நுõற்றியெழுபத்தியிரண்டு ஆண்டுகளாக குற்றத்தண்டனை கைதிகளை அடைத்து, தண்டனை கொடுத்த
சிறைக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. சென்னை சென்ரலுக்கு அருகே இருக்கிற மத்திய சிறைச் சாலை 1837ல் கட்டப்பட்டது. இன்றுஅதன் சுவர்கள் துõர்ந்து போயிருக்கிறது. சமீபத்தில் மக்களோடு மக்களாக நாமும் சென்றுசுற்றிப் பார்த்தோம் .
கிருஷ்ணர் பிறந்தது சிறைக்கூடத்தில் தான் என்றாலும் அவனை பெற்ற வசுதேவர்,தேவகியை சிறையில் கம்சனால்பட்ட கொடுமை களை இன்றும் டிவியில் பார்க்கிற நமக்கு இரக்கம் வருவது போல,குற்றவாளிகள் மீது சிறைகளோ,மனிதர்களோ இரக்கம் காட்டுவதில்லை. அது செங்கல்லும்,சுண்ணாம்பு காரையும் கலந்து மிக உயர்ந்த மதில்களாலும் ,அதன்மேல் முள் கம்பி வேலிகளுமாக ,புழுதிபடிந்து அழுக்கேறிய அறைகளுடன் ,இரும்பு கம்பிகளால் அடக்கப்பட்டிருக்கிறது.சிறையில் ஆறடிக்கு,பத்தடிஅளவு கொண்ட அறைகளில் ,அதற்குள் படுக்கைதிண்ணையும் ,கழிப்பறையும் அருகருகே இருக்க இரவுகளில் வெளிச்சம் பார்க்காத அறையின் தோற்றத்தை பார்க்கும் நமக்கு குற்றவாளியின் குற்றத்தை விட, அந்த சூழல் அதிபயங்கரமான மனபயத்தை உண்டுபண்ணுகிறது.
காரணம் விடுதலைப்போருக்காக உழைத்த தியாகிகளின் வாழ்க்கையை பறித்துக்கொண்டு, கொடூரமாக நடத்திய
சிறை ,நாடு விடுதலைபெற்ற பின்னர் சமூக குற்றவாளிகளை அடைக்கும் கூடாரமாக மாறிப்போனது .சிறையிலிருந்து வெளியேறுகிற ஒவ்வொரு கைதியும், அங்கிருந்து கற்றுக்கொள்வது ஆழ்ந்த தவம் போன்ற மௌனத்தையும்,மிச்சமி ருக்கும் வாழ்க்கையில் பிழைத்துக்கொள்ள கொஞ்சம் தொழிலையும் தான்.
கட்சிக்காக,வேலைக்கான போராட்டத்திற்காக என்று பல் வேறு காரணங்களுக்காக சிறை சென்று மீண்டவர்களை மாலையிட்டு வரவேற்கும் சிறை வாசல், ஆயுள் கைதிகளுக்கு வாழ்க்கையே தண்டனையாக சாபத்தையும், துõக்கு கைதிகளுக்கு மரணமும் தந்து வழிஅனுப்புகிறது.
இப்படிப்பட்ட சிறையில் குவாரண் டைன் பிளாக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலாவுடன் , வெவ்வேறு அறைகளில் ஊழல் வழக்குக்காக இருபத்தெட்டு நாட்கள் அடைக்கப்பட்டனர்.அடுத்து ஆட்சியைப் பிடித்ததும் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டு, நான்கு நாட்கள் சிறையில் இருந்தார்.அதன்பிறகு வந்த பிரபலம் காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கில் கைதான விஜயேந்திரர்.
செக்யூரிட்டி பிளாக்கில் அண்ணாவும் இருந்தார்.திமுகவின் நாலாமாண்டு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை
யிலிருந்த போது ,அந்த சம்பவங்களை வைத்து ‘கைதிஎண் 6342’ என்கிற புத்தகமாக பதிவுசெய்தார். அதன்பிறகு இருந்த பிரபலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அதே செக்யூரிட்டி பிளாக்கில் உலகின் மகாமகா கடத்தல் ஆசாமிகளான வால்காட்டும், ஸ்டோன்ஸும் இருந்தார்கள். ஆக்சா பிளேடால் சிறைக் கதவுகளை அறுத்துவிட்டு ,தப்பிக்க முயன்று மாட்டிக் கொண்டார்கள். அதன்பிறகு வந்த ஆட்டோசங்கர்,ஆட்டோ மோகன் கூட்டணி தப்பித்து ,பின்னர் ஒரிசா வில் மாட்டிக்கொண்டதும், சேலம் சிறையில் துõக்கு தண்டணை கிடைத்தது.
சிறைக்கு பின்புறம் இருக்கிற துõக்குமேடையில் 1970ல் முருகேசன் என்பவர் தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக துõக்கிலிடப் பட்டார்.
சிறைகள் எப்போதும் சிறியவர்கள்,பெரியவர்கள் , ஆண்கள், பெண்கள் என்கிற பேதம் பார்ப்பதில்லை. குற்றம்
செய்தால், அவர்களை தனிமை படுத்தி,அடைத்து வைத்து ,தன்மை படுத்தி மனநிலையை மாற்றி விடுகிறது. சிறைகள் குற்றவாளிகளை மட்டும் அல்லாது அப்பாவிகளையும் அடைத்துவைத்து விடுகிறது.அதற்கேற்ப இரண்டு சம்பவங்கள் சமீபத்தில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஒரு இளம் பெண் கொலையான சம்பவத்தை நீங்கள் படித்திருக்கலாம். அந்த கொலைக்கு காரணம் உரிமையாளரின் மனைவி என்று நிரூபணமாகி சிறைக் கைதியானார். அவர் தொடர் கொலைகாரியா? இல்லை.பலமுறை தன்கணவரையும், இளம் பெண்ணையும் எச்சரித்தும்,அவள் வார்த்தைக்கு மதிப்பற்ற நிலையில் ,சூழ்நிலை தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள கொலை திட்டத்தை உருவாக்கவைத்தது. அதே போல சட்டம் எப்போதும் பெண்களுக்கு சாதகமாகவும், சமுதாயம் ஆண்களுக்கு சாதகமாகவும் செயல்படுவது மாதிரி , ஒரு
பெண் திருமணத்திற்கு முன்பான காதலால் காதலனுடன் திருமணத்திற்கு பிறகான பிரச்சினையுடன் , தற்போது கணவ னால் உண்டான பிரச்சினையின் மனஉளைச்சலால் தற்கொலைக்கு முயல, வரதட்சனை தான் காரணம் என்று அவளது
பெற்றோரின் புகாரால், இன்று அவள் கணவனுக்கு கிடைத்த பரிசு, பதினைந்து நாட்கள் சிறை. உடலில் உண்டாகிற வெட்டுத் தழும்பைப் போல தற்காலிக சிறைவாசமும் மனதில் தழும்பாக மாறிவிடுகிறது.
இதுபோல ஆண்களும் , பெண்களும் 80% சதவிகிதம் பேர் பலவித காரணங்களால் விசாரணை கைதிகளாக இருக்கிறார்கள். அதில் முப்பது சதவிகிதம் பேர் குற்றவாளிகளாக வந்து செல்பவர்கள் என்கிறது சிறை நிர்வாகம்.
ஒருவன் குற்றவாளியாக மாறுவதற்கு இரண்டு ஆசைகள் காரணம் ஒன்று மண், மற்றொன்று பெண்.மண்ணாசை எப்போதும் தன் தலைமுறை அனுபவித்துவிட அனுமதிப்பதில்லை, கோர்ட் , வழக்குகள் என்று வருடக்கணக்காய் இழுத்து கொலைக்கும் துõண்டிவிடுகிறது. பெண் ஆசை எப்போதும் கொலை குற்றவாளியாகவே ஆக்கிவிடுகிறது.
குற்றங்கள் பலவற்றையும் கண்டுபிடித்து ,குற்றவாளிகள் பலரையும் அடையாளம் கண்டு சிறையில் அடைத்தது காவலர்களின் சாதனை தானே?
சிறையை பற்றி நாம்நினைக்கிற போது ,நம் மனதில் தோன்றுவது என்ன? குற்றவாளிகள் சக மனிதர்களோடு வாழத் தகுதியற்றவர்கள்.இவர்கள் கூண்டுக்குள் மிருகங்களாய் அடைக்கப்பட வேண்டியவர்கள். சூழ்நிலையால் குற்றம் செய்து வாழ்வைத் தொலைத்து ,தவறை உணர்ந்தவர்களின் இழப்பை யாரால் ஈடு செய்ய இயலும்? இப்படி குற்றம் சுமந்த மனிதர்களை அடைத்துவைத்த கொடூரமான சிறைக்கு கிடைத்திருக்கும் தண்டனை விடுதலை. இல்லை, காலத்தின் திருத்தி எழுதிய தீர்ப்பால் கிடைத்திருப்பது மரணம் தானே?.
-விஜிசெல்வகுமார்
படங்கள் :சிதம்பரம்
தன் இருப்பிடத்தை தீர்மானிக்காத வரை பறந்து திரிகிற பறவை கூண்டுக் கிளியாக அடைபட விரும்புவதில்லை. சுதந்திரமாக சுற்றித்திரியும் பறவைக்கே இப்படியென்றால், சுதந்தரமாய் வாழும் மனிதன் குற்றவளியாகி சிறையிலிருக்க விரும்புவானா?....
No comments:
Post a Comment