கூத்துப்பட்டறை நாடக்ககுழுவின் ‘ அர்ச்சுனன் தபசு’ நாடகத்தை பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது . சுதந்திரபோராட்ட காலத்தில் சிந்தனைகளால் மக்களை ஈர்த்த தும் , பாதித்ததுமான நாடகங்களின் இடத்தை இன்றைக்கு தொழில்நுட்ப மாற்றங்களால் வந்த டிவி, சினிமாக்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. ஆரம்பத்தில் நாடக அரங்குகளில் அரிதாரம் பூசிக்கொண் டும் , இயக்கிக் கொண்டும் இருந்த நடிகர்கள் ,படைப்புக் கலைஞர்கள் லட்சம்,கோடிகளில் சம்பளம் வாங்கவில்லை. நாடக அரங்குகளில் மேடையேறும் கலைஞர்கள் தன்னை வளர்த்துக் கொள்ள வசீகரிக்கும் வார்த்தைகளில் மக்களை மயக்கும் பஞ்சிங் டயலாக்குகள் பேசவில்லை.
அவர்கள் படைப்புகளை ,வரலாற்று நிகழ்வுகளை காட்சிப்படுத்த தன்னை பிரதிபலிக்கும் உண்மை க் கலைஞனாக (கருவியாக) கருதினார்கள். இதிகாசங்களிலிருந்து கதையை சொன்னார்கள். நாம் கூத்துப்பட்டறை அரங்கத் திற்குள் நுழைய அங்கே நுõற்றுக்கும் குறைவான பார்வையாளர்களோடு நாடகம் தொடங்கியது. அவர்கள் நடிப்பின் மூலமும்,
தங்களது பேச்சின் மூலமாகவும் சொல்கிற கதை நாம் கேட்டதாகவே இருந்தாலும், அவை நம் மனதுக்குள் வேறுபட்ட புதிய சிந்தனைகளை ஒவ்வொரு காட்சியிலும் தோற்றுவிக்கிறது.
உலக நாடுகளில் போருக்காக அணுஆயுதங்களின் கண்டுபிடிப்பும், அதற்காக ராணுவ தளவாடங்களை, அதிநவீன போர்க் கருவிகளை வாங்கி குவிப்பதிலும் பெருமளவு நிதிஒதுக்குகிற நிலையில் ,போர்களால் பலாயிரம் மக்கள் கொன்று குவிக்கப் படுகிற நிலையில் ‘அர்ச்சுனன் தபசு’ என்கிற இந்த நாடகம் ‘ பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தால் துரியோதனனிடம் நாடிழந்து, திரௌபதியுடன் வனவாசம் சென்ற நிலையில்,வியாசமாமுனி அவர்களை சந்திக்கிறார். வியாசரின் சொல்படி அர்ச்சுனன் இமயத்தில் தவமிருக்கிறான்.அங்கே வரும் ஏகலைவன் சீடர்கள் சிவனிடம் உள்ள மூவுலகை அழிக்கும் பசுபதாஸ்ரத்தை வாங்கி யாருக்கும் பயன் படாமல் கிடப்பில் போடுவதாக கூறி,அர்ச்சுனனுக்கு தரக்கூடாது என்று தடுக்கின்றனர். முடிவில் பசுபதாஸ்திரத்தை அர்ச்சுனன் எப்படி பெறுகிறான் என்பதே கதை. மக்கள் சமாதானமாக வாழ போர்களே கூடாது என்றாலும் மண் ,பெண் ஆசையால் தீமை செய்யும் குணம் கொண்டோரை அழிக்க நினைக்கும் ஒவ்வொருவரின் செய லும் ,கைகலப்பில் முடிகிற நிலையில் வன்முறைகள், கொலைகள் போரில் தவிர்க்க முடியாத தர்மம் என்பதையே அர்ச்சுனன் தபசுவும் காட்டுகிறது. ‘கூத்துப் பட்டறை’ யின் அமைப்பாளரும் ,நாடக ஆசிரியருமான ந.முத்துச்சாமி. இந்நாடகத்தை எழுதி,இயக்கியிருக்கிறார். அதில் நடித்தவர்களிடம் பேசினோம்.
பொதுவாகவே தனிப்பட்ட முறையில், குறிப்பிட்ட பாத்திரத்தை ஏற்று யாரும் நடிக்க வில்லை என்றாலும் ,எல்லா கதாபாத்திரங்களையும் கலந்தே நடிக்கிறார்கள்,பயிற்சி செய்கிறார்கள் . ஒரே நபர் வெவ்வேறு பாத்திரங்களில் மாறி, மாறி நடிப்பதால் , பல்வேறு பாவனைகளை கொண்டு வரமுடிகிறது என்கின்றனர்.பார்வையாளர்கள் நடிகர்களை மறந்துவிட்டு கதையுடன் ஒன்றிவிட வேண்டி இருக்கிறது. நடிக்கும் கலைஞர்களுக்கு படிப்பு ஒரு தகுதியில்லை என்றாலும் ,இவர்கள் அனைவருமே பட்டப்படிப்பையும் ,இன்ஜினியரிங் படிப்பையும் முடித்துவிட்டு கூத்துப்பட்டறையின் மேல் உள்ள ஆர்வத்தில் நடிப்பை கற்றுக்கொள்ள வந்திருப்பவர்கள். அதில் வினோதினி எம்பிஏ படித்தவர்,ஸ்ரீதேவி வேலுõரை சேர்ந்தவர் ,வீதி நாடகங்களில் நடித்தவர். தஞ்சாவூர்காரரான சாந்தகுமார் எம்பிஏ பட்டதாரி, பெரியதம்பி என்கி ற சஞ்சீவி எம்,ஏ படித்த பட்டுக்கோட்டைக்காரர், பிஇ படித்த பாபுவோ கர்நாடகத்துக்காரர், விஜயனுக்கு திண்டிவனம் , ஜி.ராமகிருஷ்ணன் டிப்ளமோ பிலிம் டெக்னாலஜி படித்தவர், பாபிக்கு இது முதல் நாடகம். இவர்களில் பாண்டிச்சேரியிலிருந்து வந்திருக்கும் ருத்ரா மட்டும் தான் பத்தாம்வகுப்பு படித்தவர் மற்றும் தம்பிசோழன் ,வடிவேலு என பலரும் நடிப்பை நம்பி வந்திருப்பவர்கள்.அனைவருமே பலவருடங்களாக நடித்து வருபவர்கள். கூத்துப்பட்டறையிலிருந்து நடிப்பைக் கற்றுக் கொண்டு இன்றைக்கு சினிமாவில் பிரபலமாகியிருப்பவர்கள் நடிகர் பசுபதியும்,நடிகை கலைராணியும். இன்று நடிப்பு பயில தனியாக பாடத்திட்டமும், திரைப்பட கல்லுõரியில் அதற்கென்று இருந்த பட்டப்படிப்பும் நின்றுவிட்ட சூழ்நிலையில் , முதலில் சினிமா ஆர்வத்திலும், ஸ்டார் ஆசையிலும் சென்னை வந்தவர்களுக்கு, கூத்துப்பட்டறை ஒரு நல்ல பழ்கலைக்கூடமாக திகழ்கிறது.இங்கே ஒவ்வொரு நிமிடமும் நிறைய கற்றுக்கொள்கிறோம் . என்கின்றனர் உற்சாகமாக . கூத்துப்பட்டறை கலைஞர்களின் நாடகமுயற்சிகள் இந்திய அளவில் மொழிகள் கடந்து பலரது கவனத்தை பெற்றிருப்பதோடு,பேசவும்படுகிறது. இப்போதைக்கு மத்திய அரசு தரும் மாதஊதியம் தான் இவர்களுக்கான ஊக்கம். மேலும் , டிவி நிறுவனங்கள் இவர்களை மக்களிடம் கொண்டு சேர்த்தால்,இன்னும் மக்கள் கூடுகிற பெரிய அரங்கத்தில் மேடை ஏற்ற முடியும் என்கின்றனர்.தங்களுக்கு மாநில அரசு ஏதாவது செய்யும் என்று நம்புகிறார்கள் இந்த கலைஞர்கள். மக்களை சிந்திக்கவும் ,அவர்களுக்கான பொழுதுபோக்கவும் நவரச நடிப்பை பாவனையாக்கித்தரும் இவர்களுக்கு மக்கள் மற்றும் அரசின் நம்பிக்கைகள் பாவனையாகி விடாமல் உண்மையான நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நம் பிரார்தனைகள்?....
விஜிசெல்வகுமார்
No comments:
Post a Comment