திருமணவரம் அருளும் மகான் சித்தமல்லி பூஜ்யஸ்ரீ சுப்ரமண்ய யதீந்திராள்
பூஜ்யஸ்ரீ சுப்ரமண்ய யதீந்திராள் சித்தமல்லி கிராமத்தில் 1866ம் ஆண்டு பெரிய தனவந்தரான கோதண்டராம ஐயர் என்பபவருக்கும் செங்கம்மாள் என்பவருக்கும் மகனாகப்பிறந்தார். இவர் இளம் வயதிலேயே சாஸ்த்திரம் மற்றும் வேதங்களைக் கற்று மிக பண்டிதராக விளங்கினார். மஹாமகோபாத் யாய மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளிடம் கல்விகற்றார்.
ஒருநாள் ராஜீ சாஸ்திரிகள் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது சரியாக கவனிக்காதால் குருவின் கோபத்திற்கு ஆளானார். ஆனால், அந்தபாடத்தை யும், வேதாந்தத்தையும் அதேநாளில் ஆற்றிய உரையின் மூலம் குருவின் அன்புக்கு பாத்திரமானார்.
மகாபெரியவாள் 1908 பட்டத்திற்கு வந்தவுடன் இவரும் ஒரு குருவாக இருந்து வேதங்கள் முதலியவற்றை அவருக்கு கற்றுத் தந்தார். மடத்தில் சிலகாலங்கள் தங்கி வரவு செலவு கணக்குகளை பார்த்தார். மடமானது மிக்க பணக் கஷ்டத்தில் இருந்தபோது தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.
ஒரு சமயம் பெரியவாள் உபன்யாசம் செய்து கொண்டிருந்த பொழுது அவசர வேலையாள் இவரை தொடர சொல்ல இவரும் உபன்யாசத்தை தொடர்ந்து எல்லாருடைய பாராட்டுதல்களைப் பெற்றார். பெரியவா இவரை நடமாடும் நுõலகம் என்று ஒரு பட்டம் கொடுத்தார்.
அவருக்கு ஓலைச்சுவடிகள் படிக்கத்தெரியும். அவருக்கு இருந்த ஞாபகசக்தியால் அவர் ஏக "சங்ஹாக்ரஹி ' என்று அழைக்கப்பட்டார். அதாவது ஒரே நேரத்தில் படிக்கவும். எழுதவும் அதே வேகத்தில் வெளிப்படுத்தவும் உள்ள திறமை உள்ளவர் என்று அர்த்தம்.
ஒரு முறை மயிலாடுதுறை யில் யாத்திரை மேற்கொண்டிருந்த மகாபெரியவாள் அருகே உள்ள கிராமமான கோழிகுத்தியில் சரஸ்வதி அம்மாள் என்பவரது இல்லத்தில் தங்கி இருந்தபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். ஒரு நாள் திரண்டு இருந்த பக்தர் கூட்டத்தில் நடுவே உரை நிகழ்த்தினார் மகாபெரியவாள். தனது பேச்சில் ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்த்திரிகளை வெகுவாகப் புகழ்ந்தார். பொதுவாக ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்காது. பணம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது. பணம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது.கல்வி பணம் இரண்டும் இருந்தால் அங்கே குழந்தை செல்வம் இருக்காது. இவை மூன்றும் ஒருசேர உள்ள வீட்டில் யாருக்கேனும் உடல்நலக்கோளாறு இருக்கும். ஒருவேளை இவை நான்கும் சுபமாக <உள்ள வீட்டில் நிம்மதி இருக்காது. இது பரவலாக நாம் பார்க்கக்கூடிய நிஜம். ஆனால், இதற்கு விதிவிலக்கானவர் சித்தமல்லி சுப்ரமண்ய சாஸ்த்திரிகள் பக்தி,பிடிப்பு,செல்வம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு என ஒருங்கே பெற்றவர். இவர். இது இறைவனின் அருள் இப்போது அவருடைய மகளின் கிரஹத்தில் தங்கிய படிதான் உரைநிகழ்த்திக் கொண்டிருக்கிறேன் என்றாராம்.
சுப்ரமண்ய சாஸ்திரிகள் மகாபெரியவாளைச்சந்தித்து எனக்கு ஆபத்சந்நியாசம் வழங்குங்கள் என்றாராம். இதையடுத்து சில நாட்களில் சுப்ரமண்ய சாஸ்திரிகளின் உடல்நிலை மோசமானது அப்போது காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் இருந்து சாஸ்திரிகளுக்கு ஆபத்சந்நியாசம் வழங்குவதற்காக இரண்டு பண்டிதர்கள் சித்தமல்லி வந்தனர். ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டால் மூன்று நாட்கள் மட்டுமே வீட்டில் தங்கலாம். அவர் உடல் நிலைமோசமானது . அவருக்கு சந்நியாசம் கொடுக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் சாஸ்திரிகள் உடல்நிலையில் நல்ல மாற்றம் தெரிந்தது. மறுநாள் தர்மப்படி சாஸ்திரிகள் வேறு இடத்தில் தங்கவேண்டும். அதற்காக மடம் ஒன்றும் தயார் செய்யப்பட்டது. அங்கிருந்து அனைவருக்கும் ஆசி அளித்தவர் கிலோகணக்கில் கற்பூரத்தைக் கொண்டு வந்து ஏற்றச்சொன்னார். கற்பூரம் கொழுந்து விட்டு எரியும் போது சாஸ்திரிகள் சிரசில் இருந்து ஆத்மஜோதி புறப்பட்டு கற்பூரஜோதியுடன் இரண்டற கலந்து வானவெளியில் செல்வதைக்கண்டதாக சொல்வர்.
அதேநேரத்தில் காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மகாபெரியவாள் அதோ சுப்ரமண்ய சாஸ்திரிகள் மோட்சத்துக்கு போய்கொண்டிருக்கிறார் பாருங்கோ என்று உடன் இருந்த சிஸ்யர்கள் மற்றும் பக்தர்களிடம் வானத்தைக்காட்டிச் சொன்னாராம். இது நடந்தது 1933ம் ஆண்டில் இதுவே இவரது மகாசமாதி வருடம். இன்னும் பலபக்தர்களின் கனவில் வந்து திருமணம் தடைகளை விளக்கி திருமணம் கைகூட உதவி புரிவதாக இவரது ஆசியால் திருமணப்பேற்றை அடைந்த பக்தர்கள் பலர் கூறுகிறார்கள்.
இம்மகான் பற்றி மேலும் அறிய 04428152533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
நல்வழிப்படுத்தும் உத்தமர்கோயில்
திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 5கி.மீ தொலைவில் பிச்சாண்டவர் கோயில் எனும் அழகிய சிற்றுõரில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது உத்தமர் கோயில். கதம்பவனம், கரம்பனுõர்,திருக்கரம்பனுõர், ஆதிமாபுரம்,பிரம்மபுரி,நீப÷க்ஷத்திரம், நீபவனம்,திருக்கரம்பந்துறை ஆகிய பண்டைய பெயர்களுடன் தற்போது பிச்சாண்டார் கோயில் என்று அழைக்கப்படும் உத்தமர்கோயில் சைவ வைணவ ஒருமைப்பாட்டுக்கு சான்றாக விளங்குகிறது. புராண வரலாற்றின் படி பிரம்மஹத்தி தோஷத்தில் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான் பிச்சைக்காரன் வடிவத்தில் அவந்து அவரது தோஷம் நீங்க ப் பெற்றதால் பிச்சாண்டார் கோயில் என்ற பெயர் வந்தது.
இத்திருக்கோயில் படைப்புத்தொழில் புரியும் ஸ்ரீ பிரம்மா தனிசந்நிதியிலும் குருபகவான் ஸ்தானத்தில் தெற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டுவன அனைத்தையும் அருளிவருகிறார். அவரது இடப்புறத்தில் கல்விக்கடவுள் கலைவாணி ஞானசரஸ்வதி அமர்ந்திருந்து கலை,ஞானம், நல்லறிவு ஆகியவற்றை வழங்குகிறார்.
காக்கும் கடவுளாகிய திருமால் புருஷோத்தமர் என்ற திருநாமத்துடன் ஆதிசேஷன்மேல் பள்ளிக் கொள்ள, அவருக்கு இடப்புறம் பிச்சாடனரினவ் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பிøச்சை பாத்திரம் பூரணமாக நிரம்பும் அளவுக்கு அன்னமிட்ட அருள்மிகு பூரணவல்லித்தாயார் குடி கொண்ஐ சகல ஐஸ்வர்யங்களையும் தருகிறார்.
அழித்தல்,மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை புரிந்து வரும் சிவபெருமான் பிச்சாண்டவர் என்ற திருநாமத்துடன் சவுந்தர்யபார்வதியை தென்முகமாக கொண்டு விளங்குகிறார். பிச்சாடனராக இத்தலத்தில் அவதரித்த இறைவன் நெறிகெட்டு கர்வத்துடன் இருநுஞூத ரிஷிகளையோ அவர்களின் பத்தினிகளையோ அழிக்காமல் அவர்களின் அகம்பாவத்தை மட்டும் அழித்ததால் அவர் உத்தமராக விளங்குகிறார். இவ்வாறு உத்தமர்களாகிய முப்பெரும்தேவியர் குடிகொண்டு இருப்பதால் இக்கோயில் உத்தமர் கோயில் என்று பெயர் பெற்றது.
கோயிலின் அமைப்பு
திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் எதிரில் முதலில் பலிபீடமும் , அடுத்து கொடிமரமும் அதனை அடத்து பெரிய திருவடியாகிய கருடாழ்வார் சன்னதியும் உள்ளன. கிழக்குபார்த்த மூலவர் சன்னதியின் வாயிலில் உள்ள இரு பெரிய துவாரபாலகர்களைக்கடந்து உள்ளே சென்றால் அருள்மிகு புருஷோத்தமப் பெருமாள் அந்தசயனனாக ஆதிசேஷனின் மீது பள்ளிக்கொண்ட நிலையில் மார்பில் மகாலட்சுமியைத்தாங்கி நாபிக்கு அருகில் கோஷ்டத்தில் கதர்பமகரிஷி பெருமாளை சேவித்த வண்ணம் நிற்கிறார். இவரது தவக்கோலத்திற்காகத்தான் இத்திருக்கோயிலில் மும்மூர்த்திகளும் காட்சியளித்ததாக புராணவரலாறு கூறுகிறது. பெருமாள் சன்னதியின் இடப்புறம் மகாலட்சுமி சன்னதி உள்ளது. வலப்புறத்தில் தனிச்சன்னதியில் ஜெயவீர ஆஞ்சநேயர் தன்வாலில் கட்டிய மணியைக் கொண்டு சுயபூஜை செய்த நிலையில் காட்சியளிக்கிறார்.
தெற்கு சுற்றிஞூல அருள்மிகு பூரணவல்லித்தாயார் சன்னதி உள்ளது. பிச்சாடனராக வந்த சிவபெருமானின் சாபம் நீங்க அவரது பிச்சைப்பாத்திரம் பூரணமாக நிரம்பும் அளவுக்கு அன்னமிட்ட மகாலட்சுமி கிழக்கு முகமாக பூரணவல்லித்தாயாராக அருள்பாலிக்கிறார்.
புருஷோத்தமர் கோயிலில் பின்புறம் சிவன் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. சிவன் கோயில் வெளிச்சுற்றில் தட்சிணாமூர்த்தியும், பிச்சாடனரும், தனிச்சன்னதியில் இரட்டை விநாயகர், பாலலிங்கமும் உள்ளது. சோழர்காலத்தில் கட்டப்பெற்ற கருவறையில் சிவபெருமான் பிச்சாடனர் என்ற திருநாமத்துடன் மேற்கு முகமாக இருக்கிறார். தெற்கு முகமாக தனி சன்னதியில் சக்தி குரு ஸ்தானத்தில் சவுந்தர்ய பார்வதியும் முன்மண்டபத்தில் மகாலிங்கம்,மகாகணபதி, சவுந்தர்யபார்வதி,தண்டபாணி,கோஷ்டபிரம்மா ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
திருக்கோயில் மேற்கு சுற்றில் லட்சுமி நாராயணர்சன்னதி, ராமர்சன்னதியும் உள்ளன.வேணுகோபாலரின் பின்புறம் பாலகிருஷ்ணர் அமர்ந்த நிலையில் தனது வலதுகால் கட்டை விரலை வாயில் வைத்த வண்ணம் காட்சிதருகிறார்.
வடக்கு திருச்சுற்றில் தசரதசக்ரவர்த்தி வணங்கிய தசரதலிங்கம் அமைந்துள்ளது. புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் தொடர்ந்து 48 வாரங்கள் அர்ச்சனை செய்வதன் மூலம் குழந்தைப்பேறு கிட்டிவருவது கண்கூடான உண்மை. தசரத லிங்கத்தின் பின்புறம் நவக்கிரகம், துர்க்கையும், சண்டிகேஸ்வரரும் அமைந்துள்ளனர்.
வடகிழக்கு மூலையில் விஷ்ணு குருவாகிய வரதராஜப்பெருமாளும், பிரம்ம குருவாகிய பிரம்மதேவரும் கல்விக்கடவுள் ஞானசரஸ்வதியும் தனித்தனி சன்னதிகளில் அருள்புரிந்து வருகிறார்கள்.
ஆணவம் அழித்த பிச்சாடனார்
ஒரு முறை தாருகாவனத்தில் மகரிஷிகள் கல்விச்செருக்கினாலும் தவவலிமையினாலும் ஆணவம் கொண்டு மக்களை வழிபடுத்த தாமே போதுமென்று நற்செயல், தீமைகளுக்கு காரணம் மக்களின் கர்மமே என்பதால் இறைவன் தேவையில்லை என்று நினைத்தனர். தேவலோக பெண்களும் முப்பெரும் தேவியர் தங்களை அழகில் குறைந்தவர்கள் என்றும் ஈரேழு உலகிலும் பேரழகிகள் தாமே என்று ஆணவம் கொண்டனர்.
இவர்களை நெறிபடுத்த எண்ணிய சிவன் எந்த இடத்திற்கு செல்லவும்,யார் வீட்டுகதவைத்தட்டி பிச்சைக்கேட்டுப்பெறவும் பிச்சாடனார் கோலம் பூண்டார். வாட்டமே இல்லாத வாளிப்பான உடலுடன் முழுநிர்வாண பிச்சாடனார் கோலம் கொண்டு திருமாலை மோகிணி அவதாரம் பூணச்செய்து உத்தமர் கோயிலிருந்து சுமார் 15கி.மீ தொலைவில் முனிவர்கள் யாகம் செய்கிற தாருகாவனத்தை அடைந்தனர்.முதலில் பெண்களை திருத்த பிச்சையிடுமாறு வேண்டினர். வீட்டைவிட்டு வெளியே வந்த ரிஷிபத்தினிகள் பிச்சாசடனாரின் தெய்வீகக்கோலத்தைக்கண்டு வியந்தனர். ரிஷிபத்தினிகள் தொடர யாகசாலையை அடைந்தனர். இதைக்கண்ட ரிஷிகள் கோபம் கொண்டு அவர்களை அழிக்க நினைத்தனர். யாக குண்டத்திலிருந்து முதலில் ஒரு யானையையும், அடுத்து புலியையும் ஏவினர். அதைக்கொன்று தோலை ஆடையாக உடுத்திக் கொண்டார் இறைவன்.
வேள்வியிலிருந்து மந்திரசக்திகளுடன் அனுப்பப்பட்ட மான்,மழு என்ற ஆயுதம்.படபா என்கிற தீப்பிழம்பை கையில் பிடித்தார். முனிவர்களால் ஏவப்பட்ட அபஸ்மாரம் என்ற பயங்கர பூதத்தை வலதுபாதத்தின் கீழே போட்டு வதம் செய்தார் இறைவன்.
தாம் ஏவிய சக்திகள் அனைத்தும் காணாமல் போவதை அறிந்து முனிவர்கள் வந்திருப்பவர் யாரென்று அறிய மந்திர வேதங்களை ஏவினர். வேதங்கள் அழிந்தால் உலகில் சர்வநாசம் ஏற்படும் என்று எண்ணிய சிவன் அவற்றை உடுக்கை ஒலியாகவும், பாத சிலம்பின் ஒலியாகவும் மாற்றி சூலத்தை ஏந்தி தம்விரிசடை விரிந்தாட எட்டுத்திக்கும் திருநடனம் புரிந்தார்.
பரமேஸ்வரனே என்றுணர்ந்த ரிஷிகள் தங்கள் தவறுக்கு வருந்தினர். கல்விகற்பது மனிதன் மேம்படவேஎன்றும் தவமிருப்பது தேவத்தகுதியை பெற்று உலகிற்கு நன்மை செய்யவே என்று உணர்த்திய பிச்சாடனார் உத்தமர் குடிகொண்டு இன்றைக்கும் வழிபட வரும் பக்தர்களின் தீயகுணங்களை அழித்து நல்லநெறியுடன் வாழ அருள் புரிந்து வருகிறார்.
தலத்தின் பெருமை
ஜனகமகாராஜா மந்திரிகளிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு நாராயணனை தரிசிக்க முனிவர்களுடன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். அங்கு வேள்விகள் செய்ய தியானம் செய்த நிலையில் இருநுஞூதபோது ஹோமசாமான்களை ஒரு நாய் அசுத்தம் செய்து விட்டு போய்விட்டது இதைஅறியாத முனிவர்கள் யாகம் செய்து முடிக்கும் தருவாயில் அதற்குரிய மந்திரத்தை மறந்து போனார்கள். அந்தசமயம் அங்கு வந்த ஒரு முனிவர் அங்கிருக்கும் ஒரு கதம்பமரத்தைக்காட்டி அதை வணங்கினால் நல்ல வழிபிறக்கும் என்று கூற மரத்திலிருந்து ஒரு அசரீரி மூலம் ஹோம சாமான்கள் நாயால் அசுத்தமானதை அறிந்தார்கள்.
மீண்டும் வேள்வியைத்தொடங்கி நிறைவு செய்தனர்.
வேள்வி நிறைவு பெற்ற மகிழ்ச்சியில் ஜனகர் கதம்ப மரத்தை வணங்க சொன்ன முனிவரிடம் அவர் யார் என்று கேட்க. மீண்டும் கதம்ப மரத்தை வணங்கச்சொன்னார் முனிவர். வேதத்தின் உருவான கதம்பமரம் இரண்டாக பிளந்து அதிலிருந்து திருமால் புருஷோத்தமனாக வெளிப்பட, பள்ளிகொண்ட நிலையில் நாராயணனும் அவர் நாபியில் பிரம்மா,பக்கத்திலே பிச்சாடனார், மும்மூர்த்திகள் ஒருங்கே காட்சி அளித்தார்கள்.நாராயணனை தரிசித்த புண்ணியத்தில் கதம்பவனத்திலேயே ஒரு ஆலயம் அமைத்தார் ஜனகர்.அது தான் திருக்கரம்பனுõர் என்கிற உத்தமர் கோயில்.
கருடக்கொடி
ஆதிசேஷனாகிய பகவான் இங்கு கதம்ப விருட்சமாக மாறி எப்போதும் பகவானின் பாதாரவிந்தத்தின் சேவையில் சேவையில் ஈடுபட்ட கருடன் பகவானைக்காணாது மிகவும் வருந்தினார். பல இடங்களில் தேடி முடிவில் இக்கோயிலில் தரிசித்து பகவானை தோத்திரம் செய்தபடி இங்கேயே தங்கினார். இதனால் கருடனுக்கு பெரிய திருவடி என்ற பெயருடன். பிரம்மோற்சவத்தில் கருடக்கொடியும் ஏற்றப்படுகிறது.
சத்கீர்த்திவர்த்தனன்
சத்க்கீர்த்திவர்த்தனன் என்ற அரசன் மகப்பேறில்லாத குதைறயை நீக்க இவ்விடத்தில் தவம் செய்து புத்திரனை அடைந்த சந்தோஷத்தினால் ஐந்து கலசங்களுடைய உத்தியோக விமானத்தையும் ,மண்டபங்களையும், பிரகாரங்களையும் அமைத்து சித்திரை பூர்ணிமையில் இரதோற்சவம் ஏற்பாடு செய்து நெடுங்காமல் இத்தலத்தில் வசித்து மோக்ஷமடைந்தான்.
திருமங்கையாழ்வாரும் இத்தலத்தில் தங்கி ஸ்ரீரங்கநாதருக்கு விமானம், கோபுரம்,பிரகாரங்கள் முதலிய திருப்பணிகள் செய்ததாக தெரிகிறது. இதற்கு அறிகுறியாக கதம்ப புஷ்கரணிக்கு வடபாகத்தில் நன்செய்நிலமும், அதையடுத்த தோப்பும் மண்டபமும் ஆழ்வார் தங்கியிருந்ததால் "ஆழ்வார் பட்டவர்த்தி' என்ற பெயருடன் இன்றும் விளங்குகின்றன.
இக்கோயில் பற்றி மேலும் அறிய 04312591466,2591405 என்றஎண்ணில்தொடர்பு கொள்ளவும்.
வியாபாரத்தை கொழிக்க வைக்கும் ஸ்ரீசிதம்பரேஸ்வரர்
எழுத்து என்றால் ஒரு இலக்கணம் உண்டு வழக்கு என்றால் ஒரு விவாதம் உண்டு. அதுபோல் ஒவ்வொன்றுக்கும் இன்னின்னது தேவை என்கிற நியதி உண்டு. இலக்கணம் இல்லாவிட்டால் எழுத்து இல்லை. அதுபோல் கோயில் என்றால் குறைந்தபட்சம் ராஜகோபுரம் ,பலிபீடம், நந்திதேவர் விக்ரஹம் ,இறைவன் ,இறைவிக்கு தனித்தனி சந்நிதிகள் விமானங்களுடன் இருக்கும்.ஆனால்,மேலே சொன்ன அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் வெட்ட வெளியாக களேபரமான இடத்தில் தான் சிதம்பரேஸ்வரர் இருக்கிறார். இந்த வெட்டவெளிப்பகுதி ஒரு காலத்தில் கோவிலுக்கு உண்டான கட்டட அமைப்புகளுடன் இருந்திருக்கிறது. செடிகொடிகளும், செங்கல்சிதறல்களும் ஓலைக்கொட்டகையும் அந்த வெட்ட வெளியை சூழ்ந்திருக்கின்றன.
சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் நடுநாயகமாக பிரம்மாண்டமாக ஒரு சிவலிங்கத்திருமேனி . இவரைத்தவிர இநப்தஆலயத்தில் நந்திதேவர், விநாயகப்பெருமான் ,ஸ்ரீசிவகாமி அம்மை மற்றும் தண்டாயுதபாணி ஆகிய தெய்வங்களுக்கு விக்கிரகங்கள் உ<ண்டு. ஆனால், முறையான சந்நிதி இல்லை. புதரும் , முட்செடிகளும் மண்டிக்கிடக்கின்றன. மிகவும் ஜாக்கிரதையாகத்தான் உள்ளே செல்லவேண்டும்.
கீழிருப்பு சுவாமிக்கு திரவியம் இல்லை. தேவாரம் இசை அபிஷேகம் இல்லை. ஆனால், இறை சாந்நித்தியம் மிகவும் நிறைய இருக்கிறது. ஒரு காலத்தில் தனவந்தவர் ஒருவர் இருந்தார். அருகிலுள்ள பூம்புகார் மிகப்பெரிய வியாபார கேந்திரமாக இருந்தது. குதிரைகளை வாங்கி விற்பதை தன் தொழிலாகக் கொண்டு இருந்தார். இந்ததனவந்தர் ஒரு கட்டத்தில் செல்வத்தின் ஆசை மெல்ல விலக, இறைப்பணிக்கு தன் பாதையை திருப்பிக் கொண்டு எந்நேரமும் இந்த சிதம்பரேஸ்வரர் ஆலயத்திலேயே அமர்ந்து ஈசனுக்கான நித்தியபடி வேலைகளை கவனித்து வந்து சாமியார் என்கிற புதுப்பட்டமும் பெற்றார்.
ஒரு முறை மிளகு மூட்டைகளை கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு சில வியாபாரிகள் இந்தவழியே வந்திருக்கிறார்கள். கீழிருப்பு சிதம்பரேஸ்வரரை நெருங்கி வரும்போது திடீரென மழை பிடித்துக் கொண்டதால் சாமியார் மிளகு மூட்டைகளை இந்தகோவிலில் வைக்க முன்வந்தார். சாமியவர்
அவர்களிடம் இந்த ஆலயத்தின் உள்ளே வையுங்கள். மழை ஓய்ந்த பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்றார் வியாபாரிகளும் அவ்வாறே செய்தனர்.
அன்று சுவாமிக்கு இறைநைவேத்தியம் தயாரிக்க மிளகு தேவைப்பட்டிருக்கிறது. வியாபாரியிடம் சிறிது மிளகு கொடுங்கள் உங்களுக்கு இறைவனுக்கு ஆகாரம் கொடுத்த புண்ணியம் சேரும் என்று சொல்ல,
வியாபாரிகளோ இரக்கம் இல்லாமல் மிளகு இல்லை. அனைத்து மூட்டையிலும் கடுகுதான் இருக்கிறது என்றிருக்கிறார்கள். சாமியாரும் புன்னகைத்தபடி அங்கிருந்து நகர முற்பட வியாபாரிகள் ஓöய்வெடுத்துவிட்டு மறுநாள் காலைவந்து கடுகு மூட்டைகளை எடுத்துச்செல்றோம். அதுவரை இங்கேயே பத்திரமாக இருக்கட்டும் என்று சென்றுவிட்டனர்.
சாமியார் தனது தவவலிமையால் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி அங்கிருந்த மிளகு மூட்டைகளை கடுகு மூட்டைகளாகவே மாற்றிவிட்டார்.
மறுநாள், காலை அங்குவந்த வியாபாரிகள் மூட்டையை சோதித்துப்பார்த்துவிட்டு அதிர்ந்து போனார்கள்.அந்தசாமியாரிடம் முறையிட இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள் இறைவன் உங்களுக்கு அருளுவார் என்றுகூறியிருக்கிறார். அவர்கள் மன்னிப்பு கேட்கவும் கடுகு மூட்டைகள் மிளகு மூட்டைகளாகி இருக்கின்றன. இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தசாமியார்" மிளகு ச்சித்தர் ' என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு ஆலயம் வழியாக வரும் வியாபாரிகளுரக்கு சிதம்பரேஸ்வரர் துணையாக இருக்கிறார் என்று ஒரு செவிவழிக்கதை உண்டு.
மயிலாடுதுறை பூம்புகார் வழியே சுமார் 4கி.மீ துõரத்தில் மயிலாடுதுறையிலிருந்து மெயின்ரோட்டிலேயே இருக்கிறது கீழிருப்பு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீசிதம்பரேஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயில் பற்றி மேலும் அறிய 9840053289
உத்தமர்கோயில்
சிவனைப்போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக்கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன் குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒருதலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு ,பிரம்மாவின் கபாளமும் (மண்டைஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவே இல்லை. பசியில வாடிய சிவன் அதனை படச்சைபாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள் சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் பூரணவல்லித்தாயார் என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி அளித்தார்.
சப்தகுரு ஸ்தலம்
சிவகுரு தட்சிணாமூர்த்தி, விஷ்ணுகுரு வரதராஜர், குருபிரம்மா.சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன்,அசுரகுரு சுக்கிராட்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருபெயர்ச்சியின் போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே பிச்சாண்டார் கோயில் ஸ்தலம் "சப்தகுரு ஸ்தலம் ' எனப்படுகிறது.
பிட்ஸ்
மயிலுக்கு சாபவிமோசனம்
*ஒரு சமயம் திருமாலும், நான்முகனும் முருகனைக்காண சென்றனர். அப்போது அவர்களை வணங்காமல் கர்வத்துடன் இருந்தது மயில். இதனால் கோபம் கொண்ட முருகன் மயிலை கல்லாகப்போகும் படி சபித்தான். தன்னுடைய தவறுக்கு வருந்திய மயில் ஆறுமுகனான முருகனை தியானித்து தவம் செய்தது . இதனால் மனம் இறங்கிய ஆறுமுகக்கடவுள் மயிலுக்கு சாப விமோசனம் அளித்து அருள் புரிந்தார். இவ்வாறு மயில் சாப விமோசனம் பெற்ற திருத்தலம் "மயூராசலம் ' என்னும் குன்றக்குடி திருத்தலம் ஆகும்.இத்திருத்தலம் காரைக்குடிக்கு அருகில் இருக்கிறது. இந்ததலத்தில் எழுந்தருளும்படியாக முருகனை வேண்டிக்கொண்டது மயில். அதன்படியே கோயில் கொண்ட முருகப்பெருமான் இடது காலைத் தொங்கவிட்டு , வலக்காலை மடித்து வைத்து சுகாசன நிலையில் அருள்புரிந்து வருகிறார்.
நாழித்தீர்த்தம்
* முருகப்பெருமுõனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துõரின் தீர்த்தங்கள்கடலும் நாழிக்கிணறும்.தனது படைவீரர்கள் தாகம் தீர்க்க வேலாயுதத்தால் நீரூற்று ஒன்றறை ஏற்படுத்தினார் முருகப்பெருமான் . இதை "ஸ்கந்தபுஷ்கரணி 'என்பார்கள். ஒரு சதுர அடி சுற்றளவும், சுமார் ஏழு அடி ஆழமும் கொண்ட சிறிய நீரூற்றை நாழிக்கிணறு என்பார்கள். கடலின் அருகில்இருந்தாலும் இதன் நீர் உப்பக்கரிப்பது இல்லை. இதன் அருகிலேயே உப்பு நீரைக்கொண்ட பெரிய கிணறு (சுமார் 14 அடி சுற்றளவு) ஒன்றும் உள்ளது. முதலில், நாழிக்கிணற்றிலும் பிறகு கடலிலும் நீராடிய பிறகே செந்தில் நாதனைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
அனுமார்வாவி
* ஸ்ரீராம ராவண யுத்தத்தின் போது மூர்ச்சையான லட்சமணனைக்காப்பாற்ற ஜாம்பவானின் ஆலோசனையின் படி சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரச்சென்றார் அனுமன். அதன்படியே சஞ்சீவி மலையுடன் திரும்பிவந்தார்.
அவ்வாறு திரும்பி வரும் வழியில் அவருக்கு களைப்பும் தாகமும் ஏற்பட்டது. இதையறிந்த ஸ்ரீமுருகப் பெருமான் வேலாயுதத்தைக்கொண்டு அனுவாவி(சிறியகுளம்) ஒன்றை உருவாக்கி , அனுமனின் துயர் தீர்த்தாராம்.அந்தஇடத்துக்கே அனுவாவி என்று பெயர். அதாவது "அனுமார்வாவி' என்றபெயரே மருவி அனுவாவி என்று அழைக்கப்பட்டதாம். இந்தஇடம் கோவையிலிருந்து சுமார் 15கி.மீ
தொலைவில் அமைந்திருக்கும் திருத்தலம் அனுவாவி திருத்தலமாகும்.
*காற்றும் காளிரூபமும்
தென்னாட்டில் வணங்கப்படும் காளிதேவி சிவபெருமானின் ஸ்ரீகண்டத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டவள். இவள் காற்றுத்தத்துவமாக விளங்குகின்றாள். காற்று ஓயாது ஓரிடத்தில் நிற்காது அலைவதைப்போலவே காளியும் சதா இயங்கிக்கொண்டே இருக்கின்றாள்.
சிவபெருமானின் பஞ்சதோங்களிலொன்றான அகோரமூர்த்தியிடமிருந்து ""அகோரரேசி'' என்பவள் தோன்றியது போலவே சிவபெருமானின் இன்னொரு தேகமான ஈசான தேகத்திலிருந்து காளிதேவி தோன்றியதாகவும் கூறுவர். காளியைக்காற்று வடிவில் வழிபடும் வழக்கம் ஓரிரு இடங்களில் உள்ளது. அதில் வேதாரண்யத்துக்கு அடுத்துள்ள அகத்தியான் பள்ளியில் அகத்தீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள மகாமண்டபத்தின் தெற்கு சுவரில் ஒரு ஜன்னல் அமைந்துள்ளது. இந்த ஜன்னலில் தவழ்ந்து வரும் காற்றே காளிதேவியாக வழிபடப்படுகிறாள். இந்த ஜன்னலுக்கு ஆடை அணிவித்து விளக்கேற்றி உச்சிவேளையில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றது.
சக்தியும் சிவனும் சேர்ந்த கவுரிசங்கரன்
ஒருசமயம் பார்வதி தேவியை நோக்கிச் சிவபெருமான் ,"காளீ வருக!' என்று அழைத்தார். அதற்கு பார்வதி தேவி "சுவாமி என்னை கருநிறத்தவள் என்று பொருள் பட வெறுத்துக்கூறியதேன்? தங்களுகுஞூகு பிடித்தமற்ற எனது இந்தப்பசிய கருமை நிறத்தை நீக்கிக் கொண்டு பொன்னிறமான உடலைப்பெறுவேன் என்று கூறினாள். பிறகு சிவபெருமானிடம் அனுமதி பெற்றுக் கொண்டு கேதாரம் என்ற தலத்தை அடைந்து அங்கு சிவபூசை செய்து கடுந்தவம் புரிந்து சிவனருளால் பொன்னிறமான உடலைப்பெற்று கவுரிதேவியானாள் பார்வதி. பின் மந்திரமலைக்குச் சென்று சிவசங்கரனான சிவனை அடைந்து கவுரிசங்கர் ஆனாள். நீண்டநாட்கள் இன்பமாக வீற்றிருந்தனர்.பின்னர் மீண்டும் கயிலைக்கு எழுந்தருளினர்.
ஒருசமயம் கயிலையில் உள்ள பொன் மண்டபத்தில் பிரம்மா ,விஷ்ணு முதலான அனேக தேவர்கள் சூழச் சிவபெருமான் கவுரிதேவியோடு பொற்சிம்மாசனத்தில் எழுந்தருளியிருந்தார்.
அப்போது அங்கவந்த பிருங்கிமகரிஷியானஜர்.கவுரி தேவியை விடுத்து சிவனை மட்டும் வணங்கினார். இதனால் கடுங்கோபம் கொண்ட தேவி சிவனிடம் "இந்தஉலகில் உள்ள சகல ஜீவராசிகளும் நாம் இருவரையும் வேறுவேறாக எண்ணாமல் அம்மையப்பராகவே வணங்குகிறார்கள். அப்படியிருக்க பிருங்கி முனிவர் மட்டும் என்னை மதியாமல் தங்களை வணங்க காரணம் என்ன?' என்றாள்.
அதற்கு சிவபெருமான் மலைமகளே 1.வேண்டியதை அடைவது (காமியம்) 2. வீடுபேறு(மோட்சம்) என்ற இரண்டு வகையான வேண்டுதல்கள் உள்ளன. வீடு, மனை, மக்கள் முதலிய சுகங்களை வேண்டுபவர்கள் உன்னையும், என்னையும் சேர்த்து ஆராதித்து அவற்றை தமதருளால் அடைந்து வருகின்றனர். ஆனால்,மோட்சத்தை மட்டுமே விரும்புபவர்களுக்கு உன்னுடைய அருள் தேவையில்லை, அதனால் அவர்கள் என்னை மட்டும் வணங்குகின்றனர் என்றார்.
அதைக்கேட்ட பார்வதி கோபம் கொண்டு என்னருளை விரும்பாத பிருங்கிக்கு எனது அம்சமாகிய தசை,உதிரம் ஆகியவை மட்டும் எதற்கு? அதையும் விட்டுவிட்டு மோட்சமடையலாமே ? என்றார்.அதைக்கேட்ட பிருங்கி மகரிஷி அதுவும் உண்மைதான். சிவமே செம்பொருள் எனத்தேர்ந்த எனக்கு இவை தேவையில்லை என்று கூறித் தன் தவவலிமையால் நிணம்,தசை,நரம்பு ஆகியவற்றை உதிர்த்து எலும்புருவாய் ஆனார்.அவரது உடம்பில் சக்தி நீங்கியதும் நிற்க முடியாமல் சாயந்தார். அப்போது பரமன் அவருக்கு மூன்றாவது காலை அளித்து சாயாது அவரை நிமிர்ந்து நிற்க வைத்தார். பார்வதிதேவி, பிருங்கிக்கு சிவன் அருள்புரிவதைக்கண்டு வருந்தினாள். அதனால் அவள் கயிலையைவிட்டு நீங்கி மண்ணுலகிற்கு வந்து கெவுதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்து சிவனைவிட்டு தான் பிரிந்து வந்ததை கூறினாள். அம்முனிவர் பார்வதிதேவிக்கு பல இனிய வார்த்தைகள் கூறி பீண்டும் சிவனிடம் சேரும் படிக் கூறினார்.
அதற்குத்தேவி," மீண்டும் தவம் செய்தே அவரை அடைவேன்.எனக்கு அதற்கான வழியைக் கூறி அருளுங்கள் 'என்றாள்.பார்வதி சிவனைக்காண பலஆண்டுகள் தவம் செய்ய வேண்டியதில்லை.அதற்கு எளியவிரதம் ஒன்று இருக்கிறது.அதைகடைப்பிடித்தால் போதும் என்று கூறினார்.அதுவே புரட்டாசிமாதம் வளர்பிறை அஷ்டமி தொடங்கி தேய்பிறை சதுர்த்தசி டரயிலான இருப்பத்தோறு நாட்கள் நோற்கப்படும் கேதாரீசுவர விரதமாகும்.
பின்னர் பார்வதி தேவி கேதாரம் சென்று அங்குக்கங்øக்கரையில் 21 நாட்கள் கடுந்தவம் புரிந்தாள். அவளின் தவத்தில் மகிழ்நத சிவன் அவளுக்கு காட்சியளித்து தன்னுடைய இடப்பாகத்தில் அவளை இணைத்துக் கொண்டார். கவுரியால் கடைபிடிக்கப்பட்ட அந்தவிரதமே கேதாரீசுவர கவுரிவிரதம் என்று அழைக்கப்படுகிறது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள் கொண்டு "மகா அர்த்தநாரீசுவரர்' எனும் தலைப்பில் மிகப்பெரிய புத்தகமாக தொகுத்திருக்கிறார்கள். இந்தபுத்தகத்தை பெற விரும்புபவர்கள்:
திருவாவடுதுறை ஆதீனம் சரஸ்வதி மகால் நுõல்நிலையம் மற்றும் ஆய்வு மையம்,திருவாவடுதுறை609803. போன்: 04364232021
சித்தமல்லி
கவலைகளை போக்கும் ஸ்ரீகுலசேகர பெருமான்
அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீகுலசேகர பெருமான்
சோழ நாட்டில் உள்ள திருக்கோயிலில் ஒன்று தான் இந்தஆலயம். முத்துப்பேட்டைக்கு அருகே உ<ள்ள ஒரு கிராமம் இந்த சித்தமல்லி கட்டடக்கலை நுட்பம் மற்றும் புராணம் இக்கோவில் 2000 வருடத்திற்கு முற்பட்டது என்று கூறுகிறது.
11 ஆம் ஆண்டில் மன்னன் குலசேகர பாண்டியன் இந்த ஆலயத்தைக் கட்டி வித்தானாம். பிற்கால சோழ மன்னனான 3ஆம் ராஜராஜன் காலத்தில் கி.பி.12ஆம் நுõற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் தகவல் உண்டு. தவிர 3ஆம் ராஜேந்திர நாயக்க மன்னர்கள் முதலானோர் திருப்பணிகள் பல செய்துள்ளனர்.
கி.பி 1256ஆம்ஆண்டு கல்வெட்டில் ராஜேந்திர சோழ வளநாட்டு புறக்கரம்பை நாட்டு சித்தமல்லிசதுர்வேதி மங்கலத்து என்று ஊரின் பெயர் கூறப்பட்டுள்ளது.
பாண்டவர்கள் வனவாசத்தின் போது சித்தமல்லியில் சிலநாட்கள் தங்கினராம். அப்போது இந்தஊர் முன்னுõதி மங்கல அக்ரஹாரம் எனப்பட்டதாம். குலசேகர ஸ்வாமியை பாண்டவர்கள் வணங்கி வந்துள்ளனர்.
பாண்டவர்கள் இத்தலத்திற்கு வந்தபொழுது மிகவும் சித்தம் கலங்கிய நிலையில் இருந்தனராம். இந்த ஊரில் உள்ள சித்தர்களால் வழிபட்ட குலசேகரபெருமானை வழிபட்டபிறகு அவர்கள் சித்தம் தெளிவான நிலையில் அடைந்ததால் அவரை சித்தம் தெளிவித்த ஈஸ்வரர் என்று கூறி வழிபட்டனராம். அதனால் சித்தத்தை தெளிவித்த இத்தலத்திற்கு சித்தமல்லி என்ற பெயர் வந்தது. எனவே இத்தலத்து ஈசனை வழிபடுவோர் மனஅமைதியையும் , நிம்மதியையும் அடைவர் என்பதாக ஐதீகம்.
இந்தஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடந்து சுமார் 200 ஆண்டுகள் இருக்கும் என்கிறார்கள். தற்போது இன்று இந்த ஆலயத்தின் நிலை பரிதாபமானது..
மேற்கு நோக்கி அமைந்திருக்கும் கோவில் விஷேசநாட்களில் மட்டும் இதைதிறக்கின்றனர். மற்ற நாட்களில் தெற்கு வாசல் மட்டுமே திறந்திருக்கும்.
மேற்கு திசை முகப்பில் செங்கல் கட்டுமானத்துடன் மூன்றடுக்கு ராஜகோபுரம் சிதிலமடைந்துஇருக்கிறது. எதிரில் திருக்குளம் , தேவர்குளம், வேர்களால் உண்டாக்கப்பட்டது இருக்கிறது.
இங்குள்ள ஸ்ரீதண்டாயுதபாணி கலைநயத்துடன் காணப்படுகிறது. கால்களில் பாதரட்சை அணிந்து இடக்கையை இடுப்பில் வைத்துக் கொண்டு வலக்கையில் இருக்கும் தண்டத்தை பீடத்தில் ஊன்றியபடி காட்சி தருகிறார்.
மொட்டைத்தலை மற்றும் கழுத்தில் ருத்திராட்ச மாலைகள் . இவரது திருக்கரத்தில் இருக்கும் தண்டத்தை சுண்டினால் வெண்கல ஓசை கேட்கிறது. ஒரே கல்லால் ஆன அற்புத வடிவம்.
பழனிமுருகனுக்கு உள்ள வேண்டுதலை இங்கு செலுத்தலாம் என்கிறார்கள்.
ஸ்ரீமீனாட்சி அம்மனுக்கும் , ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் சந்நிதி உண்டு .கோஷ்டங்களில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீநர்த்தன விநாயகர் உள்ளன. மிகவும் கலைநயம் வாய்ந்த விநாயகர். தவிர ஸ்ரீவிநாயகர் வள்ளி தெய்வானை சமேத சுபரமண்யர் ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உண்டு.
இதைத்தவிர ஸ்ரீபைரவர், சூரியபகவான் ,நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் உண்டு.
அற்புத் தீர்ததம்
இந்த தலத்தின் தலவிருட்சம் வில்வம். கோயிலின் உள்ளே கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறை அதிசய சுணை என்கிறார்கள். கோயிலின் வெளியே உள்ள இடங்களில் உப்புசுவை உள்ள தண்ணீர் தான் உள்ளது. இந்தநீர் மாத்திரம் மிகவும் சுவையாக இளநீர் மாதிரி இருக்கிறது.
இத்திருக்கோவிலின் குளம் தேவர்களால் உண்டாக்கப்பட்டதால் தேவர் குளம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏழுகிணறுகள் உள்ளன. அந்த ஏழும் ஏழு புண்ணிய நதிகளை குறிக்கிறது. இங்கு குளித்தால் ஏழு புண்ணிய நதிகளில் குளித்த பலன் கிடைக்கும் .
தேவர்குளம் பக்கத்தில் நந்தியால் உண்டாக்கப்பட்ட நந்திகுளம் உள்ளது. முன்பு எல்லாம் அந்தகுள நீரானது நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும் இங்குள்ள நந்தியை பிரதோஷ காலத்தில் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
மேற்கு நோக்கிய குலசேகரஸ்வாமி சந்நிதி . வெளியே விநாயகர் , துவாரஸ்கந்தர் உள்ளனர். ஸ்ரீகுலசேகர ஸ்வாமியை அகத்தியரும் வழிபட்டதாக சொல்கிறார்கள். ஈசனின் கருவறைக்கு அர்த்தமண்டபம் , மகா மண்டபம் ஆகியன உண்டு. ஆவுடையாரின் மேல் பெரிய பாண லிங்கம் உள்ளது. லிங்கத்திருமேனியில் வலது பாகத்தில் வடு ஒன்று உள்ளது. அர்ஜீனர் எய்த அம்பால் ஏற்பட்ட வடுவாம். தனக்கு தரிசனம் தரவில்லை என்று கோபத்தால் ஸ்வாமி மேல் அம்பு எய்தான் என்கிறார்கள்.
ஸ்வாமி மேல் வடு இருப்பதால் வடுக்களான தமது கவலைகளை உடனே ஸ்வாமி போக்கி விடுவார் என்கிறார்கள். வருடந்தோறும் மாசிமாதம் 21ம்தேதி முதல் 23 ம்தேதி வரை சூரிய பகவான் தன் கிரணங்களால் ஸ்ரீகுலசேகர ஸ்வாமியை வணங்குவாராம்.
அன்னை அபிராமி சுமார் நான்கடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் தெற்கு திசைநோக்கி தரிசனம் தருகிறாள். திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது அபிராமியாக திகழ்கிறாள்.வலதுகாலை சிறிது முன்னுக்கு வைத்து கூப்பிட்ட குரலுக்கு உடனே வரும் நிலையில் இருப்பது ரொம்ப அதிசயம் என்கிறார்கள்.
இக்கோயில் பற்றி விவரங்களை மேலும் அறிய எஸ்.கிருஷ்ணஜெயம்:98400 53289
பரிகாஸ்தலம்
நாகதோஷம் , பித்ருதோஷம், ஆயுள் அபிவிருத்தி அளிக்கும் திருக்கடையூருக்கு இணையான ஸ்தலம். குலசேகரப் பெருமான் அபிராமி அம்மனுக்கு நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நல்லெண்ணெய்யால் மூன்று விளக்கு ஏற்றி வழிபட திருமணத்தடைகள் நீங்கி சீரும் சிறப்புடனும் திருமணம் நடைபெறும் என்பது <உண்மை.
சூரியன் இந்த ஈசனை வழிபடுவதால் நாமும் தரிசனம் செய்தால் சருமவியாதிகளும் கண்பார்வை கோளாறுகள் உடம்பு எரிச்சல் போன்றவை மறைந்துவிடும்.
இத்திருக்கோவிலுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் பெருகவாழ்ந்தான் அருகில் உள்ளது சித்தமல்லி கிராமம்.
இறைப்பணியில் ஈடுபட ஒரு அறிய வாய்ப்பு
கேட்பாரற்றுக்கிடக்கும் கோவில்கள் ஒருபுறம் . கேட்பார் இருந்தும், கவனிப்பார் இல்லாமல் இருக்கும் கோவில்கள் மறுபுறம் . இரண்டும் இல்லாமல் பெயருக்கு ஓர் அர்ச்சகர் மட்டும் இருக்கும் கோவில்கள் ,தமிழகத்தில் ஏராளம்.
வருமானம் இல்லாவிட்டாலும் , அதே÷ காவில்களில் அர்ச்சகர் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். ஒரே காரணம், தலைமுறை தலைமுறையாக தங்கள் ÷முன்னோர் அர்ச்சித்து வந்த கோவில் என்பது தான். அர்பணிப்பு உணர்வோடு செயல்படும் அர்ச்சகர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். சென்னை தியாகராய நகரில் வசிக்கும் மகாலெட்சுமி என்பவர். இவரின் முயற்சியால், இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்பு மற்றும் உபயதாரர்களின் பங்களிப்போடு இதுவரை 14 கோவில்கள் புணரமைக்கப்பட்டு ,கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இன்னும் 42கோவில்களில் கும்பாபிஷேகப் பணி நடந்து கொண்டிருக்கிறது.
இவர் அர்ச்சகர்கள் வாழ்விலும் ஒளியேற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.
அவர் கூறியதாவது:
ஏராளமான கோவில்களில் ,அர்ச்சகர்களுக்கு சொல்லிக்கொள்ளும் படியான வருவாய் இருப்பதில்லை. இருந்தும் , தெய்வம் தங்களைக் கை விடாது என்ற நம்பிக்கையில், தொடர்ந்து இறைப்பணி ஆற்றி வருகின்றனர். அவர்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றும் வகையில் ,தமிழகம் முழுவதும் ,முதற்கட்டமாக 30 கோவில்களைத் தேர்ந்து எடுத்துள்ளோம்.
இங்கு உள்ள அர்ச்சகர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் ஆளுக்கு ஒரு அர்ச்சகர் என்ற ரீதியில் தத்தெடுத்துக் கொள்ளலாம். சம்பளமாக மாதம் 1,500ரூபாய், பத்துகிலோ எண்ணெய், 15கிலோ அரிசி, 300ரூபாய்க்கு பூ என,மாதம் சுமார் 3,000 ரூபாய்க்குள் அடங்கும் செலவுகளை ஏற்றுக் கொள்ளலாம்.
சைவம், வைணவம்,சாக்தம் என அனைத்து கோவில்களும் இந்தப்பட்டியலில் இருக்கின்றன.யாரும் நேரடியாக எங்களிடம் பணம் தரவேண்டியதில்லை.
சம்பந்தப்பட்ட கோவில்களுக்கே நேரடியாக சென்று நிலைமையை நேரில் பார்த்து ,அதன்பிறகு, இந்து அற நிலையத் துறையிடம் அனுமதி பெற்று அர்ச்சகர்களிடமே அந்தத் தொகையை வழங்கினால் போதுமானது. இதன்மூலம் அந்தக் கோவில்களில் ஒரு கால பூஜையாவது தடைபடாமல் நடப்பது நிச்சயிக்கப்படும்.
விபரங்களுக்கு 0442815 2533, 98400 53289 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு மகாலெட்சுமி கூறினார்.
இறைப்பணியில் நம்மையும் ஈடுபடுத்திக் கொண்டு தொண்டாற்றலாமே!
கல்வியில் சிறந்துவிளங்க வைக்கும்
கழுகுமலை ஸ்ரீகழுகாசலமூர்த்தி
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலாலும், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தாலும் கழுகுமலை சிறப்பு பெற்றுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துõருக்கு அடுத்த பெரும் பேறு பெறுவது கழுகுமலை. தமிழ்நாட்டில்லுள்ள மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
துõத்துக்குடி மாவட்டத்திலிருக்கிறது கழுகுமலை. பெயருக்கேற்றார் போல மலை ஓங்கி உயர்ந்திருக்கிறது. இந்த கழுகுமலையில் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார் கழுகாசலமூர்த்தி என்கிற ஆறுமுகப்பெருமான். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள்.
குஇத்தலத்து நாயகன் கழுகாசலமூர்த்தி மேற்கு பார்த்தும், வள்ளி தெற்கு பார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள் பாலிக்கிறார்கள். அமர்ந்த நிலையில் நான்கடி உ<யரத்தில் இருக்கிற பெரிய திருமேனி முருகனுடையது.
திருமணத்தடை , குழுந்தைப் பாக்கியம் , கல்வியில் சிறந்து விளங்கவும் இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
கந்தபுராணத்தின் ஆசிரியர் கச்சியப்பர்,குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும் அதில் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம். கழுகுமலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தலப்பெருமை
கந்தபுராணத்தின் ஆசிரியர் கச்சியப்பர்,குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும் அதில் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தலத்தின் மிகச்சிறந்த அம்சம் மலையைக்குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பது தான். இந்த குடவரைக்கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இக்கோயிலைச்சுற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும். இந்த கழுகாசமூர்த்திக்கு முகம் ஒன்று ,கரம்ஆறு, தன் இடது காலை மயிலின் கழுத்திலும் வலது காலை தொங்கவிட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சிதருகிறார். மயிலாக மாறிய இந்திரன் . பிற கோயில்களின் அசுரன் தான் மயிலாக இருப்பான் . எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும். ஆனால், இத்தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது. எனவே, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் குருவும் (தட்சிதணாமூர்த்தி) முருகனும்(செவ்வாய்) இருப்பது சிறப்பு . எனவே குரு மங்கள ஸ்தலம் என்கிறார்கள். கழுகாசலமூர்த்தியை அகத்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம். இங்கு முருகனுக்கு தனி பள்ளியறையும் , சிவ பெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார்.ராமனால் இறுதிக்காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இதை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு மகாமுனிவர் ராமனிடம் , தன்னால் தன் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய இயலாமல் போயிற்றே , இதனால், ஏற்பட்ட பாவம் எப்போது தீரும்? எங்கு போய் இதைக்களைவது? என்றார். அதற்கு ராமன், நீ கஜமுகபர்வதத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும் என்றார்.
இதன் பிறகு பலாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. முனிவர் கஜமுகபர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்போது முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார்.அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தாரகாசூரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர கஜமுகபர்வதத்தில் ஓய்வு எடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழந்த முருகன் சம்பாதிக்கு முக்திதந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகளை செய்ய முடியாத பாவம் நீங்கியது.கழுக முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் "கழுகுமலை' எனப்பெயர் பெற்றது.
கழுகுமலையில் உள்ள அரைமலையில் கி.பி 7மற்றும் 8ம்நுõற்றாண்டைச்சேர்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சமணசமயத்தைச்சேர்ந்த தீர்த்தங்காரர்களின் கல்வெட்டுச்சிற்பங்கள் பொலிவுற அமைக்கப்பட்டுள்ளன.
"வெட்டுவான் கோயில் ' என்றழைக்கப்படுமுஞூ கல்வெட்டில் பாறையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கோயிலானது கல்லில் அமைந்த கலைப்பெட்டகம். ஜைனர்களிவ் ஜெயின் குடவரைக் கோயிலுக்கும்,அவர்களது கட்டடக்கலைக்கும் சான்றாக இருக்கிறது.
இந்தமலையை அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்திருக்கிறது.காலத்தினால் அழியாத கல்வெட்டுகள், சிற்பங்கள் என மலையின் பாதி உயரஅளவில் சிற்பங்களே அலங்கரிக்கின்றன. சிற்பங்கள் அத்தனையும் கலையழகு. முற்காலத்தில் ஜைன வகுப்புகள் அவ்விடத்தில் நடத்தப்பட்டுள்ளன. கருஞ்கல் மலையில் கற்கோவிலை செதுக்கியிருக்கிறார்கள். மகாபலிபுரத்துச்சிற்பங்களை நினைவுபடுத்தும் படியாக இருக்கிறது அதன் அழகு.
கோவில்பட்டிக்கும் ,சங்கரன் கோவிலுக்கும் இடையில் கோவில்பட்டியிலிருந்து 22கிமீ தொலைவில் இருக்கிறது கழுகுமலை.
பெண்கள் மலர்
நாமே செய்யும் பரிசுப் பொருள் (கிப்ட்மேக்கிங்)
தேவையான பொருட்கள்:
குபேரர் அச்சு(மோல்டு), பூந்தொட்டி,(மண்,மரம்), பூ, இலைகள், சிறிய கட்டை, வொயிட் எம்சீல், தேங்காய் எண்ணெய்,விருப்பமான மெட்டாலிக் கலர்.
செய்முறை
வொயிட் எம்சீல் கலவையை (வொயிட் , கிரே இரண்டும் இருக்கும் ) நன்றாக கலக்கவும். நமக்கு விருப்பமான அச்சில்(படத்தில் குபேரர்) தேங்காய் எண்ணெய் தடவி , அதில் வொயிட் எம்சீல் கலவையை அச்சில் வைத்து அழுத்தவும். அரைமணி நேரம் கழித்து மோல்டை லேசாக விரிக்க அச்சில் செய்த பொம்மை வெளியே வரும். பிறகு அதன் மேல் வர்ணம் அடித்து காய வைக்கவும்.
பூந்தொட்டியில் எம்சீல் நிரப்பி இலை, பூக்கள் நடவும். பொம்மையின் கீழும், பூந்தொட்டியின் கீழும் எம்சீல் வைத்து அதை மரப்பலகையில் ஒட்டவும். இப்போது நாம் எதிர்ப்பார்த்த பரிசுப்பொருள் தயார்!.
ஹேண்ட் மேக்கிங்
டெக்ஸ்டைல் பிரிண்டிங்
தேவையான பொருட்கள்
பிளைன் போர்டு, மைகாபோர்டு, டேபிள்கம், கோல்டுபவுடர், பிக்சர்,வைண்டர்,பிரிண்டிங் செய்ய ஸ்கிரீன், குயீஸ்,கத்தி,பவுல், ஸ்பூன்,கலர்துணி.
செய்முறை
கோல்டுகலர் பவுடர் 1ஸ்பூன்,இரண்டு ஸ்பூன் பைண்டர் சேர்த்து 2.2.3 என்ற விகிதத்தில் டிராய்பிக்சர் கலந்து கொண்டு பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்.
போர்டில் டேபிள் கம் விட்டு கையில் பரப்பவும். பிரிண்டிங் செய்யவேண்டிய துணியை விரித்து பரப்பிவிட்டு அதன்மேல் ஒட்டவும். சுருக்கம் இல்லாமல் சமமாக துணி விரிந்திருக்கவேண்டும்.
பிரிண்டிங்காகன டிசைனின் அடிப்பகம் ,துணியின்மேல் புறம் படியும் படி வைக்கவும்.
டிசைன்போர்டு, பிரேம்(அச்சு சட்டம்) உள்ளே மேல்புறம் கலர் கலவை பேஸ்ட்டை போட்டு குயீசால் வலிக்கவும். (முன்பின்னாக மாற்றி மாற்றி ஒரே சீராக அச்சுவிழுமாறு வலிக்கவேண்டும். கீழும்,மேலுமாக பிரிண்ட் விழும் படி வலிக்கவேண்டும்.
பிறகு ஸ்கிரீனை எடுக்க தேவையான அச்சு பிசிறில்லாமல் விழுந்திருக்கும்.
விருப்பமான உடைகளில் டிரஸ்மேட்டீரியல்களில் அச்சு விருப்பம் போல பதித்துக் கொள்ளலாம்.
தங்கம் மாதிரி தண்ணீரையும் சேமிக்கும் காலம் வரும்
ஒரு காலத்தில் ஆறாக இருந்ததெல்லாம் இன்று சாக்கடை பாயும் நதிகளாகவும், குளங்களாகவும் மாறி இருக்கின்றன. கோவை, திருப்பூர்,சென்னை போன்ற தொழில் பெருநகரங்களில் இருக்கும் குளங்கள் , ஆறுகள் எல்லாம் ஒரு காலத்தில் மக்கள் பயன்படுத்தவும், சுத்தமான தண்ணீரை தேக்கி, பாயும் ஆறுகளாக அன்றாடம் பயன்படுத்தபட்டுக் கொண்டிருந்திருக்கின்றன. ஆனால், மக்கள் வேலைவாய்ப்பிற்காகவும், பொருளாதார தேவைகளுக்காகவும் குடிபெயர்ந்த பிறகு , தொழிற்சாலைகள் பெருக்கத்தின் காரணமாக இன்றைக்கு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு ஆறுகளில் கொட்டப்படுவதால் ஆறுகளின் முகங்களே மாறிப்போயிருக்கின்றன. சாயக் கழிவுகளால் தன்னுடைய நிறத்தையும், குடிக்கும் நீர் என்கிற தன்மையையும் இழந்திருக்கின்றன.
கோவையின் நொய்யல், சென்னையில் கூவம் என பல நதிகள், ஏரிகள், குளங்கள் கூட இன்றைக்கு மக்களின் குடியிருப்பு பகுதியின் ஆக்கிரமிப்பால் தங்களின் நிறம், தன்மை, குணம் மாறி சுய அடையாளங்களை இழந்து நிற்கின்றன. இன்று சென்னையில் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் அரசாங்கம் செயல்படத்தொடங்கியிருக்கிற அதேவேளையில் கோயம்புத்துõரில் ஒருகாலத்தில் பாழ்பட்டுப்போன நொய்யல் ஆற்றை சீரமைத்ததைத் தொடர்ந்து தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிற நேமம் ஏரியை துõர்வாரும் பணியை செய்யத் தொடங்கியிருக்கிறது கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிறுதுளி என்கிற அமைப்பு அதன் அமைப்பாளர்களில் ஒருவரான வனிதாமோகனை சந்தித்தோம்.
* இன்றைக்கு ஆறுகள், குளங்களோட தன்மை மாறிப்போக என்னகாரணம்? அதை எப்படி சரிசெய்யலாம்?
நாம் நம் ஆரோக்கியத்தில செலுத்தற அக்கரையை நம் உடம்பில ஓடற 90 % தண்ணீர்ங்கற மறந்துட்டு அந்த தண்ணீர்ங்கற ஆதாரத்தை காப்பாத்த தவறிட்டது தான். பல ஆறுகள்ல தொழிற்சாலை கழிவுகள் கலக்குது, பல இடங்கள்ல வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருக்காங்க இப்படி பல காரணங்கள் இருக்கு.
அரசர்கள் ஆண்ட காலத்தில பல மன்னர்கள் கோயில்கள் அருகில் குளங்களை வெட்டி வெச்சாங்க. அதில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர் மக்களுக்கு பயன்படட்டும்னு. இன்றைக்கு பல கோயில்கள்ல குளங்கள் நல்ல நிலைமையில இருக்கு. ஆனா, பல இடங்கள்ல குளங்கள் போதிய பராமரிப்பு இல்லாம துõர்ந்து போயிருக்கு. முன்னேயும் அடிபம்பு வசதி இல்லாம தண்ணீருக்காக பல கிலோமீட்டர்கள் துõரம் மக்கள் நடந்துபோய் தண்ணீர் எடுத்துட்டு வந்தாங்க. இன்னைக்கு போர் போட்டு தண்ணீர் வர்றதால அந்தஅவஸ்தை இல்லை. ஆனா, அப்படி போட்ட போர்ல தண்ணீர் வரணும்னா நிலத்தடி நீர் மட்டம் வேணும் இல்லையா, அது குளங்களையும், ஆறுகளையும் தண்ணீர் வரத்து நல்ல õ இருந்தாத்தானே நீர் தேங்கும். அப்படி பல ஆறுகள், குளங்களை கண்டுக்காம விட்டதால இன்னைக்கு நிலைமை சாயக்கழிவுகள் அதனுடைய அடையாளங்களை இழக்கவெச்சிடுச்சு. இப்பவே பருவம் தப்பி மழை, தண்ணீர் தேவைகள்னு இருக்கறப்போ எதிர்காலத்தில தண்ணீரின் தேவை இன்னும் அதிகமாகும். அப்போ எங்கே போவோம். குளோபல் வார்மிங் னு பயமுறுத்தறாங்க அதிலிருந்து தப்பிக்க குறைந்தபட்சம் நம்மாலான சுய பாதுகாப்புகளையாவது நாம் செய்திருக்கணும் இல்லையா அப்படி யோசிச்சப்ப தொடங்கினது தான் இந்த சிறுதுளி ங்கற அமைப்பு.
எங்க டீம்ல என்னோட சேர்த்து மொத்தம் ஏழுபேர் இருக்கிறோம். டாக்டர்.எஸ்.வி.பாலசுப்பிரமணியன், டாக்டர்.ஆர்.வி.ரமணி, டாக்டர்ரவிசாம், என்.வி.நாதசுப்பிரமணியம்,கணக்லால், சிஆர்,சுவாமிநாதன். ஏதாவது ஒரு குளம், ஏரியை சீரமைக்கணும்னா நாங்க கூடி ஆலோசனை பண்ணி முடிவெடுப்போம். யாரை அணுகலாம். எப்படி இதை முடிக்கறது . இதற்கான அனுமதிகள்னு பல விசயங்கள் இருக்கு.
2003ல் கோயம்புத்துõர்ல அதிகமான வறட்சி இருந்தது. நொய்யல் ஆறு மேற்கு மலைத்தொடர்ச்சிமலையிலிருந்து வரும் தண்ணீரை நம்பி இருக்கிறது. கோயம்புத்துõர்ல 400 ஆண்டுகள் முன்னே அந்தக்காலத்தில குளங்கள் நிறைய வெட்டி எக்கச்சக்கமான தண்ணீரை தேக்கி வெச்சிருந்து இருக்காங்க. அந்த காலத்தில் அரசர்கள் மக்களோட அன்றாடத் தேவைகளுக் காகவும், உணவுத்தேவையான விவசாயத்திற்காகவும்னு பாசன வசதிக்காக பல குளங்களை வெட்டி வெச்சாங்க. ஆனா, இன்னைக்கு அதையெல்லாம் பராமரிக்காம நாம விட்டுட்டோம். அதனுடைய விளைவு வீடுகள் கட்ட மரத்தையும் வெட்டிட்டோம். காடுகள் அழிவால அதனால மழை வளம் குறைஞ்சுப்போச்சு. மழை பருவம் தப்பி வரும்போது தண்ணீர் தேங்க இடம் இல்லாம குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துகிட்டிருக்குற நிலைமை.
பல குளங்கள்ல ஆகாயத் தாமரைகள் படர்ந்து தண்ணீரை உறிஞ்சிடுது. தமிழ்நாட்டில் இப்படி 100 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட பாசனம் உள்ள குளங்கள், ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கு. இப்படி 10 ஆயிரத்து 670 குளங்கள், ஏரிகள் இருக்கு. இதில் 5ஆயிரத்து 520 பாசன கண்மாய்கள், 5 ஆயிரத்து 150 மானாவாரி கண்மாய்கள் இருக்கு. பெரும்பாலான ஏரிகள் குளங்கள் ஆக்கிரமிப்பு, கட்டிடங்கள் கட்டறதுன்னு தண்ணீர் தேங்கும் இடங்கள் காடுகள் அழிச்சமாதிரி குளங்களையும் அழிஞ்சிட்டிருக்கோம்.
நொய்யல் ஆற்றை சீர் செய்யறதுக்காக நாங்க ஒரு திட்டம் வகுத்தோம். கோயம்புத்துõர் தொழில் நகரமானதால பல கம்பெனிகள்கிட்ட நிதியுதவி கேட்டோம். அப்படி எங்களுக்கு நிதியுதவி செய்ய கோயம்புத்துõர்ல எல்எம்டபிள்யூ, எல்ஜி, பிரிகால், சங்கரா ஐ சென்டர்னு பல நிறுவனங்கள் முன் வந்தாங்க அவங்க உதவியோட பெரிய பெரிய இயந்திரங்கள் மூலம் நொய்யல் ஆற்றையும் , பல குளங்களையும் சீரமைச்சோம். இப்போ கடந்தாண்டு பெய்த மழையில தண்ணீர் தேங்கி எங்களோட தாகத்தை தணிக்க உதவியிருக்கு. அதேமாதிரி சென்னை திருவள்ளூர்ல இருக்கிற நேமம்ங்கற ஆயிரம் ஏக்கர் ஏரியை துõர்வாரும் பணியில கோகோலா நிறுவனத்தின் உதவியோட இறங்கியிருக்கிறோம். அரசாங்கமும் பல குளங்களை , ஆறுகளை நுõறுநாள் வேலை த் திட்டம் மூலமாக சீர்செய்யுது. எங்கள் பங்குக்கு நாங்களும் செய்கிறோம்.
இதுதவிர எங்களோட சிறுதுளி அமைப்பின் மூலமாக குளக்கரைகளில் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு உள்ள வீடுகள் அமைத்தல், காடுகள் அழியாமல் காப்பாத்தறதுன்னு பல சமுதாய சேவைகளை செய்திருக்கிறோம். இதுவரை ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நட்டிருக்கிறோம். திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தியிருக்கிறோம். வெள்ளலுõர்ல குப்பைக்கிடங்கு மூலமாக பல நோய்கள் பரவ காரணமாக இருந்தது. அத்தகைய குப்பைக்கிடங்கிலிருந்து தொற்றுநோய்கள் பரவாம தடுக்க, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினோம்.
*மக்கள்கிட்ட விழிப்புணர்வு எந்தளவுக்கு இருக்கு?
இன்னைக்கு தங்களைச் சுற்றிலும் உள்ள இடங்கள்ல கிடைக்கற மழைநீரை தேக்கி தங்கள் வாழ்வாதாரத்துக்கு தக்க வெச்சுக்கறதுக்கான கவனம் குறைவுன்னு தான் சொல்லணும். தண்ணீரை டேங்கர்கள்லே வாங்கற சிந்தனை தான் அதிகமாயிருக்கு.
பள்ளிகள்,கல்லுõரிகள் உள்ள மாணவமாணவிகள், இளைஞர்கள் மூலம் விழிப்புணர்வ ஏற்படுத்திக் கிட்டிருக்கோம். அந்த தேவைகளை பூர்த்திசெய்யவேண்டிய பங்கு நம்மக்கிட்டயும் இருக்கு.
பணம் சம்பாதிக்கறதிலயும், இடத்தைவாங்கிப்போடறதில யும் இருக்கிற ஆசை தண்ணீரை சேமிக்கறதிலயும் வேணும்இல்லையா? இன்னைக்கு தேவைக்கு ஒரு லோடு தண்ணீர் இறக்கினோமான்னு இருந்திட்டா எப்படி.
வரக்கூடிய காலத்தில தங்கத்தை விட தண்ணீரின் மதிப்பு அதிகமாகும். நம் வீட்டில் தண்ணீர் சேமிக்கணும். இன்னைக்கும் பல வீடுகள்ல இரண்டு நாள் தண்ணீர் வராம மூணாவது நாள் தண்ணீர் வரட்டும் ராத்திரிபகல்னு பார்க்காம இருக்குற குடம், வாளி, சொம்பு முதற்கொண்டு தண்ணீரை சேமிச்சு வெச்சுக்கணும்னு நினைக்கறாங்க. அதே அக்கரை மழை பெய்யும் போதும் அது வீணாகப்போகாம சேமிக்கணும்னுங்கற அக்கரை வரணும்.இதுவரை 300 ரெயின்வாட்டர் சென்டர்கள் மூலம் 215 வீடுகளுக்கு ஆழ்துளை கிணறுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சாலைகள்ல தண்ணீர் தேங்காம, டிராபிக் இடைஞ்சல் இல்லாம செய்ய மழைபெய்ஞ்சு தண்ணீர் தேங்கினா ஒருமணி நேரத்தில பூமிக்கு போயிடற மாதிரி செய்திருக்கிறோம். ஒவ்வொரு துளி மழைநீரும் நமக்கு முக்கியம் தானே? .
விஜி.செல்வகுமார்
பரதத்தில் அசத்தும் வினிஷாகதிரவன்
சமீபத்தில் தான் வினிஷாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. ஆனால், பல வருடங்களாக தொடர்ந்து ஆடி புதிதாக ஒரு கதையின் வர்ணத்திற்கு ஆடியவரைப் போல தன்னுடைய முதல் அரங்கேற்றத்திலேயே வந்திருந்த அத்தனை பார்வையாளர்களையும், பிரபலங்களையும் தன்னுடைய அபிநயங்களால் மெய்மறக்க வைத்திருந்தார் வினிஷாகதிரவன். அவருடன் ஒரு சந்திப்பு.
*உங்களுடைய குடும்ப பிண்ணனி பற்றி சொல்லுங்க?
நான் எட்டாம் வகுப்பு சின்மயா வித்யாலயா ஸ்கூல்ல படிக்கிறேன். அப்பா கதிரவன் வினிஷா விஷன்னு விளம்பர கம்பெனி வெச்சிருக்கார். அம்மா ஜெயசுதா வீட்டிலிருந்து எங்களை கவனிச்சுக்கறாங்க. ஒரே ஒரு தம்பி ரோகித் ஐந்தாம் வகுப்பு சின்மயா ஸ்கூல்லயே படிக்கறான். வீட்ல எனக்கும் சரி தம்பிக்கும் சரி அப்பா எங்களை முழுமையாக எதிலும் ஈடுபட அனுமதிப்பார். தம்பி கீ போர்டு கத்துக்கறான்.
* உங்களுடைய பரதநாட்டிய அரங்கேற்றம் பற்றி சொல்லுங்க?
பரதத்தில என்னுடைய குரு ஊர்மிளா சத்யநாராயணன். நான் யுகேஜி படிச்சதிலேயிருந்து இதுவரைக்கும் ஒன்பது வருசமா பரதம் கத்துக்கிட்டு வர்றேன். இதுதவிர சங்கீதமும் கத்துக்கிறேன். என்னுடைய சங்கீதகுரு லட்சுமி. என்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்திற்காக மூன்று வாரங்கள் தொடர்ந்து ராமர்கதைக்காக பயிற்சி எடுத்துக்கிட்டேன். அரங்கேற்றத்தில டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கம்போஸ் பண்ணின புஷ்பாஞ்சலிக்கு ஆடினேன். தொடர்ந்து ராமர் கதை"பாவயாமி ரகுராமம்'ங்கற வர்ணத்துக்கு ஆடினேன். இந்த ராமர் கதை 45 நிமிடங்கள் தொடர்ந்து ஆடணும் . ராமர் வில்லை வளைச்சு சீதையை கல்யாணம் பண்ணிக்கறது. கூனியோட வஞ்சகம்.அதனால ராமர் கைகேயி÷ப்சசைக்கேட்டு நாட்டைவிட்டு சீதை,லட்சுமணனோட வனவாசம் போறது . அங்கே சுக்ரீவனை சந்திக்கறது. தொடர்ந்து அனுமனை இலங்கைக்கு அனுப்பறது, ராவணனோட போர் செய்யறது, முடிவுல ராமர் ஜெயிச்சு அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்யறவரைக்கும் அத்தனை கதாபாத்திரங்களையும் நான் ஒருத்தியே மேடையில அபிநயத்தோட செய்து ஆடிக் காட்டினேன். என்னை இந்தளவுக்கு வழிநடத்தி சொல்லித்தந்தது என்னுடைய குரு ஊர்மிளா சத்யநாராயணன்.
* பரதம் தவிர வேறெந்த துறைகள்ல உங்களுக்கு ஆர்வம்?
பாடறதில ஆர்வம் . சரணம் ஐய்யப்பா, தன்வந்தரி ஆராதனைங்கற ஆல்பத்திற்காக பாடியிருக்கேன். இததவிர பள்ளிகள்ல நடக்கிற விழாக்கள்ல பாடி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். விளம்பரங்களுக்கு குரல் கொடுத்திருக் கேன், யோகா செய்வேன்,பள்ளியில நடக்கிற விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்துக்கிட்டு நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்.
*உங்க அரங்கேற்றத்துக்கு வந்த விஐபிகள் என்ன சொல்லி வாழ்த்தினாங்க?
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, வைஜெயந்திமாலாபாலி, மனோ, மஹதி, உன்னிகிருஷ்ணன், ஓ.எஸ்.அருண், ஜானகி, உமா முரளி கிருஷ்ணன், மதன்பாப், பாண்டு, இசையமைப்பாளர் தேவா சார்ல்லாம் வந்து வாழ்த்தினாங்க. அவங்க வாழ்த்திப்பேசினதில என்னால மறக்க முடியாததுன்னு சொன்னா, கூனியோட அசைவுகள், நடை,உடை பாவனைகள் அவளுடைய வயதான தோற்றம் இந்தசின்ப் பொண்ணோட முகத்தில மேக்கப் இல்லாம உணர்த்தின பாவனைகள்லயே புரிஞ்சுக்கு முடிஞ்சது. " கன்னியாகுமரி அம்மனே வந்து நேர்ல ஆடினது மாதிரி இருந்ததுன்னு பாடகி ஜானகி பாராட்டிச் சொன்னாங்க. " பூர்வஜென்மத்தொடர்பு இருந்தாதாத்தான் இப்படி ஆடி எல்லோரையும் மெய்மறக்க வைக்கமுடியும்னு உமா முரளிகிருஷ்ணா(பாடகி ஜானகியின் மருமகள் ) சொன்னாங்க. இது எனக்கு மோதிரக்கையால் குட்டுபட்டு ஆசிர்வாதம் வாங்கின மாதிரி இருந்தது. என்னுடைய லட்சியம் டாக்டராகணும்.அப்பா அம்மாவினுடைய ஆசையும் அதுதான்.
என்கிறார் பெருமையாக.
செல்வகுமார்
செராமிக் வால்கேங்கிங்
தேவையான பொருட்கள்: விருப்பமான வடிவத்தில் மரகட்டிங்,செராமிக் பவுடர், பெவிகால் ,விருப்பமான மெட்டாலிக் பெயிண்ட் கலர்கள், கத்தி,பிளேடு
செய்முறை: செராமிக் பெவிகால் சேர்த்து தண்ணீர் விடாமல் சப்பாத்தி மாவுபோல் பிசையவும். கையில் எண்ணெய் தொட்டு மாவு உருட்டி ஷாப்ட் (மென்மையாக)உருட்டிக் கொள்ளவும். சிறிதளவு உருண்டையை எடுத்து அதில் இø ல உருவம் கொண்ட வரவும் . கத்தி கொண்டு அதில் நரம்பு கள் போன்று அச்சுபதிக்கவும். பானை கற்கள் உருவம் செய்து மார்பிள் டைல்ஸ்க்ற்கள் மலை,பானை,இலை,கல்உருவம்ஒட்டவும்.மயில் பெவிகாலுடன் தண்ணீர் சேர்த்து பசையை போல் ஒட்டவும். கத்திபார்பின் உதவியுடன் ஒருநாள் காயவைத்து விருபுஞூபமான கலரை பின் கொடுக்கவும். மரம் இருக்கும் பொசிஷனுக்கு விருப்பமான டால் ஒட்டவும். ஹுக் இணைத்து சுவரில் மாட்டவும்.