பல நேரங்களில் சந்தோசத்தையும், சில நேரங்களில் துக்கத்தையும் ஏற்படுத்துகிறது. சொற்கள் மனதைப் புரட்டுவதும், *ள்ளாய் தைக்கவும் செய்கிறது. நண்பனின் ஒரு சொல் நட்பை *றிப்பதும். இப்படி சொற்கள் நவரசங்களாகவரமாகவும்,சாபமாகவும் வாழ்க்கையில் நமக்கு பல அனுபவங்களைத் தருகின்றன.
வாழ்க்கையில் பல துன்பங்களை சந்தித்து, வெற்றி பெற்று இந்தியாவின் உயர்ந்த விருதான தேசிய விருதைப்பெற்று மிக பிரபலமாக இருந்தாலும், எளிமையாக வாழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம். அவரை சந்தித்து வாழ்க்கையில் உங்களால் மறக்க *டியாத சொல் என்ன வென்று கேட்டோம் இது வும் கடந்து போகும் 'என்னை பாதித்ததும், பிடித்ததுமான வார்த்தை என்றார். வாய்ப்பு வந்து உச்சத்தில் இருந்தபோதும் சரி , படங்கள் ஓடாமல் , வாய்ப்பில்லாமல் வீட்டில் *டங்கியிருந்த போது இது தான் எனக்கு டானிக் . *தன் *தலில் வாய் ப்பு கேட்டு அலைந்து ,வாய்ப்பு கிடைத்து நடித்து சாதாரண படங்களில் ஓரளவு வாய்ப்புகள் வந்தது.அப்படி வளர்ந்த காலத்தில் பலத்த போட்டிகள் இருந்தது. நான் பின்புலமில்லாமல் வந்தவன். அதேசமயம் காலில் அடிபட்டு , உடல் நிø ல சரியில்லாமல் மருத்துவமனையே கதியென்று கிடந்தேன். பார்க்க வந்தவர்கள் ஆறுதல் சொல்லவில்லை. காதுபட இனி வாழ்ந்து பிரயோஜனம் இல்லை என்று பேசியவர்கள் பலர். கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்ட தயாரிப்பாள ர்கள் உண்டு. அப்படியெல்லாம் வலிகளை பொறுத்துக் கொண்டு உடல்நிலை தேறினேன். என் மீது நம்பிக்கை வைத்து இயக்குனர் பாலா சேது வாய்ப்பை கொடுத்தார்.அது அவருக்கே சோதனையை தந்தது. பிரிவியூ காட்சியாக நுõறு நாட்க ளுக்கும் மேலாக ஓடிய திரைப்படம் அது மட்டுமே. யாரும் நம்பவில்லை.அதையும் மீறி வெளிவந்து ஒருவாரத்தில் பட ப்பெட்டி திரும்பியதும் ,இவ்வளவுதானா? என்றிருந்தது. அதன்பிறகு எழுதியதெல்லாம் காலத்தின் தீர்ப்பு. ரசிகர்கள் தேடிவர ஆரம்பித்தார்கள்.தியேட்டரில் படப்பெட்டியை திரும்ப கேட்டனர். படம் மிகப்பெரிய வெற்றி . பாலாவும், நானும் கவனிக்கப் பட்டோம். பாலாவுக்கு விருது கிடைத்தது. உண்மையான நடிப்புக்காக பசி,துõக்கம் மறந்து உடல் மெலிந்து தவம் கிடந்தவனுக்கு விருது இல்லையா ? இது பாலாவுக்குள் மிகப்பெரிய குடைச்சலாக இருந்திருக்க வேண் டும். நந்தாவில் சூர்யாவை ஆளாக்கிவிட்டு, பிதாமகனில் என்னை பேசவே விடாமல், நடிப்புக்காக நிஜமாகவே வாழ வைத்து ,எனக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தார். இப்படிகாலத்தின் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த அனுபவங்களில் பக்குவப்பட்ட நான் மாறலாமா? பழையவற்றை மறந்தால் என்னிடம் இருக்கும் மனிதாபிமானம் செத்து விடும் தானே? "இதுவும் கடந்து போகும்' புத்தர் சொன்னது. என்றார்.
சொல் ஒரு சொல் :
மாற்றம் ஒன்றே நிலையானது,மனிதனாக இரு.
ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம்
தமிழ்திரைப்படத்தில் தனக்கென தனித்த அடையாளங்களை ஏற்படுத்திக்கொண்டு ஒளிப்பதிவிற்கு தனி ஒரு அந்தஸ்த்தை ஏற்படுத்திக்கொடுத்தவர் பிசி ஸ்ரீராம். இவர் ஒளிப்பதிவில் நாயகன், குணா, *கவரி, அக்னி நட்சத்திரம், அஞ்சலி திரைப்படங்களில் இவரது ஒளிப்பதிவை உணர்ந்து கொள்ளலாம். அதிகம் பேசாதவர்.தன் ஒளிப்பதிவை பேசவைத்தவர்
பிசிஸ்ரீராம். இவரைப்பார்த்து சினிமவைத்தேடிவந்து இன்றைக்கு சினிமவை அடுத்து கட்டத்திற்கு அழைத்துச்சென்ற பல சிஸ்யர்களுக்கு சொந்தக்காரரான பிசிஸ்ரீராமிடம் உக்ளைப்பாதித்த ஒரு சொல் என்று கேட்டதும்..
*" என் ஆபீஸ் வாசல்ல தினம் வந்து என்னை அசிஸ்டெண்டாக சேர்த்துக்கங்க சார்னு சொல்லிட்டு நிக்கிற எல்லோருக்குள்ளும் என்னைப்பார்க்கிறேன். என்னை வெளிப்படுத்தறதும் ஒருவேள்வி மாதிரி இருந்திருக்கு . அப்புறம் உழைப்பு என்னை துõக்கிட்டு வந்திருக்கு .எல்லாத்தையும் தாண்டி மனிதநேயம் தான் வாழ்க்கைன்னு இப்போ புரியது.எப்போதும் என் மனசின் ஒரு மூளையில் உட்கார்ந்திருக்கிற ஒரு நம்பிக்கைதான் என்னைக்காப்பாத்தி அழைச்சிட்டு வருது. இன்னைக்கு நிறைய சேனல்கள் , நிறைய விசயங்கள் அத்தனையும் மண்டைக்குள்ள ÷த்திக்க *டியாது. மவுண்ட் ரோடு தர்கா வாசல்ல ஒரு குட்டிப்பொண்ணு பூகட்டிட்டிருப்பா தினம் அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் அவளைப்பார்ப்பேன். இருட்டும், வெளிச்ச*மாக படர்ந்திருக்கிற இடத்தில அவ பூ கட்டறதைப் பார்க்கிறப்போ மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத சோகம் வந்து உட்கார்ந்துக்கும். பிறகு சி நாள்கழிச்சு அவளை காணலை. இப்பவும் அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் கண் அவள் உட்கார்ந்த இடத்தில தேடுது. அவ எங்கயோ சந்தோசமா இருக்கணும்னு மனசு வேண்டுது.ஏன்னு தெரியலை.இதெல்லாம் தானே வாழ்க்கை?..' என்றார் . மௌன காட்சிகளுக்கு மொழி ஏது?
No comments:
Post a Comment