Tuesday, March 16, 2010

********************

அரசன்

நாணயம்

திடீரென்று சிக்னலில் சிகப்பு விளக்கு ஒளிர்வதை கண்டதும் , பின்னால் வருபவர்கள் மோதிவிடுவார்களோ என்று பயந்து ,ராஜா தனது ஸ்கூட்டரை நிறுத்தாமல் போனதும், டிராபிக் கான்ஸ்டபிள் பாய்ந்து வந்து தடுத்து நிறுத்தி கேஸ்பதியாமல் இருக்க வேண்டமானால் ரூபாய் நுõறு கேட்க ராஜா தயங்காமல் எடுத்து தந்தான் கள்ளநோட்டு.
அதிர்ச்சி அலை

கடலலை பெரிய இரைச்ச லோடு சீற்றமாக இருக்கையில் , ராஜாவின் கைகளை பற்றியபடி கடலிஙல் நின்றிருந்த ராணி , தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லியதும் அதிர்ந்தராஜா அதை வெளிக்காட்டாமல் , அடுத்து பெரிய அலை வந்ததும்,ராணியை பற்றியிருந்த கரத்தை நழுவவிட்டான்.
சுத்தம்

*னியாண்டி அதிகாலை ஆறுமணிக்கே துடைப்பம் தண்ணீர் வாளி, பினாயில் ,மாற்குச்சி சகிதம் வந்தான்.
" குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 ' என்று எழுதப்பட்டிருந்த பெயர் பலகையை துடைத்தான். நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்த நீண்ட காரிடாரை பெருக்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
எச்சில் கரைகளும் , பான்பராக் கரைகளும் , உணவுப்பண்டங்களின் மிச்சங்களும் எல்லாம் கலந்து கலவையான நாற்றத்தை எழ வைத்தது.
*னியாண்டி வேலை செய்வதை நம்ப *டியாமல் பார்த்தான் சூப்பர் வைசர் ராஜன்.
" என்ன *னியா இன்னைக்கு மழைதான் வரப்போகுது.. நீ வேலையில் இறங்கிட்டியே '
"எல்லாம் ஒரு யோசனை தான் சார் '
" என்ன சொல்றே நீ ? ! '
" நேத்து கோர்ட்டுக்கு தன் மகனோட வந்த ஒரு வயசான அம்மா , தன் கேஸ்வர்ற வரைக்கும் சும்மா இருக்காம ,மரத்திலிருந்து ஒரு கொத்து இலையை பரிச்சு , இந்த இடத்தை பெருக்கி விட்டுச்சி , நாலு பேர் வர்ற இடம் நாம தான் சுத்தமா வெச்சுக்கணும் னு சொன்னப்பதான் எனக்கு உரைச்சது . இதை பண்ணத்தானே அரசாங்கம் எனக்கு சம்பளம் குடுக்குது. அதான் சார் 'என்றார்.
அவன் தோளை தட்டி குடுத்த ராஜன் , " வெரிகுட், இந்தா பத்து ரூபாய் ஒரு டீ, வடை சாப்பிட்டுட்டடு வேலை பார் ' என்றார்.
*னியாண்டி சிரித்தான். காரிடார் சுத்தமாகி இருந்தது.
பட்டம்
................
மெரினா கடற்கரையில் மணலில் மாஞ்சா தடவிய நுõல் பிடித்து காற்றில் பட்டத்தை துõக்கி
விட்டு, நுõலை மெல்ல மெல்ல சுண்டிவிட உயரே பறந்தது பட்டம்.
"சார் .... பட்டம் வாங்கிக்கங்க சார் .. பட்டம் வெறும் பத்துரூபாய் தான் சார் ' என்றான்.
பள்ளி விடு*றையில் பட்டம் விற்றுக்கொண்டிந்த ஞானம்.ஞானம் பட்டத்தோடு , குழந்தைகள் பொருட்களையும் விற்று
க்கொண்டிருந்தான்.
"இல்லப்பா.. வேணாம்' என்றுமறுத்தவரிடம்.மீண்டும் ஒரு பட்டத்தையாவது விற்றுவிட வேண்டும் என்று துரத்திவந்த
வனிடம் வாங்கிக்கொண்டான் ஜெகன்.
என்ன படிக்கிறே?
பத்தாவதுசார் '
"ஸ்கூல்க்குப் போகலை?'
" இல்லைசார் ..'
"படிக்கிற வயசில பட்டம் விக்கிறயே ..?'
"வீட்டுச்சூழ்நிலை அதனால . படிக்க *டியலை. எட்டாவது பெயில் ஆகிட்டேன்சார் ..அதான் பத்தாவது வீட்ல
இருந்து படிச்சு, அடுத்து டிகிரி படிச்சு பட்டம் வாங்கணும் சார் ..' என்று ஞானத்தின் குரல் ஜெகனின் கைகளில் இருந்து உயரேபறந்த கொண்டிருந்த பட்டத்தில் ஒலித்துக்கொண்டிந்தது.டிகிரி படித்து விட்டு , அம்மா சொல்லித்தந்த ஊறுகாய் வியாபாரத்தை செய்து கொண்டிருக்கும் ஜெகனின் காதுகளில்.
ஜோக்ஸ்

1. " டாக்டர் எப்ப பார்த்தாலும் என் மனைவி டிவியை பார்த்துக்கிட்டே இருக்கா '
"இதுல கவலைப் படறதுக்கு ஒண்ணுமில்லை '
கரண்ட் போனாக்கூட மெழுகு வர்த்தியை கொளுத்தி வெச்சிக்கிட்டுல டிவி பார்க்கிறா'
2. " எனக்கு பயங்கர நெஞ்சுவலி வந்திருச்சி ..உடனே என் மகன் வக்கீலை கூட்டிட்டு வந்துட்டான் '
" டாக்கடரை தானே கூட்டிட்டு வரணும் '
" புரியாதவனா இருக்கியே . உயில் எழத வக்கீல் தானே வரணும்'
3. " அடுத்த ஜென்மத்தில நான் கரப்பான் பூச்சியா பொறக்கணும்'
" ஏன்?'
" அது ஒண்ணுக்கு தானே என் மனைவி பயப்படறா '
4. "டாக்டர் எனக்கு உள்மூலம் , வெளிமூலம் ரெண்டும் இருக்கு '
சரிசரி கவலைப்படாதிங்க ஆபரேஷன் மூலம் சரி பண்ணிடலாம்'
5. அரசே இளவரசருக்கு பாக்கெட் மணி கொடுப்பதைநிறுøத்திவிட்டீர்களாஎன்ன?
ஏன் அமைச்சரே ?
பின்னே தனது குதிரையை வாடகைக்குவிட்டு சம்பாதிக்கறாரே..'
6. என்ன இது மன்னரின் ரேசன் கார்டு மட்டும் லெட்ஜர் புக் மாதிரி இவ்வளவு பெரிதாக இருக்கிறதே?'
" பின்னே அந்த புரத்தில உள்ள 999 ராணிகளின் பெயரும் அதில் இடம் பெற வேண்டாமா?'
7. தலைவர் ரொம்ப குழம்பி போயிக்காருன்னு நினைக்கிறேன்.'
" எதை வெச்சி சொல்றே'
பின்னே ..எங்களுடன் கூட்டணி வைக்க யாரும் வராவிட்டால் என்ன , எங்கள் கட்சிக்குள் இருக்கும் கோஜ்டிகளுக்குள்ளேயே கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம்னு மேடையிலே பேசறாரே'
8. ஆனாலும் நீங்கள் போர்கள*ம் அந்தப்புர*ம், எனக்கு ஒன்றுதான் என்று நீங்கள் அறிக்கை விட்டிருக்க வேண்டாம் அரசே'
ஏன் அமைச்சரே ?
நீங்கள் ராணிக்கு பயந்தவர் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டதே'.
9. டேய் ங்கே யூரின் போகாதே ..போலீஸ் புடிச்சிக்கிட்டு போயிடும் '
கீழே வீணாதானே போகுது ..அவங்களாவது புடிச்சிக்கிட்டு போகட்டுமே?
10. மன்னா அரசவை புலவருக்கு சரியாக சன்மானம் தருவதில்லையா என்ன?
ஏன் அமைச்சரே ?
உங்களைஇகழ்ந்து புற*துகு நானுõறு என்று நானுõறு பாடல்களை எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.'

No comments: