உனக்கான சிறகுகள் *ளைத்து
விட்டதென்று கழுகாய் பறந்து
கொண்டிருக்கிறாய் கர்வத்தின்
உயரே வட்டமிட்ட படி..
ஆனாலும், உன் பார்வை வட்டமடிக்கும்
குறிபார்த்தே உன்னை நெருங்காமல்
உன் வேர்களுக்கு எட்டாத கானல்
நீராகவே தேங்கியிருக்கின்றன கனவுகள்..
சிறகுகள் விரித்து உன் *துகில் நிழலாய்
சவாரி செய்கின்றன பல காகங்கள் கண்
கொத்தி பாம்புகளாய் காத்திருக்கின்றன
சோம்பல் பறவைகளாய் பற்றிக்கொள்ள..
விக்கிரமாதித்தன் வேதாளத்தை
உதறுகிறானோ இல்லையோ நிச்சயம்
நீ உ<தறியே ஆக வேண்டும்
அப்போது உனக்கான கனவுகள் மலரும்..
உன்உணவுகளை கொத்த காத்திருக்கும்
சோம்பல் பறவைகள் தலை உதறி பறந்து
விடும் கவ்வியதை நரியிடம் விட்டபடி
நீ அப்போது உதறலாம் எச்சில் கையை ....
No comments:
Post a Comment