதய ஆபரேஷனுக்கான பணமல்லவா அந்த டூவீலர்'என்று. கடலு<õர் ஞானபாரதி எழுதிய கதைகளில் தொடர்கிறது எஸ்எம்எஸ் இதழ்களின் காலைப்பொழுது . வழக்கமாக  எங்கே இருக்கே? சாப்ட்யா செல்லம்? உன்னை மிஸ் பண்றேன். குளிச்சியா? ஒரு முத்தம் கொடு என்று ஜல்லியடிக்கிற எஸ்எம்எஸ் பார்ட்டிகளுக்கு  நடுவே   அழகான மூன்று வரிக் கவிதை, திருக்குறளைப்போல நச்சென்று ஒன்றே முக்கால் அடியில் ஆழமான அர்த்தங்களை தனக்குள் இருந்து படிக்க படிக்க வெவ்வேறு அர்த்தங்களை, சிந்தனைகளைத் தோற்றுவித்த படி இருக்கிறது.  இப்படி ஹைகூ கவிதைகளை த் தொடர்ந்து  பொன்மொழிகள், தத்துவங்கள், ஒரு வரிக்தைகள் என வெவ்வேறு பெயர்களில் எஸ்எம்எஸ் இதழ்கள் நாள்தோறும் காலை நேரங்களை அர்த்தப் பூர்வமாக்கிக் கொண்டிருக்க. இது வித்தியாசமான முயற்சியாகத் தோன்றவே.  ஒரு எஸ்எம்எஸ் ஒருவருக்கு முன்பு அனுப்ப மட்டுமே இலவசமாக இருந்தது. இன்றோ அதற்கும் கட்டணங்கள் என்று வந்து விட்ட நிலையில்  அதை எப்படி நடத்துகிறார்கள், எப்படி இந்த எண்ணம் உதித்தது?  என்கிற கேள்வியுடன் சென்னை அபிராமபுரத்திலிருக்கிற "கன்னிகோயில் ' ராஜாவை சந்தித்தோம்.
""முதல்ல 2005ம் வருசம் திருவள்ளுவர் தினத்துக்கு நண்பருக்கு திருக்குறளை வாழ்த்தாக அனுப்பினேன். எஸ்எம்எஸ் பொருத்தவரை ஆங்கிலத்தில் தான் எழுத முடியும். அதேசமயம் 158 எழுத்தக்களுக்கு மேல அனுப்ப முடியாது. இப்படி திருக்குறளை அனுப்பவும் . அதை சரியாக அனுப்ப புரிஞ்சு படிக்கமுடியலைன்னு நண்பர் சொன்னார். அப்பறம் நண்பர்களுக்குள்ளே நட்பை புதுப்பிச்சுக்கறதுக்காக சிறுகவிதைகளை அனுப்பி கருத்து கேட்கத்தொடங்கினோம். அப்படி ஆர்ம்பிச்சது, தொடர்ந்து பலரும் தங்களோட கவிதைகளை அனுப்ப ஆரம்பிச்சாங்க. தபால்லயும், புத்தகங்கள்லேயும் கவிதைகள் வர்றப்ப அப்பறம் படிக்கலாம்னு தோணும். எஸ்எம்எஸ் பொருத்தவரை உடனே அதுக்கான ரிசல்ட் கிடைச்சிடும். இப்படி முதல்ல நுõறு பேர்க்கு அனுப்பி அது பலருக்கும் தெரிஞ்சு நண்பர்கள் வட்டம் பெருக ஆரம்பிச்சது. தினசரி ஏதாவது ஒரு புதுக்கவிதைகள் படிக்கற பலருக்கு அதன் மேல தனி ஆர்வம் வளர்ந்தது. அது கிட்டத்தட்ட 600பேர் அளவிற்கு எங்கள் வட்டத்தை விரிவு படுத்திச்சு. எல்லோருக்கும் அனுப்ப காலையில் ஒருமணி நேரம் ஆகும் . இன்னிக்கு எஸ்எம்எஸ் இதழ்கள் மட்டும் 33 இருக்கும். முதலில் செல்போன் சேவை வந்தப்ப எஸ்எம்எஸ்  இலவசமாக இருந்தது. அடுத்த வருடம் எஸ்எம்எஸ்க்கு கட்டணம் நிர்ணயிச்சாங்க. அது ரொம்ப சிரமமாக இருந்தது. அப்படிஒரு முறை எஸ்எம்எஸ் இரண்டு நாட்களுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை வந்தது. அப்போ நண்பர் கா.அமீர்ஜானும், எஸ்.விஜயனும் போன்பண்ணி நண்பா ஏன் எஸ்எம்எஸ் வரலைன்னு கேட்டாங்க. சூழ்நிலையை சொல்லவும். நாங்க டாப் அப் பண்றோம்னு சொன்னாங்க. அப்படிபலரையும் ஈர்க்கத்தொடங்கியது. என்ன இன்னைக்கு எஸ்எம்எஸ்க்கு மட்டுமே ஆகக்கூடிய செலவுன்னு பார்த்தா மாதம் 300 ரூபாய் ஆகும். எனக்கு எந்த கெட்டபழக்கமும் இல்லைங்கறதால சமாளிக்க முடியுது.  மதுரையிலிருந்து நண்பர் இரா.இரவி. சுற்றுலாத்துறை உதவி அலுவலராக பணிபுரிகிறார். இவர்  கவிமலர்.காம் னு ஹைகூவிற்காகவே ஒரு வெப்சைட் நடத்துகிறார்'' என்றவர். அவருக்கு போன் செய்து கொடுக்கவும்.நாம் பேசினோம்"" கவிமலர்.காம் மூலம் இந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளில்  ஹைகூ கவிதைகளை படிக்கலாம். அது யாரும் பார்க்கலாம்ங்கறதால இதுவரை 4லட்சத்து 25ஆயிரம் பேர் பார்த்திருக்காங்க. எதிர்காலத்தில்  வாசகர்கள் பலரது கவிதைகளும் இடம் பெறும். தினமலரில் வெள்ளிக் கிழமைகளில் முன்பு படக்கவிதை என்று வரும் பகுதிக்கான கவிதைகளும் இதில்  இருக்கும். கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல நடத்திக்கிட்டிருக்கேன்'' என்றார் ரவி. நம்மிடம் தொடர்ந்து பேசிய ராஜா  எஸ்எம்எஸ் படிக்கும் பலரது செல்லிலும் ஆங்கிலம் தான் இருக்கிறது. தமிழில் ஒரு சிலர் தான் வைத்திருக்கிறார்கள். கவிதைகளை தமிழிங்கிலீஷில் அனுப்பும் போது தமிழ் படிக்கத் தெரியாத சிலரும் படித்துப்பார்த்து மற்றவர்களிடம் கேட்டு புரிந்து கொள்கிறார்கள். தபாலில் பத்திரிகைகளை அனுப்ப சலுகைகள் தரப்படுவது போல இது போல இலக்கியம், கதை, கவிதைகள் என தமிழ்மொழியை வளர்க்கும் என்போன்ற படைப்பாளிகளுக்கும் செல்போன் சேவையில் சலுகைகள் அளித்தால் மேலும் அதை விரிவுபடுத்தமுடியும் '' என்கிறார் கன்னிகோயில் ராஜா இவரது இதழிலிருந்து கவிதைகளைப்பெறவும், அனுப்பவும் விரும்புபவர்கள் 9841236965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் என்று பலரும் இவரது வாசகர்கள். ஹைகூ கவிதையை முதலில் எழுதியது மகாகவி பாரதியார். தன் கட்டுரைகளுக்கு நடுவே ஜப்பானிய கவிதைகளை மொழி பெயர்த்தார். கண்ணதாசனின் நண்பர் ஓவியக்கவிஞர் அமுதபாரதி தான் முதல் ஹைகூ கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். "தென்றலின் சுவடுகள் 'என்று பெண் கவிஞர்கள் 58 பேரின்  ஹைகூ கவிதைகள் தொகுப்பாக வெளிவந்து 200809ம்ஆண்டு கோவை அரசு பெண்கள் கல்லுõரியிலும், 200910ம்ஆண்டில் சிவகாசி பெண்கள் கல்லுõரியிலும் பாடமாகி இருக்கிறது. எஸ்எம்எஸ் ஹைகூ கவிதைகளை தொகுத்து நண்பர் கார்முகிலோன்(அசோக்லேலாண்ட்) வெளியிட உதவியிருக்கிறார். தாராபாரதி அறக்கட்டளையும் சிறந்த நுõலுக்கு விருது கொடுத்து ஊக்குவிக்கிறது. புதுவையில்  தமிழ்நெஞ்சனும், சென்னையில் க.கோ.ராஜாவும் ஹைகூ நுõலகம் நடத்தி வருகிறார்கள். இது தவிர அலைபேசியில் கவிதைகளை அரங்கேற்றிய சேவைக்காக கோவை வசந்தவாசல் கவிமன்றம் பாராட்டி விருதும் கொடுத்து பாராட்டியிருக்கிறார்கள்.


   

மண்ணைப் புண்ணாக்கும் மரபணு மாற்ற பயிர்கள்




கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வ்நதுதான் ஆகவேண்டம் என்பார்கள் அப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.கத்தரிக்காய் ரகம் சந்தைக்கு வரும் முன்பே சர்ச்சையை கிளப்பியுள்ளது. சரி, மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் மரபணுமாற்றம் என்றாஞூல என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டாமா?
ஒவ்வொரு உயிரினத்திலும் அமைந்துள்ள இயல்புகளை எடுத்துக்காட்டாக பழங்களின் சுவை, பூக்களின் மணம், மனிதனின் முகச்சாயல், போன்ற அம்சங்களை ஒரு தலைமுறையிலிருந்து  அடுத்த தலைமுறைக்கு  கொண்டு செல்வதற்கு அடிப்படையாக இருப்பவை ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள் . ஓர் உயிரிலிருந்து   மரபணுக்களை பிரித்து வேறு ஒரு <உயிருக்கு ச் செலுத்தி அந்த உயிருக்கு புதிய  குணாதிசங்களை உருவாக்கும் முயற்சிதான்  மரபணு மாற்ற தொழில்நுட்பம். அதாவது,ஒரு உயிர் அதன் சந்ததியை அடுத்த சந்ததிக்கு மாற்ற உதவும் அணுவை மரபணு (டிஎன்ஏ) என்கிறோம். இந்தமரபணு தாய், தந்தையின் உருவ அமைப்புகளையும் குணாதிசயங்களையும் குழந்தைகளுக்கு கடத்துகிறது.  இது மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.  இந்த மரபணுக்கள் குறித்த முழுமையான உண்மைகளை  மனித இனம் இன்னும் கண்டறிய வில்லை. ஆய்வுகள் தொடர்ந்து  நடந்து வருகின்றன.  இந்தஆய்வுகளின் ஒருபகுதியாகவே  மரபணுவை மாற்றி அமைக்கும் ஆய்வுகளும்  தொடர்ந்து வருகின்றன.
கத்தரிக்காய் நம் மக்களின் உணவில் அன்றாடம் இடம்பெறும் காய். குண்டு கத்தரி, நீளகத்தரி,வெள்ளை கத்தரி ,நாம கத்தரி, என்று அதில் பலரகமுண்டு. இப்போது பிடி கத்தரிக்காய் அப்படி என்றால் என்ன? இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் . காய்ப்புழுத்தாக்குதலை  எதிர்க்கும்வகையில்  மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரி செடியிலிருந்து காய்க்கும் புதிய வகை கத்தரிக்காய் . பூச்சிக்கொல்லி மருந்துகளே இல்லாமல்  செடியின் உள்ளே பொதிந்துள்ள  மரபணுவை மாற்றி விடுவதன் மூலம் பூச்சிகள் செடிகளைத் தாக்குவதைத் தடுக்கும் மரபணு மாற்றத் தொழில்நுடப்த்தின் மூலம் உருவாக்கப்பட்ட  புதிய கத்தரி செடியில்  விளைவது தான் பிடி கத்தரிக்காய்.

மாங்கனிகளில் ஒட்டு மாங்கனி  என்று ஒரு வகையை கேள்விப்பட்டிருக்கலாம்.  நல்ல ருசியுள்ள மா வகையையும்  இணைக்கும் விதத்தை  உயர்நிலைப்பள்ளியில் உயிரியல் பாடத்தில் படித்திருப்போம்.  இருமரக்கிளைகளை விவசாயிகளே இணைத்து  இந்த புதிய  ரகங்களை உருவாக்கி விடுவார்கள். இண்டு நல்ல குணங்களையும் இணைத்துக்கிடைக்கும்  பழøத்தின் விதை புதிய வீரிய ரக மாமரத்தை உருவாக்கும். மனித முயற்சிகள்  இன்றி இயற்கையிலேயே பல வீடரய ரக உயிரனங்கள்  தோன்றியுள்ளன. இப்படி குதிரைøயும், கழுதையையும் இணைத்து ஒரு புதிய விலங்கு உருவாக்கப்பட்டது அது கோவேருக்கழுதை . அது பொதியையும் சுமக்கும், குதிரையைப்போல வேகமாகவும் ஓடும்.  ஆனால், இந்த புதிய விலங்கு மற்ற  விலங்குகளைப்போல இயல்பாக இனப்பெருக்கம் செய்யாது. இந்த விலங்கால் மனிதனுக்கு இதுவரை தீங்கு ஏதும் ஏற்பட்டதில்லை. ஆனால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை உட்கொண்ட விலங்குகளுக்கு பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்ப்பட்டதாக  ஆய்வுகள் கூறுகின்றன.

விலங்குகள் மாடு, ஆடு, கோழி ஆகியவற்றில் மரபணு மாற்ற தொழில்நுடுப்ம் பயன்படுத்தப்படுகிறது. தன் காரணமாகவே முட்டையிடாத (பிராய்லர்)கோழிகள்,  முட்டையிட்டாலும் குஞ்சு பொரிக்கும் திறனற்ற முட்டைகளை ஈனும் (லேயர்) கோழிகள்  உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கோழிகளையும், முட்டைகளையும் உட்கொள்வோருக்கு ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. தாவரங்களில் அரிசி, கோதுமை , கரும்பு, பருத்தி உட்பட பல்வேறு ரகங்களில் மட்டுமல்லாமல் மரவகைளிலும் மூலிகை இனங்களிலும்  கூட மரபணு மாற்ற ஆய்வுகள் நடைபெறுகின்றன.     

அந்த வகையில்,மத்திய அரசு விவசாயத்தின் வளர்ச்சிக்கு முந்தைய ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் இரண்டாவது பசுமைப் புரட்சியை உருவாக்கி 25 ஆயிரம் கோடி ரூபாயை அதற்கென செலவிட்டு வருகிறது. அதன் மூலம் பாரம்பரிய விவசாய முறையிலே யே நமது விவசாயிகள் நவீன உத்தியைக் கையாண்டு அனைத்து உணவுப் பொருட்கள் உற்பத்தியிலும் நாடு தன்னிறைவு பெறும் சாதனையை உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில் கத்தரிக்காய் பயிரில் மட்டும் மரபணு மாற்றம் அவசியமா? என்ற எதிர்ப்புக்குரல் நாடெங்கும் எழுந்துள்ளது. கத்தரிக்காயின் மரபணுவில் ""கிரை 1ஏசி'' என்ற விஷ வைரஸ்  கிருமியை செலுத்தி உருவாக்கப்படுவது தான் பி.டி.கத்தரிக்காய் . இந்தக்  கத்தரிக்காயில் விஷத்தன்மை இருப்பதால் புழு,பூச்சி வெட்டு ஏற்படாது. இந்தக்கத்தரிக்காயை கடிக்கும் பூச்சிகள் உடனடியாக இறந்துவிடும். இதனால் இக்கத்தரிக்காய்  நீண்டநாள் கெடாமல் இருக்கும். இதனால் இதை சாப்பிடுவோரை வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆய்வறிக்கையில் கூட மரபணு கத்தரிக்காயை நன்றாக வேகவைத்துதான் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் வைரஸ் கிருமி தாக்கி  உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
அதில் மேலும் , ஆந்திராவில் நடந்த மரபணு கத்தரிக்காய் ஆராய்ச்சியின் போது மரபணு கத்தரிக்காய் செடியின் இலைகளை சாப்பிட்ட ஆடு இறந்துபோனதாக ""அதிர்ச்சி'' தகவல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. எனவே மரபணு கத்தரிக்காய் செடிகளை ஆடுமாடு சாப்பிட்டால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் வேளாண்மை  விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மருத்துவர்கள், இயற்கை ஆர்வலர்களும் மரபணு கத்திரிக்காய்க்கு தடைகோரிதொடர் பேராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து கேரளா,கர்நாடகம் போன்ற சில மாநிலங்கள் மரபணு கத்தரிக்காய்க்கு தடை விதித்தன. தமிழக அரசு, மத்திய அரசு முடிவை அறிவிக்கும் வரை வேளாண்மை அதிகாரிகள் மரபணு கத்தரிக்காயை தமிழ்நாட்டில் விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக்கூடாது என்று அவசர உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார்கள்.
இந்நிலையில் மரபணு கத்தரிக்காயின் பேராபத்தை உணர்ந்த உத்தரகாண்ட் முதல் மந்திரிரமேஷ் போக்கிரியால் நிஷாங்க்  அதற்கு தடை விதித்தார். இதுபற்றி அவர் கூறும்போது உத்தரகாண்ட்டில் அதிகளவு விவசாய நிலங்கள் உள்ளன.  இங்கு மரபணு கத்தரிக்காய் பயிரிட அனுமதி அளித்தால் விவசாய நிலங்கள் அனைத்தும் பயிரிட முடியாத அளவுக்கு மாறிவிடும். மரபணு கத்தரிக்காய் செடிகளில் உள்ள விஷத்தன்மை கொண்ட வைரஸ் கிருமிகள் நன்மை செய்யும் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  என்பதால் மரபணு கத்தரிக்காயை தடை செய்துள்ளோம்.என்றார்.
மரபணு கத்தரி பயிரிட்டால்   விலங்குகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வேளாண் நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் மனிதர்களுக்கு உடலில் ஏராளமான அலர்ஜியை உருவாக்கி விடும். என்றும் எச்சரிக்கிறார்கள். நம்நாட்டில் 2500க்கும் மேற்பட்ட இயற்கையான கத்தரிக்காய் ரகங்கள் உள்ளன. அவற்றை பாதுகாப்பது நமது கடமை. மரபணு கத்தரிக்காய் வர்த்தக ரீதியாக பயன்படுத்த அனுமதி அளிப்பது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் ஆறு இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருக்கிறார்.
உயிருக்கு வேட்டுவைக்கும் பிடி கத்தரிக்காய்  உலகம் முழுவதிலும் மரபணு பயிர்கள் ,காய்கறிகள், பழங்கள்  அறிமுகப்படுத்துவதற்கு  அமெரிக்க நிறுவனங்களான  மான்சான்டோ, பயோனியர் போன்ற நிறுவனங்கள்  தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் தரகர்களை நியமித்து அரசியல் வாதிகள் உதவியுடன் கள்ளத்தனமாக மரபணு பயிர்கள் அந்நாடுகளில் பயிரிட்டும் வருகின்றனர்.


இந்நிலையில் பிடி கத்தரிக்காய் மனித உடல் நலத்தை பாதிக்குமா என்று இதுவரை ஆய்வுகள் செய்யப்படவில்லை.அது எந்தமாதிரியான அலர்ஜிகளை உருவாக்கும் என்ற சோதனையும் நடத்தப்படவில்லை. பிடிகத்தரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. விவசாயிகளைப் பொருத்தவரை யில் மரபணு கத்தரிக்காய் விதைககளின் விலை குறையும் என்று எதரிப்பார்க்கக் கூடாது. காரணம் விதைகளை குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யமுடியும். விதைகளின் விலையை அமெரிக்க நிறுவனம் நிர்ணயிக்கும் விதையின் விலையை கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று.  மரபணு பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு விதை கிடைக்காது. அமெரிக்க சார்பு நிறுவனமானது. ஒவ்வொரு மரபணு பயிர் விதையிலும் உள்ள முளைக்கும் தன்மையை அகற்றி விடுகின்றன. விதைக்கும் அமெரிக்க நிறுவனங்களை மட்டுமே நம்பி இருப்பதால் விவசாயிகள் எதிர்காலம் கோள்விக்குறி ஆகிவிடும். விதைகளில் மரபணுவில்  செயற்கையாக மலட்டுத்தன்மை யை உருவாக்கி வேண்டியதன் அவசியம் தான் என்ன?மான்சாண்டோ போன்ற அமெரிக்க மரபணு விதை நிறுவனங்கள் விவசாயத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சியில் இறங்கியுள்ளன.  இதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தலைவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து தொழிலை வெற்றிகரகரமாக செயல்படுத்தி வருகினறன.
நம்நாட்டில் மரபணுகாய்கறிகள்  பழங்கள் பயிர்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. அவர்களை தங்கள் வலையில் வீழ்த்த வேண்டும். என்றால் மரபணு கத்தரிக்காயைத்தான் முதலில் அறிமுகப்படுத்த வேண்டும். என்று சர்வதேச மரபணு விதை நிறுவனங்கள் திட்டம் தீட்டின. காரணம் கத்தரிக்காயில் தான் புழு பூச்சிகள் வெட்டு அதிகம். மரபணு கத்தரிக்காய் பயிரிட்டால்  பூச்சி வெட்டே இருக்காது. என்ற கோசத்துடன் இந்திய விவசாயிகளை வீழ்த்த  பிடி ரக கத்தரிக்காயை துணைக்கு வைத்துக் கொண்டு அந்நிறுவனங்கள் களம் இறங்கிஉள்ளன. 
முதலில் கத்தரிக்காய் அடுத்து வாழைப்பழம் ,கேரட், முட்டைகோஸ்,தக்காளி,மக்காச்சோளம் , நெல், கோதுமை, பீன்ஸ், பீட்ருட், ஆப்பிள், ஆரஞ்சு என்று அத்தனை வகையான மரபணு காய்கறி , பழங்களையும் கொண்டு வரதிட்டமிட்டுள்ளது என்கிறார் கள்.

மரபணு மாற்றம் என்ற ஒரு துறை செய்து வரும் பல்வேறு விதமான கொடிய ஆய்வுகளின் விளைவாக எதிர்காலத்தில் என்ன நடக்கும்  என்பதே அறிய முடியாத ஒரு விசயமாக இருக்கிறது. தக்காளி, முருங்கைக்காய் என்று எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்  மாற்ற முடியும் .  பத்து மாடுகளில் உள்ள சத்தை ஒரு முருங்கையில் மரபணு மாற்றம் செய்து ஏற்ற முடியும். அல்லது ஒரு காலத்தில் இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற கற்பனையான பயத்தில்  விலங்குகளின் மரபணுவை தாவரங்களுக்கு ஏற்றலாம். அல்லது இறைச்சிகள்  இனிமேல் இறைச்சிகள் அல்ல 2040க்கு பிறகு  பிறக்கும் கோழிகளும், ஆடு,மாடுகளும்  நம் கத்தரிக்காய், வெண்டைக்காய்க்கு சமமே என்று கூறி உலகை அதிசயிக்க வைக்கலாம்.
இன்று நாம் உட்கொள்ளும் அரிசி மரபணு மாற்றப்பட்ட அரிசி என்றால் அதன் பாதிப்பு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளோ அல்லது பொது மக்களோ அறிவார்களா?
அர்ஜென்டினா நாட்டில் இயற்கையாக பயிரிடப்பட்ட சோயாபீன்ஸ் பயிர் செய்யும் முறை ஒழிக்கப்பட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக்கொண்டு  தற்போது சோயாபீன்ஸ்  விளைவிக்கப்படுகிறது. இதனால் அந்நாட்டின் சோயாபீன்ஸ்  ஏற்றுமதி 2008ம்ஆண்டு 16.5பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இப்போது இது சுற்றுச்சூழல் வாதிகளால் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறது. இந்தமரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ காப்புரிமை எடுத்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட விதைகள் கிளைபோசேட் என்ற இலைப்புழு கொல்லி மருந்தை தாங்கும் சக்தியுடன் அளிக்கிறது. ஆனால், விளைவு இது மற்ற பயிர்களை அழிப்பதோடு அருகில் இருக்கும் மக்களுக்கு  நோய்களையும் , குழுந்தைகள் பிறக்கும் போது உடல் ஊனங்களையும் ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கோவை வேனளாண்பல்கலைக்கழக்கத்தில் இப்புதிய வகை கத்தரிக்காய் விதைக்கப்பட்டு , செடிகள் வளர்ந்து காயும் பிஞ்சுமாக செழித்து நின்றது. அமெரிக்க விதைக் கம்பெனியான மாண்சாண்டோவின் இந்திய பங்கு நிறுவனமான மஹிகோ நிறுவனமும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் கூட்டுசேர்ந்து  ரகசியமாக இப்புதிய ரக கத்தரியை பரியிட்டு கள ஆய்வு செய்து வந்தன. இதையறிந்த தமிழக வேளாண் காப்புக்குழு ஈரோடு இயற்கை விவசாயிகள் குழு பல்கலைக்கழகத்தின் அருகே திரண்டு இந்த ஆராய்ச்சியை நிறுத்தக்கோரி ஆர்பாட்டம் செய்தார்கள்.

உடனே இப்பல்கலைக்கழக  துணைவேந்தர் ""பட்டினிச்சாவுகளைத் தடுத்து பல லடச்சக்கணக்கான மக்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு விவசாயமும் சமுதாயமும் பயனடைய வேண்டும் என்பதற்காக இப்பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அதனடிப்படையிலேயே மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்  கள ஆய்வு செய்யப்படுகின்றன. '' என்று கூறி  போராடிய அமைப்புகள் மீது கிரமினல் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களும் உயிரி தொழில்நுட்ப புரட்சியும்  விவசாய உற்பத்தியை பெருக்குமா? மரபணு மாற்றம் செய்யப்ப்பட்ட விவசாய விளைபொருட்களால்  மனித இனத்துக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படுமா? இவை குறித்து ஆராய்ச்சி முடிவுகள் என்ன? மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களாலும்  அவற்றின் பூக்கள் , காய்கள் , கிழங்குகள் , விதைகளாலும்  மனித இனத்துக்கு  ஒவ்வாமையும்  இனம் புரியாத பல்வேறு நோய்களும்  ஏற்படும் என்று பல்வேறு ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர்.  நோபல்பரிசு பெற்ற பிரென்னர் எனும் விஞ்ஞானி மரபணு மாற்றம்  செய்யப்பட்ட பயிர்கள்  முழுமையாக பாதுகாப்பானவை என்று கூற பெரும்பாலான விஞ்ஞானிகள்  தயங்குகிறார்கள். ஏனென்றால்  அவர்களின் ஆயுட்காலத்திலேயே  மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஆபத்தானவை என நிரூபிக்கப்பட்டுவிடும் என்கிறார்.

மனித இனம் மட்டுமின்றி இப்பயிர்கள்  சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. தாவரங்களுடன் ஒட்டுறவு கொண்டுள்ள பல்வேறு பூச்சிகள், நுண்ணுயிர்கள் மட்டுமின்றி நன்மை செய்யும் மண்புழுக்களும்  இப்புதிய வகைப்பயிற்களால் அழிக்கப்படுகின்றன. மறுபுறம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் மகரந்ததங்கள் களைகளின் மகரஙந்தங்களுடன் சேர்ந்து களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட புதியவகை சூப்பர் களைகளை உருவாக்கி விடுகின்றன. இவற்றை எந்த களைக்கொல்லி மருந்தாலு<ம் கட்டுப்படுத்தவே முடியாது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரம் அது பயிரிடப்படும் பகுதிகளில் காலனியாதிக்கம் செய்யக்கூடியது. அதாவது பிற தாவரங்களின்ல வளர்ச்சியை அழித்து தான் மட்டும் செழித்து வளரக்கூடியது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களில் பூக்களில் தேன் சுரக்குமா அவற்றை சாப்பிடும் தேனீக்கள் உறிஞ்சினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. இவை ஒரு புறமிருக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி பயிற்களில் காய்ப்புழுக்கள் முற்றாக அழிந்து விடுவதில்லை. மாறாக அப்புழுக்கள் எதிர்பபுத்திறன் பெற்று புதிய வீரியத்துடன் தாக்குகின்றன. 2003முதல் 2006வரை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகம் , மிசிசிபி மற்றும் அர்கன்சாஸ் மாநிலங்களில் நடத்திய ஆய்வுகள் இதை நிரூபத்துள்ளன.  எனவே தான் அனைத்துலக பல்லுயிர் பாதுகாப்பு க்குழ , மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை களச்சோதனை முறையில் பயிரிடுவதற்கு க்கூட தடை விதித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் , இத்தொழில் நுடப்த்திற்கும், இதனைப்பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏழை நாடான இந்தியாவில் 2002 ம்ஆண்டு மரபணு மாற்றப்பட்ட கடுகும், 2003 ம்ஆண்டில் 8விதமான பருத்தியும் அனுமதிக்கப்பட்டு நாடெங்கும்  30லட்சம் ஏக்கரில் களப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத்   , மத்தியபிரதேசம், மராட்டிய ஆகி ய மாநிலங்களில் நடப்பட்ட பருத்தியானது பாரம்பரிய பருத்தியைவிட 5மடங்கு குறைவான விளைச்சலையேதந்தது. அது பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நஷ்டமேற்ப்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கொண்டு போனது. இந்த உண்மையை நாடாளுமன்ற மேளவையின் கேள்விநேரத்தில் போதே அரசு ஒப்புக் கொண்டுள்ளது.  இப்பினும் எல்லாவிதமான தானியங்களுக்கும் மரபணு மாற்ற ஆராய்ச்சி மற்றும் களப்பரிசோதனைகளை அரசு தாராளமாக அனுமதித்து வருகிறது. நம் நாடு சோதனைச்சாலை எலியாக மாற்றப்பட்டுவிட்டது.  பிடி பருத்தியிலிருந்து தொடங்கி கடுகு, கத்தரிக்காய், சோளம் என அனைத்து உணவு தானியங்களும் இந்திய விவசாயத்தின் உயிர்நாடியான நெல் சாகுபடிக்கும் பேராபத்தாக பிடி நெல்லும் வந்துவிட்டது.
அமெரிக்காவின் ராக்பெல்லர் நிறுவனமும்  ஐதாராபாத் பல்கலைக்கழகமும் கூட்டுசேர்ந்து வறட்சியைத் தாங்கும் நெல் ரகத்தை உருவாக்க புதுடில்லி, ஐதாராபாத், கோவை ஆகிய இடங்களிலுள்ள அரசின் வேளாண் ஆய்வு மையங்கள் சுவிட்சர்லாந்து ஏகபோகக்கம்பெனியுடன் கூட்டு சேர்ந்துள்ளன. தங்க அரிசி எனும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த அரிசியை உருவாக்க பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையமும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையமும் கூட்டு சேர்ந்து ய்வுகள் நடத்துகின்றன. மேலும் ஏறத்தாழ 75லட்சம் பேர் பயனடையவதாக சொல்லப்படும் ஒருங்கிணந்த ஊட்டச்சத்து திட்டத்தை  இந்திய அரசு உலக வங்கிக்கடனைக் கொண்டு நடத்திவருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6வயதுக்குட்பட்ட குழந்தைகள் , கர்ப்பிணிப்பெண்கள் , குழுந்தைக்குப்பாலுõட்டும் தாய்மார்கள் ஆகியோருகுஞூகு சத்துமாவு உருண்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.  இதில "கேர்' எனும் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மரபணு மாற்றம் செய்யப்ப்டட சோயாமாவையும் சோயா எண்ணெயையும் வழங்கி அத்தாய்மார்கள் குழுந்தைகளிடம்  அதன் விளைவுகளை 2002ம்ஆண்டில் சோதிஞூததுப்பார்த்துள்ளனர்.  இந்த உணவின் தன்மை , விளைவுகள் பற்றிக்கண்டறிய எவ்வித பகுப்பாய்வு முறையும் இதுவரை இல்லை என்பது தான் மிக்பெரிய கொடுமை.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் எந்த வித தொந்தரவு மில்லைதாராளமாக வாங்கிச் சாப்பிடுங்கள் பிடி கத்தரிக்காய் என்கிறார். பிடி பருத்தி தந்துள்ள அனுபவம் உலகம் தழுவிய  விஞ்ஞானிகளின்  அபாய எச்சரிக்கையும்  பலஉலக நாடுகளின் மரபணு மாற்றம் பெற்ற உணுவு  குறித்த  தயக்கமும்  நம்மை "" சே நாட் டு ஜெனிட்டிகலி மாடிபைடுபுட் '' என்று சொல்லவைக்கிறது. கிரீன்பீஸ் அøம்பபு  தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம்  மரபணு மாற்றம் செய்யப்பட்ட  கத்தரிக்காய் குறிஞூதது மைக்கோ சமர்ப்பித்த ஆய்வு அறிக்கைகளைப் பெற்று ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து கருத்து அறிந்தன.
பிரெஞ்சு விஞ்ஞானி முன் வைக்கும் கருத்துகள்

மைக்கோவின் ஆய்வுகளை மறுஆய்வு செய்த கில்லிஸ்  எரிக் செராலினி என்ற பிரெஞ்சு விஞ்ஞானி முன்வைக்கும் கருத்துக்கள்..
1. நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்தும்  மருந்துகளை (ஆன்டிபையாடிக்) செயல் புரிய முடியாமல் செய்யும் தன்மை  பிடி கத்தரிக்காயில் ஊடுருவியுள்ள பிடி ஜீனின் உள்ளதால் மனிதனின் நோய்க்கு கொடுக்கப்படும்  (முக்கியமாக  நியோமைசின், ஸ்டெப்டோமைசின்)  போன்ற மருந்துகள் செயல்பட முடியாமல் போகும்.
2. பிடி கத்தரிக்காயில் உள்ள புரதம் (கிரஸ்டல் புரொட்டீன்) மனித உடலுக்கு தீங்கை  விளைவிக்கக்கூடிய  நச்சுத்தன்மை  உடையது.
3. இந்த ஆய்வு90 நாட்களுக்குள்ள  ஏற்படும் மாற்றங்களை  மட்டுமே கணக்கில் கொண்டு உள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால் தான்  புற்றுநோய்  போன்ற உயிர்கொல்லி  நோய்களுக்கான காரணியாக மரபணு மாற்ற கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.
4. சுற்றுப்புற சூழலின் சமனை அழிப்பதில் இந்த மரபணு மாற்ற தானியங்கள்  முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுப்புகதிகளில் இருக்கும் சாதாரண பயிர்களை இவை பாதிக்கின்றன. மகரந்தத்துõள்கள் காற்றில் பரவுவதால்  இந்தப்பாதிப்பு ஏற்படுகிறது.  மரபணு மாற்றபயிர்களின் விளைவாக இயற்கையில் இருந்து வரும் உயுடர் சங்கிலித்தொடர் சீர்குலையும் ஆபத்தும்  ஏற்பட்டிருக்கிறது. சில பூச்சிகள், புழுக்கள் ஒரே யடியாக இல்லாமற் போய்விட்டால் , அவற்றை உண்டு உயிர் வாழுறும் சில வகைப்பறவைகள் இல்லாமற் போய்விடும் . அவற்றின் அழிவு, தொடர் விளைவை ஏற்படுத்தும் . மரபணு மாற்ற பெற்ற தானிய ம்விளைந்த நிலங்களை சுற்றி அமெரிக்காவில் கொத்து கொத்தாய் வண்ணத்துப்பூச்சிகள் இறந்து போயின. சொல்ல முடியஆது இந்த நிலை நீடித்தால் நாமும் நம் வண்ணத்துப்பூச்சிடீகளை இழக்கலாம்.
5. மான்சாண்டோ போன்ற விதை நிறுவனங்கள் தாங்கள் விற்கும் விதைகளில் டெர்மினேட்டர் என்ற தொழில்  நுட்பத்தை   பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த விதைகளிலிருந்து  விளையும்  தானியங்களிலிருநுஞூது பெறப்படும் விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாது. அவைகள் மலட்டு விதைகளாக இருக்கும். எனவே விதைகளுக்கு நாம் மீண்டும்  விதை நிறுவனத்தையே  சார்ந்திருக்க வேண்டும். இதனால் விதை தானியங்கள்  மீதான சுதந்திரம் விவசாயிடமிருந்து  பறிக்கப்படும். உணவு உற்பத்தி ஒரு தனி நிறுவனத்தின் ஏகபோக உரிமையாகக்கூடும்.  இப்படிப்பட்ட சூழநிலையில்  இந்தியாவில் எந்த விவாதமும்  இல்லாமல் பன்னாட்டு கம்பெனிகள் , வேளாண்பல்கலைக்கழகங்கள்  அரசு ஆதரவுடன்  மரபணு மாற்ற பயிர்களைப்பரப்புவதில் இறங்கியிருக்கின்றன.

வர்த்தக உற்பத்திக்கு மரபணு மாற்ற கத்தரிக்காயின் அவசியம் என்ன என்று கிரீன்பீஸ் அமைப்பிடம் கேட்டால் , அவர்கள் சொல்கிற காரணம்  இதன் மூலம் காப்புரிமை என்கிற பெயரில்  விதைகளை  இந்திய விவசாயி பயன்படுத்தும்போதெல்லாம் இதை அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுனத்துக்கு ராயல்டி செத்தியாக வேண்டும். இரண்டாவதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனில் மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருள்களுக்கு  வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை  இந்தியாவில் விற்க  முயற்சிக்கிறார்கள். நாம் விழித்துக் கொள்வோம் என்கிறார்கள்.      

Tuesday, April 10, 2012

தங்கம் மாதிரி தண்ணீர்




தங்கம் மாதிரி தண்ணீரையும் சேமிக்கும் காலம் வரும்


தலைப்பைச் சேருங்கள்
ஒரு காலத்தில் ஆறாக இருந்ததெல்லாம் இன்று சாக்கடை பாயும் நதிகளாகவும், குளங்களாகவும் மாறி  இருக்கின்றன. கோவை, திருப்பூர்,சென்னை போன்ற தொழில் பெருநகரங்களில் இருக்கும் குளங்கள் , ஆறுகள் எல்லாம் ஒரு காலத்தில் மக்கள் பயன்படுத்தவும், சுத்தமான தண்ணீரை தேக்கி, பாயும் ஆறுகளாக அன்றாடம் பயன்படுத்தபட்டுக் கொண்டிருந்திருக்கின்றன. ஆனால், மக்கள் வேலைவாய்ப்பிற்காகவும், பொருளாதார தேவைகளுக்காகவும் குடிபெயர்ந்த பிறகு , தொழிற்சாலைகள் பெருக்கத்தின் காரணமாக  இன்றைக்கு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு ஆறுகளில் கொட்டப்படுவதால் ஆறுகளின் முகங்களே மாறிப்போயிருக்கின்றன.  சாயக் கழிவுகளால் தன்னுடைய நிறத்தையும், குடிக்கும் நீர் என்கிற தன்மையையும்  இழந்திருக்கின்றன.
 கோவையின் நொய்யல், சென்னையில்  கூவம் என  பல நதிகள், ஏரிகள், குளங்கள் கூட இன்றைக்கு மக்களின் குடியிருப்பு பகுதியின் ஆக்கிரமிப்பால் தங்களின் நிறம், தன்மை, குணம் மாறி சுய அடையாளங்களை  இழந்து நிற்கின்றன. இன்று சென்னையில் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் அரசாங்கம் செயல்படத்தொடங்கியிருக்கிற அதேவேளையில் கோயம்புத்துõரில் ஒருகாலத்தில் பாழ்பட்டுப்போன நொய்யல் ஆற்றை சீரமைத்ததைத் தொடர்ந்து தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிற நேமம் ஏரியை துõர்வாரும் பணியை  செய்யத் தொடங்கியிருக்கிறது  கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிறுதுளி என்கிற அமைப்பு அதன் அமைப்பாளர்களில் ஒருவரான வனிதாமோகனை சந்தித்தோம்.

* இன்றைக்கு ஆறுகள், குளங்களோட தன்மை மாறிப்போக என்னகாரணம்? அதை எப்படி சரிசெய்யலாம்?
நாம் நம் ஆரோக்கியத்தில செலுத்தற அக்கரையை நம் உடம்பில  ஓடற 90 % தண்ணீர்ங்கற  மறந்துட்டு அந்த தண்ணீர்ங்கற ஆதாரத்தை காப்பாத்த தவறிட்டது தான். பல ஆறுகள்ல தொழிற்சாலை கழிவுகள் கலக்குது, பல இடங்கள்ல வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருக்காங்க இப்படி பல காரணங்கள் இருக்கு. 
அரசர்கள் ஆண்ட காலத்தில பல மன்னர்கள் கோயில்கள் அருகில் குளங்களை வெட்டி வெச்சாங்க. அதில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர் மக்களுக்கு பயன்படட்டும்னு. இன்றைக்கு பல கோயில்கள்ல குளங்கள் நல்ல நிலைமையில இருக்கு. ஆனா, பல இடங்கள்ல  குளங்கள் போதிய பராமரிப்பு இல்லாம  துõர்ந்து போயிருக்கு. முன்னேயும் அடிபம்பு வசதி இல்லாம தண்ணீருக்காக பல கிலோமீட்டர்கள் துõரம் மக்கள் நடந்துபோய் தண்ணீர் எடுத்துட்டு வந்தாங்க. இன்னைக்கு போர் போட்டு தண்ணீர் வர்றதால அந்தஅவஸ்தை இல்லை. ஆனா, அப்படி போட்ட போர்ல தண்ணீர் வரணும்னா நிலத்தடி நீர் மட்டம் வேணும் இல்லையா, அது குளங்களையும், ஆறுகளையும் தண்ணீர் வரத்து நல்ல õ இருந்தாத்தானே நீர் தேங்கும். அப்படி பல ஆறுகள், குளங்களை கண்டுக்காம விட்டதால இன்னைக்கு நிலைமை சாயக்கழிவுகள் அதனுடைய அடையாளங்களை இழக்கவெச்சிடுச்சு. இப்பவே பருவம் தப்பி மழை, தண்ணீர் தேவைகள்னு இருக்கறப்போ எதிர்காலத்தில தண்ணீரின் தேவை இன்னும் அதிகமாகும். அப்போ எங்கே போவோம். குளோபல் வார்மிங் னு பயமுறுத்தறாங்க அதிலிருந்து தப்பிக்க குறைந்தபட்சம் நம்மாலான சுய பாதுகாப்புகளையாவது நாம் செய்திருக்கணும் இல்லையா அப்படி யோசிச்சப்ப தொடங்கினது தான் இந்த  சிறுதுளி ங்கற அமைப்பு.     
எங்க டீம்ல என்னோட சேர்த்து மொத்தம் ஏழுபேர் இருக்கிறோம். டாக்டர்.எஸ்.வி.பாலசுப்பிரமணியன், டாக்டர்.ஆர்.வி.ரமணி, டாக்டர்ரவிசாம், என்.வி.நாதசுப்பிரமணியம்,கணக்லால், சிஆர்,சுவாமிநாதன். ஏதாவது ஒரு குளம், ஏரியை சீரமைக்கணும்னா நாங்க கூடி ஆலோசனை பண்ணி முடிவெடுப்போம். யாரை அணுகலாம். எப்படி இதை முடிக்கறது . இதற்கான அனுமதிகள்னு பல விசயங்கள் இருக்கு.
2003ல் கோயம்புத்துõர்ல அதிகமான வறட்சி இருந்தது. நொய்யல் ஆறு மேற்கு மலைத்தொடர்ச்சிமலையிலிருந்து வரும் தண்ணீரை நம்பி இருக்கிறது. கோயம்புத்துõர்ல 400 ஆண்டுகள் முன்னே அந்தக்காலத்தில குளங்கள் நிறைய வெட்டி எக்கச்சக்கமான  தண்ணீரை தேக்கி வெச்சிருந்து  இருக்காங்க.  அந்த காலத்தில் அரசர்கள் மக்களோட அன்றாடத் தேவைகளுக் காகவும், உணவுத்தேவையான விவசாயத்திற்காகவும்னு பாசன வசதிக்காக பல குளங்களை வெட்டி வெச்சாங்க. ஆனா, இன்னைக்கு அதையெல்லாம் பராமரிக்காம நாம விட்டுட்டோம். அதனுடைய விளைவு வீடுகள் கட்ட மரத்தையும் வெட்டிட்டோம். காடுகள்  அழிவால  அதனால மழை வளம் குறைஞ்சுப்போச்சு. மழை பருவம் தப்பி வரும்போது தண்ணீர் தேங்க இடம் இல்லாம குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துகிட்டிருக்குற நிலைமை.
பல குளங்கள்ல ஆகாயத் தாமரைகள் படர்ந்து தண்ணீரை உறிஞ்சிடுது. தமிழ்நாட்டில் இப்படி  100 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட பாசனம் உள்ள குளங்கள், ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கு. இப்படி 10 ஆயிரத்து 670 குளங்கள், ஏரிகள் இருக்கு. இதில் 5ஆயிரத்து 520 பாசன கண்மாய்கள், 5 ஆயிரத்து 150 மானாவாரி கண்மாய்கள் இருக்கு. பெரும்பாலான ஏரிகள் குளங்கள் ஆக்கிரமிப்பு, கட்டிடங்கள் கட்டறதுன்னு  தண்ணீர் தேங்கும் இடங்கள் காடுகள் அழிச்சமாதிரி  குளங்களையும் அழிஞ்சிட்டிருக்கோம்.
நொய்யல் ஆற்றை சீர் செய்யறதுக்காக நாங்க ஒரு திட்டம் வகுத்தோம். கோயம்புத்துõர் தொழில் நகரமானதால பல கம்பெனிகள்கிட்ட நிதியுதவி கேட்டோம். அப்படி எங்களுக்கு நிதியுதவி செய்ய  கோயம்புத்துõர்ல எல்எம்டபிள்யூ, எல்ஜி, பிரிகால், சங்கரா ஐ சென்டர்னு பல நிறுவனங்கள் முன் வந்தாங்க அவங்க உதவியோட பெரிய பெரிய இயந்திரங்கள் மூலம் நொய்யல் ஆற்றையும் , பல குளங்களையும் சீரமைச்சோம். இப்போ கடந்தாண்டு பெய்த மழையில தண்ணீர் தேங்கி எங்களோட தாகத்தை தணிக்க உதவியிருக்கு. அதேமாதிரி சென்னை திருவள்ளூர்ல இருக்கிற நேமம்ங்கற ஆயிரம் ஏக்கர்  ஏரியை  துõர்வாரும் பணியில கோகோலா நிறுவனத்தின் உதவியோட இறங்கியிருக்கிறோம்.  அரசாங்கமும் பல குளங்களை , ஆறுகளை நுõறுநாள் வேலை த் திட்டம் மூலமாக சீர்செய்யுது. எங்கள் பங்குக்கு நாங்களும் செய்கிறோம்.

இதுதவிர எங்களோட  சிறுதுளி அமைப்பின் மூலமாக குளக்கரைகளில் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு உள்ள வீடுகள் அமைத்தல், காடுகள் அழியாமல் காப்பாத்தறதுன்னு பல சமுதாய சேவைகளை செய்திருக்கிறோம். இதுவரை ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நட்டிருக்கிறோம். திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தியிருக்கிறோம். வெள்ளலுõர்ல குப்பைக்கிடங்கு மூலமாக பல  நோய்கள் பரவ காரணமாக இருந்தது. அத்தகைய குப்பைக்கிடங்கிலிருந்து தொற்றுநோய்கள் பரவாம தடுக்க, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினோம்.

*மக்கள்கிட்ட விழிப்புணர்வு எந்தளவுக்கு இருக்கு?
இன்னைக்கு  தங்களைச் சுற்றிலும் உள்ள இடங்கள்ல கிடைக்கற மழைநீரை தேக்கி தங்கள் வாழ்வாதாரத்துக்கு தக்க வெச்சுக்கறதுக்கான கவனம் குறைவுன்னு தான் சொல்லணும்.  தண்ணீரை டேங்கர்கள்லே வாங்கற சிந்தனை தான் அதிகமாயிருக்கு.
பள்ளிகள்,கல்லுõரிகள் உள்ள மாணவமாணவிகள், இளைஞர்கள் மூலம் விழிப்புணர்வ ஏற்படுத்திக் கிட்டிருக்கோம். அந்த தேவைகளை பூர்த்திசெய்யவேண்டிய பங்கு நம்மக்கிட்டயும் இருக்கு.
பணம் சம்பாதிக்கறதிலயும், இடத்தைவாங்கிப்போடறதில யும் இருக்கிற ஆசை தண்ணீரை சேமிக்கறதிலயும் வேணும்இல்லையா? இன்னைக்கு தேவைக்கு ஒரு லோடு தண்ணீர் இறக்கினோமான்னு இருந்திட்டா எப்படி.
வரக்கூடிய காலத்தில தங்கத்தை விட தண்ணீரின் மதிப்பு அதிகமாகும். நம் வீட்டில் தண்ணீர் சேமிக்கணும். இன்னைக்கும் பல வீடுகள்ல இரண்டு நாள் தண்ணீர் வராம மூணாவது நாள் தண்ணீர்  வரட்டும் ராத்திரிபகல்னு பார்க்காம இருக்குற குடம், வாளி, சொம்பு முதற்கொண்டு தண்ணீரை சேமிச்சு வெச்சுக்கணும்னு நினைக்கறாங்க.  அதே அக்கரை மழை பெய்யும் போதும் அது வீணாகப்போகாம சேமிக்கணும்னுங்கற அக்கரை வரணும்.இதுவரை 300 ரெயின்வாட்டர் சென்டர்கள் மூலம் 215 வீடுகளுக்கு ஆழ்துளை கிணறுகளுக்கு   ஏற்பாடு செய்திருக்கிறோம். சாலைகள்ல தண்ணீர் தேங்காம, டிராபிக் இடைஞ்சல் இல்லாம செய்ய மழைபெய்ஞ்சு  தண்ணீர் தேங்கினா  ஒருமணி நேரத்தில பூமிக்கு போயிடற மாதிரி செய்திருக்கிறோம்.  ஒவ்வொரு துளி மழைநீரும் நமக்கு முக்கியம் தானே? .
விஜி.செல்வகுமார்

Friday, April 6, 2012

பய முறுத்தும் பன்றிக் காய்ச்சல்






ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நோய் வந்து உலகை அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.பிளேக், பறவைக்காய்ச்சல், சார்ஸ், சிக்கன் குனியாவைத் தொடர்ந்து இப்போது அந்த வரிசையில் " ஸ்வைன் ப்ளூ ' எனப்படும் பன்றிக்காய்ச்சல்.
மெக்ஸிகோ,அமெரிக்கா , பிரிட்டன் உள்ளிட்ட 12நாகளில் தற்போது இந்தநோய் காணப்படுகிறது.பன்றி இரைச்சி சாப்பிடுவதால் இந்நோய்  பரவுவதில்லை. என உலக  சுகாதார நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.பன்றியின் சுவாசப் பையில் வலம் வரும்  எச் 1 என் 1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற வல்லவை. மெக்ஸிகோ பன்றி பண்øயில் பரவ துவங்கிய நோய் 1300 பேரை த்தாக்கியுள்ளது. இந்தநோயின் கொடுமை தாங்காமல் அந்நாட்டில் 176பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் ஒருவர் பலியாகியுள்ளார். 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்நோய் இதுவரை 17பேரை தாக்கியுள்ளது. அதிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டிருகிறார்கள்.

பன்றிக்காய்ச்சலின் அறிகுறி என்ன?
" இன்புளூயன்சா  ' என்ற தொற்று நோய் வகையை சேர்ந்தது தான் " ஸ்வைன் ப்ளூ ' . சுவாசத்தை பாதிக்கக் கூடியது. கடுமையான காய்ச்சல், இருமல் , தும்மல், உடம்புவலி,தலைவலி,வாந்தி,வயிற்றுப்போக்கு என எல்லாம் ஒன்று சேர்ந்து நான்கு நாட்களுக்கு  ஆளை பாடாய் படுத்தும் இந்தநோய் பிறரது தும்மல் மற்றும் இருமல் மூலமாக காற்றில் வேகமாக பரவும்.எனவே , இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியிருப்பது அவசியம்.இந்த நோயின் கடுமையை தாக்கு பிடிக்க முடியாத சிலர் இறந்து விடுகின்றனர்.
குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்தநோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்தநோய் முற்றினால் உடல் நீலநிறமாக மாறிவிடுகிறது.அதுமட்டுமில்லாது மூச்சு விட சிரமப்படுவார்கள் .இந்தநோய்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சாதாதரண காய்ச்சலுக்குத் அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர். ஒவ்வொரு  முறையும் தொற்று நோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள்.1918 ம்ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ தான் அதிகம் பேரை கொன்றுள்ளது.

இந்தநோய்தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்தநோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள் ,வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.இந்தநோய் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதால் ளற்ற நாடுகள் உஷாராகிவிட்டன. வெளிநாடுகளில் இருந்துவருபவர்கள் விமானநிலையங்களிலேயே தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பலநாடுகளிலம் எகிப்து நாட்டில் மூன்று லட்சம் பன்றிகள் பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய் பயத்தால் கொன்றுவிட அந்த நாட்டு அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது.இறைச்சிமூலம் இந்நோய் பரவவில்லை என்றாலும், பன்றி இறைச்சியை தடை செய்துள்ளது ரஷ்யா.ஆசியா மற்றும் ஐரோப்பிய நாட்டு சுற்றுலா நிறுவனங்கள் மெக்சிகோ நாட்டுக்கு பயணிகளை அனுப்புவதை நிறுத்திவைத்துள்ளது. தென்கொரியாவின் சியோல் விமானநிலையத்தில் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்ள்ளன. காய்ச்சலுடன் வரும் பயணிகளை இந்த கேமராக்கள் காட்டிக்  கொடுப்பதால் ,அந்த பயணிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்றனர்.  அமெரிக்காவின் சில மாநிலங்களில் இந்தகாய்ச்சல் சிலருக்கு காணப்படுவதால் எப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

தேவையற்ற பயம்:
பன்றிக்காய்ச்சலுக்கு   தடுப்பு மருந்து உடனடியாக தேவைப்படுவதால் மருந்துதயாரிக்கும் நிறுவனங்கள் உலக சுகாதார நிறுவனத்தை தொடர்பு கொண்டு ,பன்றிக்  காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள்டன் மாதிரி ரத்தம் போன்றவற்றை கேட்டுள்ளன. பன்றிக்காய்ச்சல் குளிர் அதிகமுள்ள சீதோஷ்ண நிலையில் தான் அதிகம் பரவுகிறது.எனவே வெப்ப நாகளான இந்தியா போன்றவற்றில் எச் 1என் 1வைரஸ் கிருமிகள் நான்குமணி நேரத்துக்கு மேல் இந்த கிருமிகள் உடலில் தங்கியிருக்க வாய்ப்பில்லை. எனவே பயம் நமக்கு தேவையில்லை.

வெவ்வேறு பெயர்களில் பன்றிக்காய்ச்சல்


பன்றிக்காய்ச்சலுக்கு ஒவ்வொரு நாட்டிலம் ஒவ்வொரு பெயர் வழங்கப்பட்டு வருகிறது." ஸ்வைன் ' என்பதற்கு பன்றி என்ற அர்த்தமுள்ளதால் இந்தவார்த்தையை ஐரோப்பிய இறைச்சிதயாரிப்பாளர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள். சி ல ஐரோப்பிய நாடுகள் இந்த நோயை "நாவல் ப்ளூ ' என்று அழைக்கின்றனர். இஸ்ரேல் ,பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகள் " மெக்சிகோ ப்ளூ  ' என்றழைக்கின்றனர். ஜெர்மன் இத்தாலியில் "ஸ்வைன் ப்ளூ' இந்தியாவில் எப்படி அழைப்பது என  குழப்ப நிலை நீடிக்கிறது.

முகமூடி:
 பன்றிக்காய்ச்சல் காற்றின் மூலம் ஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கு பரவுவதால் முகமூடி அணிவது அவசியமாகிறது.இந்தநோய் பரவியுள்ள நாடுகளில் முகமூடிவிற்பனை அதிகரித்துள்ளது.
30 லட்சம் பேருக்கு மருந்து தயார் : வெப்பநாடுகளில் இந்தநோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை. என ஒரு பக்கம் கூறினாலும் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்தநோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர்.என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 30லட்சம் பேருக்கு தேவையான " டேமிப்ளு ' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்தவகையான " ப்ளு' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான்  பொதுவாக  பயன்படுத்தப் படுகிறது.சிப்லா,ரன்பாக்சி நிறுவனங்கள் இந்தவகை மருந்துகளை சப்ளை  செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.
பன்றிக்காய்ச்சல் நோயால் இதுவரை  15,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 99 பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சலின் தாக்கம்

ஸ்வைன் ப்ளூ வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டை வலி , சோர்வு, உடல்வலி ,குளிர் போன்றவையும் வரும்.சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
கடந்தகாலங்களில் இந்நோவாய்பட்டவருக்கு கடுமøயான அளவில் உடல் நிலை பாதிப்பும்(நிமோனியா மற்றும் சுவாசஉறுப்புகள் செயல் இழப்பு ) உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப்போலவே ஏற்கெனவே இருக்கும் நோய்களை யும்வலிகளையும் இந்நோய் தீவிரபடுத்தும்.
இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக் கூடியது .சில  சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருட்களைத் தொட்டுவிட்டு  பிறகு மூக்கு அல்லது வாய்ப்பகுதிகளை தொட்டாலம் இந்நோய் தாக்கக்கூடும்.
அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள்  முதல் நோய்வாய்ப்பட்ட 7ம்நாளுக்குள் மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும் அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும் , நோயில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுது ம் இந்நோய் ஒருவரிடம் டருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்.

முதல் முக்கிய செயல்:
உங்கள் கைகளை கழுவுங்கள் .நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும் .நன்றாக துõங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும். மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாக கையாளுங்கள் முறையாக கையாளுங்கள் .அதிகஅளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளவும். ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ் தொற்றியுள்ள பொருட்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள்.வேகமாக சுவாசித்தல் அல்லது சுவாசிக்க சிரமப்படுதல் , தோல்களில் நீலநிறம் கலந்த தோற்றம், அதிக நீர் ஆகாரங்களை   எடுத்துக் கொள்ளாமல் இருத்தல், பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல் .குழந்தைகளை துõக்கும் பொழுது ம் கட்டி அணைக்கும் பொழுதும் அசௌகரியத்தை யும் எரிச்சலையும் காட்டுவார்கள்.

ஸ்வைன் ப்ளூ வராமல் தடுக்க எந்த  தடுப்பூசியும் இல்லை. இன்புளூயன்ஸா போன்ற சுவாசநோய்கள் வராமல் தடுக்க எந்ததடுப்பூசியும் இல்லை. ஆனாலும் நோய் பற்றியும் அதைத்தடுக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வதுநல்லது.
இருமும் பொழுதும் ,தும்மும் பொழுதும் வாய்மற்றும்ங  மூக்குப்பகுதிகளை  திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும் .
தும்மல் இருமலுக்குப்பின் சோப்மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும் .ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் சுத்தப்படுத்துதல் நலம்.
கண்கள் , வாய், மூக்கு பகுதிகளை தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.
இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப்பழகுவதைத்தவிர்க்கவும். நோய் தாக்கினால் தய செய்து வேலைக்கு மற்றும் பள்ளிக்குச் செல்வதைதவிர்த்து விட்டு பிறருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.