Friday, March 23, 2012

பொழுது போக்கு என்னவென்றோம்?

* காயத்ரி பிரியாவிடம் உங்களின் பொழுது போக்கு என்னவென்றோம்.
தோழிகளுடன் நல்லா ஊர் சுத்துவேன்... ஷாப்பிங் போவேன் நிறைய பர்ச்சேஸ் பண்ணுவேன். எப்பவும் செல்போனில் பேசிக்கிட்டே.... இருப்பேன். சமயத்தில் மில்டு கால்கள் கூட நிறைய வரும். ஒரு சமயம் ஐம்பது மிஸ்டு கால்கள் வந்திருந்தது. அப்போ பாருங்க எவ்வளவு நேரம் பேசியிருப்பேன்னு என்றார்.அப்போ நீங்க காம்பியர் ஆகியிருக்கலாமே என்றதும், தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறேன் என்றவர். இப்போ கலைஞர் தொலைக்காட்சியில மகாலட்சுமி தொடர்ல நடிச்சிக்கிட்டிருக்கிறேன். சீரியல்கள்ல இரட்டை வேடத்தில நடிக்கணும்ங்கறது என்னுடைய ஆசை என்று முடித்துக் கொண்டார்.

பூஜா




தற்போது மானாடமயிலாக ஆடிக்கொண்டிருக்கும் பூஜாவைப்பிடித்தோம். ஒரு ஸ்ச்சுவீட் சந்திப்பு.
படிப்பது: சென்னைப்பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி சைகாலஜி.
பட்டம் ஏதாவது? விஜய்டிவிநடத்திய அழகிப்போட்டியில் சைலண்ட் கான்பிடண்ட் விருது. இப்போது? மானாட மயிலாடவில் கிரணுக்கு ஜோடியாக ஆடிக்கொண்டிருக்கிறேன். வேறெதாவது? தங்கத்தில் நானும் ரம்யா கிருஷ்ணக்கு சகோதரியாக நடிக்கிறேன். அனுபவம்? ராஜ்டிவி யில் தொகுப்பாளர். பொழுது போகலைன்னா? நாவல்கள், புத்தகங்கள். ஊர் சுற்ற? காஷ்மீருக்குப் போகணும்.
சமையல் ? சிக்கன், மட்டன், பிஸ்.. மற்றவர்கள் சாப்பிடும் அளவுக்கும்,சாப்பிடுகிற அளவுக்கும்.
விளையாட்டு? கிரிக்கெட். கோபம் வந்தால்? பக்கத்திலிருப்பவர் கன்னம் சிவக்கும். கோயிலுக்கு ? பெருமாளே, பரிசுகள்? தோழிகளுக்கு மட்டும் . முத்தப்பரிசு? குழந்தைகளுக்கு மட்டுமே.பிடிச்சது? போனா வராது.

பிரியா(தமிழகத்தின் சமீரா ரெட்டி)

இவரை பிரியா என்றால் யாருக்கும் தெரியவில்லை. தமிழகத்தின் சமீரா ரெட்டி என்றால் பிரியா அத்தனைபிரபலம். (சமீராரெட்டி பட்டம்ப்பா!)
அதென்னங்க சமீராரெட்டினு பட்டம்? இது ரொம்ப டூமச்ப்பா..! பிரியங்கா சோப்ரா, அசின்னு இன்னும் பார்க்கறவங்க எல்லாம் அவங்களுக்கு தோணுற மாதிரி சொல்லிக்கிறாங்க.நீங்களுமா????
படிச்சது?
பிஎஸ்சி எலெக்ரானிக்ஸ் பைனல் இயர்.
டாடி,மம்மி?
மம்மி அடையாறு ஆந்திரா ஆஸ்பிட்டல்ல வேலைப்பார்க்கிறாங்க. டாடி துபாய்ல இருக்காரு.எனக்கு ரெண்டு சிஸ்டர்ஸ் ஒருத்தர் சிஏ,இன்னொருதங்கை 10ம்வகுப்பு படிக்கிறாங்க.
உங்களுக்கு டிவில என்ன பிடிக்கும்? டாக்ஷோக்கள் பிடிக்கும். மானாடமயிலாடமாதிரி டான்ஸ் நிகழ்ச்சிகள் . விஜய்டிவியில ஒரு முறை சம்மர் புரொக்கிராம்க்காக தொகுப்பாளராக வழங்கி இருந்திருக்கேன்.
என்ன செய்றீங்க?
பிளேயர்ஸ்ங்கிற டான்ஸ் டீம்ல நானும் ஒரு ஆள் ஆல்இந்தியாலெவல்ல நிறைய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறோம். வெஸ்டர்ன் டான்ஸ் அதிகமாக பிடிக்கும்.ஸ்டேஜ்லயும் அதுதான்.
யாரையாவது அழவெச்சது <உண்டா?சமையல் கட்டுல அழவெக்கறது பத்தாதுன்னு இதுவேறயா?அதனால தான் வீட்ல யாரையும் சீரியல் பார்க்க விடறதில்லை. எனக்கும் சீரியல்கள் பிடிக்காது.
நாட்டுநடப்புல பிரியா எப்படி? அத்தனையும் பேப்பர், டிவிநியூஸ் பார்த்து தெரிஞ்சு வெச்சுக்கணும். நேத்துக் கூட பாருங்க மழையினால் வெள்ளத்தில மக்கள் எவ்வளவு கஷ்டப்படறாங்க. இடைத்தேர்தல் நிலவரம் ..சொன்னா பிரச்சினை ஆகாதே?
உங்களை கஷ்டப்படுத்தின கேள்வி? அய்யோ! புள்ளிவிவரம் எல்லாம்கேட்காதீங்க, இயற்பியல்ல வர்ற தத்துவங்கள், வேதியியல்ல வர்ற சோடியமும் குளோரைடும் வினைபுரிஞ்சா என்ன வரும்னு கேக்க க்கூடாது.
டாடிமம்மி வீட்டில் இல்லா? அருமையான பாட்டுங்க. குழந்தைகள் அதிகமாக ரசிக்கறாங்க. பாட்டை போட்டுவிட்டதும் அவங்க ஆடற ஆட்டம் இருக்கே அப்பப்பா, என்பிரண்டோட காலர்டியூன்கூட அதான்.
கேள்வி அதில்லையே? ஓ.... எங்க பிரண்டுகளோட ரெஸ்டாரண்டுக்கு போயி ஒரு கட்டு கட்டுவோம். நாங்க குடும்பத்தோட போகற இடமும் ரெஸ்டாரண்ட் தான்.
நீங்க இடைத்தேர்தல்ல நிக்கலையா? அரசியல்ல எனக்கு ஆசையில்லைங்க.
அதிகமாக பார்க்கும் படம்? கா....தல் படங்கள் .
உங்க கனவு? இசை, மேற்கத்திய நடனம், பாட்டுல இந்தியாவை கலக்கணும்.
டான்ஸ்ல புஸிகேட்டால்ஸ்நிக்கோல் மாதிரி வரணும்.கூடிய சீக்கிரம் நான்பாடுகிற ஆல்பமும் வரப்போகுது.
டிஸ்கவரி சேனல்ல வர்ற மாதிரிஉங்களை நடுகாட்டுல விட்டுட்டா? இது கனவு தானே. துõக்கத்தில கனவு வந்தாலே அழுதுடுவேன். நான் பாவங்க.

கல்லூரி மாணவி சினிமா பாடகி

கல்லூரியில் படிக்கும் காலத்தில் குடும்ப சூழலால் பலர் ஏதாவது ஒரு வேலை பார்த்து சம்பாதித்து படிப்பார்கள். பெரும்பாலும் பொறியியல் படிப்பவர்களின் சாய்ஸ் படிப்புசார்ந்த துறையாகவே இருக்கும். அதிலும் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பவர்கள் அதிகம் ஐடி சென்டர்களில்வேலைபார்ப்பார்கள். ஆனால், படிக்கும் துறையை விட்டு சம்பந்தமே இல்லாத இசைத்துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறார் பத்மாவதி. அதிலும் பாடும் துறைக்கு இவர் ஒரு புதுமுகம். இந்த புதுமுகத்தை அறிந்து கொள்வதற்காக தினமலர் பெண்கள் மலருக்காக அவரை சந்தித்தோம்.
நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரைப்பற்றி விசாரித்ததும்,படபடவென பேச்சைத்தொடங்கினார் பத்மாவதி.இதோ அவர் தன்னைப்பற்றி சொல்லியவை..
"" எங்களுக்கு சொந்தஊர்னு சொன்னா கடலுõர் நெய்வேலி தான். இப்போ சென்னையில ஸ்ரீராம் பொறியியல் கல்லுõரியில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பி.டெக்., நாலாவது வருசம் காலேஜ் ஆஸ்டல்ல தங்கி படிச்சிட்டிருக்கேன். அப்பா வெங்கடாசலபதி என்எல்சில ஜி<.எம்.லாயர். அம்மா காமாட்சி வீட்டு நிர்வாகி. தங்கை சாய்பிரியா பிளஸ்2 படிக்கிறா. தங்கைக்கு ஐஐடி படிக்கணும்னு ஆசை. அதுக்கான முயற்சியில இருக்கா.
என்னுடைய சின்ன வயசில இசையில ஆர்வம் இருந்தது. அதுக்குக் காரணம் குரல் நல்லா வரணும்னு அம்மா வேண்டிக்கிட்டாங்க. முதல் வகுப்பு படிக்கறப்ப பாடினேன்னு அம்மா சொல்லுவாங்க. நாதஸ்வர வித்வான் ராமச்சந்திரன் என்னோட குருவாக இருந்தார். பள்ளிகள்ல நடந்த போட்டியில பரிசு வாங்கியிருக்கேன்.
அதுக்கு நடுவில படிப்புகாரணமாக சங்கீதத்துல ஆர்வம் காட்டமுடியலை. அப்பறம் கல்லுõரியில சேர்ந்து படிக்கற முதல் வருசத்தில நடந்த ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு பாடினேன். என்னுடைய பாட்டைக் கேட்ட நண்பர் பத்மநாபன் எனக்கு சீனியர் அவரு. உங்க குரல் நல்லா இருக்குன்னு பாராட்டினார். அவர் மூலமாக எனக்கு "காண்டீபம்' ங்கற சினிமா படத்துக்கு வாய்ப்பு கிடைச்சது. அந்தப்படத்தில நான் பாடினது மேற்கத்திய சங்கீதப்பாடல். அருள்மேனன் டைரக்டர். இயக்குனர் கவுதம் மேனன்கிட்ட அசிஸ்டன்டாக ஒர்க் பண்ணினவர். அடுத்தது, அம்மன் பாடல்கள் அடங்கின ஆல்பத்திற்கு பாடியிருக்கேன். மீனாட்சி பஞ்சரத்னம், சாரதாம்பாள் ஸ்தோத்திரம் அதில வரும். அடுத்து இளமை ஊஞ்சலாடுகிறதுன்னு ஒருபடம். அப்பறம் ஜீ தமிழ் டிவிக்காக திகில் தொடருக்கான டைட்டில் பாடல் பாடியிருக்கேன். பாட்டோட டியூனை கேட்கவும், வரிகளை படிக்கவுமே அத்தனை பயமா இருக்கும்.
விட்ட குறை தொட்டகுறையாக சின்னவயசில கத்துக்கிட்ட இசை, இன்னைக்கு எனக்குன்னு என் வாழ்க்கைக்குன்னு புதுலட்சியத்தையும், ஒரு எதிர்காலத்திற்கான பாதையை உருவாக்கிக் கொடுத்திட்டிருக்கு. அப்படிப்பட்ட சங்கீதத்தில தொடர்ந்து ஆர்வம் செலுத்தாம விட்டுட்டேனோன்னு ரொம்ப வருத்தமாக இருக்கு. ஒரு வகையில இன்னைக்கு இசைங்கறது கமர்சியல் ஆகிட்டிருக்கு. இசைக்கான கலைத்தன்மை அழிஞ்சுக்கிட்டிருக்கோன்னு தோணுது. கடவுளை அடையணும்னாலும் இசையின் உதவி ரொம்ப வேணும். . அதனால இனிமே தொடர்ந்து இசையில கவனம் செலுத்தணும்னு நினைக்கிறேன்.இப்போ சங்கீதத்தைடில்லிபரகாஷ்கிட்ட கத்துக்கறேன். அவர் ஜுன்ஆர்ங்கற படத்தில இசை அமைச்சிருக்கார்.பித்துக்குளி முருகதாசோட சிஸ்யர் அவர்.''
*ஊரைவிட்டு சிடியில தங்கி படிக்கறப்ப பயமாகி இல்லையா?
திகில் சீரியலுக்கான என்பாட்டை கேளுங்க நீங்க பயந்திடுவீங்க. எனக்கு அப்படி பயமெல்லாம் கிடையாது. இங்கே பொதுவாக காலேஜ் படிக்கற பெண்களுக்கு நிறைய டைவர்ஷன் இருக்கு. எதையும் யோசிக்கிற பக்குவமும், அறிவு முதிர்ச்சி இருக்கு. அதுவே பல சமயங்கள்ல கர்வமாகிடுது. கவனம் குறையாம நம்சாதிக்க வேண்டிய விஷயத்தில கவனம் செலுத்தினாலே சாதிச்சிடலாம். நான் லதாமங்கேஸ்கர் மாதிரி வரணும்னு நினைக்கிறேன். அவருடைய கனவுகள் நனவாக வாழ்த்திவிட்டு விடை பெற்றோம்.
செல்வகுமார்

பிரச்சாரத்தில் நீலாம்பரி!


பிரச்சாரத்தில் நீலாம்பரி என்றதும் ஏதோ அரசியலில் ரம்யாகிருஷ்ணன் சேர்ந்து விட்டாரோ என்று நினைக்காதீர்கள். அரசியலில் காசு கொடுத்தால் பிரச்சாரத்திற்கு வருவார்கள். அதேப்போல தெருமுனைப் பிரசாரத்திற்கு காசு கொடுத்தால் கூச்சலிடுவார்கள் நடிகைகள். அப்படி சமீபத்தில் ஒருபிரச்சாரத்திற்கு வந்திருந்தார் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன். தற்போது நீலாம்பரி தன்தங்கையுடன் சேர்ந்து தங்கம் சீரியலை தயாரிக்கிறார். தான் சீரியலில் நடிக்கும் நேரம் போக தற்போது அதிகமாக விளம்பரங்களிலும் பங்கெடுத்துக் கொண்டு கல்லாகட்டவும் தொடங்கியிருக்கிறார். சின்தால் சோப், எண்ணெய், மசாலா விளம்பரங்களைத் தொடர்ந்து, தற்போது ஹிட் அடித்தால் மலேரியாவை விரட்டலாம் என்ற தெரு முனைப்பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறார். இதற்காக சமீபத்தில் கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் பிரவுன் ஸ்டோன் அப்பார்ட்மெண்டிற்கு வந்திருந்தவர், பிளாட் வாசிகளிடம் ஹிட் கொசு மருந்து அடிங்க , மலேரியாவை விரட்டுங்க! என்ற வாசகத்தைச்சொல்லி, இந்த பிளாட்டிலிருந்து தமிழகம் முழுக்க இந்த விழிப்புணர்வு பரவட்டும் என்றார். இந்த ஹிட் விழிப்புணர்வு அறிமுகக்கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் வாங்கிய தொகை பல ஆயிரங்கள்!