நடிகர் ரஜினிகாந்த் நடித்த “முத்து”, நடிகர் சரத்குமார்
நடித்த, “நாட்டாமை” உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட
வெற்றித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர்
அசோக்ராஜன்
இவரது திரைக்குடும்பப் பின்னணி குறித்து:
மறைந்த முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் திரு.கருணாநிதியின் கைவண்னத்தில் எழுதி, மறைந்த நடிகர் செவாலியே டாக்டர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ”பராசக்தி” திரைப்படத்தின் பன்முக இயக்குனர் திரு.கிருஷ்ணன் பஞ்சுவின் குடும்பத்தில் இருந்து வந்தவர். திரு.கிருஷ்ணன்பஞ்சு அசோக் ராஜன் தாய்மாமன் ஆவார்.
மறைந்த நடிகர் செவாலியே டாக்டர்சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பாசமலர் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் திரு.பீம்சிங் இவருடைய சித்தப்பா அசோக் ராஜன் ஆவார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காயத்ரி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பட்டு என்கிற ஆர்.பட்டாபிராமன் இவருடைய தாய்மாமன் ஆவார்.
இத்தகைய திரை ஆளுமைகள் நிறைந்த குடும்ப பிண்ணனியில் இருந்து வந்த இவருக்கு இயற்கையாகவே திரையும் கைக்குள் வந்தது. இவரது கைக்குள் மட்டுமல்ல, கண்களில் ஒளிர்ந்திருந்தது. அதுவே இவரை திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளராக்கியது.
இவரது திரைப்பட பணி:
ஒளிப்பதிவாளர் அசோக்ராஜன் இளமை வாழ்க்கையில் தனது உறவினர்கள் திரைப்பின் புலத்தில் ஆரம்பம் முதலே ஒளியும், படச்சுருள்களும் அவரது கவனத்தை ஈர்த்தன.
ஒளிப்பதிவாளர் அசோக்ராஜன் 1981- இல் உதவி ஒளிப்பதிவாளராக திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இயக்குநர் பாரதிராஜா திரைப்படங்களில் ஒளிப்பதிவாளர் பி.கண்ணனுடன் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
இணை ஒளிப்பதிவாளராக 35 படங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் திரைப்படம் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார்.
ஒளிப்பதிவாளராகபணியாற்றியதிரைப்படவிபரங்கள்:
நடிகர்ரஜினிகாந்த்நடித்து, இயக்குநர்
திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “முத்து” திரைப்படத்தில்
ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
- நடிகர்சரத்குமார்நடித்து, இயக்குநர்
திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “நாட்டாமை”.
- நடிகர்கார்த்திக்நடித்து, இயக்குநர்
திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “பிஸ்தா”.
- இயக்குநர்
திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “ஊர்மரியாதை, நட்புக்காக, புத்தம் புது பயணம், புருஷ லட்சணம், பெரிய குடும்பம், எதிரி, என்னவளே”
- நடிகர் அஜீத் நடித்து, இயக்குநர்
திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “வில்லன்”
- நடிகர்பிரபுநடிப்பில், இயக்குநர்
திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “பரம்பரை”
- நடிகர் விஜய் நடிப்பில்
வெளியான “மின்சார
கண்ணா”.
- இயக்குநர் கஸ்தூரிராஜா
இயக்கத்தில், நடிகர்
தனுஷ் நடிப்பில் வெளியான “துள்ளுவதோ இளமை” மற்றும் “காதல்ஜாதி”
- இயக்குநர்பி.வாசுஇயக்கத்தில், நடிகர் சத்யராஜ் நடிப்பில்
வெளியான “பொண்ணு
வீட்டுகாரன்”.
நடிகர் பாண்டியராஜன் நடித்து, தயாரித்து, இயக்கிய“ஹெல்ப்” என்ற குறும்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விருதுகள்:
- நட்புக்காக
திரைப்படத்திற்க்கு பாரத் கல்சுரல் அகாடமி விருதினை பெற்றுள்ளார்.
- 2008ம் ஆண்டு சன்டிவியில்
ஒளிபரப்பான “சிவசக்தி” தொலைக்காட்சி தொடருக்காக
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் விருதை மறைந்த முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர்
திரு.கருணாநிதி அவர்களிடம் பெற்றுள்ளார்.